
8 அக்டோபர் 2021
BIC நியூ யார்க், 12 பிப்ரவரி 2021, (BWNS) – நாகரிகத்தின் மேம்பாட்டில் இலக்கமுறை (digital) தொழில்நுட்பங்களின் பங்கு குறித்து 17 பிப்ரவரி நிறைவடையும் ஐ.நா. சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 59’வது அமர்வுக்கு பஹாய் சர்வதேச சமூகம் (BIC) ஒரு புதிய அறிக்கையை வழங்கியுள்ளது.
“மானிடம் முன்னோடியற்ற மாற்றத்தின் ஒரு காலகட்டத்தில் உள்ளது” என BIC அறிக்கை கூறுகிறது. இது, நமது கொள்கைகளின் பிரதிபலிப்புகள்: இலக்கமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் ஒரு நியாயமான மாற்றம் என தலைப்பிடப்பட்டுள்ளது. கூட்டு மதிப்புகள் மற்றும் அடிப்படை அனுமானங்களை மறுவரையறை செய்வதற்குக் குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்திற்கான சாத்தியங்கள் திறக்கின்றன. இது குறிப்பாக இலக்கமுறை தொழில்நுட்பங்களின் துறையில் தெளிவாகத் தெரிகிறது. ”
சமீபத்திய ஆண்டுகளில் தெளிவாகியுள்ளது போன்று, இலக்கமுறை தொழில்நுட்பங்கள் மறைமுக நிலையில் நடுநிலை வகிக்கவில்லை என்ற வளர்ந்து வரும் ஒருமித்த கருத்தை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. “தொழில்நுட்ப மேம்பாடு,” நடைமுறையில் உள்ள வளர்ச்சி முன்னுதாரணத்தைப் போலவே, லௌகீக அடித்தளங்களால் ஆழமாகப் பாதிக்கப்படுகிறது.

இந்த அறிக்கை புதன்கிழமை, ஆணைய நிகழ்வின் போது ஓர் இணைய நிகழ்ச்சியில் கலந்துரையாடலின் அகத்தில் இருந்தது, இது BIC’யால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான தன்னார்வ தொண்டு குழுவுடன் இணைவாக நடத்தப்பட்டது.
“செயற்கை நுண்மதி: மெய்நிகர் (virtual) உலகின் நெறிமுறை பரிமாணங்கள்” என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி 100’க்கும் மேற்பட்ட தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிவில் சமூக நடவடிக்கையாளர்களை ஈர்த்தது, அவர்கள் பல்வேறு உள்ளூர் சமூகங்களின் தேவைகளை செயற்கை நுண்மதி (AI) எவ்வாறு நிவர்த்தி செய்யலாம், பொதுவான நன்மைகளில் கவனம் செலுத்துவதற்குப் புதுமை மற்றும் ஒழுங்குமுறை எவ்வாறு கைகோர்த்து செயல்பட முடியும் போன்ற பல நெறிமுறை கேள்விகளை ஆராய்ந்தனர்:
நிகழ்வின் BIC பிரதிநிதியும் நடுவருமான சோரயா பாகெரி கூறுகையில், “செயற்கை நுண்மதி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ள மனித ஆவிக்கு வழிவகுக்க பெரும் சாத்திய ஆற்றலைக் கொண்டுள்ளன.”
தொழில்நுட்பத்தின் தார்மீக தாக்கங்களைப் பற்றி பேசுகையில், திருமதி பாகெரி தொடர்ந்தார்: “இன்று நாம் எதிர்கொள்ளும் ஒரு சவால் என்னவென்றால், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வேகமானது பிரதிபலிப்புத் திறனை விட துரிதமாக உள்ளது.” செயற்கை நுண்மதி மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பது போன்ற மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த முக்கியமான கேள்விகளில் மனித குடும்பம் அதிகமாக பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.

“செயற்கை நுண்மதி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ள மனித ஆவிக்கு வழிவகுக்க பெரும் சாத்திய ஆற்றலைக் கொண்டுள்ளன.” சொராயா பாகெரி, பஹாய் அனைத்துலக சமூக பிரதிநிதி
மற்றோர் உரையாளரான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்துறை அமைச்சகத்துடனான சர்வதேச கூட்டு இயக்குநரான ஹமாத் கதீர் இந்த உணர்வை எதிரொலித்தார், “எந்தவொரு மென்பொருளையும் வடிவமைப்பதில் உள்ளடங்கல் அவசியம். …உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது சமூகத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே சேவை செய்ய AI வடிவமைக்கப்பட்டுள்ளது எனும் இடர்பாடு ஓர் உண்மையான சாத்தியமாகும்… இது நமது அனைத்து இலக்குகளின் மையத்திலும் மனித மேம்பாட்டை வைக்கும் அளவுகோல்களுக்கு எதிராக தெளிவாக மதிப்பிடப்பட வேண்டும். ”

ஐரோப்பிய மக்கள் கட்சிக்கான இலக்கமுறை கொள்கையின் மூத்த ஆலோசகரும் பஹாய் சமூக உறப்பினருமான எலைன் சிவோட், இந்தப் பகுதியில் பொதுவான கொள்கைகளின் தேவை குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்: “[கொள்கைகள்] நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கிறோம், நாங்கள் கூட்டாக கடைப்பிடிக்கிறோம். ஒரு வகையான தார்மீக திசைகாட்டி.”

BIC அறிக்கையிலிருந்து வரும் கருத்தாக்கங்களைப் பயன்படுத்தி, டென்வர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பஹாய் சமூகத்தின் உறுப்பினருமான டக்ளஸ் ஆலன், ஒரு நியாயமான இலக்கமுறை எதிர்காலம் உற்பத்தித்திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் நன்மைகளை எவ்வாறு பரவலாகப் பகிர அனுமதிக்கும் என்பதைப் பற்றி பேசினார். இது வறுமை மற்றும் செல்வத்தின் உச்சநிலையை நீக்குவதற்கும் “பூஜ்ஜியக் கூட்டு உலகத்தின் உலனறிவு” என்பதற்கும் பெரிதும் பங்களித்தது.
பக்க நிகழ்வின் பதிவை இங்கே காணலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1487/