
__________________________________________________________________________________________________________________
22 ஜனவரி 2021
_________________________________________________________________________________________________________________
போர்ட் மோரெஸ்பி, பாப்புவா நியூ கினி, 22 ஜனவரி 2020, (BWNS) – போர்ட் மோரெஸ்பியில் உள்ள ஓர் இயற்கை பூங்காவின் அமைதியான சூழலில் ஒரு கூடாரத்தின் கீழ், பாப்புவா நியூ கினியின் (PNG) பல்வேறு மத சமூகங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் திங்களன்று அவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த ஒன்றை சாதித்தனர்: அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒன்றைச் சுற்றி ஒற்றுமையுடன் ஒன்றுகூடிவது.
அனைத்துசமய நல்லிணக்கக் கூட்டம் உலக மதங்கள் தினத்தைக் குறித்தது மற்றும் நாட்டின் பல நம்பிக்கை சமூகங்களிடையே ஒரு கூட்டு முயற்சியாகவும் இருந்தது. இந்த நிகழ்விற்கான யோசனையை கடந்த மாதம் PNG பஹாய்கள் பரிந்துரைத்திருந்தனர், இது நாட்டின் மதத் தலைவர்களிடையே ஒரு நாட்டத்தை ஏற்படுத்தியது.
நாட்டின் வெளிவிவகார அலுவலகத்தின் இயக்குனர் கெஸினா வால்மர் கூறுகிறார், “உலக மத தினத்திற்கான நோக்கம், அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயத்தில் புனித வாக்குகளைப் பகிர்வதில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவதே ஆகும்–ஒருவர் தன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறாரோ அவ்வாறே மற்றவர்களையும் நடத்துதல் எனும் பொன்னான வித–அவ்வாறு செய்வதன் மூலம், அன்பையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதே மதத்தின் நோக்கம் என்பதை முன்னிலைப்படுத்துதல். ஆரம்ப தடுமாற்றம் இருந்தபோதிலும், இந்த கவனம் பங்கேற்பு குறித்து அனைவருக்கும் மிகவும் வசதியான ஓர் உணர்வை ஊட்டியது. ”
நிகழ்ச்சிக்குத் தயாராகுதல் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குதல்
ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ஆயத்த கூட்டங்கள் தேவைப்பட்டன என்று திருமதி வால்மர் விளக்குகிறார்.
“முதல் சந்திப்பு வெறுமனே மக்களை ஒன்றிணைப்பதாக இருந்தது” என்று திருமதி வால்மர் கூறுகிறார். “இது அதை விட சிக்கலானது அல்ல. ஏனென்றால், நாம் ஒன்றாக இயங்கத் தெரியாவிடில், இது முதல் படியாக இருந்திடும்.”

பங்கேற்பாளர்களை திட்டத்தின் சில அம்சங்களுக்கு பங்களிப்பு செய்வதற்கும் ஒருவருக்கொருவர் சேவையாற்றுவதற்கும் அனுமதிப்பதன் மூலம் ஆயத்த கூட்டங்கள் நட்பின் பிணைப்பை எவ்வாறு வலுப்படுத்தின என்பதை திருமதி வால்மர் தொடர்ந்து விளக்குகிறார். “இது ஒரு கூட்டு முயற்சி”, என்று அவர் கூறுகிறார். “மகிழ்ச்சி நிறைந்திருந்தது. நாங்கள் அனைவரும் தோளுடன் தோள் சேர்ந்து பணியாற்றினோம்.”
நட்பு வலுவடைந்து வருவதால், அன்புநிறைந்த மற்றும் வரவேற்கும் சூழல் ஒவ்வொரு வாரமும் புதிய பங்கேற்பாளர்களை ஈர்த்தது. “ஒரு புதிய நபர் சேர்ந்தபோது, அவர்கள் சம வேகத்திற்கு கொண்டு வரப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் சற்று நிதானிப்போம். அனைவரும் ஒன்றுகூடும் போது அவர்கள் புதிய பிரதிநிதிகளையும் தழுவினர்.”
அதன் முதல் வகையான கூட்டம்
பாப்புவா நியூ கினியின் இஸ்லாமிய சங்கத்தின் தலைவரான இமாம் புசேரி இஸ்மாயில் அடெகுன்லே கூறுகிறார், “எல்லோரும் அன்று வெளிப்படுத்தியபடி, இது ஒரு தனித்துவமான சந்தர்ப்பம் மற்றும் நம் நாட்டில் முதல் நிகழ்வாகவும் இருந்தது.”
உலக மத தினக் கூட்டத்தில் சூழ்ந்திருந்த உணர்வு குறித்து பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ஸா அகாபே-கிரான்ஃபர் கூறுகிறார், “இது ‘ஒற்றுமை எனும் கூடாரத்தின்’ கீழ் கூடிய ஓர் ஒன்றுகூடலாக இருந்தது, ஏனெனில் எல்லோரும் ஒருவர் மற்றவரை அன்பு, மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையின் சூழலில் செவிமடுத்துக் கொண்டிருந்தனர்.”
பல வார ஒத்துழைப்புக்குப் பிறகு, திங்கட்கிழமை நிகழ்வு மத சமூகங்கள் ஒன்றாகச் சாதித்தவற்றின் வெளிப்பாடாக இருந்தது. போர்ட் மோரெஸ்பியில் அமைதியான சூழலில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த புனிதவாசகங்கள் பல மொழிகளில் ஓதப்பட்டன. யூத சமூகத்தின் ஒரு பிரதிநிதி கலந்து கொள்ள முடியாதபோது, எபிரேய மொழியில் சரளமாக இருந்த மற்றொரு மயத்தின் உறுப்பினர் யூத சமயத்தின் திருவாக்குகள் கேட்கப்படுவதை உறுதிசெய்திட முன்வந்தார்.

உலக மத தின நிகழ்வை ஏற்பாடு செய்வதில் பஹாய் வெளிவிவகார அலுவலகத்துடன் ஒத்துழைத்த போர்ட் மோரெஸ்பியில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பேராயர் கார்டினல் சர் ஜான் ரிபாட், இந்த நிகழ்வைப் பற்றி தனது அவதானிப்புகளை அளிக்கிறார்: “எல்லோரும் [அன்பெனும்] ஒரே செய்தியைப் பகிர்ந்துகொண்டிருந்தோம, ஆனால் அதை வேறு ஒரு கண்ணோட்டத்தில் செய்தோம். இதன் பொருள் என்ன? என்னைப் பொறுத்தவரை, நான் புரிந்து கொள்ளும் விதம் என்னவென்றால், அன்பிருக்கும் போது ஒருவர் இன்னொருவருக்கு எதிராக எதையும் மனதில் வைத்திருப்பதில்லை. இது உண்மையில் ஒருவர் தன்னை மற்றவரின் நன்மைக்காக முழுமையாக அர்ப்பணிப்பதாகும்.
“விஷயங்கள் இறுதியில் எப்படி உருவாகின என்பது குறித்து நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்.” இந்த நிகழ்வைப் பற்றி ஒரு தேசிய செய்தித்தாள் மற்றும் பல இணைய வெளியீடுகள் உரைத்தன அத்துடன் வானொலியிலும் அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஒரு புதிய பாதையில் ஒன்றாக நடப்பது
கூட்டத்தில் பங்கேற்பாளர்கள், மேலும் ஒத்துழைப்புக்கான புதிய சாத்தியங்களைக் கண்டு, எதிர்கால முன்னேற்றத்தைப் பிரதிபலிக்க அடுத்த வாரம் சந்திக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். திருமதி வால்மர் கூறுகிறார், “சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சமூகத்தில் மதத்தின் பங்கு குறித்த ஆழமான உரையாடலின் முன்னோடியாக இதைக் காண்கின்றனர்.
“இதற்குக் காரணம், நமது சமுதாயத்தில் மதம் என்பது ஒவ்வொரு தனிநபரின், ஒவ்வொரு குடும்பத்தின், மற்றும் நிறுவனங்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனாலும், மக்கள் சில சமயங்களில் தங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது கடினம். ஒரு தேசமெனும் முறையில் நாம் ஒன்றாக இருப்பதைப் பற்றி பேசுகிறோம், ஆனால் நாம் எவ்வாறு ஒன்றாக ஒன்றாக வர முடியும்? உலக மத தினத்திற்கு வழிவகுக்கும் செயல்முறை மற்றும் நிகழ்வே இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த உதாரணத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது.”

இந்த கூட்டங்களில் தங்களுக்கு இடையேயான தொடர்பு முறை அவர்களின் சமூகங்களின் உறுப்பினர்களையும் அதே வழியில் செயல்பட ஊக்குவிக்கும் என்று சமயத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று இமாம் இஸ்மாயில் விளக்குகிறார். “[நிகழ்வு] வந்து சென்றுவிட்டது, இப்போது நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம். இப்போது எல்லாம் நன்றாக நடக்கின்றது. ”
PNG’யின் பஹாய் தேசிய ஆன்மீக சபை நாட்டின் சமயம் சார்ந்த சமூகங்களுக்கு முன் ஒரு புதிய பாதை வெளிப்படுவதைக் காண்கிறது. தேசிய சபையின் செயலாளர் கன்பூசியஸ் ஐகோயெர் கூறுகிறார், “கடந்த மாதத்தில் மதத் தலைவர்களிடையே அதிக அளவில் ஒற்றுமை அடையப்பட்டதானது முழு மத சமூகங்களிடையேயும் அதிக அளவு ஒற்றுமையைக் குறிக்கிறது, மேலும் இது இப்போது அவ்வளவாக உணரமுடியாத ஒன்றாக இருந்தாலும், நம் நாட்டில் அதிக ஒற்றுமையைக் குறிக்கிறது.”
திருமதி அகபே-கிரான்ஃபர் கூறுகையில், இந்த செயல்முறையின் மூலம் ஒன்றாகப் பயணித்தவர்களிடையே உள்ள தொடர்பு ஆழமானது. “சில மாதங்களுக்கு முன்பு, பல மதத் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த செயல்முறைக்கு முன்னர் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை அல்லது இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் மெலனேசிய கலாச்சாரத்தில் பொதுவான ஒன்றைப் போல, ஒருமுறை ஒருவரையொருவர் தெரிந்தும் புரிந்தும் கொண்டதுடன், கரங்கள் அனைத்தும் அகல விரிந்திருக்கும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1482/