
8 அக்டோபர் 2021
சிட்னி, 26 பிப்ரவரி 2021, (BWNS) – இரான் நாட்டு பஹாய்களின் பரவலான மற்றும் திட்டமிட்ட துன்புறுத்தல் குறித்து பெருகிவரும் கண்டனங்களை இரானிய அதிகாரிகள் எதிர்நோக்கும் வேளை, இரான் நாட்டில் பஹாய் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அநியாயமாகப் பறிமுதல் செய்வது குறித்து விவசாயிகளுடன் விவசாய விஞ்ஞானிகளும் ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்களும் உலகளாவிய கூக்குரலில் சேர்ந்து கொண்டுள்ளனர்.

இரானின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைஸி மற்றும் வேளாண் அமைச்சர் அப்பாஸ் கேஷவார்ஸ் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கனடா, எத்தியோப்பியா, மாலி மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து விவசாயத் துறையில் உள்ளோர் “உலகெங்கிலும் உள்ள சிறுதொழில் விவசாயிகளின் அவலநிலை குறித்து அக்கறை கொண்டுள்ளதாலும், அவர்கள் பெரும்பாலும் தன்மூப்பான அதிகாரத்தினால் அநீதியை எதிர்கொள்வதாலும் தாங்கள் அது குறித்து குரலெழுப்புவதாகக் கூறுகின்றன.

“இரானில் பஹாய்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிகங்கள் மீதான சோதனைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த சமீபத்திய நில அபகரிப்புகள் நடைபெறுகின்றன,” என அவர்கள் கூறி, இடம்பெயர்ந்தும், இரானிய அதிகாரிகளால் அவர்களின் மத நம்பிக்கைகள் காரணமாக பொருளாதார ரீதியாக வறிய நிலையில் உள்ள இவெல் பஹாய்களின் தொடர்ச்சியான துன்புறுத்தலின் சமீபத்திய நிலை குறித்து தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.
அந்தத் திறந்த கடிதம் இவ்வாறு கூறுகிறது: “பஹாய் குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இவெலில் விவசாயம் செய்து வருகின்றன மற்றும், இந்தக் குடும்பங்கள் உள்ளூர் சமூகத்தின் ஆக்கபூர்வமான உறுப்பினர்களாக, உதாரணமாக, அனைத்து மதங்களின் சிறார்களுக்காகவும், அனைத்து சமூக உறுப்பினர்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் நாங்கள் அறிவோம்.
“சமூகத்திற்கு அவர்கள் பங்களிப்புகள் செய்துவந்த போதிலும், அவர்கள் வெகுஜன வெளியேற்றம், இடம்பெயர்வு மற்றும் அவர்களின் வீடுகளை இடித்தல், தரைமட்டமாக்கல், பறிமுதல் செய்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் பல ஆண்டுகளான தொடர்ச்சியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கையொப்பமிட்டவர்கள் பஹாய்கள் மீதான் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர தலைமை நீதிபதி ரைஸி மற்றும் வேளாண் அமைச்சர் கேஷவர்ஸ் ஆகியோரைக் கோரியுள்ளனர், “இந்தத் துன்புறுத்தல் சம்பவத்தை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, சக விவசாயிகள் எனும் முறையில் நாங்கள் எழுதி, இவெல் விவசாயிகள் குறித்து இரானிய அதிகாரிகள் தங்கள் முடிவை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில், நாட்டின் விவசாய சமூகத்தின் உறுப்பினர்கள் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு மனதை நெகிழ வைக்கும் வீடியோ செய்தி இரானிய கிராமமான இவெலில் உள்ள பஹாய் குடும்பங்களின் அவல நிலையின்பால் கவனத்தை ஈர்க்கிறது.
வீடியோ செய்தியில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த விவசாயி கிளேர் பூத் கூறுகையில், “சிறந்த நேரங்களில் கூட விவசாயம் என்பது ஓரி கடினமான வேலை. “வெள்ளம், வறட்சி, தீ, காலநிலை மாற்றம் மற்றும் மிக சமீபத்தில், தொற்றுநோயின் தாக்கங்கள் ஆகியவற்றால் இது எளிதாக்கப்படவில்லை.”
வீடியோ செய்தி அதன் விவசாய சமூகங்களுக்கு உதவுவதில் ஓர் ஆதரிக்கும் அரசாங்கத்தின் பங்கை விவரித்து, இரான் நாட்டின் “அமைதியான பஹாய் சமூகம்” கடுமையாக நடத்தப்படுவதை குறித்துக் காட்டியது. “இந்த நாட்டில் உள்ள எங்கள் விவசாய சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஒற்றுமையுடன் இருகின்றோம்,” என விவசாயிகள் கூறுகிறார்கள். மேலும், இரானிய அரசாங்கத்தையும் நீதித்துறையையும் நில உரிமையாளர்களான இவெலில் உள்ள பஹாய் விவசாயிகளுக்கு அவர்களின் நிலத்தையும் சொத்துகளையும் திருப்பித் தருமாறு கோரியுள்ளனர்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1492/