ஃபிரெட் மோர்ட்டன்ஸன் பற்றிய இந்தக் கதை, எவ்வாறு எதிர்ப்பார்க்கவே முடியாத இடங்களில் கூட எவ்வாறு ஓர் அப்புதமானன வைரம் கண்டெடுக்கப்பட முடியும் என்பது பற்றியதாகும்.
வாலிப வயதில்

“ஆகா, இந்த அருமையான வாழைப்பழங்களைப் பார்,” என்றான் ஃபிரெட் மோர்ட்டன்ஸன்’னின் நண்பன், மூடியிருந்த கடைக்குள் பார்வையைச் செலுத்தியவாறு.
“ஆகா, எனக்கு சில பழங்கள் கிடைத்தால்,” என்றான் மற்றொரு நண்பன்.
“பழம் வேண்டுமா?” என்றான் ஃபிரெட். கடைக்குள் ஒரு புல்டாக் இன நாய் குறைத்தது; அது அவனை உள்ளே வா என்று சவாலிடுவது போன்றிருந்தது. ஃபிரெட் கண்ணாடியை உடைத்து வாழைப்பழங்களைக் கைப்பற்றினான்.
ஃபிரெட் ஐயோவா’வில் பிறந்து, மின்னஸோட்டா, மின்னியாப்போலிஸ் நகரில் பெரும் முரடனாக வளர்ந்தான். அவன் சண்டையிட்டான், திருடினான், தன் நண்பர்களைக் கவர்வதற்காக மதுவருந்தினான். 1904’இல், ஃபிரெட்’டுக்கு 17 வயதாகிய போது, அவனும் அவனது கும்பலும் ஓர் இரயில் பெட்டியில் கைவைத்தனர். ஃபிரெட்’டின் தம்பியான தொர்க், இரயில் பெட்டியிலிருந்து ஒரு பெரிய அஞ்சல் பையைப் பற்றிக்கொண்டான். போலீசார் அவர்களைத் துரத்த, அவர்கள் இரயிலை விட்டு ஓடியபோது, அந்த அஞ்சல் பையின் கனம் தாங்காமல் தன் தம்பி தினறுவதை ஃபிரெட் கண்டான். தன் தம்பி தப்பித்து ஓடுவதற்கு வசதியாக அந்தப் பையை ஃபிரெட் பிடுங்கிக்கொண்டான். துப்பாக்கி வேட்டுச் சத்தம் கிளம்பியது, ஃபிரெட் ஒரு 30 அடி உயர சுவரைத் தாண்டினான், தாண்டிய போது அவன் கால் எழும்பு முறிந்தது. அவனது அடுத்த நிறுத்தம் சிறைச்சாலையாகியது.

ஆவியின் சக்தி
ப்பிரெட்’டின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவனது வழங்குரைஞர் ஒரு பஹாய் ஆன அல்பர்ட் ஹோல் ஆவார். அல்பர்ட் பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லாவைப் பற்றியும் அவரது புத்திரராகிய அப்துல்-பஹாவைப் பற்றியும் ஃபிரெட்டிடம் கூறினார். ஃபிரெட்’டின் உள்ளத்தை ஏதோ ஒன்று கிளறியது. அவன் குழப்பம் அடைந்த போதும், விரைவில், அல்பர்ட் கூறிய வார்த்தைகள் அவனை காந்தம் இரும்பை ஈர்ப்பது போல் ஈர்த்தன.
ஃபிரெட் சிறையிலிருந்து தப்பி நான்கு வருடம் நாடோடியாகத் திரிந்தான். பஹாய் சமயத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆவலில், தான் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்பதையும் கருதாமல், அல்பர்ட் ஹோலைச் சந்திப்பதற்காக மின்னியாபோலிஸ் திரும்பிட முடிவு செய்தான்.
அந்த நிகழ்வை, “அது… ஈர்க்கப்பட விரும்புவோரை ஈர்க்கும் பரிசுத்த ஆவியின் சக்தி,” என ஃபிரெட் எழுதினான். பின்னர், பஹாய் போதனைகளால் வழிகாட்டப்பட்ட ஃபிரெட் தன்மைமாற்றம் அடைந்தான். ஆனால் அவனது சாகசங்கள் ஓயவில்லை.
1912’இல், மேய்ன் நகரில் இன்று கிரீன் ஏக்கர் என அழைக்கப்படும் பள்ளிக்கு அப்துல்-பஹா வந்திருப்பதாக ஃபிரெட் கேள்விப்பட்டான். அவரைச் சந்திக்க ஆவலுற்றான், ஆனால் கையில் இருந்த பணம் போதவில்லை. ஓஹாயோவிலிருந்து மேய்ன் வரை ஃபிரெட் ஒவ்வொரு இரயிலாக மாறிச் சென்றான். சில வேளைகளில் ‘வித்தௌட்’ ஆக இரயில் பெட்டிகளின் மேல்புறமும் சில நேரம் அவற்றுக்கு அடியிலும் பிராயணம் செய்தான். இரவு முழுவதும் புகையைக் கக்கிய, நிலக்கரியில் இயங்கிய இரயில் அவனை நியூ ஹேம்ப்ஷையரில் கொண்டு விட்டது. ஒரு படகுப் பிரயாணம், அதற்குப் பிறகு ஒரு சாலைவண்டி பயணத்திற்குப் பிறகு, அவன் கிரீன் ஏக்கர் வந்தடைந்தான். கசங்கிய உடை, நீண்ட ஆபத்தான பயணத்திற்குப் பிறகு அழுக்குப் படிந்த மேனியுடன் பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும் தோற்றம்.

மறக்க முடியாத சந்திப்பு
அடுத்த நாள், அப்துல்-பஹாவைக் காண வந்து காத்திருப்போருடன் ஒப்பிடுகையில் ஃபிரெட் இன்னமும் அருவருப்பான தோற்றத்துடனேயே காட்சியளித்தான். தான் கடைசியில்தான் கூப்பிடப்படுவான் என ஃபிரெட் உறுதியாக நம்பினான், ஆனால் திடீரென அவன் பெயர் அழைக்கப்பட்டது.
அப்துல்-பஹா புன்னகைத்தவாறு அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். “வரவேண்டும் வரவேண்டும்! நீ மிகவும் வரவேற்கப்படுகின்றாய்,,” என்ற அப்துல்-பஹா, மூன்று முறை, “நீ மகிழ்ச்சியாக இருக்கின்றாயா?” எனக் கேட்டார்.
பின்னர் அப்துல்-பஹா ஃபிரெட் எங்கிருந்து வருகிறான் எனவும் அல்பர்ட் ஹோல் பற்றியும் வினவினார். அதன் பிறகு எதைப் பற்றி அவர் கேட்கக்கூடாது என பிரெட் நினைத்தானோ அதே கேள்வியை அப்துல்-பஹா கேட்டார்: “உன் பிரயாணம் சௌகர்யமாக இருந்ததா?”
ப்பிரெட் தயங்கினான். தான் திருட்டு இரயில் ஏறி வந்தது பற்றி அவரிடம் கூற பயந்தான். ஆனால் அப்துல்-பஹா விடவில்லை, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அவரது பிராகசிக்கும் கண்களைப் பார்த்த ஃபிரெட், அவருக்குத் தெரிந்துவிட்டது—நான் அதைச் சொல்லியே ஆகவேண்டுமென நினைத்தான். மிகவும் தயக்கத்துடன் தனது பயணத்தின் விவரங்களை அவன் அப்துல்-பஹாவிடம் கூறினான்.
அதன் பிறகு அவன் அப்துல்-பஹாவின் கண்களைப் பார்த்த போது, அவற்றிலிருந்து வழிந்துவரும் அன்பினால் அவனது உள்ளம் களிப்பால் நிறைந்தது. அப்துல்-பஹா அவனுக்கு பழங்கள் கொடுத்து அவனுடைய கண்ணங்களையும், அவனுடைய அழுக்கான தொப்பியையும் கூட முத்தமிட்டார்!
அப்துல்-பஹா கிரீன் ஏக்கரிலிருந்து விடைபெற்ற போது, அவர் ஃபிரெட்டையும் தம்மோடு மாஸாச்சுஸெட் வரை வந்து தம்மோடு ஒரு வாரம் தங்கியிருக்குமாறு அழைப்பு விடுத்தார். ஃபிரெட் சௌகர்யமாக இல்லம் திரும்புவதற்கு பணமும் கொடுத்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு, அப்துல்-பஹா “அந்த எனது… கிரீன் ஏக்கருக்கான… பயணம் மறக்கவே முடியாத ஒன்றாகும். அதன் விவரம் நித்தியமாக பதிவு செய்யப்படும்…” என எழுதினார்.
அப்துல்-பஹாவின் சந்திப்புக்குப் பிறகு, ஃபிரெட் தமது வாழ்க்கையை பஹாய் போதனைகளுக்காக அர்ப்பணித்தார். அவர் 1946’இல் தமது 59’வது வயதில் மரணமுறும் வரை சமயத்திற்கு சேவை செய்து வாந்தார்.