
இந்தோனீசியாவில் ஒன்றுகூடல்கள் ஆர்வநம்பிக்கைக்கு வளமான தளத்தை வழங்குகின்றன.
8 அக்டோபர் 2021
ஜகார்த்தா, இந்தோனேசியா – உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் அடித்தள ஆன்மீகக் கொள்கைகளை ஆராய இந்தோனேசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகம் ஏற்பாடு செய்த ஒரு சிறு இணையதளம், 200’க்கும் மேற்பட்ட சமூக நடவடிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத சமூகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒன்றாக விரிவடைந்துள்ளது.
ஒரு முக்கிய இஸ்லாமிய அறிஞரும், பெண்களின் உரிமை ஆர்வலருமான முஸ்தா முலியா, கூட்டங்களை நடத்துவதில் அலுவலகத்துடன் ஒத்துழைத்துள்ளார், தளங்களின் தன்மை குறித்து கருத்துரைக்கிறார்: “இந்தோனேசியாவில் அமைதியைக் ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அவை மிகவும் நேர்மறையானவை மற்றும் ஆக்கபூர்வமானவை. அவை வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் மத பின்னணிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கியதுள்ளதுடன் அவர்களிடையே உள்ள வேறுபாடுகளைத் தீர்க்கவும் உதவுகிறது. இந்த கூட்டங்கள் ஒருவருக்கொருவர் நட்பை வளர்ப்பதற்கும், தப்பெண்ணத்தையும் களங்கத்தையும் அகற்றுவதற்குமான சந்திப்புத் தளமாக மாறியுள்ளன.
“மனிதகுலத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்க நமது மதக் கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும். மதம் சார்ந்த சின்னங்கள் மற்றும் அவற்றின் துணை விஷயங்களில் நாம் பற்றுகொள்ளக்கூடாது.”

இந்தோனேசியாவின் 270 மில்லியன் மக்களின் பன்முகத்தன்மையும், அதன் ஸ்தாபகக் கொள்கைகளான பஞ்சசீலா என அழைக்கப்படும் நம்பிக்கையான உரையாடல்களுக்கு வளமான தளத்தை உருவாக்குகிறது என பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ரீனா ஜுனா லீனா கூறுகிறார். “நாட்டின் முக்கிய இலட்சியங்களான அமைதி மற்றும் ஒற்றுமை குறித்த கொள்கைகளை உண்மையிலேயே பிரதிபலிக்கும் ஒரு சமூகத்திற்கான ஏக்கத்தை பலர் உணர்கிறார்கள்: சமய நம்பிக்கை பிளவுபடுத்துவதை அது விட நம்மை ஒன்றுபடுத்த வேண்டும்; இந்தோனேசியாவின் 17,000 தீவுகளில் நாம் ஒரே மக்கள்; நமது சமூகம் அனைவருக்கும் நியாயமான மனப்போக்கு மற்றும் சமூக நீதிக்காக பாடுபடுகிறது.”
சமீபத்திய கூட்டத்தில் நடுவராக இருந்த, கூட்டங்களின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்ட மத அமைச்சின் மத நல்லிணக்க மையத்தின் தலைவர், இந்த விவாதங்களிலிருந்து வெளிவரும் வளமான நுண்ணறிவுகளை கொள்கை உருவாக்கத்திற்கு அமைச்சுக்கு பரிந்துரைகளாக அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

கூட்டங்களில் ஆராயப்படும் பிரச்சினைகளில் சமூக சமத்துவமின்மை மற்றும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை குழுக்களுக்கு இடையிலான பிளவுகளும் அடங்கும். அப்பட்டமான பிளவுகளின் மூல காரணங்களைப் பெற உரையாடல்களின் அவசியத்தைக் குறிப்பிட்டு, திருமதி லீனா கூறுகிறார், “சமூகம் இன்று மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள், போட்டியில் உள்ளனர், மற்றவர்களைக் கையாள சக்தியைப் பயன்படுத்துவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
“ஒற்றுமை குறித்த கொள்கை முழுமையாக புரிந்து கொள்ளப்படாவிட்டால், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் நீண்டகால தீர்வு இருக்காது. ஒற்றுமை மற்றும் அன்பின் சக்தியின் அடிப்படையில் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கூறுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்த புதிய கருத்து இதற்கு தேவைப்படுகிறது. இத்தகைய உறவுகள் ஆதிக்கத்தின் வழிமுறையாக மாறாது, மாறாக அவை ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும்.”

கூட்டங்களில் பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த பணிகளில் சிந்தனையைத் தூண்டுவதற்காக விவாதங்களிலிருந்து நுண்ணறிவுகளைப் பெறுகிறார்கள்.
இந்தோனேசிய ஒலிபரப்பு ஆணையத்தின் ஆக்னஸ் திவி ருஸ்ஜியாத்தி, ஒரு கருத்தரங்கில் ஒரு ஊடக ஒழுங்குமுறையாளராக தனது பணிக்காக பன்முகத்தன்மை பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற கொள்கையின் தாக்கங்கள் குறித்து பிரதிபலித்தார். “கருத்துக்களை வடிவமைக்க ஊடகங்கள் அதிகம் பணியாற்றுகின்றன. ஆனால் பெரும்பாலும் ஊடகங்கள் பிரிவினையைத் தூண்டுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்களை ஒன்றிணைக்கும் மற்றும் சமூக தொடர்புகளை வலுப்படுத்தும் விஷயங்களை உள்ளடக்குவதன் மூலம் ஊக்கத்தை வழங்குவது போன்ற ஒரு நேர்மறையான திசையில் செயல்படும் ஊடக சூழலை உருவாக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.”
விரைவான தொழில்நுட்ப மாற்றமுறு உலகில், விவாதம் மதத்தின் பங்கிற்கு திரும்பியபோது, மத ஆய்வுகள் பேராசிரியரான அமானா நூரிஷ், அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம் குறித்த பஹாய் கொள்கையை சுட்டிக்காட்டினார். “நவீன உலகில் அறிவியல், மதம் இரண்டுமே வகிக்கும் முக்கிய பங்கைக் காண இந்த கொள்கை நமக்கு உதவுகிறது. விஞ்ஞான முன்னேற்றத்தை சரியான முறையில் பயன்படுத்த அது ஆன்மீக மற்றும் தார்மீக ஈடுபாட்டினா வழிநடத்தப்பட வேண்டும். அதே சமயம், ஒரு விஞ்ஞான சிந்தனையை வளர்ப்பது பொய்யானவற்றிலிருந்து உண்மை எது என்பதைக் கூற நமக்கு உதவுவதுடன் மோதலின் ஆதாரமாக மாறியுள்ள மத அறியாமை மற்றும் தப்பெண்ணத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது.”

பங்கேற்பாளர்கள், அறிவார்ந்த தூண்டுதல் கலந்துரையாடல்களுக்கு ஒன்றிணைந்துள்ளதால், பலர் வெளிவிவகார அலுவலகத்தால் நடத்தப்படும் வழக்கமான பிரார்த்தனைக் கூட்டங்கள் மூலம் இன்னும் ஆழமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். இந்தோனேசியாவில் பிரார்த்தனை வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த செயலில் பங்கெடுக்க பல சமயநம்பிக்கைகள் கூட்டாக ஒன்று சேருவது பலருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
திருமதி லீனா கூறுகிறார், “ஒரு குறுகிய காலத்தில், இந்தக் கருத்தரங்குகள் ஒரு சிறிய வழியில் தடைகள் அகற்றப்படக்கூடிய நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளன. சமூக மாற்றத்தின் நீண்ட செயல்முறையில் எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1471/