கென்யா நாட்டின் கோவில் நிறைவடையும் தறுவாயில் கொங்கோ நாட்டில் வழிபாட்டு இல்லத்திற்கான அடித்தலம் போடப்படுகின்றது
8 அக்டோபர் 2021
கொங்கோ நாட்டின் தேசிய வழிபாட்டு இல்லத்திற்கான நிறைவடைந்துள்ள அடித்தலத்தின் விண்வெளி காட்சி
கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு – ஆப்பிரிக்காவில் இரண்டு பஹாய் வழிபாட்டு இல்லங்களை நிர்மாணிப்பதில் சமீபத்திய வாரங்களில் நிலையான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், வழிபாட்டு இல்லத்தின் அஸ்திவாரங்களுக்கான அகழ்வாராய்ச்சி முடிந்த எட்டு வாரங்களுக்குப் பிறகு, மத்திய கட்டுமானத்தின் தளத்தை உருவாக்கும் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அடுக்கு முடிக்கப்பட்டுள்ளது. தளத்தில் கூடுதல் கட்டிடங்களின் பணிகள் சீராக முன்னேறி வருகின்றன.
இதற்கிடையில், 3,000 கிலோமீட்டர் தொலைவில், கென்யாவின் மாத்துண்டா சோய்’இல் உள்ள உள்ளூர் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம் இறுதி கட்டத்தை அடைகிறது. கோயிலின் வெளிப்புறம் கிட்டத்தட்ட முழுமை அடைந்துள்ளது, மைதானத்தில் துணை கட்டமைப்புகளும் நிறைவடைந்துள்ளன. அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் கோயிலைச் சுற்றியுள்ள தோட்டங்களைத் உருவாக்குவதற்கு உதவுகிறார்கள், பிரார்த்தனைக்காக அவர்கள் தவறாமல் கூடிவருவதால் பணிகளை பயபக்தியுடன் மேற்கொள்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக இரு கோயில்களின் கட்டுமான முன்னேற்றம் கீழே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் ஆராயப்படுகிறது.
கின்ஷாஷா, கொங்கோ ஜனநாயக குடியரசு
வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தரை அடுக்கைக் கட்டுவதற்கான தயாரிப்பில் கோயிலின் முழு தளத்திலும் ஈரத் தடை வைக்கப்பட்டுள்ளது. அஸ்திவாரங்களை சுற்றி, மத்திய பகுதிக்கு வெளியே உடனடியாக நிலத்திற்கு மண் வேலைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வியாழக்கிழமை புதிதாக முடிக்கப்பட்ட தரை அடுக்கில் இந்த திட்டத்தின் முக்கிய மைல்கல்லைக் குறிப்பதற்கு ஒன்றுகூடினர்
கின்ஷாசாவில் உள்ள வழிபாட்டு மன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வருகையாளர்கள் மையம் கட்டப்பட்டு வருகிறது.
வருகையாளர் மையத்திற்கான அடித்தளங்கள் ஏற்கனவே தளத்தில் இருக்கும் மரங்களைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன, அவை முற்றத்தை அழகுபடுத்துகின்றன.
பார்வையாளர்களின் மையத்திற்கான தரை அடுக்குகள் இப்போது (சிமென்ட்) ஊற்றப்படுகின்றன.
தளத்தின் மற்ற இடங்களில், தற்போதுள்ள பல கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கே காண்பிக்கப்படும் ஒரு கட்டிடம், கட்டுமான அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில், இந்த கட்டிடங்கள் கல்வி வசதிகளாகவும், காங்கோ ஜனநாயக குடியரசின் தேசிய பஹாய் ஆன்மீக சபைக்கான அலுவலகங்களாகவும் பயன்படுத்தப்படும்.
மாத்துன்டா ஸோய், கென்யா
கென்யாவின் மாத்துண்டா ஸோய்’இல் உள்ள உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் வெளிப்புறம் நிறைவடையும் தருவாயில், கோயிலின் வடிவமைப்பின் நேர்த்தியான வடிவம் தெரிய ஆரம்பிக்கின்றது. இந்த வடிவமைப்பு அப்பிராந்தியத்திற்கு பாரம்பரியமான குடிசைகளால் தூண்டப்பட்டுள்ளது. வெளிப்படுத்தப்பட்ட கூரை விட்டங்கள் மாளிகையின் ஒன்பது பக்கங்களையும் முன்னிலைப்படுத்துகின்றன.
கோயில் கூரையின் ஒன்பது பக்கங்களிலும் ஸ்கைலைட்டுகள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் கூரை ஓடுகள் வைக்கப்பட்டு கென்ய கலாச்சாரத்திற்கு நன்கு தெரிந்த ஒரு வைர வடிவ மையக்கருத்தை உருவாக்குகின்றன.
கோயிலின் ஒன்பது கதவுகளின் உட்புறமும் வெளிப்புறமும் மரம் மற்றும் பேஸ்டரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதவையும் சுற்றியுள்ள பின்னல் வேலைகள் மாதுண்டா ஸோய் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் தயாரிக்கப்பட்டு, கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ம்வூலே மரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
வரவேற்பு மையத்தின் கட்டுமானம் மற்றும் தளத்தில் உள்ள பிற வசதிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன, மேலும் அவை விரைவில் கோயில் தளத்திற்கு வருபவர்களை வரவேற்க தயாராக இருக்கும்.
கோவில் தலத்திற்கான பிரதான வாயில் தயாராகின்றது
கோயிலைச் சுற்றியுள்ள தோட்டங்களுக்கான ஏற்பாடுகள் உட்பட, தளத்தின் பல்வேறு பணிகளுக்கு உதவுவதில் உள்ளூர்வாசிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
பல தலைமுறை அனுபவமுள்ள நிலத்தை பன்படுத்தும் விவசாய சமூகமான மாதுண்டா ஸோயில் வசிப்பவர்கள் கோயில் மைதானத்தை உற்சாகத்துடன் பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.