
8 அக்டோபர் 2021
சிட்னி – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் (ABC) சிட்னி நகர், மௌன்ட் டிரூயிட்’டிலுள்ள ஓர் அண்டைப்புறத்தில் இளைஞர்கள் மீது பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் தன்மைமாற்ற விளைவுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. “தங்கள் வீதிகளுக்கான போரட்டம்” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையில், அக்கழகம் மௌன்ட் டிரூயிட்’டில் நடைபெறும் கல்வியல் நடவடிக்கைகள் “இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் காண விரும்பும் மாற்றங்களுக்கு” அவர்களே அந்த மாற்றங்களாக இருப்பதற்கு எவ்வாறு சக்தியளிக்கின்றன என்பதை வர்ணிக்கின்றது.

பிரார்த்தனை, கலந்துரையாடல் மற்றும் இசைக்கான ஒன்றுகூடல்கள் மூலம் வடிவம் பெறுகின்ற துடிப்பான சமூக வாழ்க்கையை அக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது, இது சமீபத்தில் “பன்மடங்கு (manifold)” எனும் தலைப்பில் ஒரு முன்முயற்சியை உருவாக்கியுள்ளது, இது இளைஞர்கள் தங்கள் சமூகத்தின் உயர்ந்த அபிலாஷைகளை வெளிப்படுத்தும் பாடல்களைத் தயாரிக்கிறது.
பஹாய் உலக செய்தி சேவையுடன் பேசிய கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் சியோபன் மாரின், கதையை எழுவதற்கான தனது உந்துதலைப் பகிர்ந்து கொள்கிறார்: “சிட்னியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத சமூகங்களின் கதையைச் செய்திகளில் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன், அவர்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும்.”

இந்த அண்டைப்புறம் சமீபத்தில் ஊடகங்களில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டது என்று திருமதி மரின் விளக்குகிறார், மேலும் வித்தியாசமான ஒன்றை வழங்குவதே அவரது எதிர்ப்பார்ப்பு. “உள்ளூர் சமூகம், குறிப்பாக இளைஞர்கள், இசை மற்றும் சமூக நடவடிக்கைகளை பயன்படுத்தி நிலைமையை மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றி நான் ஆர்வமாக இருந்தேன்.
இந்த அண்டைப்புறம் சமீபத்தில் ஊடகங்களில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டது என்று திருமதி மரின் விளக்குகிறார். அதற்கு மாறாக,, வித்தியாசமான ஒன்றை வழங்குவதே அவரது எதிர்ப்பார்ப்பு. “உள்ளூர் சமூகம், குறிப்பாக இளைஞர்கள், இசை மற்றும் சமூக நடவடிக்கைகளைப் பயன்படுத்தி எவ்வாறு நிலைமையை மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய நான் ஆர்வமாக இருந்தேன்.

“பன்மடங்கு (manifold) உறுப்பினர்களும் சமூகத்தின் பிற உறுப்பினர்களும் இளைஞர்களுக்கு ஒரு நேர்மறையான பாதையை–போதைப்பொருள், மது, அல்லது வன்முற–காட்டுவது மட்டுமின்றி, அவர்கள் இந்த இடத்திலுள்ள நிலவும் நல்லனவற்றையும் எடுத்துக்காட்டுகின்றனர். இளைய இளைஞர் தலைமுறையினருக்கு உதவியளிக்கும் முயற்சிகள் குறித்து அறிவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அவர் மேலும் கூறுவதாவது: “மேலும், இந்த முயற்சிகள் சமூகத்தில் உள்ள சிறார்களுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், அவை சமூக ஒத்திசைவையும் மரியாதை உணர்வையும் வலுப்படுத்துகின்றன, பழைய தலைமுறையினரிடையிலும் இது நிகழ்கின்றது.”
இந்தக் கட்டுரையை ABC’யின் இணையதளத்தில் படிக்கலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1498/