அப்துல்-பஹா: அப்துல்-பஹாவின் முன்னுதாரணம்


மாஸ்டர் அப்துல் பஹாவின் முன்னுதாரணம்

மற்றவர்கள் கூறுவதை மிகப்பூரணமாக செவிமடுப்பதில் நமது உதாரணப்புருஷராகிய அப்துல் பஹாவைப் போன்று செவிமடுத்தவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். மற்றவர்கள் கூறுவதை கூர்ந்து செவிமடுப்பதில் அப்துல் பஹாவிடம் இருந்த மிக உயரிய சக்திக்காக பஹாவுல்லா அவரைப் போற்றியுள்ளார். பஹாவுல்லா பின்வரும் வார்த்தைகளை ஒரு நம்பிக்கையாளரிடம் கூறியிருக்கின்றார்:

“மாஸ்டர் அவர்கள் மக்களுக்குப் போதிக்கும் வழிமுறையைப் பாருங்கள். அர்த்தமற்றதும், எவ்வித கருத்தையும் கொண்டிராத பேச்சையும் கூட அவர் மிகக் கூர்ந்து செவிமடுப்பார். ஒருவர் பேசுவதை அப்துல் பஹா செவிமடுக்கும்போது, “இவர் என்னிடமிருந்து கற்றுக் கொள்கின்றார்,” என அம்மனிதர் கருதிக் கொள்ளுமளவுக்கு அப்துல் பஹா அம்மனிதர் கூறுவதை கூர்ந்து செவிமடுக்கின்றார். அதன் பிறகு, மாஸ்டர் அவர்கள் படிப்படியாகவும், வெகு கவனமாகவும், அம்மனிதருக்குத் தெரியாத வண்ணம், அம்மனிதரை சரியான பாதைக்குக் கொண்டு வந்து நிறுத்தி, புரிந்துகொள்ளலின் ஒரு புதிய சக்தியை அம்மனிதர் மீது வழங்கிடுவார்.”

ஆர்வலர்களின் இதயங்களைத் தொடும் தனது முயற்சிகளில் மாஸ்டர் நெடுநீண்ட பொறுமையுடன் அவர்கள் கூறுவதைச் செவிமடுப்பார். முதன் முறையாக அவ்வுண்மைகள் தமக்குத் தெரிய வருவதுபோல் மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அப்துல் பஹா பிறர் சொல்வதை செவிமடுக்கின்றார். அந்த பேச்சு அப்துல் பஹாவுக்கு எந்தளவுக்கு பயனற்றதாகவும், நீதியற்றதாகவும் இருந்தாலும் கூட அவர் அதனை வெகு ஆர்வத்துடனும், மரியாதையுடனும் செவிமடுப்பார். மேலும், பேச்சின் மிதவாதம் என்பதற்கான முறையையும், அர்த்தத்தையும் அவர் மற்றவர்களுடைய வீண பேச்சை எப்பொழுது தாழ்த்திப் பேசாமல் இருபபதன் வாயிலாக மெய்ப்பித்துக் காட்டினார்.

மாஸ்டர் அப்துல் பஹாவின் இந்த செவிமடுக்கும் ஆற்றலால் கவரப்பட்ட மேற்கத்திய நண்பர்களுள் ஹார்வார்டு ஐவ்ஸ¨ம், ஸ்டேன்வூட் கோப் அவர்களும் அடங்குவர். இந்த இரண்டு நண்பர்களும் பல வேளைகளில் அப்துல் பஹாவைக் கவனித்திருக்கின்றனர். பிறர் கூறுவதை செவிமடுக்கும் அப்துல் பஹாவின் ஆற்றல் குறித்து ஹார்வார்டு ஐவ்ஸ் பின்வருமாறு விவரிக்கின்றார்:

இடம்-திரு ஸ்டேன்வுட் கோப், வலம்-திரு கோல்பி ஐவ்ஸ்

“கேள்வியாளரை அப்துல் பஹா சந்தித்த வித்தியாசமான விதம்தான் என்ன!… கேள்வி கேட்ட மனிதரிடம் முதலில் அப்துல் பஹா மௌனமாக இருப்பார். அது ஒரு வெளிப்பாடையான மௌனம். அப்துல் பஹாவினுடைய ஊக்குவிப்பு எப்பொழுதுமே எப்படியிருந்தது என்றால், கேள்வியாளர் முதல் பேசு வேண்டும் என்பதும், தாம் அதனை செவிமடுக்க வேண்டும் என்பதுதான். செவிமடுப்பவரிடம் சரியான பதில் உள்ளது, மற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் அப்பதி¬லு உடனடியாகக் கூறவேண்டும் எனும் எவ்வித பதற்றமோ, படபடப்போ அப்துல் பஹாவிடம் இல்லை. … கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் கேள்வியாளரிடம் சரியான பதில் உள்ளது என்பதை கேள்வியாளர் உணரும் வகையில் அப்துல் பஹா செவிமடுப்பார். பிறர் பேசுவதை “நன்றாக செவிமடுப்பவர்களாக” சிலர் விளங்குகின்றனர் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், பிறர் பேசுவதை அப்துல் பஹாவைப் போன்று கூர்ந்து “செவிமடுப்பவரை” நான் கண்டதில்லை. செவிகள் கேட்பதற்கும் மேலான பரிவுடன் உள்வாங்கும் நிலை அப்துல் பஹாவின் செவிமடுத்தல். இரண்டு தனிநபர்கள் ஒரே மனிதராக ஆகி விடுவதுபோன்று அந்த செவிமடுத்தல் இருக்கும். இரண்டு ஆன்மாக்கள் ஒரே ஆன்மாவாக மாறி ஆன்ம உறவுக்கு பேச்சுத் தேவையில்லை என ஆகிடும் செவிமடுத்தல் நிலை அது. இதை நான் எழுதும்போது பஹாவுல்லாவினுடைய வார்த்தைகள் என் மனதில் ரிங்காரமிடுகின்றன: “நேர்மை மனங்கொண்ட சேவகர் எம்மை பிரார்த்தனையில் அழைத்திடும்போது எமது பதிலை செவிமடுக்கும் அவரது சொந்த செவிகளாக நான் ஆகி விடுகின்றேன்.”

அதுதான் உண்மை! அப்துல் பஹா எனது செவிகளைக் கொண்டே நான் பேசுவதைச் செவிமடுக்கின்றார். … ஊக்குவிக்கும் அவரது பரிவின் விளைவாக, கேள்வியாளர் பேசுவதற்கு ஏதும் கிடைக்காத நிலையை அடையும்போது, அங்கு ஒரு குறுகிய நிசப்தம் நிலவுகின்றது… தொடர்ச்சியான விளக்கமோ, அறிவுரையோ அப்போது அங்கு இல்லை… மேலுலகிலிருந்து வழிகாட்டலை நாடுவதுபோன்று சில வேளைகளில் அப்துல் பஹா தமது கண்களை ஒரு கணம் மூடியவாறு இருப்பார். சில வேளைகளில் அமர்ந்து , இதயத்தை உருக வைக்கும் தமது அன்பான புன்னகையைக் கொண்டு கேள்வியாளரின் ஆன்மாவைத் தேடிப்பார்ப்பார். கேள்வியாளரின் அதிஉள்ளார்ந்த மன இடுக்குகளில் என்ன புதைந்துள்ளன என்பது அப்துல் பஹாவுக்குத் தெரியும். அவ்வாறாக, பேச்சின் வடிவமின்றி அவர் பதிலளிக்கின்றார், பேசப்பட்ட வார்த்தைகள்வழி அவர் பதிலளிப்பதில்லை.

சதா பேசிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் அப்துல் பஹாவைச் சந்தித்தபோது, அப்துல் பஹாவின் மிக உயரிய புரிந்து கொள்ளலையும், பொறுமையையும் ஸ்டேன்வூட் கோப் அவர்களால் கூறப்பட்ட பின்வரும் கதை சித்தரிக்கின்றது: அப்துல் பஹா அவர்கள் போஸ்டன் நகரில் இருந்தபோது, நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நியூட்டன் பட்டணத்திலிருந்த எங்கள் வீட்டிலிருந்த எனது தந்தையை அழைத்துக் கொண்டு அப்துல் பஹாவைக் காணச் சென்றேன். அப்போது எனது தந்தையார் புகழ் பெற்ற போஸ்டன் நகர் ஓவியர். அவருக்கு வயது எழுபத்தைந்து. சமயப் பற்று கொண்டு, ஆன்மீகமும், பிரார்த்தனைமயமான நிலையும் கொண்ட ஒரு பக்தியாளர் அவர். நான் சார்ந்திருக்கும் பஹாய் சமயத்தின் மீது அவர் ஆதரவுக்கரம் நீட்டியிருந்தாலும், “மகனே, என்னால் மாற முடியாத அளவுக்கு எனக்கு வயதாகி விட்டது,” என்று என்னிடம் கூறுவார்.

“நான் காண்ஸ்டாண்டிநோப்பலில் இருந்தபோது, எனது வேண்டுகோளுக்கேற்ப எனது தந்தையார் போஸ்டன் நகரின் பஹாய் கூட்டங்களில் கலந்து கொண்டார். இப்பொழுது அப்துல் பஹாவைச் சந்திக்கும் வாய்பைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தார். அச்சந்திப்பின்போது, எனது தந்தையார் சமய சட்ட திட்டம் குறித்து அப்துல் பஹாவிடம் சுமார் அரை மனி நேரம் பேசினார். மிகச் சரியாகச் சொல்லப்போனால், எனது தந்தையார் மாஸ்டரின் அன்பான செவிகளில் தனது வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஆன்மீகத் தத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அங்கு அப்போது நான் அதிர்ச்சியடைந்த நிலையில் உட்கார்ந்திருந்தேன். நான் அவ்வாறு அதிர்ச்சியடையத் தேவையில்லைதான். கேள்வியாளர் கூறுவதை செவிமடுக்கும் நிலையில் இருந்த அப்துல் பஹா அதனைக் கண்டு அதிர்ச்சியடையவில்லை. கேள்வியாளரான எனது தந்தை கூறுவதை செவிமடுப்பவராக அப்துல் பஹா அப்போது இருந்தார். அப்துல் பஹா அங்கு அமர்ந்து கொண்டு வெகு சில வார்த்தைகளை மட்டுமே பேசி, புன்சிரிப்பை சிந்தி, எங்களை தமது அன்பினால் சூழ்ந்து கொண்டார். அப்துல் பஹாவிடம் ஓர் அற்புதமான நேர்முகப்பேட்டி கண்டு விட்டதாக உணர்ந்து எனது தந்தை மிக மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்.”

இவ்வுதாரணத்தின் வாயிலாக ஆப்துல் காட்டிய பணிவுநிலைகுறித்த இப்பாடம்தான் என்ன! பல வேளைகளில் மற்றவர்கள் கூறவதை வெகு நன்றாக செவிமடுப்பதன் வாயிலாக நாம் மற்றவர்களுக்கு உதவிட முடியும்.

ஹொன்டூராஸில் பேரிடருக்கு எதிரான மீழ்ச்சித்திறம்



8 அக்டோபர் 2021


சிகுவாத்தெபெக், ஹோண்டுராஸ், 13 ஜனவரி 2021, (BWNS) – ஹோண்டுராஸின் பஹாய் தேசிய ஆன்மீக சபை தொற்றுநோயின் ஆரம்பத்தில் ஓர் அவசரக் குழுவை உருவாக்கியபோது, ​​அது பேரழிவு தரும் ஈட்டா மற்றும் அயோட்டா சூறாவளிகளின் தாக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில் பல மாதங்களுக்கு பின்னர் அத்தியாவசியமாக விளங்கப்போகும் ஒரு செயல்முறையின் இயக்கத்தை ஆரம்பித்தது.

ஹோண்டுராஸின் பஹாய் தேசிய ஆன்மீக சபை தொற்றுநோயின் ஆரம்பத்தில் உருவாக்கிய அவசரக் குழு புதிய நெருக்கடிகளுக்கு உதவுகிறது

நவம்பர் மாதம், எட்டா சூறாவளி வகை-4 பற்றி செய்தி வெளியானபோது, ​​வரவிருக்கும் பேரழிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவசர குழு முயற்சிகளை மேற்கொண்டது. குழுவின் உறுப்பினரான குளோரியா பெர்டு கூறுகிறார், “இந்த சக்திவாய்ந்த புயலால் நாடு தாக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. பெரும்பாலான மக்கள் இத்தகைய பேரழிவை எதிர்பார்க்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் ஸ்தாபித்த வலையமைப்பு புயலுக்கு முன்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து மக்களை எச்சரிக்க வழிவகுத்தது. ”

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்தாபித்த வலையமைப்பு தேவைப்படும் இடங்களுக்கு மக்களையும் வள ஆதரங்களையும் அனுப்ப உதவுகின்றது.

ஈட்டா சூறாவளி ஹோண்டுராஸ் வழியாக நகர்வதற்கு முன்பு நவம்பர் 3 ஆம் தேதி நிக்கராகுவா கடற்கரைக்கு அப்பால் தரை தட்டியது. இதைத் தொடர்ந்து ஒரு வகை-5 சூறாவளியான ஐயோட்டா, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சமீபத்திய வரலாற்றில் இம்மண்டலத்தில் காணப்படாத அளவிலான ஓர் அழிவை ஏற்படுத்தியது. பலத்த மழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, அதே நேரத்தில் தகவல் தொடர்பு, மின்சாரம் மற்றும் சாலைகள் பல பகுதிகளில் பாதிப்புக்கு ஆளாயின.

ஒரு நெருக்கடியின் போது ஆன்மீக சூழலையும் ஒற்றுமை உணர்வையும் உருவாக்குவதில் பக்தி மனப்பான்மையின் மகத்தான சக்தியைக் கண்ட தேசிய சபன, நாடு தழுவிய பிரார்த்தனைகளை ஊக்குவிக்க உதவுமாறு அவசரக் குழுவிற்கு அழைப்பு விடுத்தது.

“ஓர் இருண்ட நேரத்தில், பிரார்த்தனை பரப்பியக்கம் நம்பிக்கையளிக்கும் செயலாகும்” என்று தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரும் அவசரக் குழுவின் உறுப்பினருமான ஆண்ட்ரியா காஸ்டிப்ளாங்கோ கூறுகிறார். “நாம் பயந்துவிட்டாலும், புயலின் நடுவே தகவல்தொடர்புகள் அறுந்து போனாலும் கூட-நாடு முழுவதும் உள்ள மற்றவர்களால் ஆழ்ந்த புனிதமான செயலில் நீங்கள் இணைந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள். பிரார்த்திக்கும்போது, ​​நீங்கள் ஒன்றிணைந்த செயலை மேற்கொள்ள முடியும் என்ற அறிவிலிருந்து உத்வேகம் பெறுகிறீர்கள். ”

எட்டா மற்றும் ஐயோட்டா சூறாவளிகள் மத்திய அமெரிக்காவை கடந்த 20 வருடங்களில் தாக்கிய மிகவும் மோசமான புயல்களாகும். கடுமையான மழைகள் பரவலான வெள்ளப்பபெருக்கை ஏற்படுத்தின. பல இடங்களில் தகவல் தொடர்புகள், மின்சாரம், சாலைவசதிகள் துண்டிக்கப்பட்டன.

இந்த குழு எவ்வாறு பலரை நடவடிக்கைக்கு அணிதிரட்ட முடிந்தது என்பதை திருமதி பெர்டே விளக்குகிறார். ” பல தசாப்தங்களாக, அவற்றின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்காக வளர்ந்து வரும் மக்களில் திறனை வளர்ப்பது பற்றி கற்றுக்கொண்டிருக்கும் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் பஹாய் சமூகங்களை நாங்கள் அணுகினோம்.

“இது, அவசரக் குழுவானது மக்களை நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒன்றிணைக்க விரும்பும் ஒழுங்கமைப்புத் திறன்களைக் கொண்ட மக்கள் மற்றும் ஸ்தாபனங்களை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பை விரைவாக நிறுவிட வழிவகுத்தது.”

மக்கள் மற்றும் வளங்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்புவதில் வலையமைப்பு எவ்வாறு கருவியாக இருந்தது என்பதை திருமதி பெர்டு தொடர்ந்து விளக்குகிறார். “குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள குடும்பங்கள், எடுத்துக்காட்டாக, தங்களால் இயன்ற எந்தவொரு பொருட்களையும் அல்லது ஆடைகளையும் நன்கொடையாக அளித்தன, அவை மற்ற பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. மக்கள் பதிலளித்த ஒற்றுமை மற்றும் தன்னலமற்ற சேவையின் ஆவி இந்த நேரத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ”

உள்ளூர் சமூகங்களில் தங்கள் சொந்த விடையிறுப்புக்கான மீட்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் முன்னிலை வகிக்கும் திறனை வளர்ப்பதற்கான ஆற்றலே அவசரக் குழு அணுகுமுறையின் மையத்தில் உள்ளது.

அவசரகால செயற்குழுவினால் ஒருங்கிணைக்கப்பட்ட தொண்டர்கள் சான் பெட்ரோ சூல நகரில் தங்கள் குடியிருப்புகளை இழந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக கிடைத்த மெத்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.

சான் பெட்ரோ சூலாவின் உள்ளூர் பஹாய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கூறுகிறார், “இது உண்மையிலேயே முக்கியமானதைப் பிரதிபலிக்கும் நேரம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புகிறோம், அண்டை வீட்டாருக்கும் அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவுகிறோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் உணர்கிறார்கள். பொருள் ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் புதிய ஒன்றை ஒற்றுமையுடன் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இது. ”

புயல்களுக்குப் பின்னர் வந்த வாரங்களில், குழு தனது கவனத்தை நீண்டகால தேவைகள்பால் திருப்பியுள்ளது. திருமதி காஸ்டிப்ளாங்கோ கூறுகிறார்: “தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே பலர் வேலை இல்லாமல் இருந்தனர், அல்லது இனிப்பு ரொட்டி சுடுவது, துணிகளை விற்பது, அல்லது சிகையலங்கார நிபுணர் போன்ற சிறு தொழில்களைக் கொண்டிருந்தனர். ஆனால், புயல்களில் தங்கள் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் இழந்தனர். மக்கள் தங்கள் தொழில்களை மறுதொடக்கம் செய்ய தேவையான பொருட்களை வாங்க உதவும் ஓர் மூலாதார நிதியை நிறுவுவது பற்றி நாங்கள் சிந்திக்கின்றோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1480/