அப்துல்-பஹா: குழந்தைகளுடனான ஒரு சந்திப்பு


குழந்தைகளுடனான ஒரு சந்திப்பு

ஒரு நாள் மாலை வேளை ஜூலியட் (தோம்ஸன்) மற்றும் அவரின் நண்பர்கள் சிலரும் அப்துல்-பஹாவை அவரது தோட்டத்தின் பாதைகளின் வழி பின்பற்றிச் சென்றபோது திடீரென சில குழந்தைகள் அருகிலிருந்த புதர்களிலிருந்து கத்தியபடி வெளியே வந்து சிரித்துக்கொண்டு குழுவினரின் மீது கற்களை எறிந்தனர். தூரத்திலிருந்து அப்துல்-பஹா அவர்களைப் பார்த்து, “உலக மக்கள் குருடர்களாகிவிட்டனர்,” என துக்கத்துடன் கூறினார். சிறார்கள் எப்படி தோன்றினார்களோ அதே போன்று மறைந்தனர். பிறகு மாஸ்டர், “அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தனர், இருந்தும் என் உடை இயேசுவின் உடை, அவர் அனிந்திருந்த அதே உடைதான்,” என்றார்.

ஜூலியட் தோம்சன்

அதற்கு அடுத்த நாள், ஜூலியட் மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் அப்துல்-பஹாவின் குழுவோடு திரு மற்றும் திருமதி ஹேரிஸ் தம்பதியினரை அடுக்குமாடி இருப்பிடப் பகுதியில் சந்திக்கச் சென்றனர். அப்போது அங்கும் சில குழந்தைகள் தங்கள் விளையாட்டை விடுத்து மாஸ்டரை “குழந்தைகள் சிலுவைப்போர்” போன்று பின்தொடர்ந்து சென்றனர். ஜூலியட் சென்ற இரவு குழந்தைகளின் நடத்தையிலும் இக்குழந்தைகளின் நடத்தையிலும் இருந்த பெரும் வேறுபாட்டை எண்ணி அதிசயித்தார். ஒரு சிறு பெண், “தயவு செய்து கூறுங்கள், இவர் இயேசுவா?” எனக் கேட்டாள். குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த ஜூலியட் தமது நண்பரை ஹேரிஸ் தம்பதியினரின் இல்லத்தில் இருந்த மாஸ்டரிடம் நிகழ்ந்ததை தெரிவிக்கும்படி அனுப்பினார். அந்த நண்பரும் அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை அக்குழந்தைகள் அனைவரும் கின்னி தம்பதியரின் இல்லத்தில் அப்துல்-பஹாவோடு சேர்ந்துகொள்வதற்கான அழைப்போடு திரும்பிவந்தார்.

ஹோவார்ட் கோல்பி ஐவ்ஸ் தாம் இப்போது அடிக்கடி விஜயம் செய்யும் கின்னி தம்பதியினரின் இல்லத்தில் தாம் கண்ட ஓர் அருமையான காட்சியை வருணித்தார். அன்று, ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்த ரெவரன்ட் ஐவ்ஸ் “சப்தமிட்டவாறும் அவ்வளவு சீரான உடைகள் அனியாத,.. ஆனால் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்த சுமார் முப்பது தெருச்சிறுவர்கள், வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்டு அதிசயித்தார். அவர் அச்சிறுவர்களைப் பின்தொடர்ந்து மாடி சென்றார். அங்கு அப்துல்-பஹா அவர்களை புன்னகையுடனும் நகைத்துக்கொண்டும் ஒருவர் ஒருவராக வரேவற்பதைக் கண்டார்.  இறுதியாக தோன்றியது ஒரு கருப்பினச் சிறுவன். மாஸ்டர் அவனைக் கண்டபோது, அவரது முகம் பிரகாசமடைந்தது முகத்தில் ஒரு தெய்வீகமான புன்னகை தோன்றியது. அவர், “இதோ ஒரு கருப்பு ரோஜா!” என உரக்கக் கூறினார். கூடியிருந்த எல்லோரும் ஓர் அதிசய உணர்வில் ஆழ்ந்திருந்தனர். அப்துல்-பஹா ஒவ்வொரு குழந்தையிடமும் சென்று அன்பாகப் பேசி சாக்லட்டுகளை வழங்கிய போது அவ்வுணர்வு மேலும் அதிகரித்தது. அவர் வெகு கருப்பான ஒரு சாக்ல்ட்டை கையில் எடுத்துக்கொண்டு அக்கருப்பின சிறுவனிடம் சென்று, “ஒரு வார்த்தையும் பேசாமல், ஆனால் கூடியிருந்தோரை நோக்கிய குறும்புப் பார்வையுடன், அச்சிறுவனின் கருப்புக் கண்ணத்தில் அக்கருப்புச் சாக்லட்டை வைத்தார். அப்துல்-பஹாவின் முகம் பிரகாசமடைந்திருந்தது… அப்பிரகாசம் அறையை ஒளிரச் செய்தது.” குழந்தைகள் அவனை அதற்குமுன் பார்த்ததே இல்லை போன்று அக்கருப்பினச் சிறுவனை அதிசயத்துடன் பார்த்தனர். “அச்சிறுவனைப் பொருத்தவரையில்… அவன் கண்கள் மாஸ்டரை உன்னிப்புடனும், உவகையுடனும் பார்த்துக்கொண்டிருந்தன. அந்நேரம் அவன் நிலைமாற்றமடைந்திருந்தான். அவனுடைய மெய்நிலை வெளிக்கொணரப்பட்டிருந்தது, தேவதை எனும் அவன் நிலை வெளிப்பட்டிருந்தது.

அப்துல்-பஹா: இண சமத்துவம்


இன சமத்துவம் குறித்து அப்துல்-பஹா

Baha'i Heroes & Heroines: Louis Gregory – First Hand of the Cause of Negro  race; “noble-minded”; “golden-hearted”; “pride (and) example (to the) Negro  adherents (of the) Faith”
லூயி கிரேகரி

அப்துல்-பஹா அமெரிக்கா சென்றடைந்தது முதல் இன சமத்துவம் குறித்த தமது அகநோக்கை தைரியத்துடனும் அசாதாரன வழிகளிலும் வெளிப்படுத்தினார். வாஷிங்டன் நகரில், ஒரு பஹாய் நம்பிக்கையாளரும் பிரபலமான பாரசீக ராஜ தந்திரியுமான ஒருவரின் இல்லத்தில் 23 ஏப்ரல் 1912ல் தமக்காக வழங்கப்பட்டிருந்த ஒரு பகல்விருந்தின் போது அவர் இதை வெளிப்படுத்தினார். தமது இருக்கையில் அமர்ந்து, வெகு நேர்த்தியான உணவு பரிமாறும் அறையில், அவரவர் தரத்திற்கும் சமூக அந்தஸ்திற்கும் ஏற்ற வகையில் வாஷிங்டன் நகரின் சமூக நெறிமுறைகளுக்கிணங்க அங்கு கூடியிருந்த வெள்ளை முகங்களை அவர் நோட்டமிட்டார். எழுந்து நின்று “திரு கிரேகரி எங்கே? அவரை இங்கு அழைத்துவாருங்கள்,” என விருந்தளிப்பவரை நோக்கிக் கூறினார். தர்மசங்கடத்தில் ஆழ்த்தப்பட்ட விருந்தளிப்பவர் வேறு வழியின்றி அவ்விடத்தின் அமர்கையை மாற்றியமைத்து அப்போதுதான் உரையாற்றி முடித்திருந்த அப்துல்-பஹாவை ஹோவார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அந்த இராஜதந்திரியின் வீட்டிற்கு அழைத்துவந்திருந்த, ஆப்பிரிக்க-அமெரிக்கரும் வழக்குறைஞருமான லூயி கிரேகரிக்கு மேற்கொண்டு ஓர் இருக்கையை ஏற்பாடு செய்தார். திரு கிரேகரி அப்போது விடைபெற்றுக்கொண்டிருந்தார். அப்துல்-பஹா அவரும் அவ்விருந்தில் கலந்துகொள்ளவேண்டுமென வற்புறுத்தி மேஜையின் மரியாதைக்குறிய தலைப்பகுதியில் தமக்கருகே அமரச்செய்தார். அதன் வாயிலாக, வாஷிங்டன் நகரின் மரபிற்கு எதிராக செயல்பட்டு இனவாரியாக பிரித்தலையும் சமூகரீதியாக பாகுபடுத்துவதையும் புறக்கணித்து, ஒரு வலுவான உதாரணத்தை வெளிப்படுத்தி, வெகுவாகப் பிளவுபட்டுக்கிடந்த அத்தலைநகரின் வழக்கமுறைகளுக்குச் சவால் விட்டார். அவர் தமது ஐக்கிய அமெரிக்கப் பயணத்தின் எல்லா நேரங்களிலும் தாம் உரையாற்றிய எல்லா இடங்களும் எல்லா இனங்களுக்கும் திறந்துவிடப்படவேண்டுமென வலியுறுத்தினார்.

அப்துல்-பஹா இனங்களை ஐக்கியப்படுத்தும் ஒருவழியாக கலப்புத்திருமணங்களை ஊக்குவித்தார். அத்தகைய திருமணங்கள் திடகாத்திரமும் அழகும் மிக்க, புத்திசாலிகளும் திறமைசாலிகளுமான குழந்தைகளை உருவாக்கிடும் என அவர் கூறினார். இத்தகைய முதல் கலப்புத் திருமணம் 1914ல் நடைபெற்றது.

லூயி கிரேகரி மற்றும் அவரது மனைவி

ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஓர் உரையில், அலங்காரத்திற்கும் வசீகரத்திற்கும் அல்லாது, தோல் நிறம் என்பது கடவுளின் முன்னிலையில் வேறு எவ்வகையிலும் முக்கியமானதல்ல என சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் எடுத்துக்கூறினார். மனிதர்களுக்கு இடையில் மட்டும்தான் தோல் நிறம் வேற்றுமைக்கான காரணமாக உள்ளது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

“மானிட உலகும், ஒரு பூங்காவைப் போன்றது, மனித இனம் அதன் பல்வர்ணப் பூக்களைப் போன்றவர்கள். ஆகவே, வேறுபட்ட நிறங்கள் அலங்காரமாகவே திகழ்கின்றன.”

“மிருகங்கள், அவற்றுக்கு பகுத்தறிவும் புரிந்துகொள்ளும் தன்மையும் இல்லாத போதும் நிறங்களை வேற்றுமைக்கான காரணமாக்கவில்லை. பகுத்தறிவுடைய மனிதன் மட்டும் ஏன் முறன்பாட்டை உருவாக்க வேண்டும். இது அவனுக்கு முற்றிலும் ஏற்புடையதல்ல.”

அப்துல்-பஹா சிக்காகோவில் ஹுல் இல்லம் எனும் ஓரிடத்தில் பின்வருமாறு கூறினார்: “மானிடத்தின் ஒருமைத்தன்மையை பஹாவுல்லா பிரகடனப்படுத்தியுள்ளார். பல்வேறு நாடுகளையும் வேறுப்பட்ட நம்பிக்கைகளையும் ஒற்றுமைப்பட செய்துள்ளார். இனம், நிறம் ஆகியவை ஒரு தோட்டத்தின் வர்ணங்களால் வேறுபடும் அழகைப் போன்றவையாகும். நீங்கள் ஒரு தோட்டத்தில் நுழையும்போது, அங்கு மஞ்சள், வெள்ளை, நீலம், சிகப்பு நிறப் பூக்கள் நிறைந்து அழகுடன் காணப்படலாம். அவை ஒவ்வொன்றும் பிரகாசத்தடனும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபட்டும் அவற்றின் தனியழகு ஒட்டுமொத்தத்திற்கு அழகு சேர்க்கவும் செய்கின்றன. மனிதர்களுக்கிடையிலான இன வேற்றுமையும் அதே போன்றதுதான். ஒரு தோட்டத்தின் மலர்கள் யாவும் ஒரே நிறமாக இருந்தால், அது சலிப்பு தருவதாகவும் கண்களுக்குச் சோர்வளிப்பதாகவும் அமையும்.”

“ஆகவே, மானிடத்தின் பல்வேறு இனங்கள் ஒட்டுமொத்தத்திற்கும் கூட்டான இணக்கத்தையும் அழகையும் வழங்குகின்றன. ஆகவே, மானிடம் எனும் இம்மாபெரும் பூங்காவில் தங்களுக்கிடையில் எவ்வித வேற்றுமையோ கருத்துவேறுபாடோ இல்லாமல் அருகருகே வளரும் பூக்களைப் போன்று எல்லோரும் கலந்துறவாட வேண்டும்.”

Bahai.org: அது ஆரம்பித்து 25’வது வருடத்தில் அனைத்துலக வலைத்தளம் முக்கிய மறுவடிவமைப்பைக் காண்கிறது



8 அக்டோபர் 2021


புதுப்பிக்கப்பட்ட Bahai.org’யின் காட்சி, மேம்பாடுகள், கூடுதல் பிரிவுகள் மற்றும் பிற அம்சங்களை உள்ளடக்கியுள்ளதோடு, ஆண்டு முழுவதும் புதிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை வெளியிட வழி வகுக்கிறது

பஹாய் உலக மையம், 22 ஏப்ரல் 2021, (BWNS) – உலகளாவிய பஹாய் சமூகத்தின் http://www.bahai.org ‘இல் புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட வலைத்தளம் தொடங்கப்பட்டது, இது 1996’ஆம் ஆண்டில் தளம் முதன்முதலில் உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியான மேம்பாடுகளில் சமீபமான மேம்பாட்டைக் குறிக்கிறது. .

விரிவான மறுசீரமைப்பானது, மேம்பட்ட காட்சி அனுபவத்தையும் தளத்தின் 140 கட்டுரைகளின் எளிதான அணுகலை நோக்கமாகக் கொண்டுள்ள கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது,

தளத்திற்கான புதுப்பிப்புகளில் இரண்டு புதிய பிரிவுகள் அடங்கும் – “பிரத்யேக கட்டுரைகள்” மற்றும் “பிரத்யேக காணொளிகள்” – இது பஹாய் சமூக வாழ்க்கையில் பஹாய் சமூகத்தின் ஈடுபாடு, அனைத்துத் தரப்பு மக்களின் சமூக மற்றும் லௌகீக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகள் மற்றும் பஹாய் சமூக வாழ்க்கையில் சேவை மற்றும் வழிபாட்டின் ஒருங்கிணைப்பு பற்றிய Bahai.org வலைத்தள குழுமங்களிலிருந்து பெறப்பட்ட உள்ளடக்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றையும், புதிய காணொளிகளையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.

தளத்தின் புதிய பதிப்பு வரவிருக்கும் மாதங்கள் மற்றும் வருடங்களுக்குத் திட்டமிடப்பட்ட கூடுதல் சேர்க்கைகளுக்கான வழியைத் திறக்கிறது, இது உலகளாவிய பஹாய் சமூகத்தின் வளர்ச்சியையும், பஹாவுல்லாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க முயலும் உலகெங்கிலும் உள்ளவர்களின் அனுபவத்தையும் ஆராயும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1503/