கம்போடியாவில், இளைஞர் முன்முயற்சி வெள்ளத்தின் போது நில அரிப்பை குறைக்கின்றது8 அக்டோபர் 2021


இளம் வயதினர் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வெப்பத்திலிருந்து தங்குமிடம் வழங்குவதற்குமான முயற்சிகள், வெள்ளம் தாக்கும் போது ஒரு சாலை அரிக்கப்படாமல் தடுப்பதற்கான கூடுதல் நன்மையைக் கொண்டிருந்தன.

ஒக்சேய், கம்போடியா, 14 ஏப்ரல் 2021, (BWNS) – 2019’ஆம் ஆண்டில், கம்போடிய கிராமமான ஒக்சேயில் இளைய இளைஞர் குழு ஒன்று காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வெப்பத்திலிருந்து தங்குமிடம் வழங்குவதற்கும் ஒரு சாலை வழியாக மரங்களை நடவு செய்ய புறப்பட்டது. அந்த நேரத்தில், ஒரு வருடம் கழித்து வந்த வெள்ளத்தின் போது சாலையின் இந்தப் பகுதி கடுமையான அரிப்புகளிலிருந்து பாதுகாக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது.

அதன் தாக்கத்தில் மிதமானதாக இருந்தாலும், இந்தத் திட்டம் மற்றும் அதை எவ்வாறு தொடர்ந்து ஆதரிக்க முடியும் என்பதும் சமீபத்தில் அண்டை கிராமங்களின் உள்ளூர் தலைவர்களிடையே விவாதிக்கப்பட்டது.

“இந்த இளைஞர்கள் தங்கள் திட்டத்தைத் தொடங்கவில்லை என்றால், நாங்கள் முழு சாலையையும் இழந்திருக்கக்கூடும். அவர்கள் தங்களின் முயற்சிகளைத் தொடர நாங்கள் அவர்களுக்கு இ்பபோது உதவினோமானால், எதிர்காலத்தில் வெள்ளம் குறித்த விஷயத்தில் ஒரு பெரும் வித்தியாசத்தை நாம் காணலாம் ”என்று ஓக்சே கிராமத்தின் தலைவர் செர்ட் சே கூறினார்.

சமுதாய சேவைக்கான திறன்களை வளர்க்கும் பஹாய் கல்வித் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் இந்த முயற்சியை மேற்கொள்ள இளைஞர்கள் தூண்டப்பட்டனர். குழுவில் பணிபுரியும் ஒரு மூத்த இளைஞரான பீயப், இந்த கல்வித் திட்டங்களின் ஒரு முக்கிய அம்சத்தை விவரிக்கிறார்: “இந்த இளைஞர்கள் தங்கள் கிராமத்தின் சமூக மெய்நிலையை விவரிக்கவும், அவர்கள் தீர்க்கக்கூடிய தேவைகளை அடையாளம் காணவும் ஓர் அத்தியாவசிய திறனை வளர்த்து வருகின்றனர்.”

குழுவின் இளம் உறுப்பினர்களில் ஒருவர் திட்டத்தின் பின்னணியில் உள்ள சிந்தனையை விளக்குகிறார். “கோடையில் வெப்பம் அதிகரிக்கிறது, சாலையில் நடப்பவர்களுக்கு நிழல் இல்லை, எனவே நாங்கள் மரங்களை நடவு செய்ய முடிவெடுத்தோம்.”

“மரங்கள் பூக்களையும் பழங்களையும் கொடுக்கின்றன, இது எங்கள் கிராமத்தை மிகவும் அழகுபடுத்துகிறது” என்று மற்றொரு இளைஞர் கூறுகிறார்.

கிராமத்தின் பிற இளைஞர்கள் உட்பட உள்ளூர் தலைவர்களும் சமூக உறுப்பினர்களும் ஆரம்பத்தில் இருந்தே இந்தத் திட்டத்தை ஆர்வத்துடன் ஆதரித்தனர். மிகவும் பொருத்தமான தாவர இனங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை வழங்கி மரங்களை நடவு செய்வதற்கு உதவி செய்தனர்.

திரு. சே குழுவைப் பற்றிய தமது அவதானிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்: “இது பஹாய் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது, ஏனென்றால், எங்கள் கிராமத்தின் இளைஞர்கள் பள்ளியிலிருந்து திரும்பி வந்த பின்னர் தங்கள் நேரத்தை அர்த்தமுள்ள கருப்பொருள்களைப் பற்றி விவாதிக்கவும் கிராம சேவையில் ஈடுபடவும் செய்கிறார்கள்.” இந்த வாரம் அவர்களின் மிகச் சமீபத்திய கூட்டத்தில், இளைஞர்கள் தங்கள் முயற்சிகளை எவ்வாறு தொடரலாம் என்பதைப் பற்றி பிரதிபலிப்புச் செய்தனர். ஓர் இளைஞர், “கிராமத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியாகக் காணும்போது, ​​எங்கள் இதயங்கள் களிப்பால் நிறைந்திருக்கின்றன. ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்க எங்கள் பங்கை எவ்வாறு ஆற்ற முடியும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1502/