அடுத்த ஆண்டான 2021 அப்துல்-பஹா மறைந்த நூறாவது ஆண்டைக் குறிக்கின்றது. அதன் தொடர்பில் அவரைப் பற்றிய சில செய்திகளும் கதைகளும் இங்கு வழங்கப்படும்.
அப்துல் பஹா – ஐக்கிய அமெரிக்காவுக்கான அவரது பயணத்தின் நூறாம் ஆண்டு – 2012

“அப் பயணங்களின் நூற்றாண்டு விழாவின் போது மாஸ்டர் அப்துல் பஹாவின் ஈடிணையற்ற வரலாற்றை மீண்டும் மீண்டும் அடிக்கடி நினைவுக் கூர்வதானது, அவரது நேர்மைமிக்க நேசிப்பாளர்களை உற்சாகப்படுத்தி வலிமைப்படுத்தும் என நாங்கள் நம்புகின்றோம். அவரது முன்னுதாரணத்தை உங்களுடைய கண்களுக்கு முன் நிலைநிறுத்தி அதன் மீது உங்களுடைய பார்வையைப் பதிப்பீர்களாக. உலகத் திட்டத்தின் இலட்சியத்தை அடைவதில் அது உங்களுடைய இயற்கையான வழிகாட்டுதலாக இருக்கட்டுமாக..” ரித்வான் 2011
அமெரிக்காவை அப்துல் பஹா வந்தடைதல்

அப்துல் பஹா வந்த எஸ்.எஸ் செட்ரிக் கப்பலில் ஏறுவதற்காக பல பத்திரிகை நிருபர்கள் சிறிய படகு ஒன்றில் வந்து அக்கப்பலில் ஏறினர். கப்பலில் ஏறியவுடன் அவர்கள் கப்பலின் மேற் பகுதியில் இருந்த பஹாவைச் சூழ்ந்து கொண்டனர். அந்நிருபர்கள் தம்மை வந்தடைந்தவுடன் அவர்களை அப்துல் பஹா வரவேற்றபோது அவர் வெளிப்படுத்திய ஆழந்த மகிழ்ச்யைக் கண்டு அந்நிருபர்கள் வியந்தனர். அப்துல் பஹா அந்நிருபர்களிடம் பின்வருமாறு கூறி வரவேற்றார்:
“செய்தித் தாள்களின் மின்னலென மறைந்தோடி விடும் பக்கங்கள் உலகின் கண்ணாடியாகும். ஆனால், செய்தித்தாள்களின் செய்தியாசிரியர்கள் அகந்தை மற்றும் விருப்பு எனும் துவேஷ உணர்களிலிருந்து விடுபட்டு தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொண்டு நடுநிலை மற்றும் நீதியெனும் ஆபரணத்தினால் தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.”
சுதந்திரத் தேவதையின் சிலையைக் கடந்து சென்றபோது அவர் தமது கரங்களை நீட்டி பின்வருமாறு கூறினார்: “அங்கே புதிய உலகின் சுதந்திரத்தினுடைய அடையாளச் சின்னம். நாற்பது வருடங்களாக ஒரு சிறைக் கைதியாக வாழ்க்கையைக் கழித்துள்ள என்னால், சுதந்திரம் என்பது நாம் இருக்கும் இடம் சம்பந்தப்பட்ட அம்சம் அல்ல என்று கூற முடியும். சுதந்திரம் என்பது ஒழு சூழ்நிலை. கடுமையான நிலைமாற்றங்களை ஒருவர் ஏற்றுக் கொண்டாலொழிய அவர் அதனை அடையமாட்டார். ஒருவர் சுயநலம் எனும் சிறையை விட்டு வெளியாகும் போது அதுவே விடுதலையாகும்.
தாம் அமெரிக்காவுக்கு வந்த காரணத்தை நிருபர்கள் அப்துல் பஹாவிடம் வினவினர். அவர் அக்காரணங்களைப் பின்வருமாறு பட்டியலிட்டார்: “எமது குறிக்கோள் உலக அமைதியும், மானிடத்தின் ஒற்றுமையுமாகும். “அதன் நிறைவேற்றம், உலக மக்களின் அபிப்ராயத்தினுடைய ஈர்ப்பு மற்றும் ஆதரவின் வாயிலாகவே நடந்தேறும். இன்று அனைத்து மானிட வாழ்வின் மாமருந்தாக விளங்குவது உலக அமைதியே ஆகும்.
“இப்பிணிகளில் ஒன்று யாதெனில், உலக அரசாங்கங்கள் போர்களுக்காக அதிகமாக செலவு செய்தன் காரணமாக மக்கள் அடைந்துள்ள மன உளைச்சலும், அதிருப்தியுமாகும். கடின உழைப்பின் வாயிலாக மக்கள் பெறுகின்ற பணம் அரசாங்கங்களினால் பிடுங்கப்பட்டு போர் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அரசாங்கங்கள் இச்செலவுகளை ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக, மனிதர்களின் மீது சுமத்தப்படும் சுமைகள் தாங்க இயலாத அளவுக்கு கடுமையாகி விட்டதுடன், மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் மேன்மேலும் கடுமையாகி விட்டன. இது, இன்றைய நாளின் மாபெரும் பிணிகளில் ஒன்றாகும்.”
அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டால், அவர்கள் எல்லா சிரமங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு ஒவ்வோர் அவலமும் துயர் துடைப்பாக மாற்றம் பெறும். எனினும், மக்களுடைய எண்ணங்கள் மற்றும் கருத்துகளுக்கான கல்வி மற்றும் அபிவிருத்தியின் வாயிலாக அன்றி இதனைக் கொண்டு வர இயலாது.”
அப்துல் பஹாவின் வார்த்தைகள் அந்நிருபர்களின் நம்பிக்கைகளையும், அச்சங்களையும் தொட்டன. அக்கேள்விகளுக்கு அப்துல் பஹா அளித்த பதில்களை அவர்கள் குறித்துக் கொண்டனர். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நிலவிய அதிகாரங்களின் மெல்லிய சமநிலையை அந்நிருபர்கள் அறிந்திருந்தனர். எஸ்.எஸ். செட்ரிக் கப்பல், கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அப்பெருங்கப்பல் அங்கு வந்தடைந்தவுடன் அங்கு குழுமியிருந்த மக்களிடையே பண்டிகை உணர்வு மேலோங்கியிருந்தது. கப்பலில் இருந்தவர்களை நோக்கி அவர்களை வரவேற்க வந்வர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கப்பல் பணியாளர்கள் பயணிகள் எவ்வாறு துறைமுகத்தில் இறங்க வேண்டும் எனும் நடைமுறையை விளக்கிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு ஒரு சங்கொலி முழங்கியது.
அப்துல் பஹாவை வரவேற்க வந்திருந்தவர்களுள் எட்வர்டு கின்னியும், அவரது மனைவி வாஃப்பாவும் அடங்குவர். எட்வர்டு கின்னிக்கு சாஃப்பா எனும் பெயரும் உண்டு. அவர் ஏற்கனவே யாத்திரைக்காகப் புனித பூமிக்குச் சென்று திரும்பியவர். எட்வர்டு கின்னியையும், அவரது மனைவியும் கப்பலுக்குள் வருமாறு அப்துல் பஹா பணித்தார். அவர்கள் கப்பலுக்குள் வந்தவுடன், அங்கு குழுமியிருந்த பஹாய்கள் கின்னியின் இல்லத்திற்குச் சென்று அங்கு தம்மைச் சந்திக்கக் காத்திருக்கக் கூறுமாறு கட்டளையிட்டார். அதன் பிறகு அங்குக் குழுமியிருந்தவர்களிடம் அப்துல் பஹாவின் கட்டளையை திரு. கின்னி தெரிவித்தார். சிறிது நேரத்தில் கப்பலை மூடுபனி சூழ்ந்து கொண்டது. பிறகு, அப்துல் பஹா, நல்லாசி போன்று கப்பலை விட்டிறங்கி அமெரிக்க நாட்டில் கால்பதித்தார்.
(நியூயார்க் நகரில் அப்துல் பஹா – அமெரிக்காவுக்கு அவரது வருகையின் நூற்றாண்டு விழா- ஹூசேய்ன் அடியிஉஹ் மற்றும் ஜிலாரி செப்மென்)