“பாலின சமத்துவ ஆவி குறித்த பார்வைகள்”: BIC ஒரு புதிய திரைப்படத்தை வெளியிடுகிறது8 அக்டோபர் 2021


BIC நியூயார்க், 3 பிப்ரவரி 2021, (BWNS) – பஹாய் சர்வதேச சமூகம் (BIC) தயாரித்த பாலின சமத்துவம் குறித்த முழு நீள திரைப்படம் இன்று ஐ.நா. அதிகாரிகள், உறுப்பு நாடுகளின் தூதர்கள், அரசாங்க அமைப்புகள் அல்லாது மற்றும் பிற சிவில் சமூக நடவடிக்கையாளர்கள் கூட்டத்திற்கு முன் இணைய திரையிடலாக வெளியிடப்பட்டது..

பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டுக்கான தளத்தின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவம் குறித்த BIC திரைப்படமான ‘பாலின சமத்துவ ஆவி குறித்த பார்வைகள்’ இன்று திரையிடப்பட்டது.

“உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி, படம் அடித்தட்டு மட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தின் முன்னேற்றங்கள் மற்றும் ஐநா’வில் மடிப்பவிழ்ந்து வந்துள்ள உரையாடல்களுடனான அவர்களின் தொடர்பு ஆகியவற்றை ஆராய்கிறது” என்கிறார் BIC’யின் பிரதிநிதி சபிரா ரமேஷ்ஃபர்.

BIC திரைப்படம் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டுக்கான தளத்தின் 25’வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது 1995’இல் நான்காவது உலகப் பெண்கள் மாநாட்டின் விளைவாக உருவானது மற்றும் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்ட பாலின சமத்துவத்திற்கான குறிக்கோள்களை நோக்கிய மேம்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவத்தின் பஹாய் கொள்கை படத்தின் மைய கருப்பொருளாகும். “சாராம்சத்தில் மனிதர்களை மனிதனாக்கும் ஆன்மா ஆண்பாலோ பெண்பாலோ அல்ல” என்று திருமதி ரமேஷ்ஃபர் கூறுகிறார். “அர்த்தமும் நோக்கமும் தேடுதல், சமூக உருவாக்கம், மற்றும் அன்புசெலுத்தல், விடாமுயற்சிக்கான திறனாற்றல் ஆகியவை பாலினத்தை சார்ந்தவை அல்ல. இது மனித சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒழுங்கமைப்பதற்கான ஆழமான தாக்கங்களைக் கொண்ட ஒரு கொள்கையாகும். ”

இந்தப் படம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் BIC’இன் முதன்மை பிரதிநிதி பானி டுகால் கூறுகிறார், “1995’இல் பெய்ஜிங் பிரகடனத்திலிருந்து, பாலின சமத்துவத்தைப் பேணும் சூழ்நிலைகளைப் பற்றி அதிகம் அறியப்பட்டது.

“அடுத்த 25 ஆண்டுகளில் என்ன பின்னடைவுகள் மற்றும் தடைகள் தோன்றினாலும், பெண்களும் ஆண்களும் சமம் என்ற உண்மைக்கு மனிதகுலத்தின் நனவில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஒருபோதும் இழக்கப்படாது.” பாலின சமத்துவ ஆவி குறித்த பார்வைகள் படத்தில்  சிறப்பிக்கப்பட்ட கருப்பொருள்கள் பற்றிய சிந்தனையார்ந்த கலந்துரையாடலைத் தூண்டுவதற்கான ஓர் ஆதாரமாக முழு திரைப்படம் மற்றும் நேர்காணல்களின் கூடுதல் கிளிப்புகள் இடம்பெறும் பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பக்கத்தை BIC வழங்கியுள்ளது. படத்தின் வசன வரிகள் விரைவில் அரபு, பிரஞ்சு, மாண்டரின், பாரசீக, ரஷ்ய மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கிடைக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1485/