
8 அக்டோபர் 2021
சிட்னி, 27 ஏப்ரல் 2021, (BWNS) – சில மாத காலப்பகுதியில், கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய பஹாய் சமூகத்தின் வெளியீடான ஓர் உள்ளடக்கிய மொழிவை உருவாக்குதல், நாட்டின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் முழுவதும் நடைபெற்ற கூட்டங்களில், அரசாங்க அதிகாரிகள், சமூக நடிவடிக்கையாளர்கள், பத்திரிகையாளர்கள், மத சமூகங்கள் மற்றும் பிறரில் ஓர் ஆழ்ந்த கலந்துரையாடலைத் தூண்டியுள்ளது.
சமீபமாக, சிட்னியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது, இது, ஆஸ்திரேலிய பஹாய் சமூகத்திற்கு ஒரு முக்கிய நேரமான, அந்த நாட்டில் சமயம் நிறுவப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவின் போது, வந்துள்ளது,. “பஹாய் சமூகத்தின் நூற்றாண்டானது, பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வளர்ப்பது பற்றி நூறு ஆண்டுகால கற்றலைக் குறிக்கிறது” என்று நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் வீனஸ் கலெஸி கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் சார்பில் கருத்துக்கள் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் ஃபாலின்ஸ்கி, “நமது ஒத்திசைவைப் பாதுகாப்பது என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல. அது நம் அனைவருக்கும் சொந்தமான ஒன்று … பஹாய் ஆஸ்திரேலியர்கள் நமது பல்கலாச்சார தேசத்தையும் உள்ளடக்கும் தேசிய அடையாளத்தையும் நிர்மாணிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்,” என அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

“சமயம் ஒரு சக்திவாய்ந்த ஒன்றிணைக்கும் சக்திக்கான திறனைக் கொண்டுள்ளது. அது மக்களை, உள்ளடக்கும் மற்றும் இணக்கமான உணர்வில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. …இது பல ஆஸ்திரேலியர்களுக்கு ஆறுதல், நிம்மதி, மீட்சித்திறம் ஆகியவற்றுக்கான மூலாதாரமாக இருக்கின்றது. “
கடந்த நூற்றாண்டில் பஹாய் சமூகத்தின் பயணமானது அதிக ஒற்றுமைக்கான ஒரு சக்திவாய்ந்த தூண்டுதல் எனும் முறையிலான கதை என நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரான ஃபியோனா ஸ்காட் விளக்கினார். ஆஸ்திரேலியாவின் கரையில் வந்திறங்கிய முதல் பஹாய் குழுவைப் பற்றி பேசிய டாக்டர் ஸ்காட், “மனித இனத்தின் பன்முகத்தன்மையை மதிக்கின்ற மற்றும் ஒத்திசைவாக்கும் ஓர் அமைதிமிகு ஓர் உலகம் குறித்த கருத்தால் அவர்கள் எவ்வாறு தூண்டப்பட்டார்கள்,” என்பதை விவரித்தார்.
“நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பஹாய் சமூகம் இந்தத் தேசமானது, 417’க்கும் மேற்பட்ட உள்ளூர்களில் 80’க்கும் மேற்பட்ட இன மற்றும் இனக்குழுக்களைக் கொண்டிருக்கும் என அவர்கள் கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள்.”

தென் ஆஸ்திரேலிய மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், தெற்கு ஆஸ்திரேலிய ஆட்சித்தலைவரின் உதவி அமைச்சரான ஜிங் லீ, சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஓர் உள்ளடக்கிய மொழிவை உருவாக்குதல்’ வெளியீடு பற்றி குறிப்பிட்டார்: “பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் தனிநபர்களையும் சமூகத்தையும் நிறுவனங்களையும் கூட. இணைக்கின்றன. நான் இங்கே ஒரு தனிநபர் எனும் முறையில் நிற்கின்றேன், ஆனால் நான் ஒரு சமூகம் மற்றும் ஒரு ஸ்தாபனத்திலிருந்தும் – இந்த பாராளுமன்ற மாளிகையான, நமது ஜனநாயக அமைப்பிலிருந்தும் வருகின்றேன்.”
இந்த வெளியீடு தெரிவிப்பது என்னவென்றால், “மனிதகுலத்தில் ஒற்றுமையை வளர்ப்பது, ஆணும் பெண்ணும் சமம், நம் அனைவருக்கும் உடனுழைத்தல் கட்டமைப்பில் ஒரு கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு அவை அனைத்தும் ஒன்றாக வருகின்றன,” என தொடர்ந்து கூறினார். அதன் பின்னணியில் உள்ள அனைத்து ஆய்வுகளின் அடிப்படையில், மேலும் இதைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், பொதுவான இலக்குகளை நோக்கி செயல்படுவதற்கும் கூட்டாக இன்னும் சிறிது யோசிக்க சவால் விடுகிறது… . ”

தெற்கு ஆஸ்திரேலியாவின் பல்சமய சங்கங்களின் தலைவரான ஃபிலிப்பா ரோலண்ட், “வெளியீடு… நமது [சமூகம்] நமது சமூகம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த ஓர் அகன்ற காட்சிக்குள் தனிப்பட்ட முன்னோக்குகளை இணைக்கின்றது. மிக முக்கியமாக, இது நாம் எங்கிருந்து வந்துள்ளோம் என்பதைக் கற்றுக்கொண்டதிலிருந்து, தற்போது நாம் எங்கு இருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தும், நம் அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை நாம் கொண்டு வர முடியும் என்பதைக் கற்பனை செய்வதற்கான கூட்டு தைரியத்திலிருந்தும் ஒரு நடைமுறை வளைவை வரைகிறது.
“ஓர் உள்ளடக்கிய மொழிவை நாம் எவ்வாறு உருவாக்க முடியும் என்பது குறித்த இந்த உரையாடல், ஒரு பன்முக கலாச்சார சமுதாயத்தில் சமய நல்லிணக்கம் மற்றும் அமைதியான பரஸ்பர பலனளிக்கும் சகவாழ்வு ஆகியவற்றை நோக்கி வலுவாக உரைக்கும் ஒரு முக்கியமான பயணத்தின் அகத்தில் உள்ளது” என்று அவர் தொடர்ந்தார்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1504/