

8 அக்டோபர் 2021
BIC நியூ யார்க், 25 மார்ச் 2021, (BWNS) – உலகம் ஆழ்ந்த மாற்றத்திற்கு உள்ளாகும்போது, தொற்றுநோய் மகளிர் தலைவர்களின் இன்றியமையாத பங்கையும், தலைமைத்துவ உருமாதிரிகள் மறுசீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த யோசனைகள் ஐ.நா. மகளிர் நிலைமை ஆணையத்தின் (C.S.W) 65’வது அமர்வுக்கு பஹாய் அனைத்துலக சமூகம் (B.I.C) அளித்த பங்களிப்பின் மையத்தில் உள்ளன, இதில் ஆபத்து மற்றும் அமைதி காலங்களில் சமத்துவ கலாச்சாரத்திற்கான தலைமைத்துவம் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையும் உள்ளது.
“எந்த மட்டத்திலும் பெண்கள் தங்கள் சமுதாயத்தில் தலைமைத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்த நாடுகளில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறுகிய கால குறிகாட்டிகளில் ஓர் அளவு ஸ்திரத்தன்மை காணப்படுகிறது” என்று BIC’யின் பிரதிநிதி சஃபீரா ரமேஷ்ஃபர் கூறுகிறார் .
“குடும்பம் அல்லது கிராமம், சமூகம் அல்லது உள்ளூராட்சி, கார்ப்பரேஷன் அல்லது தேசமாக இருந்தாலும் சரி, பெண்களின் தலைமைத்துவம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்படும்போது மனிதகுலம் எவ்வளவு பயனடைகிறது என்பது இதுவரை இவ்வளவு தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை.”

ஆணைக்குழுவிற்கு அளித்த அறிக்கையில், BIC பலவிதமான குணாதிசயங்களையும் திறனுள்ள தலைமைத்துவத்திற்கான திறன்களையும் வலியுறுத்துகிறது. இதில், “வெவ்வேறு குரல்களை இணக்கப்படுத்தும் திறன் மற்றும் பொது முனைவு உணர்வை வளர்ப்பது” ஆகியவை அடங்கும்.
CSW’வின் போது BIC அறிக்கையை மையமாகக் கொண்ட ஓர் இணைய கலந்துரையாடலில், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக பெண்கள் உலகளாவிய தலைமைத்துவ மையத்தின் சார்லட் பன்ச் கூறுகிறார்: “[BIC] முன்வைத்த உருமாதிரி மிகவும் முக்கியமானது என நான் நினைக்கின்றேன். சமத்துவத்தின் ஓர் உருமாதிரி, பெண்களை மற்றவர்களை விட ஆதிக்கம் செய்பவர்களாக ஆக்குவது பற்றி அல்ல… என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்…”
பல ஐ.நா. உறுப்பு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்ட மற்றொரு கலந்துரையாடலில், பங்கேற்பாளர்கள் சமீபத்தில் வெளியான பாலின சமத்துவத்தின் சில காட்சிகள் என்னும் திரைப்படத்தைப் பார்த்தனர். படத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐ.நா.வின் லைபீரிய துணை நிரந்தர பிரதிநிதி, தூதர் இஸ்ரேல் சோகோ டேவிஸ் கூறுகிறார்: “ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நடவடிக்கைகள் மற்றவர்களின் நடத்தையில் நேர்மறையான மாற்றங்களை எவ்வாறு பேணிடும் என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.

“கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தி, தங்களை சமமாக பார்க்கும்போது ஒரு குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாகிறது என்பதை நாம் பார்க்கின்றோம். பாலின சமத்துவத்தை அடைவதில் நேர்மறையான பங்கு மற்றும் ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு குடும்பம் ஆற்றக்கூடிய முக்கிய பங்கை நீங்கள் உணருகிறீர்கள். ” தூதர் டேவிஸ் இந்தப் படத்தை மேற்கோள் காட்டி, “நேசிக்கும் திறன், படைப்பாற்றல், விடாமுயற்சி ஆகியவற்றுக்குப் பாலினம் இல்லை.”

இணையத்தில் நடைபெற்ற இந்த ஆண்டு C.S.W’வில் BIC’யை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பத்தொன்பது பிரதிநிதிகள் அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் 25,000’ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்துகொண்டனர் – இது அரசாங்கங்களையும் பொது சமுதாயங்களையும் ஈடுபடுத்திய பாலின சமத்துவம் குறித்த சொல்லாடலை மேம்படுத்த 1995’ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற பெண்கள் மீதான உலக மாநாட்டிற்குப் பின்னர் நடந்த மிகப்பெரிய ஒன்றுகூடலாகும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1499/