திட்டம், 1950’களில் ஷோகி எஃபெண்டியினால் ஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்புப் பணியை நீட்டிக்கும் வகையில், கட்டிடத்தின் மோசமடைந்திருந்த பகுதிகளை மறுசீரமைப்புச் செய்ததுடன் அதன் நில அதிர்வு எதிர்ப்பையும் வலுப்படுத்தியது.
பஹாய் உலகமையம், 8 ஏப்ரல் 2021, (BWNS) – காலப்போக்கில் மோசமடைந்துவிட்ட கட்டிடத்தின் சில பகுதிகளை மீட்டெடுக்கும் போது ‘அபுட் இல்லத்தின் நில அதிர்வு எதிர்ப்பை வலுப்படுத்திய இரண்டு ஆண்டு கால திட்டம் முடிவடைந்தது. இந்த நடவடிக்கை 1950’களின் முற்பகுதியில் ஷோகி எஃபெண்டி, புனித ஸ்தலத்தை புனித யாத்திரைக்கு ஆயத்தமாக்கியபோது அவர் மேற்கொண்ட பாதுகாப்புப் பணிகளின் விரிவாக்கமாகும்.
நாடுகடத்தப்பட்டவர்களாகவும், வீட்டுக் காவலில் இருந்தபோதும், பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் 1871’ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடத்திற்கு வந்து மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் 13 க்கும் மேற்பட்டோர் ஒரே அறையில் வசிக்க வேண்டியிருந்தது.
இந்தப் புனிதஸ்தளத்தில்தான், 1873’ஆம் ஆண்டில், பஹாவுல்லா தமது அதிப்புனித நூலான கித்தாப்-இ-அக்டாஸை வெளிப்படுத்தினார், இந்த நூல் அவருடைய சமயத்தின் அத்தியாவசிய சட்டங்களையும் கொள்கைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது; பஹாய் ஸ்தாபனங்களுக்கான அடித்தளத்தை அமைக்கிறது; பஹாய் திருவாக்குகளில் “எதிர்கால உலக நாகரிகத்தின் சாசனம்” என குறிப்பிடப்படுகிறது.
அப்புட் இல்லத்தின் மறுசீரமைப்பு“ பல நூற்றாண்டுகளாக கட்டிடத்தைப் பொருத்தமான நிலையில் பாதுகாப்பதை ”நோக்கமாகக் கொண்டுள்ளது என உலக நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பஹாய் தேசிய ஆன்மீக சபைகளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது . மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளின் வெவ்வேறு அம்சங்களை பின்வரும் படத்தேர்வுகளில் காணலாம்.
வீட்டின் கிழக்கு முகப்பின் ஒரு வரலாற்று (இடது) மற்றும் தற்போதைய (வலது) நிலையின் காட்சி. இது பஹாவுல்லா மற்றும் அவரது குடும்பத்தினரால் முதன்முதலில் குடிவரப்பட்ட வீட்டின் ஒரு பகுதியாகும் – இது ஊடி கம்மார் இல்லம் என அழைக்கப்படுகிறது – பஹாவுல்லா, பஹாய் சமயத்தின் அதிப்புனித நூலான கிதாப்-இ-அக்டாஸை இந்த அறையில் (மேல் இடதுபுறத்தில்) வெளிப்படுத்தினார்.கிதாப்-இ-அக்தாஸை பஹாவுல்லா வெளிப்படுத்திய அறையில், மரச் சுவர் பேனல்களின் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது, அவற்றில் பல நெளிவுற்றோ நிறமாற்றமோ அடைந்துள்ளன. ஒவ்வொன்றும் நேராக்கப்பட்டு, வலுவூட்டப்பட்டு, மீண்டும் பூச்சு அளிக்கப்பட்டன.இல்லத்தின் சோஃபா செட் அவற்றின் அசல் தோற்றத்திற்கு மீட்டெடுக்கப்பட்டன. மெத்தைமுறை சில புகைப்படங்களிலிருந்து மீண்டும் உருவாக்கப்பட்டு, ஒரு துணி தயாரிப்பாளரால் துணியை நகலெடுக்க பயன்படுத்தப்பட்டது.அறைகளில் ஒன்று அழகாக வடிவமைக்கப்பட்ட உட்கூரை மற்றும் துத்தநாக பேனல்களில் வரையப்பட்ட ஒரு பலக்கிய சித்திரவடிவம் (ஃப்ரீஸ்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மறுசீரமைப்பாளர்கள் ஃப்ரீஸ் வடிவத்தை ஆவணப்படுத்தி, பேனல்களை சரிசெய்தனர், மற்றும் ஓவியங்களை மீட்டெடுத்தனர். இது ஒட்டமான் காலத்திய கலைப்படைப்புகளின் குறிப்பிடத்தக்க பாதுகாப்பாகும்அப்புட் இல்லத்தில் மறுசீரமைக்கப்பட்ட உட்கூரை ஒன்றுஅப்புட் இல்லத்தில் மறுசீரமைக்கப்பட்ட கலைவேலைபாட்டின் (frieze) அம்சங்கள்மற்றோர் அறையில் காலப்போக்கில் மங்கிவிட்டிருந்த உட்கூரை வடிவங்கள் மீட்டெடுக்ப்பட்டுள்ளன.அப்புட் இல்ல அறை ஒன்றின் உட்கூரையின் அணுக்கத் தோற்றம்அப்புட் இல்ல மறுசீரமைப்பின் ஒரு முக்கிய அம்சம் சுமார் 5,000 சதுர மீட்டர் உள் மற்றும் வெளிப்புற சுவர்களை மாற்றியமைத்தது. வரலாறு சார்ந்த கட்டிடங்களின் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த பாதுகாப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சுண்ணாம்பு அடிப்படையிலான காரை பயன்படுத்தப்பட்டது. புதிய பிளாஸ்டர் மற்றும் வண்ணப்பூச்சு சுவர்களுக்குள் ஈரப்பதத்தை உருவாக்குவதைத் தடுக்கும்.இல்லம் முழுவதும் கூரையின் மரச்சட்டங்கள் பழுதுபார்க்கப்பட்டு, சில இடங்களில் நிலைவெள்ளி எஃகுவினால் வலுப்படுத்தப்பட்டன.ஜன்னல் கண்ணாடிகளை உருவாக்குவதற்கு பாரம்பரிய கண்ணாடிமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.மத்திய தரைக்கடல் கடலை எதிர்நோக்கியவாறு இருக்கும் சீரழிந்துவிட்ட பளிங்கு தூண்கள் மற்றும் மேற்பகுதிகள் ஒரே மாதிரியான பிரதிகளைக் கொண்டு மாற்றப்பட்டன.கட்டிடத்தில் மறுசீரமைக்கப்பட்ட தரை கற்களின் உதாரணம்பொது சுகாதார கட்டுப்பாடுகளின் தளர்வு அனுமதித்தவுடன், யாத்ரீகர்களின் வரவிற்கு அப்புட் இல்லத்தின் கதவுகள் மீண்டும் திறக்கப்படும்.