அப்துல்-பஹா: நிறப்பாகுபாட்டின் மீது தாக்குதல்


நிறப்பாகுபாட்டின் மீது தாக்குதல்

ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கறுப்பின மக்களின் தேசிய முன்னேற்ற கழகம் (NAACP), சிக்காகோ நகரில் நடைபெறவுள்ள தனது நான்காவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிட அப்துல் பஹாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவர் 1912ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி செவ்வாய்க் கிழமையன்று இரண்டு முறை அம்மாநாட்டில் உரையாற்றினார். பிறகு, அதே நாளன்று பிற்பகலில் தென் சிக்காகோவிலுள்ள ஹுல் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு முறை உரையாற்றினார். அதன் பிறகு, மாலையில், லூப் அண்டையர்ப் பகுதியிலுள்ள 40, ஈஸ்ட் ரண்டோல்ப் தெருவிலும் உரையாற்றினார். ஹண்டெல் மண்டபத்தில் உரையாற்றிபோது, அப்துல் பஹா தமது உரையை பழைய ஏற்பாட்டு திருநூலிலுள்ள ஒரு மேற்கோளுடன் தொடங்கினார்: “மனிதனை எமது சாயலில் படைப்போம், எம்மைப் போன்று”. மனிதன் எங்கே, எப்படி ஆண்டவருடைய சாயலிலும், அவரைப் போன்றும் இருக்கின்றான் என்பதையும், மனிதன் அளவிடப்படுவதற்கான அளவுகோல் என்ன என்பதையும் நாம் ஆய்வு செய்வோமாக,” என அப்துல் பஹா அக்கூட்டத்தில் பரிந்துரைத்தார்.

A Tribute to Bahá'u'lláh - Beyond Foreignness
அப்துல்-பஹா உரையாற்றுகின்றார்

அதன் பிறகு அவர் பின்வரும் ஆணித்தரமான கேள்விகளை எழுப்பினார்: “ஒரு மனிதன் செல்வத்தை உடைமையாகக் கொண்டிருந்தால், அவன் இறைவனின் சாயலில் இருக்கின்றான், இறைவனைப் போன்று இருக்கின்றான் என நாம் கூற முடியுமா? அல்லது, மானிட மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அவன் இறைவனைப் போன்று இருக்கின்றான் என நாம் கூற முடியுமா? அல்லது தோல் நிறச் சோதனை யை நாம் அதற்கு ஓர் அளவுகோலாகப் பயன்படுத்தி, இன்னார் இந்த நிறத்தில் இருப்பதால் அவருக்கு இறைவனின் சாயல் உள்ளது எனக் கூற முடியுமா? உதாரணமாக, பச்சை நிறம் கொண்ட மனிதர் இறைவனின் சாயல் உள்ளவர் என நாம் கூற முடியுமா?” “எனவே, தோலின் நிறம் முக்கியமானது அல்ல என நாம் முடிவு செய்கின்றோம். நிறம் என்பது இயற்கையில் ஒரு சந்தர்ப்ப நிகழ்வு…… ஒரு மனிதன் நீல நிறமாகவோ, வெண்ணிறமாகவோ, பச்சை நிறமாகவோ மாநிறமாகவோ இருந்து விட்டு போகட்டும். அது முக்கியமானதல்ல! சரீர அடையாளங்களினால் மனிதன் மதிப்பீடு செய்யப்படக் கூடாது. மனிதன் அவனுடைய அறிவு மற்றும் ஆன்ம பலத்தால் மதிப்பிடப்பட வேண்டும். இதுவே இறைவனின் சாயல்.

வாஷிங்டன் நகரில் கூறியதுபோலவே அப்துல் பஹா இங்கும் எளிமையான கறுப்பு வெள்ளை உதாரணங்களைக் கொண்டு பின்வரும் முடிவை எடுத்துரைத்தார்: ” மனிதனின் தன்மை வெண்மையாக இருந்தால், அவனது இதயம் வெள்ளையாக இருந்தால், அவனது உடலின் தோல் கறுப்பாக இருந்து விட்டு போகட்டும்; அவனது இதயம் கறுமையாகவும், அவனது தன்மை கறுமையாகவும் இருந்தால், அவன் அழகாக இருந்து விட்டு போகட்டும். அது முக்கியமல்ல.” வேறு விதத்தில் சொல்வதென்றால், தோல் நிறம் ஒரு மனிதனின் குணவியல்பில் எவ்வித தாக்கமும் செலுத்துவது இல்லை. ஹண்டெல் மண்டபத்திற்கு எதிர்ப்புறத்தில் 29, ஈஸ்ட் ரண்டோல்ப் தெருவில் அமைந்திருந்த மெசொனிக் டெம்பலில் அன்று மாலையில் இன்னொரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

What the Bahá'i Temple Reveals About the Bahá'i Faith | WTTW Chicago
சிக்காகோ பஹாய் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம்

நகரங்களைச் சேர்ந்த 58 பேராளர்கள் பஹாய் டெம்பள் யூனிட் என்ற ஒன்பது உறுப்பினர் கொண்ட அமைப்பைத் தேர்ந்தெடுக்க ஒன்று திரண்டுக் கொண்டிருந்தனர். வட அமெரிக்காவில் வசித்து வந்த பஹாய் நம்பிக்கையாளர்களினால் சிக்காகோவின் வட பகுதியில் ஒரு கோவிலை எழுப்பும் மிகப் பெரிய திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான தேசிய அமைப்பு அது. பேராளர்கள் இரகசிய வாக்கெடுப்பின் வாயிலாக அந்த அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தபோது, அவர்களைச் சுற்றிலும் கலைவேலைப்பாடு கொண்ட கொரிந்தியன் மண்டபத்தின் கம்பீரமான கல் தூண்கள் அணிவகுத்து நின்றன. முதல் வாக்கெடுப்பின் முடிவில், சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று இருவர் 9வது இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். சிக்காகோவைச் சேர்ந்த ஒரு வெள்ளைக்கார டாக்டரான பெரடெரிக் நட் அவர்களும், வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு கறுப்பின வழக்கறிஞரான லூயிஸ் கிரகெரி அவர்களுமே அந்த இருவர். ஆயினும், 1912ம் ஆண்டின் கடுமையான தலைவர் தேர்தலிலிருந்து முற்றாக வேறுபட்ட நிலையில் அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவரைத் தெரிவு செய்யப்படுவதையே விரும்பினர்.

Louis George Gregory - Wikipedia
லூயிஸ் கிரகெரி மற்றும் அவரது மனைவி

இந்நிலையில், நியூயார்க் பகுதியின் இதாகா சமூகத்தைச் சேர்ந்த பேராளரான திரு. ரோய் வில்ஹெல்ம் எழுந்து நின்று ஒரு கருத்தை முன்மொழிந்தார். அவரது கருத்து டாக்டர் ஹொமர் இஸ் ஹார்பர் அவர்களினால் ஆமோதிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையிலிருந்து வெள்ளைக்கார டாக்டர் நட் அவர்கள் தன்னை தேர்தலிலிருந்து விடுவித்துக் கொள்வதை பேராளர் மாநாடு ஏக மனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்தக் கருத்தாகும். அக்கருத்தை பேராளர் மாநாடு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் பெரும்பான்மை வகித்த ஒரு தேசிய வாரியத்தில் ஆப்ரிக்க பின்னணியைச் சேர்ந்த ஓர் அமெரிக்கர் தேர்ந்தெடுக்கப்படுடிருப்பதானது – அதாவது, கறுப்பினத்தவர்களுக்கு எதிரான ஜிம் க்ரோ சட்டம் 1912ம் ஆண்டில் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ஓர் கறுப்பின அமெரிக்கர் அந்த தேசிய வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல் ஓர் அரிதான செயல். ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கருப்பின மக்களின் தேசிய முன்னேற்ற கழகம் (NAACP) கூட 1909ம் ஆண்டு அமைப்பு கண்டபோது, தனது உயர்மட்ட செயற்குழுவில் ஒரேயொரு கறுப்பினத்தவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தா. நிறப்பாகுபாட்டின் மீது அப்துல் பஹா தொடுத்த தாக்குதல் பலன் கொடுக்கத் தொடங்கியது.

அப்துல்-பஹா


அடுத்த ஆண்டான 2021 அப்துல்-பஹா மறைந்த நூறாவது ஆண்டைக் குறிக்கின்றது. அதன் தொடர்பில் அவரைப் பற்றிய சில செய்திகளும் கதைகளும் இங்கு வழங்கப்படும்.

அப்துல் பஹா – ஐக்கிய அமெரிக்காவுக்கான அவரது பயணத்தின் நூறாம் ஆண்டு – 2012

abdulbaha-painting | Tarbiyat Baha'i Community | Bahai faith, Bahai quotes,  Baha
அப்துல்-பஹா

“அப் பயணங்களின் நூற்றாண்டு விழாவின் போது மாஸ்டர் அப்துல் பஹாவின் ஈடிணையற்ற வரலாற்றை மீண்டும் மீண்டும் அடிக்கடி நினைவுக் கூர்வதானது, அவரது நேர்மைமிக்க நேசிப்பாளர்களை உற்சாகப்படுத்தி வலிமைப்படுத்தும் என நாங்கள் நம்புகின்றோம். அவரது முன்னுதாரணத்தை உங்களுடைய கண்களுக்கு முன் நிலைநிறுத்தி அதன் மீது உங்களுடைய பார்வையைப் பதிப்பீர்களாக. உலகத் திட்டத்தின் இலட்சியத்தை அடைவதில் அது உங்களுடைய இயற்கையான வழிகாட்டுதலாக இருக்கட்டுமாக..” ரித்வான் 2011

அமெரிக்காவை அப்துல் பஹா வந்தடைதல்

SS செல்டிக் கப்பலில் அப்துல்-பஹா

அப்துல் பஹா வந்த எஸ்.எஸ் செட்ரிக் கப்பலில் ஏறுவதற்காக பல பத்திரிகை நிருபர்கள் சிறிய படகு ஒன்றில் வந்து அக்கப்பலில் ஏறினர். கப்பலில் ஏறியவுடன் அவர்கள் கப்பலின் மேற் பகுதியில் இருந்த பஹாவைச் சூழ்ந்து கொண்டனர். அந்நிருபர்கள் தம்மை வந்தடைந்தவுடன் அவர்களை அப்துல் பஹா வரவேற்றபோது அவர் வெளிப்படுத்திய ஆழந்த மகிழ்ச்யைக் கண்டு அந்நிருபர்கள் வியந்தனர். அப்துல் பஹா அந்நிருபர்களிடம் பின்வருமாறு கூறி வரவேற்றார்:

R.M.S. Cedric - The Ship 'Abdu'l-Baha Arrived in New York City on 11 April  1912 | 'Abdu'l-Bahá in America
அப்துல்-பஹாவை ஐக்கிய அமெரிக்காவுக்குத் தாங்கி வந்த R.M.S Cedric கப்பல்

“செய்தித் தாள்களின் மின்னலென மறைந்தோடி விடும் பக்கங்கள் உலகின் கண்ணாடியாகும். ஆனால், செய்தித்தாள்களின் செய்தியாசிரியர்கள் அகந்தை மற்றும் விருப்பு எனும் துவேஷ உணர்களிலிருந்து விடுபட்டு தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொண்டு நடுநிலை மற்றும் நீதியெனும் ஆபரணத்தினால் தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.”

சுதந்திரத் தேவதையின் சிலையைக் கடந்து சென்றபோது அவர் தமது கரங்களை நீட்டி பின்வருமாறு கூறினார்: “அங்கே புதிய உலகின் சுதந்திரத்தினுடைய அடையாளச் சின்னம். நாற்பது வருடங்களாக ஒரு சிறைக் கைதியாக வாழ்க்கையைக் கழித்துள்ள என்னால், சுதந்திரம் என்பது நாம் இருக்கும் இடம் சம்பந்தப்பட்ட அம்சம் அல்ல என்று கூற முடியும். சுதந்திரம் என்பது ஒழு சூழ்நிலை. கடுமையான நிலைமாற்றங்களை ஒருவர் ஏற்றுக் கொண்டாலொழிய அவர் அதனை அடையமாட்டார். ஒருவர் சுயநலம் எனும் சிறையை விட்டு வெளியாகும் போது அதுவே விடுதலையாகும்.

தாம் அமெரிக்காவுக்கு வந்த காரணத்தை நிருபர்கள் அப்துல் பஹாவிடம் வினவினர். அவர் அக்காரணங்களைப் பின்வருமாறு பட்டியலிட்டார்: “எமது குறிக்கோள் உலக அமைதியும், மானிடத்தின் ஒற்றுமையுமாகும். “அதன் நிறைவேற்றம், உலக மக்களின் அபிப்ராயத்தினுடைய ஈர்ப்பு மற்றும் ஆதரவின் வாயிலாகவே நடந்தேறும். இன்று அனைத்து மானிட வாழ்வின் மாமருந்தாக விளங்குவது உலக அமைதியே ஆகும்.

“இப்பிணிகளில் ஒன்று யாதெனில், உலக அரசாங்கங்கள் போர்களுக்காக அதிகமாக செலவு செய்தன் காரணமாக மக்கள் அடைந்துள்ள மன உளைச்சலும், அதிருப்தியுமாகும். கடின உழைப்பின் வாயிலாக மக்கள் பெறுகின்ற பணம் அரசாங்கங்களினால் பிடுங்கப்பட்டு போர் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அரசாங்கங்கள் இச்செலவுகளை ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக, மனிதர்களின் மீது சுமத்தப்படும் சுமைகள் தாங்க இயலாத  அளவுக்கு கடுமையாகி விட்டதுடன், மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் மேன்மேலும் கடுமையாகி விட்டன. இது, இன்றைய நாளின் மாபெரும் பிணிகளில் ஒன்றாகும்.”

அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டால், அவர்கள் எல்லா சிரமங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு ஒவ்வோர் அவலமும் துயர் துடைப்பாக மாற்றம் பெறும். எனினும், மக்களுடைய எண்ணங்கள் மற்றும் கருத்துகளுக்கான கல்வி மற்றும் அபிவிருத்தியின் வாயிலாக அன்றி இதனைக் கொண்டு வர இயலாது.”

அப்துல் பஹாவின் வார்த்தைகள் அந்நிருபர்களின் நம்பிக்கைகளையும், அச்சங்களையும் தொட்டன. அக்கேள்விகளுக்கு அப்துல் பஹா அளித்த பதில்களை அவர்கள் குறித்துக் கொண்டனர். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நிலவிய அதிகாரங்களின் மெல்லிய சமநிலையை அந்நிருபர்கள் அறிந்திருந்தனர். எஸ்.எஸ். செட்ரிக் கப்பல், கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அப்பெருங்கப்பல் அங்கு வந்தடைந்தவுடன் அங்கு குழுமியிருந்த மக்களிடையே பண்டிகை உணர்வு மேலோங்கியிருந்தது. கப்பலில் இருந்தவர்களை நோக்கி அவர்களை வரவேற்க வந்வர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கப்பல் பணியாளர்கள் பயணிகள் எவ்வாறு துறைமுகத்தில் இறங்க வேண்டும் எனும் நடைமுறையை விளக்கிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு ஒரு சங்கொலி முழங்கியது.

எட்வர்ட் கின்னி’யும் அவரது மனைவியும்

அப்துல் பஹாவை வரவேற்க வந்திருந்தவர்களுள் எட்வர்டு கின்னியும், அவரது மனைவி வாஃப்பாவும் அடங்குவர். எட்வர்டு கின்னிக்கு சாஃப்பா எனும் பெயரும் உண்டு. அவர் ஏற்கனவே யாத்திரைக்காகப் புனித பூமிக்குச் சென்று திரும்பியவர். எட்வர்டு கின்னியையும், அவரது மனைவியும் கப்பலுக்குள் வருமாறு அப்துல் பஹா பணித்தார். அவர்கள் கப்பலுக்குள் வந்தவுடன், அங்கு குழுமியிருந்த பஹாய்கள் கின்னியின் இல்லத்திற்குச் சென்று அங்கு தம்மைச் சந்திக்கக் காத்திருக்கக் கூறுமாறு கட்டளையிட்டார். அதன் பிறகு அங்குக் குழுமியிருந்தவர்களிடம் அப்துல் பஹாவின் கட்டளையை திரு. கின்னி தெரிவித்தார். சிறிது நேரத்தில் கப்பலை மூடுபனி சூழ்ந்து கொண்டது. பிறகு, அப்துல் பஹா, நல்லாசி போன்று கப்பலை விட்டிறங்கி அமெரிக்க நாட்டில் கால்பதித்தார்.

(நியூயார்க் நகரில் அப்துல் பஹா – அமெரிக்காவுக்கு அவரது வருகையின் நூற்றாண்டு விழா- ஹூசேய்ன் அடியிஉஹ் மற்றும் ஜிலாரி செப்மென்)

“நாம் ஒன்றாக வாழ கற்க வேண்டும்”: துனீசிய புரட்சிக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு


“நாம் ஒன்றாக வாழ கற்க வேண்டும்”: துனீசிய புரட்சிக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு


24 டிசம்பர் 2020


துனிசியாவின் பஹாய்கள் சகவாழ்வு மற்றும் குடியுரிமை குறித்த ஒரு கூட்டத்தை நடத்தினர். அதில், ஐ.நா மனித உரிமைகள் தினத்தைக் குறிக்க அதிகாரிகள் மற்றும் மத சமூகங்களின் பிரதிநிதிகளை ஒன்றுகூட்டினர்

துனிஸ், துனிசியா – துனிசியாவில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய தொடர் நிகழ்வுகளின் பத்து ஆண்டுகளை இந்த மாதம் குறிக்கிறது. அப்போதிருந்து என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் பற்றி பிரதிபலிக்கையில், நாடு முழுவதும் நடைபெறும் உரையாடல்கள் நாட்டின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டுள்ளன. இந்த கலந்துரையாடல்களுக்கான பங்களிப்பாக, நாட்டின் பஹாய்கள் சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து, குடியுரிமை குறித்த புதிய கருத்துகளை ஆராய ஒரு கூட்டத்தை நடத்தினர்.

“2011 ஆம் ஆண்டில் எங்கள் சமூகம் வியத்தகு மாற்றத்தை சந்தித்தபோது, ​​வளர்ந்து வரும் மெய்நிலையைக் கையாள்வதில் மக்களுக்கு அனுபவம் இல்லாமல் இருந்தது” என்று துனிசிய பஹாய் சமூக வெளியுறவு அலுவலகத்தின் மொஹமட் பென் மூசா கூறுகிறார். “நாடு பொறுப்பின் ஒரு புதிய நிலை மற்றும் ஈடுபாட்டைப் பற்றி கற்க வேண்டியிருந்தது. இந்த செயல்முறையில் ஒற்றுமை அவசியம்-ஒருமைப்பாடும் பச்சாத்தாபமும் ஜனத்தொகை முழுவதிலும் நிர்மாணிக்கப்பட வேண்டும். முன்னேற்றம் காணப்பட்டாலும், இது இன்னமும் ஒர் மெய்நிலை அல்ல, மேலும் பலர் இடப்பெயர்ச்சி உணர்வுடன் இருக்கிறார்கள். ”

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜமீலா க்சிக்ஸி, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து உமர் ஃபசடோய், மற்றும் கல்வியாளர்கள் மற்றும் மத சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் ஒன்றுகூடினர். நேரில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும் மேலதிகமாக, அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதே வேளை, ​​ஆயிரக்கணக்கானோர் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு மூலம் விவாதங்களுடன் இணைக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜமீலா க்சிக்ஸி, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து உமர் ஃபசடோய், மற்றும் கல்வியாளர்கள் மற்றும் மத சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் ஒன்றுகூடினர்.

அனைத்து துனிசியர்களும் தங்கள் கூட்டு எதிர்காலத்திற்கு பங்களிக்க வேண்டுமென்றால், பங்கேற்பாளர்களிடையே சகவாழ்வை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஒருமித்த கருத்து இருந்தது.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜமீலா க்சிக்ஸி, “துனிசியா மட்டுமல்ல, உலகமும் பாகுபாட்டின் அதிகரிப்பை அனுபவித்து வருகிறது. பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு அதை ஒன்றாக வாழ கற்றுக்கொள்வதே குறிக்கோள். சட்டங்கள் உள்ளன, அவற்றை செயல்படுத்தல் தேவையாகும். இதைச் செய்ய, நமக்கு அரசு ஸ்தாபனங்கள் மற்றும் பொது சமூகத்தின் கூட்டு முயற்சி அவசியமாகும். துனிசிய அரசியலமைப்பு பன்முகத்தன்மையை உள்ளடக்கியுள்ளது. நமது அன்றாட மெய்நிலையில் இதைப் பதிப்பதே நமது சவாலாகும்.”

திரு. பென் மூசா இந்த யோசனையை விரிவுபடுத்தி, தப்பெண்ணத்தையும் பாகுபாட்டையும் நிவர்த்தி செய்வதற்கு குடியுரிமை பற்றிய புதிய மனநிலை தேவைப்படும் என்று விளக்கினார். “துனிசியர்களாகிய நாம் அனைவரும் வேறுபட்ட குழுக்கள் அருகருகே இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றாலும், பாகுபாடு என்பது இன்னும் நமது மெய்நிலையின் ஒரு பகுதியாக இருக்கின்றது. பாகுபாட்டினால் மக்கள் கவலைகொள்ளாவிட்டால், நம் சமூகம் எவ்வாறு மாபெரும் மாற்றத்தை அடைய முடியும்?

“நாம் உண்மையிலேயே ஒருவராக வாழ கற்றுக்கொள்ள வேண்டும், ஒருவரை ஒருவர் ஒருவராகவே பார்க்க வேண்டும். சமூகம் ஓர் உடல் போன்றதாகும். ஒரு பகுதி துன்பப்பட்டால் அல்லது அதற்குத் தேவைகள் இருந்தால், மற்ற ஒவ்வொரு பகுதியும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும்.”

திரு. ஃபசாடோய், குறிப்பாக சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடையே சகவாழ்வை வளர்க்க முற்படும் ஸ்தாபன முயற்சிகள் குறித்து பேசினார். மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரங்கள் தொடர்பான அனைத்து சர்வதேச மாநாடுகளுக்கும் துனிசியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பள்ளிகளில் மத பன்முகத்தன்மை கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான பாதையில் நாடு உள்ளது. ”

ஒரு முக்கிய யூத ரப்பி டேனியல் கோஹன் உட்பட, கூட்டத்தில் பங்கேற்ற மற்ற பங்கேற்பாளர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மேலதிக கருத்துகளை வழங்கினர். “பள்ளி என்பது குழந்தைகள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்வதோடு பிற மதங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளக்கூடிய இடமாகும். இங்குதான் அவர்கள் முதலில் ஒன்றாக வாழ கற்றுக்கொள்கிறார்கள். ”

கூட்டத்தில் நடந்த உரையாடல்கள் வெவ்வேறு மத மரபுகளில் ஒத்துழைப்பு பற்றிய கருத்துக்களைத் தொட்டன. இந்தக் கருப்பொருளைப் பற்றிப் பேசுகையில், நாட்டின் சுன்ன சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இமாம் கரீம் ச்சினிபா கூறுகையில், “இஸ்லாத்தில், நாம் நமக்கே செய்யாமல் இருந்ததை மற்றவர்களுக்கு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் சமய நம்பிக்கை அல்லது வேறு நம்பிக்கைகள் காரணமாக பாகுபாடு காட்டுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.”

நேரில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும் மேலதிகமாக, அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதே வேளை, ​​ஆயிரக்கணக்கானோர் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு மூலம் விவாதங்களுடன் இணைக்கப்பட்டனர்.

பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் திரு. பென் மூசா, குடியுரிமை குறித்த புதிய கருத்துக்கள் தனித்தன்மையின்றி ஒன்றிணைவை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என மேலும் விளக்கமளித்தார்: “சமூகங்கள் வரலாற்று ரீதியாக படிநிலைப்படி கட்டமைக்கப்பட்டுள்ளன: விசுவாசி மற்றும் அவிசுவாசி, சுதந்திர மனிதன் மற்றும் அடிமை, ஆண்கள் மற்றும் பெண்கள். இதன் விளைவாக, சமூகத்தின் பல பிரிவுகளால் பொது வாழ்க்கைக்குப் பங்களிக்க இயலாமல் இருக்கின்றது. அத்தகைய சூழலில், ஒரு சமூகம் அதன் சாத்திய திறன்களை அடைய முடியாது.

இந்தக் காலத்திற்குத் தேவையான குடியுரிமை பற்றிய கருக்கோள் அதன் அகத்தில் சமத்துவம் மற்றும் நீதிக்கான ஆன்மீகக் கொள்கைகளைக் கொண்டிருக்கும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1476/