
8 அக்டோபர் 2021
சாண்டியாகோ, சிலி, 9 மார்ச் 2021, (BWNS) – சிலி நாடு முழுவதும் சுமார் 50,000 தொலைக்காட்சி நேயர்கள், சுகாதார நெருக்கடியின் போது மக்கள் எவ்வாறு நம்பிக்கையுடன் இருந்து அதற்கு ஆக்கபூர்வமாக செயல்பட முடியும் என்பது குறித்த நாட்டின் பஹாய் சமூகத்தின் முன்னோக்குகளை வழங்கும் ஒரு நிகழ்ச்சியைக் காண்பதற்கு கடந்த வாரம் ஓர் ஒளிபரப்பை கண்ணுற்றனர்.
அந்த 40 நிமிட நிகழ்ச்சியை சிலியின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான EMOL TV, சிலி நாட்டின் சமயங்களுக்கிடையில் கலந்துரையாடலுக்கான கழகத்துடன் (ADIR) இணைந்து இணையத்தில் ஒளிபரப்பியது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 2020’இல் தொற்றுநோய் தொடங்கிய போது ஆரம்பித்து, நாட்டின் மத சமூகங்களுக்கு நம்பிக்கையளிக்கும் செய்திகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
சிலியின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் லூயிஸ் சாண்டோவல் கூறுகையில், “இதன் மூலமாகவும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய ஒளிபரப்பு மூலமாகவும், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தாலும், ஆன்லைனில் நண்பர்கள் மற்றும் அயலவர்களுடன் அல்லது சாண்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு மன்றத்தின் கூரையின் கீழ் உள்ள அவர்களது தோழர்களுடன் இருந்தாலும் ஒன்றாகப் பிரார்த்திக்கும்போது அவர்கள் உணரும் அதே மனநிலையை பஹாய் சமூகம் கொடுக்க முயன்று வருகிறது.”

ADIR’இன் ஒமார் கோர்டெஸ் கூறுகிறார், “அவர்களின் பங்களிப்புகளில், பஹாய் சமூகம் எப்போதும் EMOL டிவியின் ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது மிகவும் நேர்மறையான எண்ணத்தைப் பதித்துள்ளது. பஹாய் சமூகத்தின் ஆக சமீபமான இந்த ஒளிபரப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூக நெருக்கடி பற்றிய அதன் விவேகம் கலந்த கவனத்துடனான சிந்தனைகளுக்காக பாராட்டப்பட்டது.”
பல பார்வையாளர்களிடையே ஆன்மீக கருப்பொருள்கள் பற்றிய உரையாடலைத் தூண்டிய மிகச் சமீபத்திய திட்டம், நாடு முழுவதும் உள்ள பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோரின் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டது.

ஒளிபரப்பில் தோன்றிய, சாண்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் இயக்குனர் வெரோனிகா ஓரே, குடிமக்கள் மத்தியில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “என்னதான் நடக்கிறது என்பதை சோகத்துடனும் நம்பிக்கை இல்லாமலும் பார்க்காமல், மனிதகுலத்தின் அனைத்து பிரிவுகளும் ஒன்றாக செயல்படுவது என்றால் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு உருவாதை நம்மால் காண முடிகிறது. ”
பஹாவுல்லாவின் நன்கு அறிமுகமான போதனையைக் குறிப்பிட்டு, “உலகம் ஒரே நாடு மனிதகுலம் அதன் குடிமக்கள்,” என்றார்.
மற்றொரு பேச்சாளர், சாண்டியாகோவைச் சேர்ந்த ஓர் இளம் பெண், தனது சக இளைஞர்களை சமூகத்தின் தேவைகளுக்கு ஓர் ஒருங்கிணைந்த பிரதிசெயலில், நண்பர்களாகவோ அல்லது அந்நியர்களாகவோ ஒருவருக்கொருவர் ஆதரவளித்திட முன்னெழுமாறு அழைப்பு விடுத்தார். மற்றவர்கள் வெளிவிவகார அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட தளங்களில் நடைபெற்ற உரையாடல்களின் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர், இதில் பங்கேற்பாளர்கள் செல்வம் மற்றும் வறுமைக்கிடையிலான நீண்ட இடைவெளி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம், இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளை ஆராய்ந்தனர்.
தொடர்ச்சியான ஒளிபரப்புகளைப் பற்றி பேசுகையில், ADIR’இன் திரு. கோர்டெஸ்: “ஒரு மதச்சார்பற்ற ஊடக அமைப்பாக இந்த வகையான ஒளிபரப்பில் ஈடுபடத் துணிந்ததற்கு “நாங்கள் EMOL டிவிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” எனக் கூறினார்.
திரு. சந்தோவல் ஆர்வநம்பிக்கையைத் தூண்டும் மதத்தின் திறன் குறித்த பொது உரையாடலை வளர்ப்பதில் ஊடகங்களின் முக்கிய பங்கு குறித்து மேலும் கருத்துரைக்கிறார். “நாட்டின் மெய்நிலை மற்றும் புதிய வாழ்க்கை முறைகளைக் காட்டும் கொள்கைகள், நம்மை ஒழுங்கமைத்தல் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புவது அனைவரின் நலனுக்காக சமூகத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1496/