அப்துல்-பஹா: ஒன்றுமில்லா நிலை


ஜூலியட் தோம்ஸன் கூறியது:

அன்று மதிய உணவிற்கு அரசகுடும்பத்தினர் வந்திருந்தனர், பாரசீக நாட்டின் பாஹ்ரம் மிர்ஸா. இந்த அரசகுமாரனான பாஹ்ரமின் தந்தை ஸில்லுஸ்-சுல்தான் ஆவான். இந்த ஸில்லுஸ்- சுல்தான் நாஸிரிட்டின் ஷாவின் மூத்த மகனாகிய போதும் அவனது தாயார் அரச வர்க்கத்தைச் சாராததன் காரணமாக அவன் அரியனை ஏற முடியாமல் போயிற்று. இந்த நாஸிரிட்டின் ஷாவின் ஆனையின் பேரில்தான் பாப் கொல்லப்பட்டார், மற்றும் ஆயிரக்கணக்கான பாப்’யிக்கள் கொலை செய்யப்பட்டனர், அதே சமயம் இந்த ஸில்லுஸ் சுல்தானின் ஆணையினால் அரும்பெரும் பஹாய்களாகிய “உயிர்த்தியாகிகளின் அரசர்” மற்றும் “உயிர்த்தியாகிகளின் நேசர்” இருவரும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இப்பொழுது அந்த அரசகுடும்த்தினர் அனைவரும் நாடுகடந்து வாழ்கின்றனர். ஸில்லுஸ் சுல்தானும் அவனது மகனும் ஜெனிவாவில் நாடுகடந்து வாழ்கின்றனர், அதே நேரம் அப்துல் பஹா தோனொன்’னில் சுதந்திரமாகப் பயணம் செய்கின்றார் –அவ்வளவு அருகில்!

இறைசமயத் திருக்கரம் திரு. ஏ.க்யூ.பாய்ஸி 1969ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பகிர்ந்து கொண்ட ஒரு கதை

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், தமது தந்தையாரின் சமயத்தை பறைசாற்றுவதற்காக அப்துல் பஹா ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் பயணமானார். சமயத்தினுடைய கடும் கொடூரமான எதிரிகளில் ஒருவனான ஒரு பாரசீக இளவரசனும், அப்துல் பஹா ஐரோப்பாவுக்கு விஜயமளிப்பு செய்தபோது அங்கு இருந்தான்.

The Biography, Claims and Writings of Bahā'-Allāh (1817-1892 CE). |  Hurqalya Publications: Center for Shaykhī and Bābī-Bahā'ī Studies
உயிர்த்தியாகிகளுள் அரசரும், நேசரும்

ஒரு நாள் அந்த இளவரசன் அப்துல் பஹாவிடம் சென்று, “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன். என்னைப் பாருங்கள். எனது தொப்பி வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது ஆடையிலும் பல்வேறு ஆபரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் கூட, நான் தெருவில் நடந்து செல்லும்போது, யாரும் என்னைக் கண்டு கொள்வதுமில்லை அல்லது என் மீது கவனம் செலுத்துவதுமில்லை. ஆனால், நீங்கள் தெருக்களில் செல்லும்போது, உலகிலேயே மிக எளிமையான ஆடையை அணிந்து செல்கின்றீர்கள். எல்லாருமே உங்களுக்கு வழிவிட்டு நடந்து போகின்றார்கள். அவர்கள் உங்களிடம் வருகின்றனர், உங்களுடைய வீட்டுக் கதவருகில் எப்போதுமே நூற்றுக் கணக்கில் மக்கள் திரளுகின்றனர். அது ஏன் என்று எனக்குத் தெரிய வேண்டும்.” என்றான்.

அந்த இளவரைசனை அப்துல் பஹாவுக்கு நன்றாகத் தெரியும். அவன் காரணமாகவே பல பஹாய்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, அவர் பின்வருமாறு அந்த இளவரசனிடம் கூறினார்: “மாட்சிமை பொருந்திய இளவரசரே, சற்று இங்கு அமருங்கள். நான் உங்களுக்கு கதை ஒன்று சொல்லுகின்றேன்.” அப்போது அந்த இளவரசனும் அங்கே அமர்ந்தான். அவன்தான் ஸில்லு சுல்தான், நஸிரிடின் ஷாவின் புதல்வன். அவனுக்கு அப்துல் பஹாவும் கதையைச் சொன்னார்: “ஒரு முறை ஒரு விவேகி, ஒரு பட்டணத்தின் தெரு வழியே போய்க் கொண்டிருந்தபோது, கவலையும், சோகமும் கொண்ட முகத்துடன் கூடிய ஒரு செல்வந்தனை தெருவின் சதுக்கத்தில் கண்டார். அந்த விவேகி அச்செல்வந்தரை நோக்கி, “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அதற்கு அச்செல்வந்தன், “இப்பட்டணத்தில் மிகப் பெரிய வணிகராக விளங்குவதற்கு போதுமான பணம் என்னிடம் உள்ளது. ஆனால், அதில் எனக்கு மனநிறைவில்லை. அதை விட பெரிய பதவி எனக்கு வேண்டும்,” என்று கூறினான். “அப்பதவி என்னவாக இருக்கும்?” என அந்த விவேகி கேட்டவுடன், “இப்பட்டணத்தின் ஆளுநராக ஆக நான் ஆசைப்படுகின்றேன்,” என்று அவன் பதிலளித்தான். உடனே அந்த விவேகி, “நான் உன்னை இப்பட்டணத்திற்கு மட்டுமன்றி, இந்த பிரதேசத்திற்கே ஆளுநராக ஆக்கி விட்டால், அப்போது உனக்கு மனநிறைவு ஏற்படுமா? உன்னுடைய இதயத்தை நன்றாகத் தேடிப்பார்த்து எனக்கு உண்மையான பதிலைச் சொல்” என்று அவனைக் கேட்டுக் கொண்டார். சற்று நேரம் யோசித்து விட்டு அந்த செல்வந்தன், “உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு அதில் மனநிறைவு இல்லை. நான் அமைச்சராக விரும்புகின்றேன்,” என்றான். அதற்கு அந்த விவேகி, “சரி, நான் உன்னை அமைச்சராக்குகின்றேன். உண்மையைச் சொல். நீ மனநிறைவடைவாயா?” என்று கேட்டார். அதனையடுத்து அந்த செல்வந்தன், அந்நாட்டின் மன்னராக விரும்புவதாகக் கூறியபோது, சரி, அதுபோலவே உன்னை அரசனாக்குகின்றேன். அப்போது உனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுமா? அதற்கும் அப்பால் உனக்கு ஏதும் வேண்டுமா?” என்று கேட்டார். அப்போது அச்செல்வந்தன், “அதன் பிறகு கேட்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை,” என்றான்.

Zellesoltan.jpg
ஸில்லுஸ் சுல்தான்

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த இளவரசனை நோக்கி, அப்துல் பஹா, “மாட்சிமைமிக்க இளவரசரே, அந்த ‘ஒன்றுமில்லை’ எனும் நிலைதான் நான்,” என்றார்.

“ஒரு தெய்வீகச் சுரங்கத்தினால் மட்டுமே தெய்வீக அறிவின் மாணிக்கக் கற்களை தரவியலும்; இறைநிலை கலந்த மலரின் நறுமணத்தை உன்னத நந்தவனத்தில் மட்டுமே முகர்ந்திடவியலும். தொன்மை விவேகத்தின் அல்லி மலர்கள் வேறெங்குமல்லாது மாசற்ற இதயம் என்னும் நகரில் மட்டுமே பூக்கவியலும்.” (பஹாவுல்லா)