“பங்கேற்பே திறவுகோலாகும்”: உணவுப் பாதுகாப்பை பஹாய் இருக்கை கையாளுகின்றது8 அக்டோபர் 2021


இந்தூர், இந்தியா, 10 பிப்ரவரி 2021, (BWNS) – இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டுக்கான பஹாய் இருக்கை சமீபத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த கருத்தரங்கை நடத்தியது, உலகளவிலும் இந்தியாவில் தொற்றுநோயின் போதும் இது பல்வேறு சமூக சொல்லாடல்களில் முன்னணி வகித்துள்ளது

ஆராய்ச்சியாளர்களும் நடைமுறைப்படுத்துனர்களும் உணவின் இருப்பு மற்றும் அணுகல் குறித்த பலக்கிய மற்றும் பன்பரிமாண சவால்கள் குறித்த அகப்பார்வைகளை ஆராய ஒன்றுகூடுகின்றனர்.

“இந்த கருத்தரங்கு கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது ‘நாங்கள்’ மற்றும் ‘அவர்கள்’ என்ற பாகுபாடுகளை வலுப்படுத்தாத சூழலில், பங்கேற்பாளர்கள் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் சில அடிப்படை காரணங்களை ஆராய முடியும்,” என்றார் உதவி பேராசிரியரும் பஹாய் இருக்கையின் தலைவருமான அராஷ் ஃபாஸ்லி.

நகர்ப்புற இடம்பெயர்வு, கல்வி மற்றும் பாலின சமத்துவம் தொடர்பாக தொற்றுநோயினால் பெரிதாக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்த கூட்ட வரிசைகளில் இது மிகச் சமீபத்தியது.

பங்கேற்பாளர்கள் விவாதித்த தலைப்புகளில் வேளாண் கொள்கைகள் மற்றும் சந்தை சக்திகளின் வேளாண் பல்லுயிர் பாதிப்பு ஆகியவை அடங்கும். ஒருபயிர் ஊக்குவிப்புக் கொள்கைகளால் ஏற்படும் ஒரு பெரிய சவால் என்னவென்றால், விவசாயிகள் ஊட்டச்சத்துக்களின் வளமான மூலத்தை வழங்கும் மற்றும் ஒரு மண்டலத்தின் உணவின் ஒரு பகுதியாக இருக்கும் உண்ணக்கூடிய தாவரங்களுக்குப் பதிலாக பணம் ஈட்டும் பயிர்களில் கவனம் செலுத்துகிறார்கள், இதன் விளைவாக, உள்நாட்டில் வளர்க்கப்படும் உணவுகள் விலை உயர்ந்தவையாகவும், மக்கள் குறைவாக அணுகக்கூடியவையாகவும் மாறிவிட்டன.

விவசாயக் கொள்கைகளுக்கு முற்றிலும் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் வரம்புகள் குறித்து பேசிய பொது சுகாதார ஆராய்ச்சி வலையமைப்பின் வந்தனா பிரசாத்: “நாம்… ஒவ்வொரு கிராமமும் என்ன உண்ணப் போகிறது? பங்கேற்றல் பணி என்பது அனைத்து நிரல்களுக்கும் கொள்கைகளுக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாகும், அதாவது மைய மட்டத்தில் விஷயங்களை கல்லில் பதிக்கக்கூடாது. … பன்முகமாக்கம் முக்கியம். ”

டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சமூகவியல் பேராசிரியர் ரிச்சா குமார், உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பு அறிவு உருவாக்கம் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். “நீங்கள் பிகானேரில் என் உற்பத்தி செய்து நுகர்வது, வங்காளத்தில் உற்பத்தி செய்து நுகரும் பொருட்களிலிருந்து மிகவும் வேறுபட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக ஆராய்ச்சி செய்ய நீங்கள் உள்ளூர் மட்டத்தில் சக்தியூட்டல் பெறவேண்டும், திறனாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்… ”

பொருளாதார காரணிகள் மற்றும் முடிவெடுப்பு பரவலாக்கப்படுவதின் தேவைக்கு அப்பால், பாலின ஏற்றத்தாழ்வுகள், பசி, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான காரணங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளைப் பங்கேற்பாளர்கள் ஆராய்ந்தனர். பஹாய் இருக்கையினால் தயாரிக்கப்பட்டு, கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “பெண்கள் கல்வி புறக்கணிப்பு, இனப்பெருக்க தேர்வு இல்லாமை மற்றும் குழந்தை பருவத்திலிருந்தே பற்றாக்குறையான ஊட்டச்சத்து போன்ற வடிவங்களில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்கின்றனர், இது ஊட்டச்சத்து குறைபாடு சுழற்சியின் தலைமுறைகளுக்கு இடையிலான சுழற்சியை நீட்டிக்கிறது. … ஊட்டம் பெறாத பெண்கள், பொதுவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களாக ஆகிறார்கள்.”

நாந்தி அறக்கட்டளையின் ரோஹினி முகர்ஜி கூறுகையில், “ஒரு தாய் பள்ளியில் அதிக ஆண்டுகள் கல்வி கற்கும்போது, ​​அவளுடைய குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாடு குறைவாக இருப்பதைக் காட்டும் பல ஆய்வுகள் உள்ளன.

எவ்வாறாயினும், கல்வியை அணுகுவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வது, ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பிரச்சினையைத் தானாகவே தீர்க்காது என பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர். டெல்லியின் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தீபா சின்ஹா ​​கூறுவது: “ஊட்டச்சத்து குறைபாடு பன்பரிமாணமானது, மேலும் அதில் பல காரணிகள் உள்ளன-பாலினத்தின் பங்கு, பெண்களுக்குச் சக்தியூட்டல், கல்வி மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை.”

“இந்தக் கருத்தரங்குகளில், அடிப்படைகளை ஆராய முயற்சிக்கிறோம், அவை அவற்றின் அகத்தில் தார்மீக பிரச்சினைகளாகும்,” என்று டாக்டர் ஃபாஸ்லி கூறுகிறார். “இத்தகைய விவாதங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது மிகவும் கருத்தியலானவையாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் ஆன்மீகமே சமூகத்தின் அடிப்படை தன்மையாகும், இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதாகும், மேலும், உள்ளூர் சமூகங்களுக்கும் தனிநபர்களுக்கும் தங்களின் விவகாரங்களைக் கையாளும் திறனாற்றலை அளிக்கிறது.”

மூலாதராம்: https://news.bahai.org/story/1486/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: