அப்துல் பஹாவின் நினைவாலயம்: தோட்ட விளிம்புகளுக்கான கற்காரை அடித்தலம் பூர்த்தியாகியுள்ளது
8 அக்டோபர் 2021
பஹாய் உலக நிலையம் — அப்துல் பஹா நினைவாலயத்தின் மத்திய தளத்தின் இருபக்கமும் உள்ள தோட்ட விளிம்புகளை ஆதரிக்கும் கற்காரை அடித்தலங்கள் பூர்த்தியாகிவிட்டன. தென் சதுக்கத்தை உள்ளடக்கும் சுவர்கள் படிவம் சார்ந்த வலுப்படுத்தல் அமைப்புப் பணியும் உருபெற்று வருகின்றது.
தற்போது நடப்பிலிருக்கும் பணி குறித்த ஒரு கண்ணோட்டத்தை கீழே வழங்கப்பட்டுள்ள படங்கள் வழங்குகின்றன.
‘அப்துல்-பஹா நினைவாலயத்திற்கான கட்டுமானப் பணிகளில் சமீபத்திய முன்னேற்றத்தை ஒரு வான்வழி பார்வை காட்டுகிறது. சன்னதிக்கான தளம் ரித்வான் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது, இது முன்புறத்தில் தெரியும்.
மத்திய சதுக்கப் பகுதியில், தோட்டங்களுக்கான மண் மற்றும் வடிகாலைத் தாங்கும் கற்காரை தொட்டிகள் பூர்த்தியாகிவிட்டன.
மத்திய சதுக்கத்தின் கற்காரை தரைக்கான படிவம் போடப்படுகின்றது.
இடதுபுறத்தில் உள்ள கட்டிடக் கலைஞரின் வடிவமைப்பு மைய அமைப்பு மற்றும் சுற்றியுள்ள சதுக்கத்தைக் காட்டுகிறது. சதுக்கத் தரையில் தற்போதைய முன்னேற்றம் வலதுபுறத்தில் காணப்படுகிறது, அங்கு இந்த பகுதியை இரண்டு பக்கங்களிலும் இணைக்கும் சுவர்களை உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சுவர்களுக்கு அவற்றின் மடிப்பு போன்ற வடிவத்தை வழங்குவதற்கு விசேஷ எஃகு வார்ப்பு பணிகள் செய்யப்படுகின்றன.
தென் சதுக்கத்தைச் சூழ்கின்ற சுவர்களுக்கான கட்டமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வார்ப்புகள் சேர்க்கப்படுகின்றன.
விளிம்புகளை இணைக்கும் ஒரு குட்டையான சுவர் கட்டப்படுகின்றது. இது தோட்டத்திற்கான வடிகாலை உருவாக்கி நினைவாலயத்தை சூழவிருக்கும் ஒரு பாதையின் உள்விளிம்மை ஆதரிக்கும்.
தளத்தின் வடக்கு மூலையில், சுற்றிவரும் பாதைக்கும் அப்பால், படித்தள கற்காரை (பூந்)தொட்டிகளை ஆதரிக்கும் கான்கிரீட் அடித்தலம் தயாரிக்கப்பட்டுள்ளது.