

8 அக்டோபர் 2021
பஹாய் உலக நிலையம் – பஹாய் உலக செய்திச் சேவை முன்பு என்றும் இல்லாத வகையில் அமைந்த 2020 ஆண்டினை பின் நோக்கிப் பார்த்து , நெருக்கடியான ஒரு கால கட்டத்தில், உலகலாவிய பஹாய் சமூகத்தில், மீட்டெழுச்சியை வலுப்படுத்தியும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் நடந்தேறிய வளர்ச்சி நிகழ்வுகளைப் பற்றிய அதன் விமர்சன கதைகளின் ஒரு மீள்பார்வையை இங்கு அளிக்கின்றது.
கொரோனா தொற்று நோய் பரவலுக்கான் பதிற்செயல்பாடுகள்
அந்த தொற்று நோய் முதன் முறையாக தாக்கிய போது, உலக முழுதும் காட்டப்பட்ட கூட்டுப்பொறுப்புணர்வு நடவடிக்கைகள் எவ்வாறு மனித குலம் ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒத்துழைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியது. மார்ச்சு மாதத்திற்குப் பிறகு, எவ்வாறு ஒவ்வொரு தனி நபரும் மாற்றத்திற்கு ஒரு பங்காளியாக முடியும் என்பது மேலும் தெளிவானது. மக்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததுடன், ஒரு கூட்டு இலக்கு உணர்வு மேலும் அதிகமான மக்களை தங்களது சக நாட்டுக் குடிமக்களுக்கு சேவையாற்றிட ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலை அளித்தது. அதன் வழி நன்மை செயல்பாடு அடுத்தடுத்து ஒரு சுழல் வட்டமாக உருவாகி, என்றும் இல்லாத அளவுக்கு கூட்டுச் செயல்பாடு காணப்பட்து.

மார்ச்சு மாதத்தில் பஹாய் செய்தி பஹாய் சமூகங்கள் எதிர் நோக்கிய நெருக்கடியை சமாலிக்க அவைகள் எடுத்த ஆரம்ப பதிற்செயல்களை அறிக்கையாக விமர்சனம் செய்தது. பொது சுகாதார நலனுக்குத் தகுந்த விதிகளை அனுசரிக்கும் வகையில் பல சமூகங்கள் புதிய தொடர்பு முறைகளை விரைவாகவும் ஆக்கபூர்வமாகவும் அமுலாக்கியதோடு, தத்தம் சமூகங்களுக்கு சேவையாற்ற பல்வேறு வழிகளை கண்டறிந்தன.
நியு யோர்க் நகரத்தின் புறநகர் ஒன்றில் , பஹாய் சமூக மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் குழு ஒன்று, பள்ளிகள் மூடப்பட்டதின் விளைவாக ஏற்பட்ட அதிரடி தேவைகளைப் பூர்த்தி செய்ய தன் கவனத்தைத் திருப்பியது.

லக்சம்பர்க் நாட்டில் நன்நெறி கற்றல் வகுப்புகளில் பங்கேற்றிய சிறுவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்றும் இன்றியமையாத சேவைகளில் ஈடுபட்டவர்களுக்கும் மகிழ்ச்சி தறும் வகையில் வாழ்த்து அட்டைகள் செய்து அனுப்பினர். ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் சிறுவர்கள் நம்பிக்கை என்னும் கருப்பொருள் கொண்ட ஓவியங்கள் தீட்டி வயதானவர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு வழங்கினர். சொல்வேனியா நாட்டில் பசேல்ஜ் நகர பஹாய்கள் இல்லங்களுக்கு உணவு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். மார்ச்சு மாதத்தில் நவ்ரூஸ் பண்டிகையின் போது உலக பஹாய் சமூகம் நட்புப் பிணைப்புகளை வலுப்படுத்தி நண்பர்களோடு நம்பிக்கை ஊட்டும் செய்திகளைப் பகிர்ந்தனர்.

ஏப்ரல் மாதம் ஆரம்பித்ததும் கொரோனா தொற்று நோய் தீவரமாக பரவத் தொடங்கிய தருணம், பஹாய் சமூகங்களும் தங்களது முயற்சிகளை தீவிரப் படுத்தின. கனடா நாட்டில் ஒரு பஹாய் ஆர்வத்தின் அடிப்படையில் இயங்கிய ஆங்கிலம் கற்றல் வகுப்பில் கலந்து கொண்டவர்கள், இக்கட்டான அந்த சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் ஆறுதலும் உதவியும் அளித்தனர். துனிசியாவில் பஹாயகள் மற்ற சமயங்களைச் சார்ந்த குழுக்களோடு சேர்ந்து , தொற்று நோய் நெருக்கடியை கையாளும் அனுகு முறைகள் சமய, விஞ்ஞான அறிவினால் வழிகாட்டப்பட வேண்டுமென குரல் எழுப்பினர். கொங்கோ குடியரசில் சமூகங்களிடையே இருந்த இணக்கத்தின் வழி பல்லாயிரக் கணக்கான மக்கள் சரியான தகவல்களையும் அறிவுரைகளையும் பெற முடிந்தது. உணவு பற்றாக் குறை தவிர்ப்பதற்கு எவ்வித தானியங்களை பயிரிட வேண்டும் என்ற தகவலும் வழங்கப் பட்டது. உகான்டா நாட்டின் கியுங்கா நகரில் வானொலி மூலம் ஒளிபரப்புப்பட்ட சம்பாஷனையின் வழி குடும்ப பிரார்ததனைகள் இக்கட்டான நேரங்களில் தைரியம் தறும் மருந்தாகும் என்பது உணர்த்தப்பட்டது. மற்ற இடங்களில் பஹாய் வானொலி நிலையங்கள் கிராமப் புறங்களில் உள்ள சமூகங்களுக்கு முக்கிய தகவல்களைத் தந்து, சமூகங்களுக்கு ஒரு முக்கிய ஆதறவு மையமாக இயங்கின.

ஏப்ரல் மாதத்தில் முயற்சிகள் பலமடங்கு அதிகரித்தன. பஹாய் உள்ளூர், தேசிய சபைகள் பல அன்பர்களின் சக்திகளையும் உதவிகளையும் செயல்பாட்டில் அமுலாக்கினர். தேவை நிறைந்த இடங்களுக்கு முக்கிய தகவல்களையும் பொருள் ஆதறவையும் வழங்கினர். வலுவற்ற சமூகங்கள் அரசாங்க உதவிகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
ஏப்ரல் மாத்த்திற்குப் பிறகு நெருக்கடியை நம்பிக்கையுடன் மேல்நோக்க, சமூக சேவையும் கூட்டு வழிபாடும் சமூக வாழ்வில் இன்றியமையாத அங்கங்காளாக அமைய வேண்டும் என்பது மேலும் தெளிவானது. ரொமேனியாவில், எல்லோரும் பங்கேற்கக் கூடிய கூட்டு வழிபாட்டுக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் தங்கள் இதயத் துடிப்பு ஒன்றாகி விட்டதை உணர்கின்றனர். தென் அப்ரிக்காவில், பஹாய் சுகாதார வல்லுனர்கள், ஒவ்வொரு தனி நபரிடம் உள்ளார இருக்கக் கூடிய சமூக சேவை உணர்வை கண்டு கொண்டு , அவர்களின் ஆற்றல்களை கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு உதவியாற்ற திறன் அளித்து வருகின்றனர்.
எல்லா இடங்களிலும் நெருக்கடிக்கு சமூகத்தின் அடிமட்டத்தில் பதிற்செயல் அளிக்க இளைஞர்கள் முன் வந்தனர். சியாராலியோனில் இளைஞர்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை காட்டும் ஒரு திரைப்படத்தை வெளியிட்டனர். இத்தாலியில் இளைஞர்கள் சமூக தன்மை மாற்றத்தை மையக் கருத்தாகக் கொண்ட குறு காணொளித் தொடரை உருவாக்கினர். பேய்ரூட்டில் , தொற்று நோய் நெருக்கடியின் போதும் அதன் பிறகு நடந்த வெடிப்புப் பேரிடரின் விளைவின் மத்தியில், ஒரு மீட்புப் பணி பிணையத்தை தங்களது பஹாய் சமூக மேம்பாட்டுச் சேவை அனுபவத்தைக் கொண்டு ஏற்படுத்தினர்.
அக் காலக் கட்டத்தில் பொது மக்களின் கவனத்தை குறிப்பிட்ட மையக் கருத்துக்களின்பால் ஈர்க்கும் வகையில் கலை படைப்புகள் ஒரு முக்கிய பங்கினை ஆற்றின. இதற்கிடையே பஹாய் உலகம் என்ற வெளியீடு, உலக சுகாதார நெருக்கடி, மற்றும் சமூகங்கள் எதிர் நோக்கும் முக்கியமான பிரச்சனைகள் தொடர்பான கட்டுரைத் தொகுப்பினை பிரசுரம் செய்துள்ளது.
நீண்ட கால சமூக பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்
தொற்று நோய் பரவலுக்கு பதிற்செயலாக எடுக்கப்பட்ட அடிமட்ட பஹாய் சமூக பொருளாதார முயற்சிகளை பிரசுரித்தது மட்டுமல்லாமல் பஹாய் செய்தி சேவை பஹாய் ஆர்வத்தின் அடிப்படையில் இயங்கும் இயக்கங்கள் சுகாதார நெருக்கடியின் சூழ்நிலைக்கேற்ப மேற்கொண்ட எளிதற்ற திட்டங்களையும் முயற்சிகளையும் பிரசுரித்தது.

பஹாய் செய்தி சேவை உணவு பற்றாக் குறையை தவிற்ப்பதறகான சில முயற்சிகளை வெளியிட்டது. வனுவாத்து நாட்டில் பஹாய் ஆர்வ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘சமூக நடவடிக்கைக்கு ஆயுத்தம்’ என்னும் கல்வி செயல்பாட்டில் பங்கேற்றியவர்கள் தங்கள் சக நாட்டினர்களுக்கு உணவு தேவை நிரப்பீடு தடையின்றி ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை செய்வதோடு, மற்றவர்களையும் அத்தகைய நடவடிக்கைகளைச் செய்ய ஊக்கமளித்தனர். நெப்பால் நாட்டில், ஊர் திரும்பிய வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த சூழ்நிலையில், ஒரு உள்ளூர் பஹாய் ஆதமீக சபை தனது சமூகம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலை மேம்படுத்த தக்க நடவடிக்கைகள் எடுத்தது.
கொலம்பியாவில் FUNDAEC என்னும் பஹாய் ஆர்வம் கொண்ட இயக்கம் உள்ளூர் உணவு உற்பத்தி முயற்சிகள்பால் தனது கவனத்தை செலுத்தியதோடு, நிலம் மற்றும் சுற்றுப்புற நலனை வலியுறுத்தும் நிகழ்வுகளில் நாட்டிலுள்ள எல்லா சமூகங்களை ஈடுபடுத்தியது.

கல்வித் துரையில் எடுக்கப் பட்ட முயற்சிகளையும் பஹாய் செய்தி சேவை பிரசுரித்தது: பொலீவியாவில், பஹாய் ஆர்வ அடிப்படையில் இயங்கும் ஒரு பல்கலைக்கழகம், நெருக்கடி காலத்தில் மாணவரகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவியாக புதிய சூழ்நிலைக்குத் தோதுவான தொடர்பு சாதனங்களை அளித்துள்ளது. மத்திய ஆப்ரிக்க குடியரசிலும், இந்தோனேசியாவிலும், இந்தியாவிலும் மற்ற இடங்களிலும், பஹாய் ஆர்வ அடிப்படையில் இயங்கும் பஹாய் சமூகப் பள்ளிகள் நெருக்கடி காலத்தில் ஆசிரியர்களின் பங்கினை ஆக்கபூர்வ வகையில் மாற்றி அமைத்து புதிய புரிந்துணர்வை பெற்றுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவில் தனி நபர், அதிகாரிகள், காவல் துரையினர்கள் ஆகியோர் இடையே இன ஒற்றுமையைப் பற்றி கலந்துறையாடல் நிகழ்வுகள் ஏற்படுத்தி அதன் வழி சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவினர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான குறிக்கோலை அடையாளம் காணவும் பொது மக்களின் பாதுகாப்பை முன்னேற்றம் அடையச் செய்யும் முறைமைகளை உருவாக்குவதற்கும் உதவின.
சமூக சொல்லாடல்களில் பங்கேற்பு
கடந்த ஆண்டில் பஹாய் செய்தி சேவை சமூக உரையாடல்களில் பஹாய் சமூகங்களின் பங்கேற்றல் முயற்சிகள் பற்றிய செய்திகளை பிரசுரித்தது.

சர்வ தேச பஹாய் சமூஐம் கீழ் குறிப்பிட்ட கருத்தரங்கங்களில் பங்கெடுத்தது: எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அடையாளத்தை உருவாக்குவதில் மொழியின் முக்கியத்துவம், விவசாயம், சமாதானம், நீதியான உலக அமைப்புக்கான வழியில் சர்வதேச கட்டமைப்புக்களின் பங்கு.
தேசிய பஹாய் சமூகங்கள் கீழ் குறிப்பிட்ட கருத்தரங்கங்களில் பங்கேற்றன: சுற்றுப்புற தூய்மை, குடும்ப வாழ்க்கை, பெண் ஆண் சமத்துவம், சமுதாயத்தில் சமயங்களின் பங்கு.
ஜோர்டன் நாட்டிலும் மற்ற நாடுகளிலும் பத்திரிக்கையாளர்களும், பல் வேறு சமூக சேவகர்களும் சமுதாயத்தில் ஊடகங்கள் எவ்வாறு பலனளிக்கும் பங்கினை ஆற்ற முடியும் என்பதை ஆராய்வதற்கான வாய்ப்புக்களை பஹாய் சமூகங்கள் ஏற்பாடு செய்தன. இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கங்கள் வழி அரசாங்க அதிகாரிகள், கல்விமான்கள் ஆகியோர் ஒரு சமாதானமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடிப்படை கொள்கைகளை ஆராய்வதற்கு வாய்ப்பு உருவாக்கப் பட்டது. கனாடாவிலும் அஸ்திரியாவிலும் ஒலிபரப்பு மற்றும் காணொளி தொகுப்பின் வழி தேசிய பிரச்சனைகளுக்கு புதிய கண்ணோட்டம் பெறுவதற்கு சமயங்கள் அளிக்கும் அறிவுரைகளை கண்டு கொண்டனர். கஸாக்கஸ்தான் நாட்டிலும் மற்றும் ஈராக் நாட்டின் குர்டிஸ்தான் வட்டாரத்திலும் நெருக்கடி காலத்தில் மக்களை ஒன்றிணைத்து இயங்க வைத்த ஆன்மீக கொள்கைகள் வருங்காலத்தில் சமூக வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை வட்ட மேஜை கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டன. சில்லி நாட்டில் சட்டத்துக்கடுபட்ட செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பஹாய் சமூகம் சக பிரஜைகளோடு ஒரு ஆன்மீக மற்றும் லெளகீக ரீதியில் வளர்ச்சி பெறும் சமுதாயத்தை உருவாக்குவதற்கான அஸ்திவாரத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்கு வாய்புக்களை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டில் தேசிய அளவில் சமாதானம், ஒன்றாக வாழ்தல் பற்றிய உரையாடல்கள் அதிகரித்தன. ஐக்கிய அமெரிக்காவிலும் உலக முழுதும் இன அடிப்படையிலான தப்பெண்ணங்கள் மட்டுமன்றி மற்ற தப்பெண்ணங்களும் பொது மக்களின் உணர்வை கிளரிய போது , ஐக்கிய அமெரிக்காவின் பஹாய் தேசிய சபை வெளியிட்ட ஒரு அறிக்கை, முன் நோக்கிச் செல்வதற்கான முக்கிய சம்பாஷனைகளையும் உரையாடல்களையும் ஊக்குவித்தது. நெதெர்லாந்தில் அப்துல் பஹா எழுதிய ஹேக் நகர் நிருபங்களின் ஆண்டு நினைவு நாளையொட்டி உலக அமைதியைப் பற்றியான கருத்தரங்கங்கள் நடைபெற்றன. துனிசியாவில் பெண்களின் மழுமையான பங்கேற்றல் இல்லையெனில் உலக சமாதானம் இயலாது என்பது பற்றி வட்ட மேஜை கலந்துரையாடல்கள் நடை பெற்றன.
இவ்வாண்டு, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பஹாய் தலமைத்துவத்தில் உள்ள உலக அமைதிக்கான கல்வித்துரை, பருவ நிலை மாற்றத்தின் விளைவின் தார்மீக பரிமானங்களை எவ்வாறு கையாளுவது என்ற மையக் கருத்தைக் கொண்ட ஒரு மாநாடை ஏற்பாடு செய்தது. இந்தியாவில், இந்தோர் நகரில் இருக்கும் தேவி அஹில்யா பலகலைக் கழகத்தில், பஹாய் தலமைத்துவத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வுத் துரை , மனித இயல்பைப் பற்றிய புதிய கருத்துகள் எவ்வாறு சுகாதார நெருக்கடியின் சூழ்நிலையில் நகர வளர்ச்சிக்கான நெடுங் கால அனுகு முறைகளை பாதிக்கலாம் என்பதனை ஆராய, பொருளாதார வல்லுனர்களுக்கும் பேராசியர்களுக்கும் அழைப்பு கொடுத்தது.

அஸ்திரேலியாவில், இரண்டு ஆண்டுகள் நீடித்த சமூகத்தின் பல்வேறு பிரிவினர்களுடன் நடந்தேறிய கலந்துரையாடல்களின் இறுதிப்பலனாக, ‘எல்லோரையும் உட்படுத்தும் உரைச் சித்திரம்’ என்ற ஆய்வு அறிக்கை வெளியிடப் பட்டது. இவ்வறிக்கையின் வழி நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பொது அடையாளத்தை உருவாக்குவதற்கான ஆழ்ந்த கருத்துகள் வழங்கப்பட்டன. கொங்கோ ஜனநாயக குடியரசிலும் இந்தியாவிலும் நிலையான அமைதியை ஸ்தாபிக்க எவ்வாறு மக்களை பிரித்து வைக்கும் சம்பிரதாயத் தடைகளையும் தப்பெண்ணங்களையும் கைவிட முடியும் என்பதை ஆராய குடித் தலைவர்கள் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன.
பப்புவா நியு கினியில், பஹாய் தேசிய சபை, ஜூலை மாதத்தில் பெண்ஆண் சமத்துவத்தைப்பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டது. சுகாதார நெருக்கடி காலத்தில் பெண் ஆண் சமத்துவம் இல்லாமையினால் உருவாகும் பிரச்சனைகள் எவ்வாறு மேலும் அதிகரித்துள்ளன என்பதை இவ்வறிக்கையில் தெளிவாக்கப்பட்டது.
உலகலாவிய வாழ்வுவளம் கல்வியல் பயிற்சி கழகம் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக மாற்றத்தினைப் பற்றிய கேள்விகளை ஆராய்வதற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்து வந்துள்ளது.
ஈரானிலும் யெமெனிலும் வாழும் பஹாய்களுக்கு ஏற்பட்டுள்ள துன்புறுத்துதல்கள்
சர்வதேச சமூகம் எதிர் நோக்கியுள்ள சுகாதார நெருக்கடி காலத்தில், ஈரான் நாட்டிலும் யெமென் நாட்டிலும் வாழும் பஹாய்களுக்கு ஏற்பட்டுள்ள துன்புறுத்துதல்கள் குறைந்தபாடு இல்லை.
இவ்வாண்டு ஈரான் நாட்டு அதிகாரத்துவம் பஹாய்கள்பால் தனது துன்புறுத்துதல்களை அதிகரித்துள்ளது. பல பஹாய்கள் ஆதாரமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன; நாட்டு அடையாளப் பத்திரங்களைப் பெறுவதற்கு தடைக் கட்டுப்பாடுகளை எதிர் நோக்குகின்றனர். இச்செயல்கள் சுகாதார நெருக்கடியில் தனி நபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மேலும் தொல்லைகளை கொடுத்துள்ளன.

யெமென் நாட்டில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் நீதி மன்றம் ஒன்று ஒரு பஹாய் மீது மத ரீதியாக சாற்றப்பட்ட மரண தண்டனையை ஆதரித்தது. ஆனால் பிறகு அவரும் மற்ற ஐந்து பஹாய்களும் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் சர்வதேச பஹாய் சமூகம் அந்நாட்டில் வாழும் பஹாய்களின் பாதுகாப்பைப் பற்றி மிகுந்த அக்கரை கொண்டுள்ளது. அது யெமென் நாட்டு பஹாய்கள் தங்கள் சமய நம்பிக்கை படி வாழ அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.
பஹாய் வழிபாட்டு இல்லங்கள்
சமுதாயத்தின் பரந்த பகுதிகளை கூட்டு வழிபாடு மற்றும் சேவை மனப்பான்மையுடன் ஊக்குவிக்கும் அதே வேளையில், பஹாய் வழிபாட்டு இல்லங்கள் தொற்றுநோய்க்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்பட்டன என்பதைப் பற்றிய செய்திகளை கடந்த ஆண்டு செய்தி சேவை உள்ளடக்கியது. கென்யா மற்றும் பப்புவா நியூ கினியாவில் வழிபாட்டு இல்லங்களை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கதைகள் தெரிவிக்கின்றன.

பஹாய் வழிபாட்டு இல்லங்கள் இருக்கும் இடங்களில் , அவை உட்கொண்டிருக்கும் சக்தியை சமுதாயத்தின் அதிகமான தரப்பினர் உணர்ந்து கொள்ள புதிய அனுகு முறைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பிஹார ஷரீப் என்னும் இடத்தில் கட்டப்படவிருக்கும் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்புக் கருத்துகள் பற்றியும் கொங்கோ ஜனநாயக குடயரசின் தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பு கருத்துகள் பற்றியும் அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. கொங்கோ நாட்டின் வழிபாட்டு இல்லத்தின் அடிக்கல் நாட்டும் விழா நிறவடைந்துதற்பொழுது அதன் கட்டிட வேலை ஆரம்பித்து விட்டது.

அப்துல் பஹா சன்னிதான கட்டுமானப் பணி
இவ்வாண்டு ஆரம்பத்தில் அப்துல் பஹாவின் புனித கல்லரை கட்டுமானப் பணியின் முதல் கட்டமாக கல்லரை எழுப்ப வேண்டிய தலம் தயார் படுத்தப் பட்டு அதன் அஸ்த்திவாரம் அமைக்கப்படும் வேலை தொடங்கப் பட்டுள்ளது. அக்கட்டடப் பணியின் ஆரம்பத்தையொட்டி அப்துல் பஹாவை களெரவிக்க ஒரு சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டது. அந்நிகழ்வில் அக்கா நகர் முதல்வரும், நகரின் பல்வேறு சமயப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சுகாதார நெருக்கடியின் ஆரம்பத்தில் சில வேலைகள் தாமதாக்கப்பட்டோ அல்லது நிறுத்தப்பட்ட போதும், உள்ளூர் அதிகாரிகளின் இணக்கத்துடன் கட்டும் பணி தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல் மாதம் கல்லரையின் அஸ்த்திவாரம் வடிவமைப்புப்படி உருவம் எடுக்க ஆரம்பித்து, நவம்பர் மாதம் கல்லரையின் தூண்கள் எழுப்பப் பட்டன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1478/