
8 அக்டோபர் 2021
பஹாய் உலக நிலையம் – பஹாய் உலக இணையவழி வெளியீட்டில் இன்றைய புதிய கட்டுரைகளின் வெளியீடு அவ்விணையதளம் மீதான சமீபத்திய மேம்பாடுகளால் நிரப்பம் கண்டுள்ளது.
கடந்த மே 2019’இல் ஆரம்பிக்கப்பட்ட அந்த இணையத்தளம், பஹாய் உலக தொகுப்புகளிலிருந்து படைப்புகளின் ஏடகம் ஒன்றையும் கருப்பொருள் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளையும் உள்ளடக்குவதற்காக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அத்தளத்தில் புதிதாக வெளியிடப்பட்ட கட்டுரைகளில் “மனித சக்தியின் புதிய சுழற்சி”, செல்வாக்குமிக்க “நவீனத்துவ” எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுடனான ‘அப்துல்-பஹாவின் அவ்வளவாக அறியப்படாத சந்திப்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. அக்கட்டுரை விரைவான, தீவிர மாற்றத்திற்குள்ளாகி வந்த ஒரு சமுதாயத்தின் கலாச்சார முன்னணியில் இருந்த பல தனிநபர்கள் மீதான அப்துல்-பஹாவின் தாக்கத்தை ஆராய்கிறது.

மற்றொரு புதிய கட்டுரை, அமெரிக்க பஹாய் சமூகம் நிறுவப்பட்டதிலிருந்து அமெரிக்காவை பாதித்துள்ள “இன அநீதி மற்றும் இன ஒற்றுமையைப் பின்தொடர்வதற்கான பஹாய் விடையிறுத்தல்: பகுதி 1 (1912-1996),” இன அநீதியை நிவர்த்தி செய்வதற்கான அமெரிக்க பஹாய் சமூகத்தின் வரலாறு சார்ந்த முயற்சிகள் குறித்த இருபகுதித் தொடர்களில் முதலாவதாகும். கட்டுரையின் பகுதி 2, பிற்காலத்தில் வெளியிடப்படவுள்ளது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளையும், இன நீதி மற்றும் ஒற்றுமைக்கு பங்களிக்கும் பஹாய் சமூகத்தின் வளர்ந்து வரும் திறனையும் அது உரைத்திடும்.
மே 2019 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பஹாய் உலக இணையவழியானது சமூக முன்னேற்றத்துடன் தொடர்புடைய பல கருப்பொருள்கள் பற்றிய சிந்தனைமிக்க கட்டுரைகள் மற்றும் நீண்ட வடிவ கட்டுரைகள் கிடைக்குமாறு செய்துள்ளது, பஹாய் சிந்தனை மற்றும் செயலில் முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதுடன் உலகில் சமயத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கவும் செய்கிறது. சமூகம், பொருளாதார நீதி, இருத்தலியல் மன அழுத்தம், இடம்பெயர்வு மற்றும் ஆளுகை ஆகியவற்றை கடந்த ஆண்டின் பிற கட்டுரைகள் ஆராய்ந்தன.
ஷோகி எஃபென்டி பாதுகாவலராக 1921’இல் பொறுப்பேற்றப் பிறகு அவரது வழிகாட்டலின் கீழ் பஹாய் உலகம் தொகுப்புகள் ஸ்தாபிக்கப்படப்பட்டன. முதல் தொகுப்பு 1926’இல் ‘பஹாய் வருடநூல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1481/