
“ஆஸ்த்திரியாவை உந்துவிக்கும் தலைப்புகள்”: உடனடி பிரச்சினைகளை புதிய வீடியோ வலைப்பதிவு வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது
8 அக்டோபர் 2021
வியன்னா, ஆஸ்திரியா, 7 டிசம்பர் 2020, (BWNS) – ஆஸ்திரிய நாட்டில் தேசிய விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கான புதிய வீடியோ வலைப்பதிவு (vlog) சனிக்கிழமை நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தால் தொடங்கப்பட்டது.
“எல்லோரையும் போலவே, பிற சமூக நடவடிக்கையாளர்களுடனான எங்கள் உரையாடல்களில் பெரும்பாலானவை இணையதளத்திற்கு நகர்ந்துள்ளன. அதன் விளைவான சவால்களை இம்முயற்சி சந்தித்திருந்தாலும், இது புதிய வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது ”என்று வெளிவிவகார அலுவலகத்தின் லெய்லா டேவர்னாரோ கூறுகிறார்.
“எடுத்துக்காட்டாக, எங்கள் உரையாடல்களின் பகுதிகளை இப்போது ஆவணப்படுத்தலாம் மற்றும் அதே தலைப்புகளில் ஆர்வமுள்ள பலருக்கும் அவற்றைக் கிடைக்கச் செய்யலாம்.”
“ஆஸ்திரியாவை இயக்கும் ஆய்வுப்பொருள்கள்” என்ற தலைப்பில் புதிய vlog சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடம்பெயர்வு, சமூக ஒத்திசைவு மற்றும் சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளை எவ்வாறு ஆராயும் என்பதை டாக்டர் டேவர்னாரோ விளக்குகிறார்.
முதல் அங்கத்தில், “எதிர்கால ஆஸ்திரியாவிற்கான வெள்ளிக்கிழமைகள்” (Fridays for Future Austria) என்ற அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மார்லின் நட்ஸ், உலகின் எதிர்காலத்துடன் தொடர்புடைய அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான உறவைப் பற்றி விவாதித்தார். “நாம் அறிவியலை மட்டுமே கொண்டிருந்தால், நாம் உண்மைகளை நன்கு அறிந்திருக்கலாம் … ஆனால் நமது கிரகத்துடன் நாம் இணைந்திருப்பதாக உணர முடியுமா? நமது வீடு தீப்பிடித்துள்ளது என்பதை நாம் உண்மையில் உணர முடியுமா?”
வரவிருக்கும் வாரங்களில் வெளியிடப்படும் மற்றொரு அத்தியாயம், இந்த விவகாரத்தில் நிபுணரான கெனன் கோங்கருடன் அடையாளம் மற்றும் இடம்பெயர்வு பற்றிய கேள்வியை ஆராய்கிறது. அலுவலகத்தின் இந்த முன்முயற்சியைப் பற்றி அவர் கூறுவதாவது: “இந்த முக்கியமான சமூக தலைப்புகளில் ஒரு மதம் சார்ந்த சமூகம் தீவிரமாக ஈடுபடுவதைக் காண்பது புத்துணர்வூட்டுகிறது.”

vlog’ற்கான பிற அபிலாஷைகளை விளக்குவதில், டாக்டர் டேவர்னாரோ இவ்வாறு கூறுகிறார்: “இந்த வழியில் உரையாடல்களை ஆவணப்படுத்துவதன் மூலம், இந்த முன்முயற்சி காலப்போக்கில் சில கருத்துக்கள் ஆராயப்படுவதன் மூலம், கருத்துக்களின் பரிணாம வளர்ச்சியைப் பின்பற்ற மக்களுக்கு வாய்ப்பளிக்கும்.
“எடுத்துக்காட்டாக, அடையாளம் (identity) குறித்த கேள்வியை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கும் உரையாடல்களில், ‘ஆஸ்திரிய, ஐரோப்பிய அல்லது வேற்று நாட்டிலிருந்து வந்த ஒருவர் என்பதன் அர்த்தம் என்ன?’ என்று கேட்பது – தொடர்புடைய தேசிய சொல்லாடல்களில் ஈடுபடுபவர்கள், அவ்வப்போது திரும்பி வந்து சிந்தனை எவ்வாறு விரிவடைகிறது, புதிய நுண்ணறிவு எவ்வாறு உருவாகிறது என்பதைக் காண முடியும்.”
ஆஸ்திரிய பஹாய் வெளிவிவகார அலுவலகத்தால் திட்டமிடப்பட்ட, வரவிருக்கும் அங்கங்களில் இனவெறி மற்றும் சமூக ஒத்திசைவு பற்றிய விவாதங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்து பொது உணர்வை வளர்ப்பதில் கல்வியின் பங்கு ஆகியவை அடங்கும்.
vlog’ஐ https://www.bahai.at/diskurs/ ‘இல் காணலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1472/