அப்துல்-பஹா: போவரி நிலையத்திற்கு அப்துல் பஹாவின் வருகை


போவரி நிலையத்திற்கு அப்துல் பஹாவின் வருகை

மறுநாள் காலை ஏப்ரல் 19ம் தேதியன்று வெள்ளிக்கிழமை, போவரி நிலையத்திலுள்ள வீடில்லா ஆடவர்களுக்கான இல்லத்தில் உரையாற்ற அப்துல் பஹா சம்மதம் தெரிவித்தார். ஜூலியட் தோம்ஸனின் முயற்சியால் இந்த வாய்ப்பு ஏற்பட்டது.

அந்த இல்லத்திற்கு வந்து அங்குள்ளவர்களிடம் சமயம் குறித்து பேசுமாறு அந்த இல்லத்தை நடத்தி வரும் டாக்டர் ஹல்லிமொண்ட் பல முறை ஜூலியட்டைக் கேட்டுக் கொண்டார். அப்பட்டணத்தின் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு ஜூலியட்டின் தாயார் அவருக்குத் தடை விதித்திருந்தார். எனினும், மூன்றாம் முறையாக அவ்வவழைப்பு தனக்கு விடுக்கப்பட்டபோது, தாம் ஒரு நண்பருடன் இரவு விருந்துக்குச் செல்வதாக தனது தாயாரிடம் சொல்லி விட்டு ஜூலியட் அங்கு செல்வதற்கு ஒப்புதல் தெரிவித்தார். அன்றிரவு கடுங்குளிரில் கனத்த பனிமழை பெய்தது. அந்த ஆசிரமத்தில் திரளாக மக்கள் ஒன்று கூயிருந்ததுடன், கடுங்டிளிரிலிருந்து பாதுகாப்பாகத் தஙகளைக் காத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் ஜான் குட். அவர் தனது வாழ்வு முழுவதிலும் தண்டணை காரணமாகச் சிறைக்குச் செல்வதும், பிறகு சிறைத்தண்டணை முடிந்து வெளியில் வருவதுமாக இருப்பவராவார். இறுதியாக அவர் சிங் சிங் எனும் சிறைச்சாலையில் தனது தண்டணை காலத்தை முடித்து விட்டு வெளியாகிய நிலையில் இக்கூட்டத்திற்கு வந்தார்.

1920-1925 Lanier Hotel, Bowery, NYC, NY Vintage/ Old Photo 8.5" x 11"  Reprint 650185372845 | eBay
ஒரு போவெரி இல்ல கட்டிடம்

அச்சிறைச்சாலையில் அவர் தனது கொடூரமான நடத்தைக் காரணமாக அவர் தனது கட்டை விரல்கள் கட்டப்பட்டு, தொங்க விடப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்து விட்டு, எதன் மீதும் நம்பிக்கையற்ற நிலையில் சிறையிலிருந்து வெறுப்புடன் விடுதலையாகி வந்தவர். அப்துல் பஹா பல வருடங்களாகச் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு மிக அன்புமிக்க நிலையில் விடுதலையாகி வந்துள்ளார் என ஜூலியட் தமதுரையில் குறிப்பிட்டார். அப்துல் பஹா அவர்கள் நியூயார்க் நகருக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்து, அந்த ஆசிரமத்திற்கு வந்துள்ள ஆடவர்கள் அங்கு அவரது பேச்சைக் கேட்க வருமாறு உரையின் இறுதியில் டாக்டர் ஹல்லிமொண்ட் அழைப்பு விடுத்தார். ஜான் டிட் மற்றும் அவரது அயர்லாந்து நண்பர் ஹன்னிகென் உட்பட முப்பது ஆடவர்கள் அங்கு செல்ல ஆர்வம் தெரிவித்தனர். அந்த அயர்லாந்து நண்பரான ஹன்னிகென் மதுபானம் அருந்தும் பிரச்சினைக் கொண்டவர். அந்த உரையை முடித்துக் கொண்டு இல்லந் திரும்பிய ஜூலியட் தாம் சென்று வந்த இடத்தைப் பற்றி தமது தாயாரிடம் தெரிவித்தார். அங்கு நடந்து சம்வங்களைக் கேட்டு அத்தாயார் சினமடைவதற்குப் பதிலாக மனம் நெகிழ்ந்து, அவரது முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கினார்.

அப்துல் பஹா நியூயார்க் நகரில் அந்த செவ்வாய்க் கிழமையன்று பேச வந்தபோது, ஜூலியட் மற்றும் எட்வர்ட் கென்னிக்கும் ஆளுக்கு ஆயிரம் பிராங்க் பண நோட்டை அப்துல் பஹா வழங்கி அவற்றைச் சில்லறையாக மாற்றி தாம் உரையாற்றவிருக்கும் இடத்திற்குக் கொண்டு வருமாறு பணித்தார். ஏழை மக்களைத் தாம் விரும்புவதாகவும், அப்பணத்தை அவர்களிடம் வழங்க தாம் ஆர்வம் கொண்ருப்பதாகவும் அவர் அவர்களிடம் கூறினார்.

10+ Bowery Mission ideas | bowery, mission, doll sets

இப்பொழுது, நியூயார்க் நகரின் இம்மாலை நேரத்தில் அப்துல் பஹா அந்த பொவெரி நிலையத்திற்கு, அந்த இல்லத்தை எழுப்பியவர்கள் கொண்ருந்த அதே ஆர்வத்துடன் நடந்து சென்றார். அதாவது, தேவைமிக்கவர்களுக்டிச் சேவையாற்றும் பொழுது இறைவனின் விருப்பத்தைப் கடைப்பிக்டிம் அதே உணர்வு அது.

மேரி வில்லியம்ஸ் எனும் பெயருடைய பெண்மணியின் கரங்களைப் பற்றியவாறு அப்துல் பஹா அந்த இல்லத்தை வந்தடைந்தார். அங்டி சமுதாயத்தின் மேல் டிமக்களான ஆண்களும், பெண்களுமாக தங்களுடைய கைகளில் பரிசுகளையும், மலர்க்கொத்துகளையும் வைத்துக் கொண்டு அவரை வரவேற்கக் காத்திருந்தனர். தெருவோரங்களிலும், தேவாலயப் பகட்டுகளிலும், அட்டைப் பெட்டிகளிலும் தங்களது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்த நூற்றுக் கணக்கிலான வறியவர்களும் அவ்வில்லத்தில் கூடியிருந்தனர். ஜூலியட் தோம்ஸனும், எட்வர்ட் கென்னியும் தாங்கள் கொண்டு வந்த சில்லறை காசுகள் கொண்ட பெரிய மூட்டைகளுடன் அவர்களைச் சந்தித்தனர்.

பிரதான மேடையில் அப்துல் பஹாவும், அவருக்குப் பின்னால் ஹொவார்ட் மேக்நட், மவுண்ட்போர்ட் மில்லஸ், திரு. க்ரண்டி மற்றும் பாரசீக நம்பிக்கையாளர்கள் உட்பட மற்ற பஹாய்களும் அமர்ந்துகொள்ள அழைக்கப்பட்டனர். அப்துல் பஹாவைக் கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு, வீடற்ற ஆடவர்களுக்காக ஜூலியட்டுடன் இணைந்து கல்வி வகுப்பு நடத்திய டாக்டர் ஹல்லிமொண்ட் அவர்கள் ஜூலியட்டைக் கேட்டுக் கொண்டார். அதற்குப் பிறகு, மறுவருகை புரிந்திருக்கும் கிறிஸ்துவின் புதல்வர் அக்கூட்டத்தினர்க்கு முன்பு நின்று அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராகத் தம்மைப் பின் வருமாறு அறிமுகப்படுத்திக் கொண்டார் :

“உங்களை நான் எனது உறவினர்களாகவும், தோழர்களாகவும் கருதுகின்றேன்…”

பிறகு அவர்களைத் தமதுரையில் அவர் தமது “தோழர்கள்” என அழைத்தார். 20ம் நூற்றாண்டு தொடக்கத்தின்போது புரட்சிப்டையினர் தங்களுடைய சக புரட்சிப் படையினரை “தோழர்கள்” என அழைப்பது வழக்கம். இறையன்பின் வாயிலாக மானிட இதயத்தைத் தன்மை மாற்றம் அடையச் செய்திடும் புரட்சிப் பணிக்கு அப்துல் பஹா மக்களை அழைத்தார். அன்புக்காக அவரால் விடுக்கப்பட்ட அவ்வழைப்பு இப்வுலகைக் காண வைப்பதில் வழக்கமான நடைமுறை, நவீனம், காரணம், மதிப்பீடு ஆகியவற்றிற்கும் அப்பால் வந்திடுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு. அன்பின் வாயிலாக, பலவீனப்பட்டுள்ள அனைத்தும் வலிமையாக மாறி விட்டன. ஏழையாக இருந்த அனைத்தும் செல்வச் செழிப்பாக மாறி விட்டன, உடைபட்ட அனைத்தும் முழுமையாகி விட்டன. கறைபட்ட அனைத்தும் அழகாகி விட்டன. மறக்கப்பட்ட அனைத்தும் நினைவுக்கு வந்து விட்டன. ஒன்றுமற்ற அனைத்தும் தெய்வீகமாக ஆகி விட்டன:

“ஏழையாக இருப்பதற்காக நீங்கள் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். ஏனெனில், “ஏழைகள் பாக்கியசாலிகள்” என இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கின்றார். “எனவே, இவ்வுலகில் நீங்கள் வறியவர்களாக இருந்தபோதிலும், இறைவடைய பொக்கிஷங்கள் நீங்கள் அடைந்திடும் நெருக்கத்திலேயே உள்ளன; பொருளுலகில் நீங்கள் ஏழையாக இருப்பினும், இறைவனுடைய இராஜ்யத்தில் நீங்கள் விலைமதிப்பற்றவர்கள். இயேசு நாதரே ஏழைதான். அவர் செல்வந்தர்களைச் சார்ந்தவர் அல்லர்.”

“எனவே, நீங்கள் இயேசுவின் சீடர்கள்; நீங்கள் அவரது தோழர்கள். ஏனெனில், வெளித்தோற்றத்தில் அவர் ஏழையாக இருந்தார், செல்வந்தராக அல்ல. இம்மண்ணுலகின் மகிழ்ச்சி கூட செல்வத்தைதைப் பொருத்தது அல்ல.”

“நமது நம்பிக்கை இறைவனின் கருணையில் உள்ளது. தெய்வீக இரக்கம் ஏழைகள் மீதே பொழியப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை. இயேசு அவ்வாறு கூறியிருக்கின்றார்; பஹாவுல்லாவும் அவ்வாறு கூறியிருக்கின்றார். பாக்தாத் நகரில் பஹாவுல்லா வசித்து வந்தபோது, இன்னமும் செல்வம் மிகுதியாக இருந்த நிலையில், அவை அனைத்தையும் கைவிட்டு, தன்னந்தனியான அந்நகரை விட்டுப் புறப்பட்டுச் சென்று ஏழைகளுடன் இரண்டு வருடங்கள் வாழ்ந்தார். அவர்களே அவரது தோழர்கள்”

“எனவே, மெய்யான செல்வத்தை நமக்கு அருளியமைக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.”

ஒரு மனிதன் அடையக் கூடிய அதி உயரிய ஸ்தானத்தைத் தட்யெழுப்பிய நிலையில் அப்துல் பஹா தமது உரையை முடித்துக் கொண்டார்: “அப்துல் பஹாவை உங்களுடைய சேவகராக ஏற்றுக் கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.”

அந்த ஆடவர்கள் அணிவகுத்து மண்டபத்தை விட்டு இரவில் வெளியேறினர். ஒப்வோர் ஆடவரும் அப்துல் பஹாவைக் கடந்து சென்றபோது, அவர்கள் ஒப்வொருவருக்கும் அப்துல் பஹா ஒரு நாணயத்தை வழங்கினார். அவர்களுள் ஜான் டிட்டும் ஒருவர். வறியவர்களுக்கு வழங்கப்பட வேண்டியவற்றை விட மிக மிக அதிகமாக அப்துல் பஹா வழங்கியிருக்கின்றார் என்று பின்னர் ஜான் குறிப்பிட்டார். அன்றைய இரவில் படுத்துறங்குவதற்காக அந்த ஒவெவோர் ஆடவருக்கும் பணம் கிடைத்து விட்டது….

…மது அருந்தும் பழக்கம் கொண்ட உள்ளூர்வாசியான ஹன்னிகென், அக்கூட்டத்தில் தாமும் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே ஆவல் கொண்டிருந்தாலும், அன்றைய தினம் அவர் நன்றாக மது அருந்தி விட்டு உறங்கி விட்டார். போவரி நிலையத்தில் “முரட்டுத்தனமானவர்” என ஹன்னிகென் அழைக்கப்பட்டு வந்தார். எதிர்வரும் நாள்களில் புருக்லினிலுள்ள பிளாட்புஸ் எனுமிடத்தில் அப்துல் பஹா வருகை தரவிருக்கின்றார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. அப்துல் பஹா வருகை தரும் தினம் வந்தவுடன், அவரிடம் கையில் பணமில்லை. எனவே, அவர் போவரி நிலையத்திலிருந்து பிளாட்புஸ்ஸிற்கு நீண்ட தூரம் நடந்தே சென்று அப்துல் பஹாவின் உரையைச் செவிமடுத்தார். அன்றைய தினம் நள்ளிரவில் தனது அறைக்கு ஹன்னிகென் திரும்பியபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை அவரது நண்பர் ஜான் டிட் கண்டு, அப்துல் பஹா பற்றி வினவினார்.

அதற்குப் மறுமொழியாக ஹன்னிகென், ” அவர் உலகின் ஒளி,” எனப் பதிலளித்தார்.

(ஜூலியட் தோம்ஸனின் நாட்குறிப்பிலிருந்து)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: