ஒன்றுமில்லை
கடவுள் சமய திருக்கரம் திரு பாஃயிஸி கூறியவாறு
தன்னகம் காலியாக இருப்பது மற்றும் அனைத்து சுயநல ஆசைகள், தாபம், அகங்காரம் ஆகியவற்றிலிருந்து நான் என்ன சொல்கிறேன் என்பதை தெளிவுபடுத்துவதற்காக `அப்துல்-பஹா சொன்ன ஒன்றை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் `அப்துல்-பஹா ஐரோப்பாவில் பயணம் செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும், அவர் தமது தந்தையின் சமயத்தைப் பரப்புவதற்காக அமெரிக்காவிலும் பயணம் செய்தார். பாரசீகத்தின் இளவரசர்களில் ஒருவரான மிகப் பெரிய மற்றும் கொடூரமான எதிரிகளில் ஒருவர் `அப்துல்-பஹா ஐரோப்பாவில் இருந்த அதே நேரத்தில் அவரும் இருந்தார். ஒரு நாள் அவர் `அப்துல்-பஹாவிடம் சென்று,”நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்,” என்றார். என்னைப் பாருங்கள், என் தொப்பி வைரங்களால் நெய்யப்பட்டிருக்கிறது, என் ஆடைகளில் எல்லா வகையான நகைகளும் உள்ளன, இருப்பினும் நான் தெருக்களில் நடக்கும்போது, யாரும் என்னை பார்ப்பதுமில்லை அல்லது என் மீது கவனம் செலுத்துவதில்லை என்றார் இருப்பினும், நீங்கள் தெருக்களில் நடக்கும்போது, உலகின் மிக எளிமையான ஆடையை நீங்கள் அனித்திருக்கும்போது, எல்லோரும் உங்களுக்கு வழிவிடுகிறார்கள். அவர்கள் உங்களிடம் வருகிறார்கள். உங்கள் வாசலில் எப்போதும் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அதற்கான காரணத்தை நான் அறிய விரும்புகிறேன்.”

`அப்துல்-பஹா அவரை ஏற்கனவே அறிந்திருந்தார், மேலும் அவர் காரணமாக பஹாய்களில் பலர் கொல்லப்பட்டனர் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகையால், அவரிடம், “மாட்சிமை பொருந்தியவரே, நீங்கள் கொஞ்சம் உட்காருங்கள், நான் உங்களுக்கு ஒரு கதை சொல்வேன்” என்று கூறினார். அந்த இளவரசனும் அமர்ந்தான். அந்த இளவரசனின் பெயர் நசிரிடின் ஷாவின் மகனான ஸில்லு’ஸ் சுல்தான். மாஸ்டர் சொன்னார்: “ஒரு முறை ஒரு ஞானி ஒரு குறிப்பிட்ட நகரத்தின் சதுக்கத்தைக் கடக்கும் போது அந்த நகரத்தின் பணக்காரர்களில் ஒருவரைக் கண்டு முகம் சோர்ந்தும் சோகமாகவும் இருந்திடக் கண்டார். அப்பணக்காரர் சதுக்கத்தின் மூலையில் உட்கார்ந்து தனது துக்கங்களை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார். ஞானி அவரிடம் சென்று, ‘என்ன விஷயம் ஏன் இப்படி இருக்கின்றீர்’ எனக் கேட்டார். அதற்கு அவர், `இந்த ஊரில் மிகப் பெரிய வணிகராக இருப்பதற்கு என்னிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் நான் திருப்தியாக இல்லை. நான் இப்போது இருப்பதைவிட பெரிய நிலையில் இருக்க விரும்புகிறேன். ‘ ஞானி, `உதாரணத்திற்கு, நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்,’ என்றார். அதற்கு வணிகர், `நான் இந்த ஊரின் ஆளுநராகிட விரும்புகிறேன். ‘ ஞானி, `நான் உம்மை இந்த மாகாணத்தின் ஆளுநராக்கினால், நகரம் மட்டுமல்ல, முழு மாகாணத்திற்கும் ஆளுநாராக்கினால் நீங்கள் திருப்தி அடைவீர்களா? தயவுசெய்து உமது மனதில் இது குறித்து சிந்தித்து, எனக்கு உண்மையான பதிலைக் கொடுங்கள்’ என்றார். அந்த நபர் சிந்தித்துவிட்டு: `உண்மையில், நான் திருப்தி அடைய மாட்டேன். நான் அமைச்சராக விரும்புகிறேன். ‘ `நான் உங்களை ஒரு அமைச்சராக்குகிறேன், ஆனால் எனக்கு இன்னோர் உண்மையான பதிலைக் கொடுங்கள், இதிலும் நீங்கள் திருப்தி அடைவீர்களா? ‘ அதன்பிறகு, அவர் நாட்டின் ராஜாவாக இருக்க விரும்பினார், மேலும் ஞானி, `நான் உம்மை அரசனாக்குவேன், பிறகு நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் இருப்பீர்களா? அதற்கும் அப்பால் வேறு ஏதாவது வேண்டுமா’ என்றார். அதற்கு அந்த நபர், `அதன் பிறகு ஒன்றுமில்லை ‘என்று பதிலளித்தார். `அப்துல்-பஹா அப்போது இளவரசனிடம், “இளவரசே, அந்த ‘ஒன்றுமில்லை’ நானே “எனக் கூறினார்.