அப்துல்-பஹா: ஒன்றுமில்லா நிலை


ஜூலியட் தோம்ஸன் கூறியது:

அன்று மதிய உணவிற்கு அரசகுடும்பத்தினர் வந்திருந்தனர், பாரசீக நாட்டின் பாஹ்ரம் மிர்ஸா. இந்த அரசகுமாரனான பாஹ்ரமின் தந்தை ஸில்லுஸ்-சுல்தான் ஆவான். இந்த ஸில்லுஸ்- சுல்தான் நாஸிரிட்டின் ஷாவின் மூத்த மகனாகிய போதும் அவனது தாயார் அரச வர்க்கத்தைச் சாராததன் காரணமாக அவன் அரியனை ஏற முடியாமல் போயிற்று. இந்த நாஸிரிட்டின் ஷாவின் ஆனையின் பேரில்தான் பாப் கொல்லப்பட்டார், மற்றும் ஆயிரக்கணக்கான பாப்’யிக்கள் கொலை செய்யப்பட்டனர், அதே சமயம் இந்த ஸில்லுஸ் சுல்தானின் ஆணையினால் அரும்பெரும் பஹாய்களாகிய “உயிர்த்தியாகிகளின் அரசர்” மற்றும் “உயிர்த்தியாகிகளின் நேசர்” இருவரும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இப்பொழுது அந்த அரசகுடும்த்தினர் அனைவரும் நாடுகடந்து வாழ்கின்றனர். ஸில்லுஸ் சுல்தானும் அவனது மகனும் ஜெனிவாவில் நாடுகடந்து வாழ்கின்றனர், அதே நேரம் அப்துல் பஹா தோனொன்’னில் சுதந்திரமாகப் பயணம் செய்கின்றார் –அவ்வளவு அருகில்!

இறைசமயத் திருக்கரம் திரு. ஏ.க்யூ.பாய்ஸி 1969ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பகிர்ந்து கொண்ட ஒரு கதை

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், தமது தந்தையாரின் சமயத்தை பறைசாற்றுவதற்காக அப்துல் பஹா ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் பயணமானார். சமயத்தினுடைய கடும் கொடூரமான எதிரிகளில் ஒருவனான ஒரு பாரசீக இளவரசனும், அப்துல் பஹா ஐரோப்பாவுக்கு விஜயமளிப்பு செய்தபோது அங்கு இருந்தான்.

The Biography, Claims and Writings of Bahā'-Allāh (1817-1892 CE). |  Hurqalya Publications: Center for Shaykhī and Bābī-Bahā'ī Studies
உயிர்த்தியாகிகளுள் அரசரும், நேசரும்

ஒரு நாள் அந்த இளவரசன் அப்துல் பஹாவிடம் சென்று, “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன். என்னைப் பாருங்கள். எனது தொப்பி வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது ஆடையிலும் பல்வேறு ஆபரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் கூட, நான் தெருவில் நடந்து செல்லும்போது, யாரும் என்னைக் கண்டு கொள்வதுமில்லை அல்லது என் மீது கவனம் செலுத்துவதுமில்லை. ஆனால், நீங்கள் தெருக்களில் செல்லும்போது, உலகிலேயே மிக எளிமையான ஆடையை அணிந்து செல்கின்றீர்கள். எல்லாருமே உங்களுக்கு வழிவிட்டு நடந்து போகின்றார்கள். அவர்கள் உங்களிடம் வருகின்றனர், உங்களுடைய வீட்டுக் கதவருகில் எப்போதுமே நூற்றுக் கணக்கில் மக்கள் திரளுகின்றனர். அது ஏன் என்று எனக்குத் தெரிய வேண்டும்.” என்றான்.

அந்த இளவரைசனை அப்துல் பஹாவுக்கு நன்றாகத் தெரியும். அவன் காரணமாகவே பல பஹாய்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, அவர் பின்வருமாறு அந்த இளவரசனிடம் கூறினார்: “மாட்சிமை பொருந்திய இளவரசரே, சற்று இங்கு அமருங்கள். நான் உங்களுக்கு கதை ஒன்று சொல்லுகின்றேன்.” அப்போது அந்த இளவரசனும் அங்கே அமர்ந்தான். அவன்தான் ஸில்லு சுல்தான், நஸிரிடின் ஷாவின் புதல்வன். அவனுக்கு அப்துல் பஹாவும் கதையைச் சொன்னார்: “ஒரு முறை ஒரு விவேகி, ஒரு பட்டணத்தின் தெரு வழியே போய்க் கொண்டிருந்தபோது, கவலையும், சோகமும் கொண்ட முகத்துடன் கூடிய ஒரு செல்வந்தனை தெருவின் சதுக்கத்தில் கண்டார். அந்த விவேகி அச்செல்வந்தரை நோக்கி, “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அதற்கு அச்செல்வந்தன், “இப்பட்டணத்தில் மிகப் பெரிய வணிகராக விளங்குவதற்கு போதுமான பணம் என்னிடம் உள்ளது. ஆனால், அதில் எனக்கு மனநிறைவில்லை. அதை விட பெரிய பதவி எனக்கு வேண்டும்,” என்று கூறினான். “அப்பதவி என்னவாக இருக்கும்?” என அந்த விவேகி கேட்டவுடன், “இப்பட்டணத்தின் ஆளுநராக ஆக நான் ஆசைப்படுகின்றேன்,” என்று அவன் பதிலளித்தான். உடனே அந்த விவேகி, “நான் உன்னை இப்பட்டணத்திற்கு மட்டுமன்றி, இந்த பிரதேசத்திற்கே ஆளுநராக ஆக்கி விட்டால், அப்போது உனக்கு மனநிறைவு ஏற்படுமா? உன்னுடைய இதயத்தை நன்றாகத் தேடிப்பார்த்து எனக்கு உண்மையான பதிலைச் சொல்” என்று அவனைக் கேட்டுக் கொண்டார். சற்று நேரம் யோசித்து விட்டு அந்த செல்வந்தன், “உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு அதில் மனநிறைவு இல்லை. நான் அமைச்சராக விரும்புகின்றேன்,” என்றான். அதற்கு அந்த விவேகி, “சரி, நான் உன்னை அமைச்சராக்குகின்றேன். உண்மையைச் சொல். நீ மனநிறைவடைவாயா?” என்று கேட்டார். அதனையடுத்து அந்த செல்வந்தன், அந்நாட்டின் மன்னராக விரும்புவதாகக் கூறியபோது, சரி, அதுபோலவே உன்னை அரசனாக்குகின்றேன். அப்போது உனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுமா? அதற்கும் அப்பால் உனக்கு ஏதும் வேண்டுமா?” என்று கேட்டார். அப்போது அச்செல்வந்தன், “அதன் பிறகு கேட்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை,” என்றான்.

Zellesoltan.jpg
ஸில்லுஸ் சுல்தான்

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த இளவரசனை நோக்கி, அப்துல் பஹா, “மாட்சிமைமிக்க இளவரசரே, அந்த ‘ஒன்றுமில்லை’ எனும் நிலைதான் நான்,” என்றார்.

“ஒரு தெய்வீகச் சுரங்கத்தினால் மட்டுமே தெய்வீக அறிவின் மாணிக்கக் கற்களை தரவியலும்; இறைநிலை கலந்த மலரின் நறுமணத்தை உன்னத நந்தவனத்தில் மட்டுமே முகர்ந்திடவியலும். தொன்மை விவேகத்தின் அல்லி மலர்கள் வேறெங்குமல்லாது மாசற்ற இதயம் என்னும் நகரில் மட்டுமே பூக்கவியலும்.” (பஹாவுல்லா)

அப்துல் பஹாவின் நினைவாலயம்: தோட்ட விளிம்புகளுக்கான கற்காரை அடித்தலம் பூர்த்தியாகியுள்ளது8 அக்டோபர் 2021


பஹாய் உலக நிலையம் — அப்துல் பஹா நினைவாலயத்தின் மத்திய தளத்தின் இருபக்கமும் உள்ள தோட்ட விளிம்புகளை ஆதரிக்கும் கற்காரை அடித்தலங்கள் பூர்த்தியாகிவிட்டன. தென் சதுக்கத்தை உள்ளடக்கும் சுவர்கள் படிவம் சார்ந்த வலுப்படுத்தல் அமைப்புப் பணியும் உருபெற்று வருகின்றது.

தற்போது நடப்பிலிருக்கும் பணி குறித்த ஒரு கண்ணோட்டத்தை கீழே வழங்கப்பட்டுள்ள படங்கள் வழங்குகின்றன.

‘அப்துல்-பஹா நினைவாலயத்திற்கான கட்டுமானப் பணிகளில் சமீபத்திய முன்னேற்றத்தை ஒரு வான்வழி பார்வை காட்டுகிறது. சன்னதிக்கான தளம் ரித்வான் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது, இது முன்புறத்தில் தெரியும்.
மத்திய சதுக்கப் பகுதியில், தோட்டங்களுக்கான மண் மற்றும் வடிகாலைத் தாங்கும் கற்காரை தொட்டிகள் பூர்த்தியாகிவிட்டன.
மத்திய சதுக்கத்தின் கற்காரை தரைக்கான படிவம் போடப்படுகின்றது.
இடதுபுறத்தில் உள்ள கட்டிடக் கலைஞரின் வடிவமைப்பு மைய அமைப்பு மற்றும் சுற்றியுள்ள சதுக்கத்தைக் காட்டுகிறது. சதுக்கத் தரையில் தற்போதைய முன்னேற்றம் வலதுபுறத்தில் காணப்படுகிறது, அங்கு இந்த பகுதியை இரண்டு பக்கங்களிலும் இணைக்கும் சுவர்களை உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சுவர்களுக்கு அவற்றின் மடிப்பு போன்ற வடிவத்தை வழங்குவதற்கு விசேஷ எஃகு வார்ப்பு பணிகள் செய்யப்படுகின்றன.
தென் சதுக்கத்தைச் சூழ்கின்ற சுவர்களுக்கான கட்டமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வார்ப்புகள் சேர்க்கப்படுகின்றன.
விளிம்புகளை இணைக்கும் ஒரு குட்டையான சுவர் கட்டப்படுகின்றது. இது தோட்டத்திற்கான வடிகாலை உருவாக்கி நினைவாலயத்தை சூழவிருக்கும் ஒரு பாதையின் உள்விளிம்மை ஆதரிக்கும்.
தளத்தின் வடக்கு மூலையில், சுற்றிவரும் பாதைக்கும் அப்பால், படித்தள கற்காரை (பூந்)தொட்டிகளை ஆதரிக்கும் கான்கிரீட் அடித்தலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1483/

“ஒற்றுமை எனும் கூடாரத்தின் கீழ் ஒன்றுகூடுதல்”: பாப்புவா நியூ கினியில் சமய நல்லிணக்கம் ஒரு புதிய பாதையைக் காண்கிறது


__________________________________________________________________________________________________________________
22 ஜனவரி 2021
_________________________________________________________________________________________________________________

போர்ட் மோரெஸ்பி, பாப்புவா நியூ கினி, 22 ஜனவரி 2020, (BWNS) – போர்ட் மோரெஸ்பியில் உள்ள ஓர் இயற்கை பூங்காவின் அமைதியான சூழலில் ஒரு கூடாரத்தின் கீழ், பாப்புவா நியூ கினியின் (PNG) பல்வேறு மத சமூகங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் திங்களன்று அவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த ஒன்றை சாதித்தனர்: அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒன்றைச் சுற்றி ஒற்றுமையுடன் ஒன்றுகூடிவது.

உலக மதங்கள் தினத்தைக் குறிக்கும் நிகழ்ச்சி மதங்களை ஒன்றிணைப்பதன்பால் மத சமூகங்களை ஒன்றுதிரட்டியது.

அனைத்துசமய நல்லிணக்கக் கூட்டம் உலக மதங்கள் தினத்தைக் குறித்தது மற்றும் நாட்டின் பல நம்பிக்கை சமூகங்களிடையே ஒரு கூட்டு முயற்சியாகவும் இருந்தது. இந்த நிகழ்விற்கான யோசனையை கடந்த மாதம் PNG பஹாய்கள் பரிந்துரைத்திருந்தனர், இது நாட்டின் மதத் தலைவர்களிடையே ஒரு நாட்டத்தை ஏற்படுத்தியது.

நாட்டின் வெளிவிவகார அலுவலகத்தின் இயக்குனர் கெஸினா வால்மர் கூறுகிறார், “உலக மத தினத்திற்கான நோக்கம், அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயத்தில் புனித வாக்குகளைப் பகிர்வதில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவதே ஆகும்–ஒருவர் தன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறாரோ அவ்வாறே மற்றவர்களையும் நடத்துதல் எனும் பொன்னான வித–அவ்வாறு செய்வதன் மூலம், அன்பையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதே மதத்தின் நோக்கம் என்பதை முன்னிலைப்படுத்துதல். ஆரம்ப தடுமாற்றம் இருந்தபோதிலும், இந்த கவனம் பங்கேற்பு குறித்து அனைவருக்கும் மிகவும் வசதியான ஓர் உணர்வை ஊட்டியது. ”

நிகழ்ச்சிக்குத் தயாராகுதல் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குதல்

ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ஆயத்த கூட்டங்கள் தேவைப்பட்டன என்று திருமதி வால்மர் விளக்குகிறார்.

“முதல் சந்திப்பு வெறுமனே மக்களை ஒன்றிணைப்பதாக இருந்தது” என்று திருமதி வால்மர் கூறுகிறார். “இது அதை விட சிக்கலானது அல்ல. ஏனென்றால், நாம் ஒன்றாக இயங்கத் தெரியாவிடில், இது முதல் படியாக இருந்திடும்.”

பங்கேற்பாளர்களை திட்டத்தின் சில அம்சங்களுக்கு பங்களிப்பு செய்வதற்கும் ஒருவருக்கொருவர் சேவையாற்றுவதற்கும் அனுமதிப்பதன் மூலம் ஆயத்த கூட்டங்கள் நட்பின் பிணைப்பை எவ்வாறு வலுப்படுத்தின என்பதை திருமதி வால்மர் தொடர்ந்து விளக்குகிறார். “இது ஒரு கூட்டு முயற்சி”, என்று அவர் கூறுகிறார். “மகிழ்ச்சி நிறைந்திருந்தது. நாங்கள் அனைவரும் தோளுடன் தோள் சேர்ந்து பணியாற்றினோம்.”

நட்பு வலுவடைந்து வருவதால், அன்புநிறைந்த மற்றும் வரவேற்கும் சூழல் ஒவ்வொரு வாரமும் புதிய பங்கேற்பாளர்களை ஈர்த்தது. “ஒரு புதிய நபர் சேர்ந்தபோது, அவர்கள் சம வேகத்திற்கு கொண்டு வரப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் சற்று நிதானிப்போம். அனைவரும் ஒன்றுகூடும் போது அவர்கள் புதிய பிரதிநிதிகளையும் தழுவினர்.”

அதன் முதல் வகையான கூட்டம்

பாப்புவா நியூ கினியின் இஸ்லாமிய சங்கத்தின் தலைவரான இமாம் புசேரி இஸ்மாயில் அடெகுன்லே கூறுகிறார், “எல்லோரும் அன்று வெளிப்படுத்தியபடி, இது ஒரு தனித்துவமான சந்தர்ப்பம் மற்றும் நம் நாட்டில் முதல் நிகழ்வாகவும் இருந்தது.”

உலக மத தினக் கூட்டத்தில் சூழ்ந்திருந்த உணர்வு குறித்து பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ஸா அகாபே-கிரான்ஃபர் கூறுகிறார், “இது ‘ஒற்றுமை எனும் கூடாரத்தின்’ கீழ் கூடிய ஓர் ஒன்றுகூடலாக இருந்தது, ஏனெனில் எல்லோரும் ஒருவர் மற்றவரை அன்பு, மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையின் சூழலில் செவிமடுத்துக் கொண்டிருந்தனர்.”

பல வார ஒத்துழைப்புக்குப் பிறகு, திங்கட்கிழமை நிகழ்வு மத சமூகங்கள் ஒன்றாகச் சாதித்தவற்றின் வெளிப்பாடாக இருந்தது. போர்ட் மோரெஸ்பியில் அமைதியான சூழலில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த புனிதவாசகங்கள் பல மொழிகளில் ஓதப்பட்டன. யூத சமூகத்தின் ஒரு பிரதிநிதி கலந்து கொள்ள முடியாதபோது, எபிரேய மொழியில் சரளமாக இருந்த மற்றொரு மயத்தின் உறுப்பினர் யூத சமயத்தின் திருவாக்குகள் கேட்கப்படுவதை உறுதிசெய்திட முன்வந்தார்.

உலக மத தின நிகழ்வை ஏற்பாடு செய்வதில் பஹாய் வெளிவிவகார அலுவலகத்துடன் ஒத்துழைத்த போர்ட் மோரெஸ்பியில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பேராயர் கார்டினல் சர் ஜான் ரிபாட், இந்த நிகழ்வைப் பற்றி தனது அவதானிப்புகளை அளிக்கிறார்: “எல்லோரும் [அன்பெனும்] ஒரே செய்தியைப் பகிர்ந்துகொண்டிருந்தோம, ஆனால் அதை வேறு ஒரு கண்ணோட்டத்தில் செய்தோம். இதன் பொருள் என்ன? என்னைப் பொறுத்தவரை, நான் புரிந்து கொள்ளும் விதம் என்னவென்றால், அன்பிருக்கும் போது ஒருவர் இன்னொருவருக்கு எதிராக எதையும் மனதில் வைத்திருப்பதில்லை. இது உண்மையில் ஒருவர் தன்னை மற்றவரின் நன்மைக்காக முழுமையாக அர்ப்பணிப்பதாகும்.

“விஷயங்கள் இறுதியில் எப்படி உருவாகின என்பது குறித்து நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்.” இந்த நிகழ்வைப் பற்றி ஒரு தேசிய செய்தித்தாள் மற்றும் பல இணைய வெளியீடுகள் உரைத்தன அத்துடன் வானொலியிலும் அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஒரு புதிய பாதையில் ஒன்றாக நடப்பது

கூட்டத்தில் பங்கேற்பாளர்கள், மேலும் ஒத்துழைப்புக்கான புதிய சாத்தியங்களைக் கண்டு, எதிர்கால முன்னேற்றத்தைப் பிரதிபலிக்க அடுத்த வாரம் சந்திக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். திருமதி வால்மர் கூறுகிறார், “சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சமூகத்தில் மதத்தின் பங்கு குறித்த ஆழமான உரையாடலின் முன்னோடியாக இதைக் காண்கின்றனர்.

“இதற்குக் காரணம், நமது சமுதாயத்தில் மதம் என்பது ஒவ்வொரு தனிநபரின், ஒவ்வொரு குடும்பத்தின், மற்றும் நிறுவனங்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனாலும், மக்கள் சில சமயங்களில் தங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது கடினம். ஒரு தேசமெனும் முறையில் நாம் ஒன்றாக இருப்பதைப் பற்றி பேசுகிறோம், ஆனால் நாம் எவ்வாறு ஒன்றாக ஒன்றாக வர முடியும்? உலக மத தினத்திற்கு வழிவகுக்கும் செயல்முறை மற்றும் நிகழ்வே இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த உதாரணத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது.”

இந்த கூட்டங்களில் தங்களுக்கு இடையேயான தொடர்பு முறை அவர்களின் சமூகங்களின் உறுப்பினர்களையும் அதே வழியில் செயல்பட ஊக்குவிக்கும் என்று சமயத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று இமாம் இஸ்மாயில் விளக்குகிறார். “[நிகழ்வு] வந்து சென்றுவிட்டது, இப்போது நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம். இப்போது எல்லாம் நன்றாக நடக்கின்றது. ”

PNG’யின் பஹாய் தேசிய ஆன்மீக சபை நாட்டின் சமயம் சார்ந்த சமூகங்களுக்கு முன் ஒரு புதிய பாதை வெளிப்படுவதைக் காண்கிறது. தேசிய சபையின் செயலாளர் கன்பூசியஸ் ஐகோயெர் கூறுகிறார், “கடந்த மாதத்தில் மதத் தலைவர்களிடையே அதிக அளவில் ஒற்றுமை அடையப்பட்டதானது முழு மத சமூகங்களிடையேயும் அதிக அளவு ஒற்றுமையைக் குறிக்கிறது, மேலும் இது இப்போது அவ்வளவாக உணரமுடியாத ஒன்றாக இருந்தாலும், நம் நாட்டில் அதிக ஒற்றுமையைக் குறிக்கிறது.”

திருமதி அகபே-கிரான்ஃபர் கூறுகையில், இந்த செயல்முறையின் மூலம் ஒன்றாகப் பயணித்தவர்களிடையே உள்ள தொடர்பு ஆழமானது. “சில மாதங்களுக்கு முன்பு, பல மதத் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த செயல்முறைக்கு முன்னர் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை அல்லது இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் மெலனேசிய கலாச்சாரத்தில் பொதுவான ஒன்றைப் போல, ஒருமுறை ஒருவரையொருவர் தெரிந்தும் புரிந்தும் கொண்டதுடன், கரங்கள் அனைத்தும் அகல விரிந்திருக்கும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1482/

அப்துல் பஹா: ஓர் ஆபத்தான பயணம்


ஃபிரெட் மோர்ட்டன்ஸன் பற்றிய இந்தக் கதை, எவ்வாறு எதிர்ப்பார்க்கவே முடியாத இடங்களில் கூட எவ்வாறு ஓர் அப்புதமானன வைரம் கண்டெடுக்கப்பட முடியும் என்பது பற்றியதாகும்.

வாலிப வயதில்

 Fred Mortensen

“ஆகா, இந்த அருமையான வாழைப்பழங்களைப் பார்,” என்றான் ஃபிரெட் மோர்ட்டன்ஸன்’னின் நண்பன், மூடியிருந்த கடைக்குள் பார்வையைச் செலுத்தியவாறு.

“ஆகா, எனக்கு சில பழங்கள் கிடைத்தால்,” என்றான் மற்றொரு நண்பன்.

“பழம் வேண்டுமா?” என்றான் ஃபிரெட். கடைக்குள் ஒரு புல்டாக் இன நாய் குறைத்தது; அது அவனை உள்ளே வா என்று சவாலிடுவது போன்றிருந்தது. ஃபிரெட் கண்ணாடியை உடைத்து வாழைப்பழங்களைக் கைப்பற்றினான்.

ஃபிரெட் ஐயோவா’வில் பிறந்து, மின்னஸோட்டா, மின்னியாப்போலிஸ் நகரில் பெரும் முரடனாக வளர்ந்தான். அவன் சண்டையிட்டான், திருடினான், தன் நண்பர்களைக் கவர்வதற்காக மதுவருந்தினான். 1904’இல், ஃபிரெட்’டுக்கு 17 வயதாகிய போது, அவனும் அவனது கும்பலும் ஓர் இரயில் பெட்டியில் கைவைத்தனர். ஃபிரெட்’டின் தம்பியான தொர்க், இரயில் பெட்டியிலிருந்து ஒரு பெரிய அஞ்சல் பையைப் பற்றிக்கொண்டான். போலீசார் அவர்களைத் துரத்த, அவர்கள் இரயிலை விட்டு ஓடியபோது, அந்த அஞ்சல் பையின் கனம் தாங்காமல் தன் தம்பி தினறுவதை ஃபிரெட் கண்டான். தன் தம்பி தப்பித்து ஓடுவதற்கு வசதியாக அந்தப் பையை ஃபிரெட் பிடுங்கிக்கொண்டான். துப்பாக்கி வேட்டுச் சத்தம் கிளம்பியது, ஃபிரெட் ஒரு 30 அடி உயர சுவரைத் தாண்டினான், தாண்டிய போது அவன் கால் எழும்பு முறிந்தது. அவனது அடுத்த நிறுத்தம் சிறைச்சாலையாகியது.

நிற்போரில் கடைசியாக இருப்பவர் அல்பர்ட் ஹோல், அவருக்குப் பக்கத்தில் ஃபிரெட் மோர்ட்டன்ஸன்.

ஆவியின் சக்தி

ப்பிரெட்’டின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவனது வழங்குரைஞர் ஒரு பஹாய் ஆன அல்பர்ட் ஹோல் ஆவார். அல்பர்ட் பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லாவைப் பற்றியும் அவரது புத்திரராகிய அப்துல்-பஹாவைப் பற்றியும் ஃபிரெட்டிடம் கூறினார். ஃபிரெட்’டின் உள்ளத்தை ஏதோ ஒன்று கிளறியது. அவன் குழப்பம் அடைந்த போதும், விரைவில், அல்பர்ட் கூறிய வார்த்தைகள் அவனை காந்தம் இரும்பை ஈர்ப்பது போல் ஈர்த்தன.

ஃபிரெட் சிறையிலிருந்து தப்பி நான்கு வருடம் நாடோடியாகத் திரிந்தான். பஹாய் சமயத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆவலில், தான் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்பதையும் கருதாமல், அல்பர்ட் ஹோலைச் சந்திப்பதற்காக மின்னியாபோலிஸ் திரும்பிட முடிவு செய்தான்.

அந்த நிகழ்வை, “அது… ஈர்க்கப்பட விரும்புவோரை ஈர்க்கும் பரிசுத்த ஆவியின் சக்தி,” என ஃபிரெட் எழுதினான். பின்னர், பஹாய் போதனைகளால் வழிகாட்டப்பட்ட ஃபிரெட் தன்மைமாற்றம் அடைந்தான். ஆனால் அவனது சாகசங்கள் ஓயவில்லை.

1912’இல், மேய்ன் நகரில் இன்று கிரீன் ஏக்கர் என அழைக்கப்படும் பள்ளிக்கு அப்துல்-பஹா வந்திருப்பதாக ஃபிரெட் கேள்விப்பட்டான். அவரைச் சந்திக்க ஆவலுற்றான், ஆனால் கையில் இருந்த பணம் போதவில்லை. ஓஹாயோவிலிருந்து மேய்ன் வரை ஃபிரெட் ஒவ்வொரு இரயிலாக மாறிச் சென்றான். சில வேளைகளில் ‘வித்தௌட்’ ஆக இரயில் பெட்டிகளின் மேல்புறமும் சில நேரம் அவற்றுக்கு அடியிலும் பிராயணம் செய்தான். இரவு முழுவதும் புகையைக் கக்கிய, நிலக்கரியில் இயங்கிய இரயில் அவனை நியூ ஹேம்ப்ஷையரில் கொண்டு விட்டது. ஒரு படகுப் பிரயாணம், அதற்குப் பிறகு ஒரு சாலைவண்டி பயணத்திற்குப் பிறகு, அவன் கிரீன் ஏக்கர் வந்தடைந்தான். கசங்கிய உடை, நீண்ட ஆபத்தான பயணத்திற்குப் பிறகு அழுக்குப் படிந்த மேனியுடன் பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும் தோற்றம்.

Picture of

மறக்க முடியாத சந்திப்பு

அடுத்த நாள், அப்துல்-பஹாவைக் காண வந்து காத்திருப்போருடன் ஒப்பிடுகையில் ஃபிரெட் இன்னமும் அருவருப்பான தோற்றத்துடனேயே காட்சியளித்தான். தான் கடைசியில்தான் கூப்பிடப்படுவான் என ஃபிரெட் உறுதியாக நம்பினான், ஆனால் திடீரென அவன் பெயர் அழைக்கப்பட்டது.

அப்துல்-பஹா புன்னகைத்தவாறு அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். “வரவேண்டும் வரவேண்டும்! நீ மிகவும் வரவேற்கப்படுகின்றாய்,,” என்ற அப்துல்-பஹா, மூன்று முறை, “நீ மகிழ்ச்சியாக இருக்கின்றாயா?” எனக் கேட்டார்.

பின்னர் அப்துல்-பஹா ஃபிரெட் எங்கிருந்து வருகிறான் எனவும் அல்பர்ட் ஹோல் பற்றியும் வினவினார். அதன் பிறகு எதைப் பற்றி அவர் கேட்கக்கூடாது என பிரெட் நினைத்தானோ அதே கேள்வியை அப்துல்-பஹா கேட்டார்: “உன் பிரயாணம் சௌகர்யமாக இருந்ததா?”

ப்பிரெட் தயங்கினான். தான் திருட்டு இரயில் ஏறி வந்தது பற்றி அவரிடம் கூற பயந்தான். ஆனால் அப்துல்-பஹா விடவில்லை, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அவரது பிராகசிக்கும் கண்களைப் பார்த்த ஃபிரெட், அவருக்குத் தெரிந்துவிட்டது—நான் அதைச் சொல்லியே ஆகவேண்டுமென நினைத்தான். மிகவும் தயக்கத்துடன் தனது பயணத்தின் விவரங்களை அவன் அப்துல்-பஹாவிடம் கூறினான்.

கிரீன் ஏக்கர் பஹாய் பள்ளி

அதன் பிறகு அவன் அப்துல்-பஹாவின் கண்களைப் பார்த்த போது, அவற்றிலிருந்து வழிந்துவரும் அன்பினால் அவனது உள்ளம் களிப்பால் நிறைந்தது. அப்துல்-பஹா அவனுக்கு பழங்கள் கொடுத்து அவனுடைய கண்ணங்களையும், அவனுடைய அழுக்கான தொப்பியையும் கூட முத்தமிட்டார்!

அப்துல்-பஹா கிரீன் ஏக்கரிலிருந்து விடைபெற்ற போது, அவர் ஃபிரெட்டையும் தம்மோடு மாஸாச்சுஸெட் வரை வந்து தம்மோடு ஒரு வாரம் தங்கியிருக்குமாறு அழைப்பு விடுத்தார். ஃபிரெட் சௌகர்யமாக இல்லம் திரும்புவதற்கு பணமும் கொடுத்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு, அப்துல்-பஹா “அந்த எனது… கிரீன் ஏக்கருக்கான… பயணம் மறக்கவே முடியாத ஒன்றாகும். அதன் விவரம் நித்தியமாக பதிவு செய்யப்படும்…” என எழுதினார்.

அப்துல்-பஹாவின் சந்திப்புக்குப் பிறகு, ஃபிரெட் தமது வாழ்க்கையை பஹாய் போதனைகளுக்காக அர்ப்பணித்தார். அவர் 1946’இல் தமது 59’வது வயதில் மரணமுறும் வரை சமயத்திற்கு சேவை செய்து வாந்தார்.

அப்துல்-பஹா: கோலி விளையாடிய சிறுவனும் அப்துல்-பஹாவும்


கடவுள் சமயத் திருக்கரம் திரு. A.Q. ஃபாய்ஸி அவர்கள் சொன்ன கதை

ஃஹஃபா நகரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். இப்பொழுது அவர் ஒரு வயோதிகர். தாம் சிறுவனாக இருந்தபோது தெருக்களில் கோலி விளயாடியதாக அவர் கூறுகின்றார். கோலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதற்குப் பதிலாக காசுகளை வைத்து அவர் விளையாடினார். அந்த விளையாட்டின்போது, வட்டத்திற்கு வெளியே உள்ள காசுகளை யார் தட்டி விடுகின்றோரோ, அவருக்கு அந்தக் காசுகள் சொந்தம் என்பதுதான் விளையாட்டின் விதிமுறை. உண்மையில், ஒவ்வொரு நாளும் அவ்விளையாட்டில் அவர் ஈடுபட்டு வந்தார். ஒரு நாள் அவ்விளையாட்டின்போது காசுகளை அவர் ஒன்று திரட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, யாரோ தனது காதைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தார். யாரென்று தலையை நிமிர்த்திப் பார்த்தபோது, அங்கு அப்துல் பஹா ஒரு சிறிய கோலியை தனது காதில் வைத்து அடைப்பதைக் கண்டார். அப்துல் பஹாவின் முன் தாம் இவ்வித சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் வெட்கித் தலை குணிந்தார்.

Playing marbles Clip Art | Art, Clip art, Marble art

அப்துல் பஹா அவரை எழுப்பி காதைப் பிடித்துக் கொண்டு தெரு வழியே நடந்து சென்று 7’ஆம் எண் கொண்ட தமது வீட்டிற்கு அச்சிறுவனை அழைத்துச் சென்றார். அப்துல் பஹாவின் அந்த வீட்டில் யாத்திரிகர்கள் வந்து போவது வழக்கம். வீட்டின் வாசலை அடைந்தவுடன் அப்துல் பஹா அச்சிறுவனின் காதிலிருந்து தனது கையை எடுத்து விட்டார். வீட்டினுள் நுழைந்தவுடன் அப்துல் பஹா அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம், “அஹ்மாட் ஒரு நல்ல பையன். நான் அவனோடு தேநீர் அருந்துவதற்காக அவனை அழைத்து வந்தேன். அவன் ஒரு சிறந்த சிறுவன். தேநீர் தயார் செய்யுங்கள்,” என்று கூறினார். அப்துல் பஹா அன்று தம்மை ஒரு நல்ல பையன் என்று கூறியது மட்டுமன்றி தம்முடன் தேநீர் அருந்துவதற்காக அழைத்து வந்ததாகச் சொன்னதையும் கண்டு தாம் மிகவும் வெட்கித் தலைகுணிந்ததாக அம்மனிதர் கூறினார். பிறகு, அப்துல் பஹா அச்சிறுவனோடு அமர்ந்து தேநீர் அருந்தினார். சுமார் அரை மணி நேரம் கழித்து அப்துல் பஹா அச்சிறுவனைப் பார்த்து, “நீ இப்பொழுது வீட்டுக்குப் புறப்பட்டு போகும் நேரம் வந்து விட்டது,” என்று கூறினார். அச்சிறுவன் புறப்பட எழுந்தபோது, அவனிடம் ஒரு மாஜிட் பணத்தைக் கொடுக்குமாறு அப்துல் பஹா தமது பணியாளரிடம் கூறினார். மாஜிட் என்பது வட்ட வடிவிலான ஒரு வெள்ளிக் காசு. அந்நாட்களில் அதன் மதிப்பு சுமார் மூன்று அமெரிக்க டாலர்கள். “அவனுக்கு ஒரு மாஜிட் கொடுத்து விடுங்கள். அது அவனுக்குத் தேவைப்படுகின்றது,” என்று அப்துல் பஹா மீண்டும் கூறினார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஒரு முறைகூட தாம் அந்த சூது விளையாட்டில் ஈடுபட்டதே இல்லை என்று அம்மனிதர் பின்னாளில் கூறினார். அதற்குக் காரணம் மிகத் தெளிவாகவே இருந்தது. ஏனெனில், அப்துல் பஹா தமது விவேகத்தைக் காண்பித்து விட்டார். அப்துல் பஹா அச்சிறுவனுடன் நடந்து சென்று அன்பைப் பயன்படுத்தி அச்சிறுவனின் இயல்பை மாற்றி, அஹ்மாட் ஒரு நல்ல பையன்,” எனும் வார்த்தைகளால் அவனது நல்ல பண்பினை எடுத்துரைத்து, அதே நேரத்தில் அச்சிறுவனுடைய இருள்படிந்த இயல்பை உடனே மறைத்து விட்டார்.

பஹாவுல்லாவினுடைய காலத்தில் வாழ்ந்துள்ள ஒரு நீண்டகால நம்பிக்கையாளர் என்னிடம், தாம் சிறுவனாக இருந்த காலத்தில் அப்துல் பஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அச்சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் தங்களுடைய புத்தகங்களில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்து விட்டு ஓர் எழுதுகோலையோ, ஓர் இனிப்பு மிட்டாயையோ, பாராட்டு வார்த்தைகளையோ அல்லது ஏதாவது ஒன்றை பரிசாகக் கொடுப்பார். ஒரு வெள்ளிக்கிழமையன்று அந்த நம்பிக்கையாளர் தனது புத்தகத்தில் எதையுயும் எழுதி வரவில்லை. எனவே, முந்தைய வாரத்தில் எழுதி வைத்திருந்ததையே மீண்டும் கொண்டு வந்திருந்தார். அப்துல் பஹா மாடிப்படி வழியாக கீழே இறங்கி அச்சிறுவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்தபோது அச்சிறுவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தார். “அப்போது நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என் புத்தகத்தைத் திறந்துப் பார்த்து, அது மிகவும் நன்று என்றும், ஆனால் நான் முன்னேற்றம் காட்டவில்லை என்றும் அப்துல் பஹா கூறினார்,” என்று அந்த நம்பிக்கையாளர் சொன்னார். அச்சிறுவனை நோக்கி அந்த வார்த்தைகளை மட்டுமே அவர் சொன்னார். அப்துல் பஹா கடிந்துரைக்கவுமில்லை, திட்டவுமில்லை. ஒரு பரிசையும், பாராட்டுதலையும் வழங்கிச் சென்றார். அவமானப்படுத்தவுமில்லை, மற்ற குழுந்தைகளுக்கு முன் அச்சிறுவனின் தவறைச் சுட்டிக் காட்டவுமில்லை. தவறை மறைக்கும் கண்கள் அவை.

அப்துல்-பஹா: ஏழை மக்களுடன் அப்துல்-பஹா


ஏழை மக்களுடன் அப்துல் பஹா

அப்துல் பஹா எனும் தலைப்பில் எச். எம். பால்யூசி எழுதியுள்ள புத்தகத்தில், அன்புமிகு மாஸ்டர் அப்துல் பஹா எவ்வாறு ஏழைகளை நடத்தினார் என்பதைப் பற்றிய பல செழிப்பான கதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு கதைகள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய அமெரிக்காவில் அவர் தங்கியிருந்தபோது நண்பர்கள் அவருக்கு பரிசுகள் வழங்கினர். அந்தச் செயலுக்கு அவர் மறுமொழியாக அளித்த ஒளிர்வுமிகு சொற்பொழிவு ஒன்றும் இங்கு கொடுக்கப்பட்டுள்து.

Abdul Baha Has Creed He Declares Will Finally Eliminate Criminal | 'Abdu'l- Bahá in America

போஸ்டன் நகரிலுள்ள டெனிசன் இல்லத்திற்கு அப்துல் பஹா ஒரு முறை வருகை புரிந்தார். அமெரிக்காவில் குடியேற வந்த சிரியா மற்றும் கிரேக்க நாட்டு ஏழை மக்களின் நலன்களைப் பாதுகாத்து வரும் ஒரு தொண்டூழியக் கழகத்தின் தலைமையகம் அந்த டெனிசன் இல்லத்தில் அமைந்திருந்தது. அப்துல் பஹா அங்கு வந்தபோது, அவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது. அப்போது அவர் அக்கழக நிதிக்கு பத்து பவுண்ட் நிதியை தமது நன்கொடையாக வழங்கினார். அவருடன் சேர்ந்து அந்த மதிய உணவு விருந்தில் கலந்து கொண்ட விருந்தினர்களை நோக்கி, ஏழை மக்களுக்கு சேவையாற்றும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது என்றும், அந்த ஏழை மக்களில் தாமும் ஒருவர் எனும் மரியாதை தமக்கும் உண்டு என்றும் அப்துல் பஹா கூறினார்.

டப்ளின் நகருக்கு அப்துல் பஹா ஒரு முறை சென்றிருந்தபோது, அதே நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு நண்பர் அந்நிகழ்ச்சி குறித்து பின்வரும் தகவலைப் பகிர்ந்து கொண்டார். அப்துல் பஹா தங்கியிருந்த விடுதியில் அவர் தமது செயலாளரிடம் ஒரு பணிக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தபோது, தெருவில் ஒரு வயோதிகர் ஓட்டமும் நடையுமாக விரைந்து வந்தார். அப்துல் பஹா அவ்வயோதிகரைப் பார்த்து விட்டு அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு தமது செயலாளருக்குப் பணித்தார். அம்மனிதர் வந்தவுடன் அப்துல் பஹா அம்மனிதரின் அழுக்கு நிறைந்த கைகளை தமது கரங்களால் இறுகப் பற்றிக் கொண்டு அன்புடனும், பாசத்துடனும் உரையாடினார். சோர்வும், வாழ்க்கையில் விரக்தியும் அடைந்த அம்மனிதருடன் ஏற்கனவே நீண்டகாலமாக நட்பு கொண்டிருந்தவரைப் போல் அப்துல் பஹா உரையாடினார். அதன் பிறகு, அம்மனிதரின் கால் சட்டை எவ்வளவு மோசமான நிலையில் கிழிந்துள்ளது என்பதையும், எவ்வளவு அசுத்தமாக இருக்கின்றது என்பதையும் அப்துல் பஹா கண்டார். அந்நேரத்தில் அவ்விடுதியின் வளாகத்தில் யாரும் இல்லை. அப்துல் பஹா நேராக விடுதியின் முகப்பு வாயிலின் மறைவான இடத்திற்குச் சென்று, தமது மேலங்கியினால் தம்மை மூடிய நிலையில் தமது சொந்தக் கால்சட்டையைக் கழற்றி அந்த வயோதிக மனிதருக்குக் கொடுத்து விட்டு, இறைவன் உங்களுடன் இருப்பாராக!” என்றார். (புனித பூமியில் பல முறை அவர் ஒரு நாடோடி மனிதரையோ அல்லது ஓர் ஏழையையோ அழைத்து தமது பக்கத்தில் அமர வைத்து தமது உணவைப் பங்கிட்டுக் கொண்டுள்ளார்).

அமெரிக்க கண்டத்தில் அப்துல் பஹா மேற்கொண்டிருந்த தமது எட்டு மாதப் பயணங்களின்போது அவரது பயணச் செலவுகளுக்காக நம்பிக்கையாளர்கள் பணம் கொடுக்க பல முறை மீண்டும் மீண்டும் முயற்சித்தனர். அது குறித்து அப்துல் பஹாவுடன் நேரடியாகவும், அவரது குழுவினருடனும் அந்நண்பர்கள் பேசினர். அதற்கு நன்றி தெரிவித்த அப்துல் பஹா அவ்வுதவிகளை ஏற்றுக் கொள்ளவேயில்லை. முன்பு எகிப்து நாட்டில் பெரும் தொகை ஒன்று அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதனை அவர் திருப்பி அனுப்பி வைத்து விட்டார். திருமதி பெர்சன்ஸ், திருமதி கூடால், திருமதி கூப்பர் மற்றும் சிலரும் அப்போது செல்வ வளம் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய பொருள் உதவிகளை ஏழை எளியோருக்கு வழங்கிட வேண்டும் என அப்துல் பஹா அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஐக்கிய அமெரிக்காவை விட்டு அப்துல் பஹா புறப்பட வேண்டிய பயண நாள் நெருங்கி வந்தபோது, பல நண்பர்கள் அப்துல் பஹாவிடம் சென்று தாங்கள் அளிக்கும் பொருள் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்குப் பதிலளித்த அப்துல் பஹா பின்வருமாறு கூறினார்: நீங்கள் எமக்கு வழங்கிய சேவைகளுக்கு நன்றி கூறுகின்றேன். உண்மையாகவே நீங்கள் எனக்குச் சேவையாற்றியிருக்கின்றீர்கள். அல்லும் பகலும் எனக்கு சேவையாற்றி தெய்வீக நறுமணங்களை பரப்புவதில் நீங்கள் பாடுபட்டுள்ளீர்கள். நான் உங்களது தியாகம் மிக்க சேவைகளை ஒரு போதும் மறக்க மாட்டேன். இறைவனுடைய நல்விருப்பத்தினை அடைவதைத் தவிர உங்களுக்கு வேறெந்த நோக்கமும் இருந்ததில்லை. அவரது இராஜ்த்தினுள் பிரவேசித்தலைத் தவிர நீங்கள் வேறெந்த ஸ்தானத்திற்கும் நீங்கள் ஆவலுற்றதில்லை. இப்பொழுது நீங்கள் எனது குடும்பத்தாருக்காக சில பரிசுகளைக் கொண்டு வந்துள்ளீர்கள். இப் பரிசுகள் போற்றுதலுக்குரியவை. ஆனால், இவற்றை விட மிக விலை உயர்ந்த பரிசுகள் என்னவெனில், இதயங்களில் நிலையாக குடிகொள்ளப்பட வேண்டிய இறையன்புதான். முன்னது, தற்காலிகமானவை. ஆனால், பின்னதோ, நித்தியமானவை. நீங்கள் கொண்டு வந்த பரிசுகளை பெட்டியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதுடன், அவை இறுதியில் அழிந்து விடும். ஆனால், மற்றதோ, உள்ளங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இறைவனின் எல்லா உலகங்கிலும் நித்தியகாலத்திற்கு நிலையாக இருக்கும். எனவே, எல்லா பரிசுகளிலும் உயரிய பரிசான உங்களது அன்பை மட்டும் நான் புனித குடும்பத்திற்காக இங்கிருந்து எடுத்துச் செல்கிறேன்.”

இப்பொழுது நான் இப் பரிசுகளை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவற்றை விற்று சிக்காகோ வழிபாட்டு இல்லத்திற்கு நிதியாக வழங்கிடும்பொருட்டு அவற்றை உங்களிடமே கொடுத்து விடுகின்றேன்.

ஆனாலும், அந்நண்பர்கள் அப்துல் பஹாவிடம் மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால், அப்துல் பஹா மீண்டும் இவ்வாறு பதிலளித்தார்: “நித்திய உலகில் பழுதுபடாதிருக்கவல்ல ஒரு பரிசை உங்கள் சார்பாக நான் கொண்டு செல்ல விரும்புகின்றேன்: அதாவது, இதயங்களின் பொக்கிஷ பேழைகளுக்குச் சொந்தமான ஆபரணங்கள் அவை; அதுவே சிறந்தது.”

பஹாய் உலகம் வெளியீடு புதிய மேம்பாடுகளையும் கட்டுரைகளையும் கொண்டுள்ளது8 அக்டோபர் 2021


பஹாய் உலக நிலையம் – பஹாய் உலக இணையவழி வெளியீட்டில் இன்றைய புதிய கட்டுரைகளின் வெளியீடு அவ்விணையதளம் மீதான சமீபத்திய மேம்பாடுகளால் நிரப்பம் கண்டுள்ளது.

கடந்த மே 2019’இல் ஆரம்பிக்கப்பட்ட அந்த இணையத்தளம், பஹாய் உலக தொகுப்புகளிலிருந்து படைப்புகளின் ஏடகம் ஒன்றையும் கருப்பொருள் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளையும்  உள்ளடக்குவதற்காக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.  

அத்தளத்தில் புதிதாக வெளியிடப்பட்ட கட்டுரைகளில் “மனித சக்தியின் புதிய சுழற்சி”, செல்வாக்குமிக்க “நவீனத்துவ” எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுடனான ‘அப்துல்-பஹாவின் அவ்வளவாக அறியப்படாத சந்திப்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. அக்கட்டுரை விரைவான, தீவிர மாற்றத்திற்குள்ளாகி வந்த ஒரு சமுதாயத்தின் கலாச்சார முன்னணியில் இருந்த பல தனிநபர்கள் மீதான அப்துல்-பஹாவின் தாக்கத்தை ஆராய்கிறது.

மற்றொரு புதிய கட்டுரை, அமெரிக்க பஹாய் சமூகம் நிறுவப்பட்டதிலிருந்து அமெரிக்காவை பாதித்துள்ள “இன அநீதி மற்றும் இன ஒற்றுமையைப் பின்தொடர்வதற்கான பஹாய் விடையிறுத்தல்: பகுதி 1 (1912-1996),” இன அநீதியை நிவர்த்தி செய்வதற்கான அமெரிக்க பஹாய் சமூகத்தின் வரலாறு சார்ந்த முயற்சிகள் குறித்த இருபகுதித் தொடர்களில் முதலாவதாகும். கட்டுரையின் பகுதி 2, பிற்காலத்தில் வெளியிடப்படவுள்ளது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளையும், இன நீதி மற்றும் ஒற்றுமைக்கு பங்களிக்கும் பஹாய் சமூகத்தின் வளர்ந்து வரும் திறனையும் அது உரைத்திடும்.

மே 2019 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பஹாய் உலக இணையவழியானது சமூக முன்னேற்றத்துடன் தொடர்புடைய பல கருப்பொருள்கள் பற்றிய சிந்தனைமிக்க கட்டுரைகள் மற்றும் நீண்ட வடிவ கட்டுரைகள் கிடைக்குமாறு செய்துள்ளது, பஹாய் சிந்தனை மற்றும் செயலில் முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதுடன் உலகில் சமயத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கவும் செய்கிறது. சமூகம், பொருளாதார நீதி, இருத்தலியல் மன அழுத்தம், இடம்பெயர்வு மற்றும் ஆளுகை ஆகியவற்றை கடந்த ஆண்டின் பிற கட்டுரைகள் ஆராய்ந்தன.

ஷோகி எஃபென்டி பாதுகாவலராக 1921’இல் பொறுப்பேற்றப் பிறகு அவரது வழிகாட்டலின் கீழ் பஹாய் உலகம் தொகுப்புகள் ஸ்தாபிக்கப்படப்பட்டன. முதல் தொகுப்பு 1926’இல் ‘பஹாய் வருடநூல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1481/

அப்துல்-பஹா: அப்துல்-பஹாவும் ஆஃப்கானியரும்


அப்துல் பஹாவும் ஆஃப்கானியரும்.

அப்துல்-பஹா வாழ்ந்த காலத்தில் அவருக்குப் பல எதிரிகள் இருந்தனர். சிலர் சமயத்திற்குள்ளும் சிலர் சமயத்திற்கு வெளியில் இருந்தும் செயல்பட்டனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரே அவருக்கு எதிராக பல சதி வேலைகளைச் செய்து இறுதியில் சமயத் துரோகிகள் ஆயினர். இந்தக் கதை அத்தகைய ஒரு சூழலில் மாஸ்டரவர்கள் எப்படி நடந்துகொண்டார் என்பதை விவரிக்கின்றது.

மாஸ்டர் அப்துல்-பஹா அக்கா நகருக்கு வந்தபோது, அங்கு ஓர் ஆப்கானியர் வசித்து வந்தார். மாஸ்டர் அப்துல் பஹா எப்போதும் மதங்கள் பற்றி எதிர்மாறான பேதங்கள் கொண்டவர் என்று அந்த மனிதர் கருதி வந்தார். மாஸ்டரின்பால் அவர் ஒரு பகைமை போக்கையே கடைப்பிடித்து வந்ததுடன், மற்றவர்களை அப்துல் பஹாவுக்கு எதிராகவும் தூண்டி விட்டார். மக்கள் ஒன்றுகூடுமிடங்களில் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவர் அப்துல்-பஹாவை கடும் வார்த்தைகளைக் கொண்டு இழித்துரைத்து வந்தார்.

மற்றவர்களிடம் அப்துல்-பஹாவைப் பற்றி பேசியபோது அந்த மனிதர் அவர்களிடம், “அவர் ஒரு வஞ்சகர். அவருடன் ஏன் பேசுகின்றீர்கள்? அவருடன் ஏன் தொடர்பு வைத்துள்ளீர்கள்?” என்று கூறி வந்தார். அப்துல்-பஹாவை அந்த மனிதர் தெருவில் காண நேர்ந்தபோது, அவர் தனது உடையின் ஒரு பகுதியைத் தூக்கி தனது கண்களை மறைத்துக் கொள்வார். அப்துல்-பஹாவைக் காண்பதனால் தனது கண்கள் கரை படிந்து விடக்கூடாது என்பதில் அம்மனிதர் கவனமாக இருந்தார்.

இம்மாதிரியான செயல்களை அந்த ஆப்கானிய மனிதர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அவ்வாறு இருந்தும் கூட மாஸ்டர் அப்துல்-பஹா பின் வருமாறு தனது செயல்களை காண்பித்தார்: ஓர் ஏழையான அந்த ஆப்கானிய மனிதர் ஒரு மசூதியில் வசித்து வந்தார். அம்மனிதருக்கு அடிக்கடி உணவும் உடையும் தேவைப்பட்டன. அவை இரண்டையும் மாஸ்டர் அப்துல்-பஹா அம்மனிதருக்கு அனுப்பி வைத்தார். அவ்வுதவிகளை அம்மனிதர் பெற்றுக் கொண்டு அதற்கு நன்றி தெரிவிக்காமலேயே இருந்து வந்தார். அம்மனிதர் நோயுற்றபோது அப்துல்-பஹா அவரிடம் ஒரு மருத்துவரை அழைத்து வந்து உணவு, மருந்து, பணம் ஆகியவற்றை அம்மனிதருக்கு வழங்கினார். அவற்றையும் அம்மனிதர் பெற்றுக் கொண்டார். ஆனால், மருத்துவர் அம்மனிதருடைய நாடியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, தனது இன்னொரு கையால் முகத்தை தனது அங்கியைக் கொண்டு மூடிக் கொண்டு அப்துல்-பஹாவின் மீது தனது பார்வை விழுவதைத் தவிர்த்தார் அந்த மனிதர். இருபத்து நான்கு வருடங்களுக்கு அம்மனிதரின்பால் அப்துல்-பஹா தனது அன்பான இரக்கத்தைக் காட்டி வந்தார். இருபத்து நான்கு வருடங்களுக்கு அம்மனிதரும் அப்துல்- பஹாவின்பால் தனது பகைமையையே வெளிப்படுத்தி வந்தார். இறுதியில் ஒரு நாள் அந்த ஆப்கானிய மனிதர் அப்துல்-பஹாவின் வீட்டின் வாசலுக்கு வந்து அப்துல் பஹாவின் காலடியில் விழுந்து அழுது புலம்பினார்.

“என்னை மன்னித்து விடுங்கள் ஐயா,” என அம்மனிதர் புலம்பினார். “இருபத்து நான்கு வருடங்களாக நான் உங்களுக்கு தீங்கு இழைத்து விட்டேன். இருபத்து நான்கு வருடங்களாக நீங்கள் எனக்கு நன்மையே செய்துள்ளீர்கள். நான் செய்தது தவறு என்று இப்பொழுது எனக்குத் தெரிகின்றது.” என்று கூறினார்.

அப்துல் பஹா அவரை எழச் செய்து, அதன் பிறகு அவர்கள் இருவரும் நண்பர்களாயினர்.

அப்துல்-பஹா: அப்துல்-பஹாவின் முன்னுதாரணம்


மாஸ்டர் அப்துல் பஹாவின் முன்னுதாரணம்

மற்றவர்கள் கூறுவதை மிகப்பூரணமாக செவிமடுப்பதில் நமது உதாரணப்புருஷராகிய அப்துல் பஹாவைப் போன்று செவிமடுத்தவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். மற்றவர்கள் கூறுவதை கூர்ந்து செவிமடுப்பதில் அப்துல் பஹாவிடம் இருந்த மிக உயரிய சக்திக்காக பஹாவுல்லா அவரைப் போற்றியுள்ளார். பஹாவுல்லா பின்வரும் வார்த்தைகளை ஒரு நம்பிக்கையாளரிடம் கூறியிருக்கின்றார்:

“மாஸ்டர் அவர்கள் மக்களுக்குப் போதிக்கும் வழிமுறையைப் பாருங்கள். அர்த்தமற்றதும், எவ்வித கருத்தையும் கொண்டிராத பேச்சையும் கூட அவர் மிகக் கூர்ந்து செவிமடுப்பார். ஒருவர் பேசுவதை அப்துல் பஹா செவிமடுக்கும்போது, “இவர் என்னிடமிருந்து கற்றுக் கொள்கின்றார்,” என அம்மனிதர் கருதிக் கொள்ளுமளவுக்கு அப்துல் பஹா அம்மனிதர் கூறுவதை கூர்ந்து செவிமடுக்கின்றார். அதன் பிறகு, மாஸ்டர் அவர்கள் படிப்படியாகவும், வெகு கவனமாகவும், அம்மனிதருக்குத் தெரியாத வண்ணம், அம்மனிதரை சரியான பாதைக்குக் கொண்டு வந்து நிறுத்தி, புரிந்துகொள்ளலின் ஒரு புதிய சக்தியை அம்மனிதர் மீது வழங்கிடுவார்.”

ஆர்வலர்களின் இதயங்களைத் தொடும் தனது முயற்சிகளில் மாஸ்டர் நெடுநீண்ட பொறுமையுடன் அவர்கள் கூறுவதைச் செவிமடுப்பார். முதன் முறையாக அவ்வுண்மைகள் தமக்குத் தெரிய வருவதுபோல் மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அப்துல் பஹா பிறர் சொல்வதை செவிமடுக்கின்றார். அந்த பேச்சு அப்துல் பஹாவுக்கு எந்தளவுக்கு பயனற்றதாகவும், நீதியற்றதாகவும் இருந்தாலும் கூட அவர் அதனை வெகு ஆர்வத்துடனும், மரியாதையுடனும் செவிமடுப்பார். மேலும், பேச்சின் மிதவாதம் என்பதற்கான முறையையும், அர்த்தத்தையும் அவர் மற்றவர்களுடைய வீண பேச்சை எப்பொழுது தாழ்த்திப் பேசாமல் இருபபதன் வாயிலாக மெய்ப்பித்துக் காட்டினார்.

மாஸ்டர் அப்துல் பஹாவின் இந்த செவிமடுக்கும் ஆற்றலால் கவரப்பட்ட மேற்கத்திய நண்பர்களுள் ஹார்வார்டு ஐவ்ஸ¨ம், ஸ்டேன்வூட் கோப் அவர்களும் அடங்குவர். இந்த இரண்டு நண்பர்களும் பல வேளைகளில் அப்துல் பஹாவைக் கவனித்திருக்கின்றனர். பிறர் கூறுவதை செவிமடுக்கும் அப்துல் பஹாவின் ஆற்றல் குறித்து ஹார்வார்டு ஐவ்ஸ் பின்வருமாறு விவரிக்கின்றார்:

இடம்-திரு ஸ்டேன்வுட் கோப், வலம்-திரு கோல்பி ஐவ்ஸ்

“கேள்வியாளரை அப்துல் பஹா சந்தித்த வித்தியாசமான விதம்தான் என்ன!… கேள்வி கேட்ட மனிதரிடம் முதலில் அப்துல் பஹா மௌனமாக இருப்பார். அது ஒரு வெளிப்பாடையான மௌனம். அப்துல் பஹாவினுடைய ஊக்குவிப்பு எப்பொழுதுமே எப்படியிருந்தது என்றால், கேள்வியாளர் முதல் பேசு வேண்டும் என்பதும், தாம் அதனை செவிமடுக்க வேண்டும் என்பதுதான். செவிமடுப்பவரிடம் சரியான பதில் உள்ளது, மற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் அப்பதி¬லு உடனடியாகக் கூறவேண்டும் எனும் எவ்வித பதற்றமோ, படபடப்போ அப்துல் பஹாவிடம் இல்லை. … கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் கேள்வியாளரிடம் சரியான பதில் உள்ளது என்பதை கேள்வியாளர் உணரும் வகையில் அப்துல் பஹா செவிமடுப்பார். பிறர் பேசுவதை “நன்றாக செவிமடுப்பவர்களாக” சிலர் விளங்குகின்றனர் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், பிறர் பேசுவதை அப்துல் பஹாவைப் போன்று கூர்ந்து “செவிமடுப்பவரை” நான் கண்டதில்லை. செவிகள் கேட்பதற்கும் மேலான பரிவுடன் உள்வாங்கும் நிலை அப்துல் பஹாவின் செவிமடுத்தல். இரண்டு தனிநபர்கள் ஒரே மனிதராக ஆகி விடுவதுபோன்று அந்த செவிமடுத்தல் இருக்கும். இரண்டு ஆன்மாக்கள் ஒரே ஆன்மாவாக மாறி ஆன்ம உறவுக்கு பேச்சுத் தேவையில்லை என ஆகிடும் செவிமடுத்தல் நிலை அது. இதை நான் எழுதும்போது பஹாவுல்லாவினுடைய வார்த்தைகள் என் மனதில் ரிங்காரமிடுகின்றன: “நேர்மை மனங்கொண்ட சேவகர் எம்மை பிரார்த்தனையில் அழைத்திடும்போது எமது பதிலை செவிமடுக்கும் அவரது சொந்த செவிகளாக நான் ஆகி விடுகின்றேன்.”

அதுதான் உண்மை! அப்துல் பஹா எனது செவிகளைக் கொண்டே நான் பேசுவதைச் செவிமடுக்கின்றார். … ஊக்குவிக்கும் அவரது பரிவின் விளைவாக, கேள்வியாளர் பேசுவதற்கு ஏதும் கிடைக்காத நிலையை அடையும்போது, அங்கு ஒரு குறுகிய நிசப்தம் நிலவுகின்றது… தொடர்ச்சியான விளக்கமோ, அறிவுரையோ அப்போது அங்கு இல்லை… மேலுலகிலிருந்து வழிகாட்டலை நாடுவதுபோன்று சில வேளைகளில் அப்துல் பஹா தமது கண்களை ஒரு கணம் மூடியவாறு இருப்பார். சில வேளைகளில் அமர்ந்து , இதயத்தை உருக வைக்கும் தமது அன்பான புன்னகையைக் கொண்டு கேள்வியாளரின் ஆன்மாவைத் தேடிப்பார்ப்பார். கேள்வியாளரின் அதிஉள்ளார்ந்த மன இடுக்குகளில் என்ன புதைந்துள்ளன என்பது அப்துல் பஹாவுக்குத் தெரியும். அவ்வாறாக, பேச்சின் வடிவமின்றி அவர் பதிலளிக்கின்றார், பேசப்பட்ட வார்த்தைகள்வழி அவர் பதிலளிப்பதில்லை.

சதா பேசிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் அப்துல் பஹாவைச் சந்தித்தபோது, அப்துல் பஹாவின் மிக உயரிய புரிந்து கொள்ளலையும், பொறுமையையும் ஸ்டேன்வூட் கோப் அவர்களால் கூறப்பட்ட பின்வரும் கதை சித்தரிக்கின்றது: அப்துல் பஹா அவர்கள் போஸ்டன் நகரில் இருந்தபோது, நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நியூட்டன் பட்டணத்திலிருந்த எங்கள் வீட்டிலிருந்த எனது தந்தையை அழைத்துக் கொண்டு அப்துல் பஹாவைக் காணச் சென்றேன். அப்போது எனது தந்தையார் புகழ் பெற்ற போஸ்டன் நகர் ஓவியர். அவருக்கு வயது எழுபத்தைந்து. சமயப் பற்று கொண்டு, ஆன்மீகமும், பிரார்த்தனைமயமான நிலையும் கொண்ட ஒரு பக்தியாளர் அவர். நான் சார்ந்திருக்கும் பஹாய் சமயத்தின் மீது அவர் ஆதரவுக்கரம் நீட்டியிருந்தாலும், “மகனே, என்னால் மாற முடியாத அளவுக்கு எனக்கு வயதாகி விட்டது,” என்று என்னிடம் கூறுவார்.

“நான் காண்ஸ்டாண்டிநோப்பலில் இருந்தபோது, எனது வேண்டுகோளுக்கேற்ப எனது தந்தையார் போஸ்டன் நகரின் பஹாய் கூட்டங்களில் கலந்து கொண்டார். இப்பொழுது அப்துல் பஹாவைச் சந்திக்கும் வாய்பைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தார். அச்சந்திப்பின்போது, எனது தந்தையார் சமய சட்ட திட்டம் குறித்து அப்துல் பஹாவிடம் சுமார் அரை மனி நேரம் பேசினார். மிகச் சரியாகச் சொல்லப்போனால், எனது தந்தையார் மாஸ்டரின் அன்பான செவிகளில் தனது வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஆன்மீகத் தத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அங்கு அப்போது நான் அதிர்ச்சியடைந்த நிலையில் உட்கார்ந்திருந்தேன். நான் அவ்வாறு அதிர்ச்சியடையத் தேவையில்லைதான். கேள்வியாளர் கூறுவதை செவிமடுக்கும் நிலையில் இருந்த அப்துல் பஹா அதனைக் கண்டு அதிர்ச்சியடையவில்லை. கேள்வியாளரான எனது தந்தை கூறுவதை செவிமடுப்பவராக அப்துல் பஹா அப்போது இருந்தார். அப்துல் பஹா அங்கு அமர்ந்து கொண்டு வெகு சில வார்த்தைகளை மட்டுமே பேசி, புன்சிரிப்பை சிந்தி, எங்களை தமது அன்பினால் சூழ்ந்து கொண்டார். அப்துல் பஹாவிடம் ஓர் அற்புதமான நேர்முகப்பேட்டி கண்டு விட்டதாக உணர்ந்து எனது தந்தை மிக மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்.”

இவ்வுதாரணத்தின் வாயிலாக ஆப்துல் காட்டிய பணிவுநிலைகுறித்த இப்பாடம்தான் என்ன! பல வேளைகளில் மற்றவர்கள் கூறவதை வெகு நன்றாக செவிமடுப்பதன் வாயிலாக நாம் மற்றவர்களுக்கு உதவிட முடியும்.

ஹொன்டூராஸில் பேரிடருக்கு எதிரான மீழ்ச்சித்திறம்8 அக்டோபர் 2021


சிகுவாத்தெபெக், ஹோண்டுராஸ், 13 ஜனவரி 2021, (BWNS) – ஹோண்டுராஸின் பஹாய் தேசிய ஆன்மீக சபை தொற்றுநோயின் ஆரம்பத்தில் ஓர் அவசரக் குழுவை உருவாக்கியபோது, ​​அது பேரழிவு தரும் ஈட்டா மற்றும் அயோட்டா சூறாவளிகளின் தாக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில் பல மாதங்களுக்கு பின்னர் அத்தியாவசியமாக விளங்கப்போகும் ஒரு செயல்முறையின் இயக்கத்தை ஆரம்பித்தது.

ஹோண்டுராஸின் பஹாய் தேசிய ஆன்மீக சபை தொற்றுநோயின் ஆரம்பத்தில் உருவாக்கிய அவசரக் குழு புதிய நெருக்கடிகளுக்கு உதவுகிறது

நவம்பர் மாதம், எட்டா சூறாவளி வகை-4 பற்றி செய்தி வெளியானபோது, ​​வரவிருக்கும் பேரழிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவசர குழு முயற்சிகளை மேற்கொண்டது. குழுவின் உறுப்பினரான குளோரியா பெர்டு கூறுகிறார், “இந்த சக்திவாய்ந்த புயலால் நாடு தாக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. பெரும்பாலான மக்கள் இத்தகைய பேரழிவை எதிர்பார்க்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் ஸ்தாபித்த வலையமைப்பு புயலுக்கு முன்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து மக்களை எச்சரிக்க வழிவகுத்தது. ”

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்தாபித்த வலையமைப்பு தேவைப்படும் இடங்களுக்கு மக்களையும் வள ஆதரங்களையும் அனுப்ப உதவுகின்றது.

ஈட்டா சூறாவளி ஹோண்டுராஸ் வழியாக நகர்வதற்கு முன்பு நவம்பர் 3 ஆம் தேதி நிக்கராகுவா கடற்கரைக்கு அப்பால் தரை தட்டியது. இதைத் தொடர்ந்து ஒரு வகை-5 சூறாவளியான ஐயோட்டா, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சமீபத்திய வரலாற்றில் இம்மண்டலத்தில் காணப்படாத அளவிலான ஓர் அழிவை ஏற்படுத்தியது. பலத்த மழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, அதே நேரத்தில் தகவல் தொடர்பு, மின்சாரம் மற்றும் சாலைகள் பல பகுதிகளில் பாதிப்புக்கு ஆளாயின.

ஒரு நெருக்கடியின் போது ஆன்மீக சூழலையும் ஒற்றுமை உணர்வையும் உருவாக்குவதில் பக்தி மனப்பான்மையின் மகத்தான சக்தியைக் கண்ட தேசிய சபன, நாடு தழுவிய பிரார்த்தனைகளை ஊக்குவிக்க உதவுமாறு அவசரக் குழுவிற்கு அழைப்பு விடுத்தது.

“ஓர் இருண்ட நேரத்தில், பிரார்த்தனை பரப்பியக்கம் நம்பிக்கையளிக்கும் செயலாகும்” என்று தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரும் அவசரக் குழுவின் உறுப்பினருமான ஆண்ட்ரியா காஸ்டிப்ளாங்கோ கூறுகிறார். “நாம் பயந்துவிட்டாலும், புயலின் நடுவே தகவல்தொடர்புகள் அறுந்து போனாலும் கூட-நாடு முழுவதும் உள்ள மற்றவர்களால் ஆழ்ந்த புனிதமான செயலில் நீங்கள் இணைந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள். பிரார்த்திக்கும்போது, ​​நீங்கள் ஒன்றிணைந்த செயலை மேற்கொள்ள முடியும் என்ற அறிவிலிருந்து உத்வேகம் பெறுகிறீர்கள். ”

எட்டா மற்றும் ஐயோட்டா சூறாவளிகள் மத்திய அமெரிக்காவை கடந்த 20 வருடங்களில் தாக்கிய மிகவும் மோசமான புயல்களாகும். கடுமையான மழைகள் பரவலான வெள்ளப்பபெருக்கை ஏற்படுத்தின. பல இடங்களில் தகவல் தொடர்புகள், மின்சாரம், சாலைவசதிகள் துண்டிக்கப்பட்டன.

இந்த குழு எவ்வாறு பலரை நடவடிக்கைக்கு அணிதிரட்ட முடிந்தது என்பதை திருமதி பெர்டே விளக்குகிறார். ” பல தசாப்தங்களாக, அவற்றின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்காக வளர்ந்து வரும் மக்களில் திறனை வளர்ப்பது பற்றி கற்றுக்கொண்டிருக்கும் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் பஹாய் சமூகங்களை நாங்கள் அணுகினோம்.

“இது, அவசரக் குழுவானது மக்களை நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒன்றிணைக்க விரும்பும் ஒழுங்கமைப்புத் திறன்களைக் கொண்ட மக்கள் மற்றும் ஸ்தாபனங்களை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பை விரைவாக நிறுவிட வழிவகுத்தது.”

மக்கள் மற்றும் வளங்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்புவதில் வலையமைப்பு எவ்வாறு கருவியாக இருந்தது என்பதை திருமதி பெர்டு தொடர்ந்து விளக்குகிறார். “குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள குடும்பங்கள், எடுத்துக்காட்டாக, தங்களால் இயன்ற எந்தவொரு பொருட்களையும் அல்லது ஆடைகளையும் நன்கொடையாக அளித்தன, அவை மற்ற பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. மக்கள் பதிலளித்த ஒற்றுமை மற்றும் தன்னலமற்ற சேவையின் ஆவி இந்த நேரத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ”

உள்ளூர் சமூகங்களில் தங்கள் சொந்த விடையிறுப்புக்கான மீட்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் முன்னிலை வகிக்கும் திறனை வளர்ப்பதற்கான ஆற்றலே அவசரக் குழு அணுகுமுறையின் மையத்தில் உள்ளது.

அவசரகால செயற்குழுவினால் ஒருங்கிணைக்கப்பட்ட தொண்டர்கள் சான் பெட்ரோ சூல நகரில் தங்கள் குடியிருப்புகளை இழந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக கிடைத்த மெத்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.

சான் பெட்ரோ சூலாவின் உள்ளூர் பஹாய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கூறுகிறார், “இது உண்மையிலேயே முக்கியமானதைப் பிரதிபலிக்கும் நேரம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புகிறோம், அண்டை வீட்டாருக்கும் அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவுகிறோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் உணர்கிறார்கள். பொருள் ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் புதிய ஒன்றை ஒற்றுமையுடன் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இது. ”

புயல்களுக்குப் பின்னர் வந்த வாரங்களில், குழு தனது கவனத்தை நீண்டகால தேவைகள்பால் திருப்பியுள்ளது. திருமதி காஸ்டிப்ளாங்கோ கூறுகிறார்: “தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே பலர் வேலை இல்லாமல் இருந்தனர், அல்லது இனிப்பு ரொட்டி சுடுவது, துணிகளை விற்பது, அல்லது சிகையலங்கார நிபுணர் போன்ற சிறு தொழில்களைக் கொண்டிருந்தனர். ஆனால், புயல்களில் தங்கள் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் இழந்தனர். மக்கள் தங்கள் தொழில்களை மறுதொடக்கம் செய்ய தேவையான பொருட்களை வாங்க உதவும் ஓர் மூலாதார நிதியை நிறுவுவது பற்றி நாங்கள் சிந்திக்கின்றோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1480/