கொங்கோ ஜனநாயக குடியரசிலும் கென்யாவிலும் வழிபாட்டு இல்லங்களின் கட்டுமானம் மேம்பாடு கண்டு வருகின்றது.


கொங்கோ ஜனநாயக குடியரசிலும் கென்யாவிலும் வழிபாட்டு இல்லங்களின் கட்டுமானம் மேம்பாடு கண்டு வருகின்றது.


8 அக்டோபர் 2021


கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு – இரண்டு ஆப்பிரிக்க சமூகங்களில் பஹாய் வழிபாட்டு இல்லங்களின் கட்டுமானப் பணிகள் சீராக முன்னேறி வருகின்றன.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான அடித்தள தோண்டுதலிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், மாளிகையின் அஸ்திவாரங்களின் முக்கிய வளையத்திற்கு அகழ்வு தோண்டுதல் பணி முடிவுற்றது.

கின்ஷாஸா கோவில் அஸ்திவாரங்கள் மீதான பணி சீராக முன்னேற்றம் காணும் அதே வேளை கென்யா கோவில் பணிகள் முடிவை எட்டிக்கொண்டிருக்கின்ன.

கென்யாவின் மாத்துண்டா சோய்’யில், கனமழை மற்றும் பிற சிரமங்களுக்கும் இடையில் உள்ளூர் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம் தொடர்கிறது. மத்திய கட்டிடம் இப்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. கதவுகள் மற்றும் வெளிப்புற சுவர்களின் கூரை மற்றும் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான தளத்தில் ஒரு வரவேற்பு மையமும் பிற துணை கட்டிடங்களும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இரு இடங்களிலும், திட்டங்கள் கோவில் தளங்களிலும் அதற்கு வெளியிலும் சேவை மற்றும் பக்தி சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன.

கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு

பின்வரும் படங்களின் தேர்வு கின்ஷாசாவில் கட்டுமானத்தின் ஆரம்ப கட்டங்களைக் காட்டுகிறது.

அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டுக்குப் பிறகு அஸ்திவாரங்களுக்கான தோண்டுதல் பணி ஆரம்பித்துள்ளது.
ஒரு செயல்முறை பணிகளுக்கான ஒரு மென்மையான மேறபரப்பை உருவாக்குகின்றது. வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அஸ்திவாரங்களுக்கான படிவங்களை உருவாக்க கான்கிரீட் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கான்கிரீட் பெரும்பாலும் போடப்பட்ட பிறகு, எதிர்கால கோவிலின் அடித்தடம் வடிவம் பெறுகின்றது.
கோவில் தளத்தைச் சுற்றியுள்ள உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தோட்டங்களில் பயன்படுத்தப்படவுள்ள தாவரங்களுக்கு ஒரு நாற்றங்கால் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உதவுகிறார்கள்.
வழிபாட்டு இல்லத்தின் தளம் ஏற்கனவே பிரார்த்தனைக்கான இடமாக மாறியுள்ளது, மக்கள் தினமும் காலையில் பஹாய் திருவாக்குகளிலிருந்து பிரார்த்தனைகளையும் பத்திகளையும் பாடுவதற்கும் ஓதுவதற்கும் கூடிவருகிறார்கள் மற்றும் அவர்களின் சமூகத்திற்கு தினசரி சேவைக்கான உத்வேகத்தைப் பெறுகிறார்கள்.

மாத்துன்டா சோய், கென்யா

பின்வரும் படங்கள் மாத்துன்டா சோய்’யில் தற்போதைய மேம்பாட்டின் நிலையைக் காண்பிக்கின்றன.

மத்திய கட்டுமானத்தின் கான்கிரீட் சுவர்களும் கூரை உத்தரங்கள் பணி முடித்தவுடன், கூரைக்கான எஃகு வேலைகள், வெளிப்புற சுவர்களுக்கு உறைப்பூச்சு மற்றும் தூண்கள் மற்றும் வாசல்களுக்கான அலங்காரங்கள் ஆகியவற்றின் பணிகள் தொடர்கின்றன. ஒரு வரவேற்பு மையம் (மத்திய கட்டுமானத்தின் வலதுபுறம் தெரியும்) மற்றும் பிற துணை கட்டிடங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
கூரையை உருவாக்கும் ஓடுகள் மற்றும் ஸ்கைலைட்டுகளை ஆதரிக்க அனைத்து எஃகு வேலைகளும் இப்போது நிலைபாட்டில் உள்ளன.
எஃகு வேலை நீர்ப்புகாப்பு மற்றும் பிளாஸ்டர் மூலம் மூடப்படுகிறது
மத்திய கட்டுமானத்தின் ஒன்பது நுழைவாயில்களில் ஒன்று. ஒவ்வொரு வாசலையும் சுற்றியுள்ள குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி இரண்டு அடுக்கு மரங்களுக்கு இடையில் கண்ணாடியை இணைக்கும். வெளிப்புற நெடுவரிசைகள் மற்றும் கதவுகளுக்கான அலங்கார பிளாஸ்டர் முடிக்கப்பட்டுள்ளது.
மத்திய கட்டுமானத்தைச் சுற்றியுள்ள அஸ்திவாரத்தில் நடவுகள் போடப்பட்டு வருகின்றன.
இடது: பின்புறத்தில் தெரியும் மத்திய கட்டுமானத்தின் வரவேற்பு மையம். வலது: பார்வையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் துணை கட்டிடங்களில் ஒன்றின் பணி தொடர்கிறது.
தளம் முழுவதும் கட்டுமானம் முன்னேற்றம் காண்கையில், கோயிலைச் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் பாதைகளில் பணிகள் தொடங்குகின்றன.
சமூகத்தின் உறுப்பினர்கள் கோயிலின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுகின்றனர். உள்ளூர் வழிபாட்டு இல்லம் மாத்துண்டா சோய் சமூக வாழ்க்கையின் மையமாக இருக்கும். இது அப்பகுதி முழுவதும் வழிபாடு மற்றும் சேவையை ஊக்குவிக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1473/