
“நாம் ஒன்றாக வாழ கற்க வேண்டும்”: துனீசிய புரட்சிக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு
24 டிசம்பர் 2020

துனிஸ், துனிசியா – துனிசியாவில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய தொடர் நிகழ்வுகளின் பத்து ஆண்டுகளை இந்த மாதம் குறிக்கிறது. அப்போதிருந்து என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் பற்றி பிரதிபலிக்கையில், நாடு முழுவதும் நடைபெறும் உரையாடல்கள் நாட்டின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டுள்ளன. இந்த கலந்துரையாடல்களுக்கான பங்களிப்பாக, நாட்டின் பஹாய்கள் சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து, குடியுரிமை குறித்த புதிய கருத்துகளை ஆராய ஒரு கூட்டத்தை நடத்தினர்.
“2011 ஆம் ஆண்டில் எங்கள் சமூகம் வியத்தகு மாற்றத்தை சந்தித்தபோது, வளர்ந்து வரும் மெய்நிலையைக் கையாள்வதில் மக்களுக்கு அனுபவம் இல்லாமல் இருந்தது” என்று துனிசிய பஹாய் சமூக வெளியுறவு அலுவலகத்தின் மொஹமட் பென் மூசா கூறுகிறார். “நாடு பொறுப்பின் ஒரு புதிய நிலை மற்றும் ஈடுபாட்டைப் பற்றி கற்க வேண்டியிருந்தது. இந்த செயல்முறையில் ஒற்றுமை அவசியம்-ஒருமைப்பாடும் பச்சாத்தாபமும் ஜனத்தொகை முழுவதிலும் நிர்மாணிக்கப்பட வேண்டும். முன்னேற்றம் காணப்பட்டாலும், இது இன்னமும் ஒர் மெய்நிலை அல்ல, மேலும் பலர் இடப்பெயர்ச்சி உணர்வுடன் இருக்கிறார்கள். ”
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜமீலா க்சிக்ஸி, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து உமர் ஃபசடோய், மற்றும் கல்வியாளர்கள் மற்றும் மத சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் ஒன்றுகூடினர். நேரில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும் மேலதிகமாக, அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதே வேளை, ஆயிரக்கணக்கானோர் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு மூலம் விவாதங்களுடன் இணைக்கப்பட்டனர்.

அனைத்து துனிசியர்களும் தங்கள் கூட்டு எதிர்காலத்திற்கு பங்களிக்க வேண்டுமென்றால், பங்கேற்பாளர்களிடையே சகவாழ்வை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஒருமித்த கருத்து இருந்தது.
கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜமீலா க்சிக்ஸி, “துனிசியா மட்டுமல்ல, உலகமும் பாகுபாட்டின் அதிகரிப்பை அனுபவித்து வருகிறது. பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு அதை ஒன்றாக வாழ கற்றுக்கொள்வதே குறிக்கோள். சட்டங்கள் உள்ளன, அவற்றை செயல்படுத்தல் தேவையாகும். இதைச் செய்ய, நமக்கு அரசு ஸ்தாபனங்கள் மற்றும் பொது சமூகத்தின் கூட்டு முயற்சி அவசியமாகும். துனிசிய அரசியலமைப்பு பன்முகத்தன்மையை உள்ளடக்கியுள்ளது. நமது அன்றாட மெய்நிலையில் இதைப் பதிப்பதே நமது சவாலாகும்.”
திரு. பென் மூசா இந்த யோசனையை விரிவுபடுத்தி, தப்பெண்ணத்தையும் பாகுபாட்டையும் நிவர்த்தி செய்வதற்கு குடியுரிமை பற்றிய புதிய மனநிலை தேவைப்படும் என்று விளக்கினார். “துனிசியர்களாகிய நாம் அனைவரும் வேறுபட்ட குழுக்கள் அருகருகே இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றாலும், பாகுபாடு என்பது இன்னும் நமது மெய்நிலையின் ஒரு பகுதியாக இருக்கின்றது. பாகுபாட்டினால் மக்கள் கவலைகொள்ளாவிட்டால், நம் சமூகம் எவ்வாறு மாபெரும் மாற்றத்தை அடைய முடியும்?
“நாம் உண்மையிலேயே ஒருவராக வாழ கற்றுக்கொள்ள வேண்டும், ஒருவரை ஒருவர் ஒருவராகவே பார்க்க வேண்டும். சமூகம் ஓர் உடல் போன்றதாகும். ஒரு பகுதி துன்பப்பட்டால் அல்லது அதற்குத் தேவைகள் இருந்தால், மற்ற ஒவ்வொரு பகுதியும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும்.”

திரு. ஃபசாடோய், குறிப்பாக சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடையே சகவாழ்வை வளர்க்க முற்படும் ஸ்தாபன முயற்சிகள் குறித்து பேசினார். மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரங்கள் தொடர்பான அனைத்து சர்வதேச மாநாடுகளுக்கும் துனிசியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பள்ளிகளில் மத பன்முகத்தன்மை கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான பாதையில் நாடு உள்ளது. ”
ஒரு முக்கிய யூத ரப்பி டேனியல் கோஹன் உட்பட, கூட்டத்தில் பங்கேற்ற மற்ற பங்கேற்பாளர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மேலதிக கருத்துகளை வழங்கினர். “பள்ளி என்பது குழந்தைகள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்வதோடு பிற மதங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளக்கூடிய இடமாகும். இங்குதான் அவர்கள் முதலில் ஒன்றாக வாழ கற்றுக்கொள்கிறார்கள். ”
கூட்டத்தில் நடந்த உரையாடல்கள் வெவ்வேறு மத மரபுகளில் ஒத்துழைப்பு பற்றிய கருத்துக்களைத் தொட்டன. இந்தக் கருப்பொருளைப் பற்றிப் பேசுகையில், நாட்டின் சுன்ன சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இமாம் கரீம் ச்சினிபா கூறுகையில், “இஸ்லாத்தில், நாம் நமக்கே செய்யாமல் இருந்ததை மற்றவர்களுக்கு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் சமய நம்பிக்கை அல்லது வேறு நம்பிக்கைகள் காரணமாக பாகுபாடு காட்டுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.”

பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் திரு. பென் மூசா, குடியுரிமை குறித்த புதிய கருத்துக்கள் தனித்தன்மையின்றி ஒன்றிணைவை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என மேலும் விளக்கமளித்தார்: “சமூகங்கள் வரலாற்று ரீதியாக படிநிலைப்படி கட்டமைக்கப்பட்டுள்ளன: விசுவாசி மற்றும் அவிசுவாசி, சுதந்திர மனிதன் மற்றும் அடிமை, ஆண்கள் மற்றும் பெண்கள். இதன் விளைவாக, சமூகத்தின் பல பிரிவுகளால் பொது வாழ்க்கைக்குப் பங்களிக்க இயலாமல் இருக்கின்றது. அத்தகைய சூழலில், ஒரு சமூகம் அதன் சாத்திய திறன்களை அடைய முடியாது.
இந்தக் காலத்திற்குத் தேவையான குடியுரிமை பற்றிய கருக்கோள் அதன் அகத்தில் சமத்துவம் மற்றும் நீதிக்கான ஆன்மீகக் கொள்கைகளைக் கொண்டிருக்கும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1476/