“உள்ளடக்கிய மொழிவுகளை உருவாக்குதல்”: ஆஸ்திரேலிய வெளியீடு பகிரப்பட்ட அடையாளத்தை சுட்டிக்காட்டுகிறது


“உள்ளடக்கிய மொழிவுகளை உருவாக்குதல்”: ஆஸ்திரேலிய வெளியீடு பகிரப்பட்ட அடையாளத்தை சுட்டிக்காட்டுகிறது


8 அக்டோபர் 2021


சிட்னி – வரலாறு, கலாச்சாரம், பண்புகள் பற்றி வேறுபட்ட கண்ணோட்டங்கள் மற்றுமில்லாமல் அவற்றில் சிலவன எதிர்மாறானவையாகவும் இருக்கும் ஒரு சமுதாயத்தில் எவ்வாறு வேற்றுமைகளைக் கடந்திடும் ஒரு பொதுவான அடையாள உணர்வை உருவாக்குவது? அதே வேளை சில பிரிவினர்களுக்கு சாதகமாக அமையாத வகையிலும் மற்றவர்களின் மதிப்பை குறைக்காத வகையிலும் இதை எப்படி உருவாக்குவது?

அஸ்திரேலியா நாட்டின் பஹாய் சமூகம் மேற்குறித்த கேள்விகளுக்கும் அவைத்தொடர்பான மற்ற கேள்விகளுக்கும் விடை காண ஓர் இரண்டாண்டு ஆய்வு செயல்திட்டத்தினை வகுத்து, அத்திட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களை பங்கு பெற வைத்தது.

அஸ்திரேலியா நாட்டின் பஹாய் சமூகம் மேற்குறித்த கேள்விகளுக்கும் அவைத்தொடர்பான மற்ற கேள்விகளுக்கும் விடை காண ஓர் இரண்டாண்டு ஆய்வு செயல்திட்டத்தினை வகுத்து, அத்திட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களைப் பங்கு பெற வைத்தது. இதில் எல்லா மாகாணங்களிலிருந்தும் வட்டாரங்களிலிருந்தும் வந்த அதிகாரிகள், சமூக ஸ்தாபனங்கள், செய்தியாளர்கள், மற்றும் ஏராளமான சமூக நடவடிக்கையாளர்களும் அடங்குவர்.

இவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பலனாக ஒரு புதிய வெளியீடு ‘அனைவரையும் உட்படுத்தும் ஒரு மொழிவை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. கடந்த வாரம், பஹாய் வெளி விவகார அலுவலகத்தின் ஏற்பாட்டினால் நடந்தேரிய, ’சமூக பிணைப்பும் உட்படுத்துதலும்’ பற்றிய ஓர் ஐந்து நாட்கள் மாநாட்டின் போது முதன்முறையாக வெளியிடப்பட்டது.

அந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வில், நியூ சவ்த் வேல்ஸ் ஆளுனர், மாகரட் பீஸ்லி, அரசாங்கமும் நிறுவணங்களும் நாட்டுப் பிரஜைகளிடையே வலுவான உறவை ஏற்படுத்துவதற்கான பங்கின் முக்கியத்துவத்தைப பற்றி ஆழந்த உட்கருத்துடன் பேசினார்.

“இந்த அருமையான ‘அனைவரையும் உட்படுத்தும் ஒரு மொழிவை உருவாக்குவது’ எனும் பஹாய் வெளியீட்டினை படைப்பதற்கு நடந்தேறிய எல்லாரையும் உட்படுத்திய கலந்தாலோசனைகள் முயற்சியே ஒரு மிக சிறப்பான உதாரணம். எவ்வாறு ஒரு நிறுவணம் பல்வேறு பின்னனியைச் சார்ந்தவர்கள், இருபாலினர், வேறுபட்ட ஆற்றலுடையோர், ஆற்றல் குறைவானோர், வெவ்வேறு சமயத்தினோர் ஆகியவர்களை ஈடுபடுத்தி பல நிலையில் அவர்களோடு கலந்துரையாடல் நடத்துவதற்கு தனது நேரத்தையும் செயல்பாடுகளையும் அர்ப்பணிக்கலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.”

அம்மாநாட்டின் மற்றொரு அங்கத்தில், நாடாளுமன்ற உறுப்பினரான அய்ன் அலெய் என்பவர் பஹாவுல்லாவின் “உலகம் ஒரு நாடு, மனிதர்கள் அதன் பிரஜைகள்” என்ற திருவசனத்தை குறிப்பிட்டு , “ சமூக பிணைப்புக்கு இதுவே ஆரம்பப் புள்ளியாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம்மை நாம் எல்லோரும், தேசிய எல்லைகளைக் கடந்த, இன வேற்றுமைகளைக் கடந்த, சமய வேற்றுமைகளைக் கடந்த, சமூக, பொருளாதார நிலை வேற்றுமைகளைக் கடந்த, சமமான உலக பிரஜைகளாக காணவேண்டும்,”என கருத்துரைத்தார். “ இம்மையக் கொள்கையான மனித குலத்தின் சம நிலை –

இதுதான் என்னை மிகவும் பஹாய் சமயத்தின்பால் கவர்கின்றது” என மேலும் கூறினார்.

ஒரு கற்றல் செயல்முறையை ஆரம்பிப்பது

வெளி விவகார அலுவலகத்தின் இயக்குனரான இடா வாக்கர் அந்த ஆய்வு செயல்திட்டம் எவ்வாறு ஒரு கற்றல் செயல்முறையாக ஆரம்பித்தது என்பதை விளக்கினார். “2017’இல் சமூக பிணைப்புப் பற்றிய சொல்லாடல் தேசிய அரங்கில் முக்கியமாக வெளிப்பட்டு வந்தது. அப்பொழுதும், இன்றும், இப்பிரச்சனையைத் தடையின்றி, அதாவது, போதுமான நேரம், ஆதிக்கக் குரல் எழுப்பாத சூழ்நிலை, யாவரும் செவிமெடுக்கவும், அவர்களது குரல் கேட்கப்படவும் அனுமதிக்கப்படும் வகையில், ஆராய்வதற்கு ஒன்றிணைக்கும் தலங்கள் தேவைப்பட்டன”.

2018’க்குள் வெளி விவகார அலுவலகம் இந்த சொல்லாடலில் அதிகமாக ஈடுபாடு காட்டி வந்தது. பல்வேறு சமூக நவடிக்கையாளர்கள் மற்றும் அரசாங்க இலாகாக்களின் ஊக்குவிப்பினால், ‘அனைவரையும் உட்படுத்தும் ஒரு மொழிவை உருவாக்குதல்’ என்ற கருத்து உருவெடுக்கத் தொடங்கியது.

“இந்த செயல்முறை நாடு முழுவதும் வெவ்வேறு மெய்நிலைகளை- கிழக்கு மற்றும் மேற்கு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற, மற்றும் அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு வரையான மாறுபட்ட குரல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிந்தோம். இந்த அளவிலான செயல்பாட்டை இயக்குவதற்கு எங்களுக்கு உதவி செய்யக்கூடிய பலர் தேவைப்பட்பனர் ”என்று திருமதி வாக்கர் கூறினார்.

2019’ஆம் ஆண்டின் மத்தியில் ஒரு சில மாகாணங்களில் சிறிய கூட்டங்கள் நடைபெற்றன. நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான வழிநடுத்துனர்களை அடையாளம் கண்ட பிறகு மேலும் அதிகமான கூட்டங்கள் நடை பெறுவதற்கு முடிந்தது. “வழிநடத்துனர்கள் இணைப்பினை தோற்றுவிக்கக்கூடிய தலங்களை உருவாக்குவதற்கான குணங்கள் மற்றும் மனப்போக்குகளின் முக்கியத்துவத்தை ஆழ்ந்து சிந்திப்பதற்கு பயிற்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இப்பயிற்சி நிகழ்வுகள் வழிநட்ததுனர்கள் எவ்வகையான ஊடுருவும் கேள்விகளை கேட்க வேண்டும் என்பதை சிந்திக்க வைத்தன.

ஓர் உள்ளடக்கும் மொழிவை உருவாக்குதல் எனும் பிரசுரம், அதிகாரிகள், கல்வியாளர்கள், சமுதாய நடவடிக்கையாளர்கள், மற்றும் ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள மக்களுடன் நடத்தப்பட்ட ஓர் இரண்டு வருட உரையாடலின் பலனாகும்.

“வழிநடத்துனர்கள் கூட்டங்கள் நடைபெறும் உள்ளூரிலிருந்து வருபவராக இருக்க வேண்டியது முக்கியம். இது அவர்கள் உள்ளூர் பிரச்சனைகளையும் விவகாரங்களையும் அறிந்தவர்களாக இருப்பதை உறுதிபடுத்துகின்றது. இந்த அனுகுமுறை, வழிநடத்துனர்களும் பங்கேற்பாளர்களும் மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் கூட்டத்தின் இடைவெளியின் போது தங்களது கலந்துரையாடல்களை தொடர்வதற்கு வழிவகுத்தது.”

இறுதியில் அச்செயல் திட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரே நேரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஐம்பது கூட்டங்கள் நடைபெறும் வகையில் இயங்கியது.

வேற்றுமைகளைக் கடப்பது

சொல்லாடல் தலத்தில் பங்கு கொண்ட ஒருவர் வேறுபட்ட மக்களிடையே இன்னும் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றி இவ்வாறு கருத்துரைத்தார்: “ஆஸ்திரேலியா நாட்டில் வெவ்வேறு பாதைகள் தனித்துவமான சூழ்நிலையில் ஒன்று சேர்ந்துள்ளன. அதன்வழி முடிச்சாக இணைக்கப்பட்ட தொடர் கதைகள் உருவாக்கபட்டுள்ளது. ஆயினும் இந்த முடிச்சை அவிழ்த்துவிட நாம் எந்த அளவு விருப்பம் கொண்டுள்ளோம்? இந்த முடிச்சு இல்லையென்றால் நாம் அனைவரும் பிரிக்கப்பட்டவர்களாகவும் ஒருவர் மற்றவரோடு எந்த ஒரு உறவையும் கொண்டில்லாதவர்களாகவும் ஆவோம்.”

“ஆஸ்திரேலியா இன்னும் நிறைவு அடையாத பயணத்தில் உள்ளது என நாம் கருதினால், புதிய ஒன்றை உருவாக்க நாம் விருப்பம் கொண்டுள்ளோமா?”

சமூகத்தின் எல்லா துறைகளிலும் பல்வகைமையை வளர்க்க முயற்சிப்பது தேவையானது என்றாலும், மக்களை ஒன்றிணைக்கவோ, அல்லது முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்கவோ, அது மட்டுமே போதாது. “ பூர்வீகக் குடி மக்களின் கதைகளும், ஐரோப்பிய குடியேறிகளின் கதைகளும், அண்மையில் குடியேறியவர்களின் கதைகளும் பேசப்பட வேண்டும், அதே வேளையில் அவை சமரசத்தில் ஒன்று படுத்தப்பட வேண்டும் என திருமதி வாக்கர் மேலும் விளக்கினார்.

“சமூக பிணைப்பு பற்றிய சொல்லாடலில் வெளி விவகார அலுவலகம் ஈடுபட ஆரம்பித்த போது, பல்வேறு சமூக நடவடிக்கையாளர்கள் மேற்குறித்த கதைகள் தனித் தனியான பாதைகளில் பயணம் செய்து வருகின்றன எனவும் ஆனால் அவை ஒன்றாக பிணைக்கப்படவில்லை என்று கூறினர். இச்செயல் திட்டம் சமூகத்தின் வெவ்வேறு பகுதியினர் இந்த ‘அனைவரையும் உட்படுத்தும் தொடர்கதையின்’ வழி தாங்கள் அனைவரும் ஒரே பயணப் பாதையில் செல்பவர்களாக காண்பதற்கு அனுமதித்துள்ளது.”

செயல்முறையின் பங்கேற்பாளர்கள், வேறுபாடுகளைக் களைவதற்கான செயல்முறையில் வரலாறு குறித்த கேள்விக்கு விடைகானப்பட வேண்டுமெனும் கேள்வியைப் பற்றி உரையாடினர். இந்த வளமான கலந்துரையாடல்களிலிருந்த கிடைத்த அகப்பார்வைகளிலிருந்து ஓர் உள்ளட்ககும் மொழிவை உருவாக்கதல் “நாம் எங்கிருந்து வருகிறோம்?” எனும் பகுதியில் ஆரம்பிக்கின்றது.”

“இச்செயல் திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், செயல்பாட்டில் பங்கெடுத்தவர்கள், வேற்றுமைகளை கடக்க வேண்டுமென்றால் , வரலாறு சம்பந்தப்பட்ட கேள்விகளை நாம் நிச்சயமாக எதிர் நோக்க வேண்டும் என்பதை அவர்கள் கலந்துரையாடல்களில் எழுப்பினர். இந்த சொல்லாடல்களிலிருந்து பெறப்பட்ட ஆழமான கருத்தாக்கங்களின் அடிப்படையில், ‘அனைவரையும் உட்படுத்தும் மொழிவுகளை உருவாக்குவது’ எனும் ஆய்வு வெளியீடு, ‘நாம் இது வரை கடந்து வந்த பாதை யாது?’ என்ற தலைப்பினை கொண்ட ஒரு பகுதியில் இக்கேள்விகளை பரிசீலித்து விடை காண்கின்றது. இப்பகுதி நாட்டின் வளமான, தொன்மை வாய்ந்த வரலாற்றை கவனத்திற்கு கொண்டு வருவதோடு, தற்கால சவால்களையும் வாய்ப்புக்களையும் அது கோடிட்டுக் காண்பிக்கின்றது. “நமது வரலாற்றில் ஊடுருவிச் செல்லும் ஒரு பொதுவான நூல் யாதெனில், நம் வரலாற்றில் நல்ல காலங்களின் கதைகளும் கெட்ட காலங்களின் கதைகளும் உள்ளன, வெட்கப்பட வேண்டிய தருணங்களும் பெறுமை கொள்ள வேண்டிய தருணங்களும் உள்ளன. மாசில்லா பதிவேடுகளைக் கொண்ட தேசம் கிடையாது. இருப்பினும் இட இழப்புக்கும் துன்பங்களுக்கும் ஆளானவர்கள், குறிப்பாக பூர்வீகக் குடியினர், மாபெரும் மீட்டெழுச்சியைக் காண்பித்துள்ளனர். அநீதியையும் நெருக்கடியையும் கடப்பதற்கான மனித ஆன்மாவின் சக்தி, நம் சமூகத்தின் பரினாம வளர்ச்சியினை வளமாக்கி உருவமைத்ததில் ஒரு பிரதான அம்சமாகும்.”

பகிரப்பட்ட பண்புகளை அடையாளம் காணுதல்

ஆரம்பத்தில் கடினமாக இருந்த போதும், செயல் திட்டத்தில் பங்கேற்றவர்கள், மேலும் அதிகபட்ச அளவிலான சமரசத்திற்கு இருக்கும் தடைகளை அகற்றுவதற்கு பொதுவான பண்புகளை அடையாளம் காண்பதின் தேவையை உணர்ந்தனர். கோவிட் நோய் பரவலின் தாக்கம் இந்த செயல்பாட்டில் பங்குபெற்றவர்கள் மத்தியில் ஒரு பொதுவான அடையாளத்தை உருவாக்குவதின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்தது என ஆஸ்திரேலியா நாட்டு பஹாய் வெளி விவர அலுவலகத்தைச் சேர்ந்த திரு வீனஸ் கலேசி கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது: “ஆரம்பத்தில் பங்கேற்றவர்கள் பண்புகளைப் பற்றி பேசுவதற்கு அச்சம் கொண்டனர் – எங்கே மற்றவர்களின் மனதை புண்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தினால். ஆனால் கோவிட் நோய் பரவுதல் எல்லாரையும் தாக்க ஆரம்பித்ததுடன், அந்த நெருக்கடியை எதிர்நோக்கும் பொருட்டு, மக்கள் இன்னும் அதிகமான அன்பையும், தாராளத்தன்மையையும் காட்டினர், மற்றும் அந்நியர்களிடம் கூட மனம் திறந்தனர். இது நாம் ஒரு சமூகமாக நம்மை எவ்வாறு காணுகிறோம் என்பதை மிகைப்படுத்தியதும் அல்லாமல் இந்த நெருக்கடிக்குப் பின் எத்தகைய பண்புகள் நம் மத்தியில் நீடிக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைப்பதற்கான ஆற்றலையும் அளித்தது. அதன் பிறகு நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பண்புகளும், மற்ற ஆன்மீக நியதிகளான நீதி, இரக்கம், நமது உள்ளார்ந்த ஒருமைத் தன்மை ஆகியவை ஒரு திசை காட்டும் குறிப்பாக அமைந்தன.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவின் பஹாய்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மண்டலங்களில் உள்ள அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஏராளமான சமூக நடவடிக்கையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் பகிரப்பட்ட அடையாளம் தொடர்பான கேள்விகளை ஆராய்ந்தனர்..

இந்த சொல்லாடல்களின் வழி எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை அடையாளம் காண்பதற்கு ஒரு முக்கிய ஆற்றல் தேவை என்பது தெளிவானது. அக்குறிப்பிட்ட ஆற்றலை அந்த வெளியீட்டில் இவ்வாறு விவரிக்கப் படுகின்றது: நிகழ் காலத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவிடும் நம்பிக்கைகள், பண்புகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தழுவுவதிலும், பிரச்சனைகளைக்கு தீர்வு காணத தடையாக இருக்கும் காலம் கடந்த நம்பிக்கைகள், பண்புகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை தள்ளி வைப்பதற்குமான திறந்த மனப்பான்மையும் நெகிழ்வுத்தனம்மையும் கொண்டிருப்பதேயாகும்.

பங்கு பெற்றவர்களால் அடையாளம் காணப்பட்ட பண்புகள், குணங்கள், இயல்புகள் – இவைகளில் கீழ் குறிப்பிடப்பட்டவை அந்த வெளியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன: மனித குலத்தின் ஒருமைத் தன்மையும் பல்வகைமையில் ஒற்றுமையும்; கூட்டுத் தீர்வு காண்பதற்கு கலந்துரையாடல் வழிமுறை; எல்லா மக்களுடைய மேன்மயையும் களெரவத்தையும் அங்கீகரித்தல்; உடனுழைப்பு; எல்லா விஷயங்களிலும் கற்றல் மனப்போக்கு; புதிய வாழ்வு முறைகளுக்கு திறந்த மனப்போக்கை கொண்டிருத்தல்.

இறுதியில், பல மாநிலங்களினூடே நடைபெற்ற மாதாந்திரமான ஒன்றுகூடல்களைப் பேணி, 50 வட்ட மேஜை உரையாடல்களுக்கு வழிவகுத்தது.

சொல்லாடலை விரிவடையச் செய்தல்

இந்த அனுபவத்திலிருந்து நமக்குத் தெரியவருவது, எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான ஒப்புதலை அடைவதற்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பண்புகள் பற்றாமை அல்ல மாறாக ஒருவர் மற்றவரைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்து கொள்வதற்கான தளங்களின் பற்றாக் குறையே நமது சவாலாகும் என திருமதி வாக்கர் விளக்கம் கொடுத்தார். அவர் மேலும் கூறியதாவது: “நாம் எதிர் நோக்கும் பிரச்சனைகள், ஒரு குழுவினருக்காக மற்ற குழுவினரால் தீர்க்க முடியாது. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்புகளையும் தூர நோக்கத்தையும் வளர்ச்சி அடைய செய்யவும் அமுலாக்கம் செய்வதற்கும் தளங்களை ஏற்படுத்துவோமானால், நாட்டில் காணப்படும் அதிமிகு ஆற்றல்களை அவிழ்த்துவிட முடியும். இச்செயல் திட்டத்தின் சொல்லாடல் கூட்டங்களில் பங்கு பெற்றவர்கள் பலர் சமுதாயத்திற்கு தங்கள் பங்கினை ஆற்றுவதற்கான தீர்மானத்தில் உறுதி பூண்டுள்ளனர்.

அனைவரையும் உட்படுத்தும் மொழிவுகளை உருவாக்குதல் செயல்திட்டத்தின் ஆலோசனை குழுவில் பணியாற்றிய, குயின்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள கிரிபித் பல்கலைக் கழகத்தின் சமய கலாச்சாரங்களிடையிலான தொடர்புத் துறை இயக்குணர் பிராய்ன் அடம்ஸ், இந்த செயல்திட்டத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் செயற்கையான ஒரு விரிவான அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை. நமது தனித் தனி அடையாள இழைகளைப் பிரித்து அவற்றை ஒன்றாகப் பின்னி இந்த மொழிவை உருவாக்கியுள்ளோம். இச்செயல்பாடு உடனுழைப்பின் வாயிலாகவும், மரியாதையான செவிமெடுத்தல் வாயிலாகவும், ஏராளமான உழைப்பினாலும் இந்த அடையாளம் ஒன்றாக உருவாக்கப் பட்டுள்ளது.”

பாராளுமன்ற உறுப்பினர் ஜேஸன் ஃபாலின்ஸ்கி சிட்னி பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு விஜயம் செய்கிறார். அங்கு அவருக்கு ஓர் உள்ளடக்கும் மொழிவு பிரசுரம் வழங்கப்பட்டது.

இச்செயல்திட்டத்தின் பலனாக பல அரசாங்க, சமூக நிறுவணங்களுடன் ஏற்படுத்தப்பட்ட உறவின் வழி சமுதாயத்திலுள்ள மற்ற பிரிவுகளுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களைப் பற்றி, வெளி விவகார பஹாய் அலுவலக இயக்குனரும், ஆஸ்திரேலியா தேசிய ஆன்மீக சபை உறுப்பினருமான திருமதி நட்டாலி மொபின் இவ்வாறு கூறுகிறார்: “வெளி விவகார அலுவலகம் இச்செயல்திட்டத்தை ஆரம்பித்த போது, இது இவ்வளவு பெரியதாக ஆகும் என எதிரப்பார்க்கவில்லை. அதன் ஒரு நம்பிக்கைக்குரிய விளைவு, செயல்திட்டத்தில் பங்கேற்றவர்களோடு ஏற்ப்படுத்தப்பட்ட உறவு. நாடு தழுவிய அளவில் ஒரு மக்கள் தொடர்பு வலைப் பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குழுக்களும், உள்ளூர், மாகாண, தேசிய சமூகத் தலைவர்களும், அரசாங்கத் துறைகளின் தலைவர்களும் அடங்குவர்.

நடைபெற்ற மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர், திருமதி அய்ன் அலி , கல்வி இலக்கியங்களிலிருந்து, எவ்வாறு சமூக பிணைப்புப் பற்றிய புதிய கருத்தாக்கங்கள் இன்னும் பரவலாக சமுதாயத்தில் ஊடுருவ வேண்டும் என கருத்துரைத்தார். “ எவ்வாறு அமைதி என்பது வெறுமனே போர் இல்லாத நிலையாக கருதப்பட முடியாதோ, அவ்வாறே சமூக பிணைப்பு என்பது வெறுமனே சமூகத்தில் கருத்து வேறுபாடும் ஒற்றுமையின்மையும் இல்லாத நிலையாக கருதப்படக் கூடாது.” சமூக பிணைப்பு தனிப்பட்ட ஒரு கொள்கையினால் ஏற்படுத்தப்படலாகாது, மாறாக எல்லா கொள்கைகளும் சமூகப்பிணைப்புக்கு பங்காற்ற வேண்டுமென அவர் மேலும் கூறினார். அவர் மேலும் கீழ் குறிப்பிட்டுள்ள பஹாய் திரு வசனத்தை சுட்டிக்காட்டி, சமூக பிணைப்பு பற்றிய கலந்துரையாடலுக்கு அது மிகத் தேவையானது என்றார்: “செழிப்பில் தாராளத்தன்மையுடனும், துன்பத்தில் நன்றியுணர்வுடனும் இருங்கள். உங்கள் அண்டையரின் நம்பிக்கைக்குத் தகுதியானவனாக இருங்கள். பிரகாசமான, நட்பான முகத்துடன் அவரைப் பாருங்கள். … இருளில் நடப்பவர்களுக்கு ஒரு விளக்கு போலவும், துக்கப்படுபவர்களுக்கு ஒரு சந்தோஷமாகவும், தாகமுள்ளவர்களுக்கு ஒரு கடல் போலவும், துன்பப்படுபவர்களுக்கு ஒரு புகலிடமாகவும், அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவரின் பாதுகாவலராகவும் இருங்கள். … அந்நியருக்கு ஒரு வீடாக இருங்கள், வலியில் அவதிப்படுவோருக்கு தணிக்கும் மருந்தாக ஆவீர்..”

அனைவரையும் உட்படுத்தும் மொழிவை உருவாக்குதல் என்ற அறிக்கையும், நடந்தேறிய மாநாட்டின் பதிவும் மேல் விவரங்களும் ஆஸ்திரேலியா பஹாய் சமூகத்தின வெளி விவகார அலுவலக இணையப் பக்கத்தில் காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1470/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: