அப்துல் பஹாவும் யூத பாதிரியாரும் (எழுத்து- வில்லார்டு பி. ஹெட்ச்)
அப்துல் பஹாவின் வார்த்தையானது எப்படி “அவரது திருவாக்காகவும், இறைவனுடைய சக்தி மற்றும் அவரது வெற்றியாகவும்” விளங்கி வந்தது என்பதைக் கீழ் காணப்படும் சம்பவக் கதை எடுத்துரைக்கின்றது. அது 1912ம் ஆண்டின் இலையுதிர் காலம்.
450, சட்டர் தெரு, சான் பிராசிஸ்கோ நகர் எனும் முகவரியில், அமைந்திருந்த யூதர்களின் இமானுவெல் எல் மறுமலர்சி தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தேவாலயத்தின் பால்கனியின் தரையில் அடியேன் உட்கார்ந்துகொண்டு அங்கு நடந்து கொண்ருந்தவற்றைப் பார்க்கவும், பேசப்பட்டதைக் கேட்கவும் முடிந்தது.
பிரதான மேடையில் நான் கண்ட காட்சி, பண்டைய காலத்து ஓவியம் ஒன்றை நினைவுபடுத்துவதாக இருந்தது. தலைப்பாகை அணிந்த நிலையில், ஒரு மகான் போன்று காட்சியளித்த அப்துல்-பஹா உரையாற்றிக் கொண்ருந்தார்; அவரது ஒளிமிகு பாரசீக காலஅளவுகளின் உயிராற்றலானது அவர் மீது மட்டுமே அனைவரது கவனமும் தீவிரமாக மையப்பட்டிருக்கும் அளவுக்கு சக்திமிக்கதாக இருந்தது; அவர் பேசிய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பைப் பற்றி எவரும் கருதிடாத அளவுக்கு அந்த உயிராற்றல் சக்திமிக்கதாயிருந்தது.
மக்களின் முன்னேற்றத்திற்கு ஓர் உன்னத வழிமுறையாகத் திகழ்வது சமயமே என்பதை அப்துல் பஹா மறுத்தொதுக்கவியலாத தர்க்க ரீதியில் நிரூபித்துக் கொண்ருந்தார். “மனிதன் மீது சமயம் நித்திய வாழ்வை வழங்கி, தார்மீகப் பண்புகள் எனும் பாதையில் அவனது கால்களுக்கு வழிகாட்டுகின்றது. முடிவுறா மகிழ்ச்சியின் கதவுகளை அது திறந்து விட்டு, மானிட இராஜ்யத்தின் மீது என்றென்றும் நீடித்து நிலைக்கவல்ல நன்மதிப்பை வழங்குகின்றது. மனிதகுலத்தின் வரலாற்றில் அனைத்து நாகரிகத்தின் அடிப்படையாக சமயம் இருந்து வந்துள்ளது,” என அவர் கூறினார். “ஆபிரஹாமிய குடும்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்துள்ள யூத சிறுதூதர்களின் வாழ்வுகளில் ஏற்பட்ட சம்பவங்கள்; அவர்களுடைய புகழ்மிகு வரலாறு மற்றும் பேஃரோ மன்னனின் ஆட்சியின் கீழ் நிலவிய அடிமைத்தனம்; எகிப்திய மக்களால் ஆட்டிடையர் என அழைக்கப்பட்ட தூதர் மோஸஸ் அவர்களால் அம்மக்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம்; புகழொளிமிக்க சோலமன் நாகரிகம் எனும் தெய்வீக ஸ்தாபனத்தை அமைத்திடும் அளவுக்கு அவர் எப்படி சமயமெனும் சக்தியினால் உதவப்பட்டார் என்பதையெல்லாம் எடுத்துரைத்து அவர் தமது வாதத்தைச் சித்தரித்துக் கொண்டிருந்தார். “சமயம் என நான் குறிப்பிடும்போது சமயத்தின் மெய்நிலையையே நான் குறிப்பிடுகின்றேன்.” கண்மூடித்தனமாக நம்பிக்கைகள் அழிவைக் கொண்டு வருவதுடன், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இழிவைக் கொண்டு வந்து, அம்முன்னேற்றத்திற்குத் தடையாகவும் அமைந்து விடுகின்றது. “இறைவனுடைய சட்டத்தின் அடிப்படைகளை அவர்கள் ஆட்டங்கொள்ளச் செய்தபோது, நெபுச்சாட்நேசர் அவர்களுடைய நாட்டின் மீது படையெடுத்து புனித பூமியை வென்று விட்டான்….” எழுபதாயிரம் யூதர்கள் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்… ரோமாபுரியின் கி.பி.70ம் ஆண்டின் தளபதி டைட்டஸ் ஆட்சியின் கீழ், புனித பூமி வெல்லப்பட்டு சூறையாடப்பட்டது.”
அப்துல் பஹா தமக்கே உரிய மாட்சிமையுடனும், வலிமையுடனும் பின்வரும் கருத்தைக் கூறினார்; “உண்மை ஒன்றே ஆகும் என்பதனால், எல்லா சமயங்களின் அப்படையும் ஒன்றே. சமயம் என்பது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில், எல்லா இறைத்தூதர்தகளினாலும் கூறப்படும் அதே அதிமுக்கிய சமய போதனைகள்; இரண்டாவதாக, தமது காலத்தினுடைய மக்களின் தேவைக்காக ஒவ்வோர் இறைத்தூதரும் விதிக்கும் விதிமுறைகள்.”
அதன் பிறகு, புனித இயேசு கிறிஸ்துவானவர் மோஸஸின் அதி உன்னத நண்பர் என்பதனையும், மோஸஸின் ஸ்தானத்தை கிறிஸ்து நிலைநாட்டினார் என்பதையும், இந்தியாவிலோ, அண்டை நாடான ஐரோப்பாவிலோ மோஸஸ் யார் என்பது முன்பு தெரிந்திருக்கவில்லையென்பதையும், கிறிஸ்துவ திருநூலையும், மோஸஸஸையும், இஸ்ரேலிய திருத்தூதர்களையும் ஏற்றுக் கொண்டதனால் தோஃரா எனும் புனித நூலை இயேசு கிறிஸ்து அங்கீகரித்தார் என்பதையும், பழைய ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டதனால் கிறஸ்துவர்கள் எதனையும் இழக்கவில்லை என்பதையும், இயேசு கிறிஸ்து, ஒரு யூத தாயாரின் மகன் என்பதையும், அவர் இயற்கையாகவே யூதர்களின் நண்பர் என்பதையும் அப்துல் பஹா மிகச் சக்தி வாய்ந்த நிலையில் சித்தரித்தபோது, அவரது உரை எனும் சமுத்திரம் மிக ஆழமானப் பகுதிகளிலும் பிரவேசித்தது.
அக்காட்சி மிகத் தத்ரூபமாக இருந்தது. தேவாலயத்தின் மிக இளமையானவரும், கனத்த உடலைக் கொண்டவருமான பாதிரியார், இலையுதிர்காலம் வெப்பமாக இல்லாதிருந்தபோதும், தனது நெற்றியில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டார். அங்குக் கூடியிருந்த ஒரு யூதர் கூட அங்கு வழங்கப்பட்ட உரையை மறுத்துப் பேசவில்லை.
மோஸஸ் மற்றும் கிறிஸ்துவின் ஸ்தானத்தை தூதர் முஹம்மது நிலைநாட்டினார் என்பதையும், “வெளித்தோற்றத்திற்கு முஹம்மது கல்லாதவராகவும், இறைவனுடைய புனித நூல்களைப் பற்றி அறியாதவராகவும் தோன்றியபோதிலும் கூட” காட்டு மிராண்டித்தனம் மிக்க அராபிய உலகை மாற்றி அராபிய நாடுகள் முதல் ஸ்பெய்ன் வரை மற்றும் ஐரோப்பிய கல்வியில் செல்வாக்குச் செலுத்தவல்ல ஒரு மாபெரும் நாகரிகத்தைத் தூதர் முஹம்மது ஸ்தாபித்தார். இம்மாபெரும் இறைத்தூதர்களில் சச்சரவுமிக்க நம்பிக்கையாளர்கள்தான் தங்களுடைய சமயங்களின் ஸ்தாபகர்களுடைய செய்தியைத் திசைமாற்றி, குற்றம் சுமத்தும் போக்குக் கொண்ட மதவெறியை ஏற்படுத்தி விட்டனர் என அப்துல் பஹா பிறகு எடுத்துரைத்தார்.
எல்லா சமயங்களினுடைய இறைத்தூதர்களை ஏற்றுக் கொள்வதை பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா பாராட்டியுள்ளதுடன், அச்செயலில் ஈடுபட்டவர்கள் துவேஷ உணர்வு ஏதுமற்ற நிலையில் மனிதகுலத்தின் பொதுநலனை நிலைநாட்டுபவர்கள் எனவும் கூறியுள்ளார் என்பதை எடுத்துரைத்த அப்துல் பஹா, தாம் மோஸஸை ஏற்றுக் கொள்ளும் செயலாகப்பட்டது, எல்லா இறைத்தூதர்களையும் ஏற்றுக் கொள்வதற்குச் சமமாகும் என்பதனால், தாம் எப்விதத் தயக்கமின்றி மோஸஸை ஏற்றுக் கொள்ளதாக தெளிவாகக் கூறினார்.
அவரது அந்த உரையைக் கேட்டு ஆழமாக மனம் நெகிழ்ந்த கூட்டத்தினர், அதன் பிறகு தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பினர்……..
இந்நிகழ்ச்சி முடிந்த சிறிது காலத்திற்குள், அத்தேவாலயம் அமைந்திருந்த தெருவுக்கு நேர் எதிர்புறத்தில் இருந்த ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தின் இயக்குனர்கள், தங்களுடைய பழைய தேவாலாயம் இருந்த அதே இடத்தில் ஒரு புதிய தேவாலயத்தை எழுப்ப தீர்மானித்தனர்; அதன் காரணமாக, அப்புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு முன் அவர்கள் பழைய கட்டத்தை உடைக்க வேண்டியிருந்தது. அந்நிலையில், புதிய கட்டடம் கட்டப்படுகின்ற வரை, அங்கு வழிபாட்டுக்காக வருகின்ற கிறிஸ்துவர்கள் வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக ஓர் இடம் தேவைப்பட்டது. எனவே, இயேசு கிறிஸ்துவின் மெய்நிலையை எந்த யூத தேவாலயத்தில் அப்துல் பஹா நிலைநாட்டியும் முன்னெடுத்தும் பேசினாரோ, அதே தேவலாயத்தின் யூதகுருவான மார்ட்டின் ஏ. மேயர் அவர்கள் (அவரது ஆன்மா சாந்தியடையுமாக), நெடு நீண்ட காலத்திற்கு யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமிடையே நிலவி வந்த துவேஷ உணர்வுகளிலிருந்து முற்றாக விடுபட்ட நிலையில், தனது யூத தேவாலயத்தில் ஒவ்வொரு ஞாற்றுக் கிழமையிலும் தங்களுடைய வழிபாட்டை நடத்திக் கொள்ளுமாறு கிறிஸ்தவர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார்.
இந்தத் தயாளமிக்க அழைப்பு உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் பிறகு சுமார் ஒன்பது மாதங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் யூத தேவாலயம் தனது பழைய ஏற்பாடு தொடர்பான வழிபாட்டை நடத்திய நிலையில், அதே இடத்தில் கிறிஸ்துவ தேவாலயம் தனது பழைய மற்றும் புதிய ஏற்பாடு தொடர்பான வழிபாட்டை நடத்தி வந்தது.
இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்து இதற்கு முன்பு இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளதா? யூதர்களும் கிறிஸ்தவர்களும் சம்பந்தப்பட்ட ஐக்கிய சந்திப்புக் கூட்டங்கள் உட்பட பல வேளைகளில் பல்வேறு சமயத்தினரின் ஐக்கிய சந்திப்புக் கூட்டங்கள் கடந்த காலங்களில் நடந்திருப்பது உண்மையே. பஹாய் சமயம் முதன் முதலாக உலக அளவில் 1893ம் ஆண்டு சிக்காகோ நகரில் அறிமுகம் செய்யப்பட்ட உலக சமயங்களின் மாநாட்டில் பல்வேறு சமயத்தினர் ஒன்றுகூடி வழிபாடு நடத்தியிருக்கின்றனர். ஆனால், ஒரு விஷேச அழைப்பின்பேரில், ஒப்வொரு வாரமும், ஒப்வொரு ஞாயிற்றுக் கிழமைதோறும், பல மாதங்களுக்கு ஒரு யூத தேவாலயத்தில் ஒரு கிறிஸ்தவ பிரிவினர் வழிபாடு நடத்தும் செயல் முந்தைய வரலாற்றில் நடைபெற்றுள்ளதா?
இது பற்றி அப்துல் பஹாவுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவரும் பின்வரும் ஒரு நிருபத்தை எழுதினார்:
“பாதிரியார் மார்ட்ன் ஏ. மேயர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள மேன்மைநிலை மற்றும் மனிதத்தன்மை தொடர்பாக, கிறிஸ்தவர்கள் தங்களது வழிபாட்டை நடத்திக் கொள்வதற்குத் தனது யூத தேவாலயத்தில் பாதிரியார் மார்ட்ன் ஏ. மேயர் அவர்கள் இடம் வழங்கியுள்ள செயலும், நடவடிக்கையும் நித்திய காலமும் நிலைத்து நிற்கும். எதிர்வரும் காலங்களிலும், சகாப்தங்களிலும் மார்ட்ன் ஏ. மேயர் அவர்களின் நன்நோக்கம் நூல்களில் குறித்துக் கொள்ளப்படுவதுடன், உலக வரலாற்றின் பணிகள் எல்லா மனிதர்களின் உதடுகளிலும் நிலையாக வலம் வரும். ” தனது தேவாலயத்தின் புத்தக அறையில் மார்ட்ன் ஏ. மேயர் அவர்கள் அமர்ந்திருந்தபோது ஒரு நாள் அவரிடம் இச்செய்தி வழங்கப்பட்டது. அதன் காரணமாக அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். (ஆதாராம் மே
ற்கின் நட்சத்திரம், தொகுதி 20, எண்.4, ஜூலை 1929)