கென்யா: ஆப்பிரிக்காவின் முதல் உள்ளூர் பஹாய் கோவில் அதன் கதவுகளைத் திறந்தது



8 அக்டோபர் 2021


“ஒற்றுமைக்கான சின்னமாக” விளங்கும் ஓர் உள்ளூர் கோவிலின் திறப்புவிழாவை மாத்துன்டா சோய் மக்கள் கொண்டாடுகின்றனர்.

மாத்துண்டா, கென்யா, 24 மே 2021, (BWNS) – ஆப்பிரிக்கா கண்டத்தின் முதல் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லமான கென்யாவின் மாத்துண்டா சோய்’இல் ஒரு பிரகாசமான ‘தோற்றம்’ ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு திறப்பு விழாவில் அர்ப்பணம் செய்யப்பட்டது.

ஓர் உள்ளூர் பாடகர் பாடிய “என் கடவுளே, என் பிரார்த்தனையை ஒரு ஜீவ நீர் ஊற்றாக்குவீராக” என்னும் குழுவிசை, தங்கள் மக்களின் ஆன்மீக பயணத்தில் ஒரு மகத்தான அடியெடுப்பை கொண்டாடுவதற்கு வந்திருந்த,.அர்ப்பணிப்பு விழாவில் கூடியிருந்த மக்களிடையே ஆழமாக எதிரொலித்ததுடன், அருகிலுள்ள மற்றும் கென்யா முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

வழிபாட்டு இல்லம் – பஹாய் எழுத்துகளில் மாஷ்ரிகுல் ‑ அஸ்கார் எனக் குறிப்பிடப்படுகிறது, இதன் பொருள் “கடவுள் புகழின் உதயபீடம்” – இதற்கு ஒரு தனித்துவமான மெய்நிலையுள்ளது. இது சமூகத்தின் மையத்தில் உள்ளது, எல்லா மக்களுக்கும் திறந்திருக்கும், மற்றும் பிரார்த்தனையும் சிந்தனையும் சமூக சேவையை ஊக்குவிக்கும் இடமுமாகும்.

ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழாவில், இந்த நிகழ்விற்கு உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாக பெயரிடப்பட்ட ஆப்பிரிக்காவில் உள்ள ஆலோசகர்கள் கண்ட வாரியத்தின் உறுப்பினரான டவுன்ஷெண்ட் லிஹாண்டாவின் கருத்துக்களும் அடங்கும்.
திரு. லிஹாண்டா நீதிமன்றத்தின் ஒரு கடிதத்தைப் படித்தார், அதில் கூறியதாவது: “… உலகம் நிச்சயமற்ற நிலையில் சிக்கித் தவிக்கும் ஒரு நேரத்தில், மாத்துண்டா சோய் மற்றும் அதற்கும் அப்பால் உள்ள நண்பர்களின் முயற்சிகள், மகிழ்ச்சி மற்றும் மிகுந்த களிப்பிற்கான ஒரு காரணமாக விளங்கும் ஆர்வநம்பிக்கைக்கான கலங்கரை விளக்கத்தை ஸ்தாபிப்பதில் அதன் உச்சநிலையை அடைந்துள்ளன.”

உலக நீதிமன்றம், மூன்று ஆண்டுகளில் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளதானது “கென்யா மக்களின் உள்ளுரம், வள ஆற்றல், மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்” எனக் கூறியது.

அரசாங்க அதிகாரிகள், கிராமம் மற்றும் மாவட்டத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள், உள்ளூர் மற்றும் தேசிய பஹாய் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், கட்டிடக் கலைஞர் மற்றும் கட்டுமானக் குழுவின் பிற பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டோரில் அடங்குவர்.

கோவில் அமைந்துள்ள கிராமங்கள் குழுமத்தின் தலைவரான மோரிஸ் முகோபி, “பஹாய் கோவில் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த அனைவரும் இங்கு வந்து வழிபடுவதை பஹாய் கோவில் வரவேற்கிறது என்பதாகும்.”

பஹாய் உலக செய்தி சேவையுடன் பேசும்போது, ​​அப்பகுதியில் வசிப்பவர்கள் பின்வரும் உணர்வுகளை எதிரொலித்துள்ளனர்: “மாத்துண்டா சோய் மக்கள் வழிபாட்டு இல்லத்தை ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கிறார்கள்” என்று ஆண்ட்ரூ ஜுமா கூறுகிறார்.

உள்ளூர் சமூகத்தின் மற்றொரு உறுப்பினரான எல்டர் கெய்ம்பா இவ்வாறு கூறுகிறார்: “எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் கோவிலில் பிரார்த்தனைக்கு ஒன்று சேர்வதால், முன்பு இருந்த வேறுபாடுகள் மறைந்துவிட்டன.”

ஒரு கிராம மூப்பரான ஜஸ்டஸ் வஃபுலா பின்வருமாறு கூறுகிறார்: “வழிபாட்டு இல்லம் என்பது சமூகத்தின் எதிர்மறை சக்திகளுக்கு இடந்தராத தளமாகும். நாம் கோவிலுக்குச் செல்லும்போது, ​​நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை அறிவோம். நாம் இல்லம் சென்றுவி்ட்டோம் என்பது நமக்குத் தெரியும். ”

கோவிலின் தோற்றம் உருவாக்கியுள்ள ஓர் இல்லத்தின் உணர்வு இப்பகுதியின் பாரம்பரிய குடிசைகளை நினைவூட்டுகிறது என்று வழிபாட்டு இல்லத்தின் கட்டிடக்கலைஞரான நேடா சமீமி விளக்குகிறார். “வழிபாட்டுத் தலம் என்பது உங்கள் ஆத்மாவுக்கு சொந்தமான இடமாகும்; அங்கு உங்கள் மதம் எதுவாக இருந்தாலும் நீங்கள் சௌகர்யமாக இருப்பதுடன், உங்கள் படைப்பாளருடன் இணைவு கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் முடியும்.”

கோயிலை எழுப்புவதற்கான செயல்முறை எவ்வாறு ஒன்றிணைவை உருவாக்கியது என்பதை திருமதி சமிமி விவரிக்கிறார்.

“இந்த கட்டமைப்பானது ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் கடவுளைப் புகழ்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நமது எல்லா பணிகளும் கலந்தாலோசனையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எங்கள் கூட்டங்கள் வெவ்வேறு சமயங்களின் பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கும். ”

இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுடன் கட்டுமானம் இந்த மாதத்தில் நிறைவடைந்தது. அதிவுயரிய நாமம் என அழைக்கப்படும் ஒரு புனிதமான பஹாய் சின்னம் குவிமாடத்தின் உச்சியில் உயர்த்தப்பட்டது.

பின்னர், சனிக்கிழமையன்று, பஹாய் உலக மையத்தில் உள்ள புனித நினைவாலயங்கள் ஒன்றின் தூசி அடங்கிய ஒரு சிறிய அலங்காரச் சிமிழ் வழிபாட்டு மன்றத்தின் கட்டமைப்பிற்குள் வைக்கப்பட்டது, இது கோயிலுக்கும் பஹாய் சமயத்தின் ஆன்மீக மையத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பைக் குறிக்கிறது.

1970’களில் சமயம் இங்கு தோன்றியதிலிருந்து இப்பகுதியில் பஹாய் சமூக வாழ்க்கை எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதை மாத்துண்டா பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை உறுப்பினரான ஜான் மடாஹனி விளக்குகிறார். “கடந்த காலத்தில், சில பஹாய்கள் மட்டுமே தங்கள் வீடுகளில் பிரார்த்தனைக்காக கூடிவருவார்கள். இப்போது 300’க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழக்கமாக பக்தி கூட்டங்களை நடத்துகின்றன, தங்கள் அண்டையர்களுடன் பிரார்த்தனை செய்கின்றன, ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என வினவாமல் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

“கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பு அதிகாலையில் கோவில் மைதானத்தில் ஒன்றுகூடும் நடைமுறையை நாங்கள் ஆரம்பித்தபோது, சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் அன்றாட பணிகள் குறித்து செல்வதற்கு முன்பு,, அதுபோன்ற ஒரு தருணத்தில் அவர்கள் ஒன்றுசேர்வது, எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாங்கள் கண்டோம். இல்லையெனில், நாங்கள் ஒருபோதும் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களை ஒரே நேரத்தில் ஒன்றாகப் பார்க்க மாட்டோம். ”

உள்ளூர் சபையின் மற்றோர் உறுப்பினரான பெர்னார்ட் லியோசி: “வழிபாடு மற்றும் சேவை இரண்டின் மூலமும் வழிபாட்டு இல்லம் நம்மை கடவுளின் அண்மைக்குக் கொண்டு வருகிறது. கோயிலில் ஒன்றுகூடுவதன் மூலம் நாங்கள் ஆற்றல் பெறுகிறோம், மற்றும் வலுவான சமூகங்களை உருவாக்குவதற்கு நாங்கள் இந்த ஆற்றலை கால்வாய் இடுகின்றோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1511/

அயர்லாந்து நாட்டில் ஒலியோடை (podcast) தொடர் அடிமட்ட உரையாடலுக்கு அழைப்பு விடுக்கின்றது



8 அக்டோபர் 2021


ஐரிஷ் மொழியில் ‘உரையாடல்’ என்று பொருள்படும் கொம்ஹ்ரா, அயர்லாந்து பஹாய்களால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒலியோடை ஆகும், இது சமூக வாழ்க்கைக்கு மையமான கருப்பொருள்கள் குறித்த நண்பர்களிடையிலான கலந்துரையாடல்களை மேம்படுத்துவதற்கான ஒரு சாளரத்தை வழங்குகிறது.

டப்ளின், 20 மே 2021, (BWNS) – ஐரிஷ் மொழியில் ‘உரையாடல்’ என்று பொருள்படும் கொம்ஹ்ரா, அயர்லாந்து பஹாய்களால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒலியோடை ஆகும், இது சமூக வாழ்க்கைக்கு மையமான கருப்பொருள்கள் குறித்த நண்பர்களிடையிலான கலந்துரையாடல்களை மேம்படுத்துவதற்கான ஒரு சாளரத்தை வழங்குகிறது.

“நாங்கள் பொதுவாகக் காணப்படாத ஒரு மட்டத்தில் சமுதாய சொல்லாடல்களில் ஈடுபட விரும்புகிறோம், பெரும்பாலும் செவிமடுக்கப்படாதோரிடமிருந்து சேவிமடுத்திட விரும்புகிறோம்” என்று ஐரிஷ் பஹாய் சமூக வெளிவிவகார அலுவலகத்தின் பாட்ரிசியா ரெய்ன்ஸ்ஃபோர்ட் கூறுகிறார்.

“கொள்கை குறித்த உயர் மட்ட விவாதங்களுக்கு ஓர் இடம் உள்ளது, ஆனால் இந்த ஒலியோடையில் உள்ள உரையாடல்கள் அடித்தட்டில் காணப்படும் சமூக மாற்றத்தின் ஒரு முக்கிய அங்கத்தைப் பார்க்கின்றன-செவிமடுப்போர் தங்கள் சொந்த வாழ்க்கையில் பிரதிபலிக்கப்படுவதைக் காணக்கூடிய கருத்துக்களை அது குறித்துரைக்கின்றன.”

ஓர் அத்தியாயத்தில், சமூகவியலாளர் இர்ஃப்லைத் வாட்சன் மற்றும் அவரது நண்பரும் சகாவுமான பிரெண்டன் மெக்னமாராவும் பலவகையான சமூகத்தில் அதிக ஒற்றுமைக்குப் பங்களிப்பதில் அடையாளத்தின் பங்கு பற்றி விவாதிக்கின்றனர். “பஹாய் சமயம் மனிதகுலத்தின் ஒற்றுமையைப் பற்றி கற்பிக்கிறது” என்று டாக்டர் வாட்சன் கூறுகிறார்.

“நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் போக்குகளை முறியடிக்கும் போது மக்களை ஒன்றிணைக்கும் அடையாள உணர்வை எவ்வாறு பராமரிக்க முடியும் என்பதுதான். … உலகளவில் இது நடக்கவில்லை என்றாலும், நமது சொந்த வட்டாரத்திலாவது ஒரு நல்ல சமூக உணர்வை உருவாக்கிட நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தங்களின் சொந்த உள்ளூர் சமூகத்தில் உள்ளவர்கள் உணருவார்கள். அந்த அடிமட்டத்திலிருந்து உள்ளூர், தேசிய மற்றும் இறுதியாக சர்வதேச ஒத்துழைப்பு வளரும். ”

மற்றொரு அத்தியாயத்தில், வாட்டர்ஃபோர்டு நகரத்தைச் சேர்ந்த பஹாயான ஃபிராங்க் கென்னடி, அயர்லாந்திற்கு புதிதாக வந்து குடியேறியவர்களுக்கு ஆதரவான இடத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியைப் பற்றி பேசுகிறார்.

இந்த உரையாடலில், திரு. கென்னடி, அனைத்து மதங்களுக்கும் பொதுவான மன்னிக்குந்தன்மை, அன்பு மற்றும் ஆர்வநம்பிக்கை குறித்த கொள்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு தங்கள் வேறுபாடுகளை சமாளிக்க முடிந்தது என்பதை விவரிக்கிறார்.

போட்காஸ்டின் எதிர்காலத்தைப் பற்றி பேசுகையில், திருமதி ரெய்ன்ஸ்ஃபோர்ட் இவ்வாறு கூறுகிறார்: “நமது கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள பெருந்தொற்று மற்றும் சூழ்நிலைகள் நாம் ஒவ்வொருவரும் சக்தியற்றவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் எனும் உணர்வை ஏற்படுத்தக்கூடும். தொடக்கத் வரிசையின் யோசனை, ‘ஸ்பார்க்ஸ் ஆஃப் ஹோப்’ என அழைக்கப்படுகிறது, நேர்மறையான செயல்கள் ஆர்வநம்பிக்கைக்கு உரியவை. அவை, எவ்வளவு சிறிதாக இருப்பினும் – இருள்சூழ்ந்த மற்றும் கடின நேரங்களை ஒளிரச் செய்யும் ஆற்றல் கொண்ட தீப்பொறிகள் போன்றவை. ”

இன்று வெளியிடப்பட்ட, “எல்லோரும் இங்கே ஒரு காரணத்திற்காக உள்ளனர்” எனும் தலைப்பில் சமீபத்திய அத்தியாயம் இயலாமை மற்றும் சேர்க்கை குறித்த பிரச்சினைகளை ஆராய்கிறது. இனி ஒலியோடையில் வரவிருக்கும் உரையாடல்கள், இனரீதியான தப்பெண்ணம் மற்றும் வன்முறைக்கு விடையிறுக்கும் வகையில் நீதியின் ஆக்கபூர்வ கருத்தாக்கத்தை கண்ணுறும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1510/

பேரழிவுமிக்க சூறாவளிக்கு இடையில் தீமோர் லெஸ்ட்டே’யின் முதல் தேசிய ஆன்மீக சபை தேர்ந்தெடுக்கப்பட்டது



8 அக்டோபர் 2021


பஹாய் தேசிய ஆன்மீக சபையை நிர்மாணிப்பது பஹாய் சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகளில் ஒரு புதிய உத்வேகத்தை உண்டாக்கியுள்ளது.

திமோர்-லெஸ்டே பஹாய்களின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஆன்மீக சபையின் ஒன்பது உறுப்பினர்கள் தங்கள் முதல் சந்திப்புக்காக இணையத்தில் ஒன்றுகூடுகிறார்கள்.

டிலி, திமோர்-லெஸ்டே, 7 மே 2021, (BWNS) – கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளத்திற்கு விடையிறுக்கும் அயராத முயற்சிகளுக்கு மத்தியில், திமோர்-லெஸ்டே பஹாய்களின் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஆன்மீக சபை உறுப்பினர் ஒருவர், கடைசியாக நடந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல்களைக் குறிப்பிட்டு, நெருக்கடியும் வெற்றிகளும் கைகோர்த்துச் செல்கின்றன எனக் கூறுகிறார்.

நடைமுறையில் உள்ள நிலைமைகளின் அடிப்படையில், பிரதிநிதிகள் தொலைதூர முறையில் வாக்களித்தனர். “திமோர்-லெஸ்டேயில் ஒரு தேசிய ஆன்மீக சபை இருப்பதற்கு நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம்” என்று சபை உறுப்பினரான கிரேசியானா டா கோஸ்டா ஹெர்குலானோ போவிடா கூறுகிறார்.

திமோர்-லெஸ்டே பஹாய்களுக்கான ஒரு செய்தியில், உலக நீதிமன்றம்: “தேசிய சபையை ஸ்தாபிப்பது உங்கள் சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீக நல்வாழ்வுக்கு அதிகரிக்கும் செயல்திறனுடன் பங்களித்திட உதவும்…” எனக் கூறியுள்ளது.

​நாட்டின் பஹாய்கள், ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகலில் இருந்து மூன்று பஹாய்கள் 1954 ஆம் ஆண்டு டிலிக்கு வந்ததிலிருந்து தங்கள் சமூகத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1958’இல், முதல் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை டிலியில் ஸ்தாபிக்கப்பட்டது. பிற நாடுகளிலிருந்து சில பஹாய்கள் 70’களின் நடுப்பகுதி வரை தொடர்ந்து அங்கு வந்தாலும், பஹாய் சமூகம் 1999’யில்தான் மீண்டும் தோன்றியது, சமூகத்தை உருவாக்கும் முயற்சிகள் 2011’இல் வேகத்தில் அதிகரித்தன.

செரோஜா சூறாவளியால் நாடு தாக்கப்பட்டபோது, ​​கடந்த மாதம் தேசிய சபைத் தேர்தலை திமோர் பஹாய்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏப்ரல் 4’ஆம் தேதி கடுமையான வெள்ளப்பெருக்குத் தொடங்கியது, நிலச்சரிவுகளாலும் கொசுக்களால் பரவும் நோய்களாலும் நாடு முழுவதும் கடுமையான உயிர் இழப்பு ஏற்பட்டது.

“ஒரு பேரழிவின் அகத்திலிருந்து இந்த ஸ்தாபனம் உருவாகிறது” என தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான வாகீதே ஹொசைனி கூறுகிறார். “இவை பல வாரங்களான சோதனைமிக்க காலமாகும், ஆனால், எல்லோரும்,குறிப்பாக இளைஞர்கள், தங்களால் இயன்றதைச் செய்திட முயல்கிறார்கள்,”

முயற்சிகளை ஒருங்கிணைக்க டிலியின் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையால் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை உருவாக்கியது விடையிறுத்தல்களின் முக்கிய அம்சமாகும். 13 கிராமங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் 7,000’க்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவக்கூடிய உணவு, கொசு வலைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்திட பணிக்குழு வசதி செய்துள்ளது. சாலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடைய உதவும் வகையில் ஒரு படகு கட்டப்படவும் பணிக்குழு ஏற்பாடு செய்தது.

“பஹாய் ஸ்தாபனங்களும் உள்ளூர் அதிகாரிகளும் அடித்தட்டில் உள்ளவர்களுடன் தோளுடன் தோள் கொடுத்து பணியாற்றியுள்ளனர்” என தேசிய சபையின் மற்றொரு உறுப்பினரான மேடலினா மரியா பாரோஸ் கூறுகிறார். “வெள்ளத்தில் எல்லாவற்றையும் இழந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்ணின் வீட்டிற்குச் செல்ல எனது கிராமத்தின் xefe’யுடன் (தலைவர்) சென்றேன். பெண்ணின் நிலைமையால் ஆழ்ந்த மனக்குழப்பத்திற்கு ஆளான xefe, அவரை ஒரு போர்வையில் போர்த்திவிட்டு, நாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களைக் கொண்டு அவருக்கு உணவு சமைத்தார்.”

டிலியின் கடும் பாதிப்புக்குள்ளான மாசின்-லிடூன் பகுதியில் உள்ள பஹாய்’ஆன ஆல்பர்ட்டோ டொஸ் ரெய்ஸ் மென்டோன்கா: “எங்கள் அண்டைப்புறத்தில் பஹாய் நடவடிக்கைகள் ஆறு மாதங்களுக்கு முன்புதான் தொடங்கின, அந்தக் குறுகிய காலத்தில் நாங்கள் எவ்வாறு ஒன்றாக சேவை செய்வது என்பது பற்றி அதிகம் கற்றுக்கொண்டோம்.

“ஒவ்வொரு நாளும் நாங்கள் செயல்படுகிறோம், பிரதிபலிக்கிறோம், பின்னர் அடுத்த நாளுக்குத் திட்டமிடுகிறோம். வெள்ளம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு மேலும் அதிக உதவிகள் வந்தன, மக்களுக்கு அரிசி, எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் கிடைத்தன. ஆரோக்கியமாக இருப்பதற்கு நமக்கு இப்போது புரதமும் காய்கறிகளும் தேவை என நாங்கள் கூறி, நாங்கள் விநியோகிப்பதற்கு எங்களுக்கு முங் பீன்ஸ் மற்றும் பிற காய்கறிகளை வழங்கக்கூடிய நிறுவனங்களை நாங்கள் அணுகினோம்.”

இந்த முயற்சிகள் முழுவதும் மக்களைத் தக்கவைத்துள்ள பக்தி உணர்வைப் பற்றி மாசின்-லிடூனில் வசிக்கும் தேசிய சபை உறுப்பினர் மார்கோஸ் டா கோஸ்டா டயஸ் இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் ஒவ்வொரு காலையிலும் அதிகாலையிலும் பிரார்த்திக்கிறோம், ஒற்றுமை, நிம்மதி ஆகியவற்றை உணர்கிறோம், பிரார்த்தனை மனப்பான்மையுடன் ஒன்றுகூடுகிறோம். அது நிவாரணம் மற்றும் மீட்புப்பணிக்கான தினசரி நடவடிக்கைகள் முழுவதும் நீடித்திருக்கும்.”

கடந்து சென்ற மாதத்தைப் பற்றி திருமதி ஹெர்குலானோ போவிடா இ்வ்வாறு கூறுகிறார்: “இந்த நெருக்கடிக்கான எங்கள் விடையிறுப்பில், அப்துல்-பஹாவின் உதாரணத்தைக் காண்கிறோம்–அவர் சென்ற இடங்களிலெல்லாம், சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவிட அவர் எப்போதும் வழிகளைக் கண்டுபிடித்தார். அதே சேவை உணர்வை தேசிய ஆன்மீக சபையும் இப்போது உணர்கிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1507/

சேவை செய்தல்


சேவை செய்தல்

ஒரு மனிதனிடம் அவனுக்குத் தெரிந்த பொருள்கள் அனைத்தின் நோக்கத்தை கேட்போமானால் அவன் அவை ஒவ்வொன்றுக்கும் அவனுக்குத் தெரிந்த ஒரு காரணத்தைக் கூறுவான். ஒரு வீடு, வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி, என எதைக் கேட்டாலும் அதற்கு அவன் பதில் கூறிவிடுவான். ஆனால் அவன் தானே எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான் என கேட்போமானால், அதற்குப் பெரும்பாலும் பதில் தெரியாது. அறிது அறிது மானிடராய் பிறத்தல் அறிது… என ஔவையார் கூறியுள்ளார். ஆனால் தான் எவ்வகையில் அறிதானவன் என்பது மனிதனுக்குப் பொதுவாகத் தெரியாது.

பழமரங்கள் கனி கொடுக்கவே படைக்கப்பட்டுள்ளன. மேகம் மழை பொழிவதற்காகப் படைக்கப்பட்டுள்ளது. சூரியன் ஒளியும் வெப்பமும் தருவதற்காகப் படைக்கப்பட்டுள்ளது. நிலம் மனிதனுக்கு உணவளிக்கப் படைக்கப்பட்டுள்ளது. காற்று மண்டலம் மனிதன் உயிர்வாழத் தேவையான உயிர்க்காற்றைக் வழங்குகின்றது. இவ்வாறாக, படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காகவும் எதையாவது கொடுப்பதற்காகவும் படைக்கப்பட்டுள்ளன. மகாபாரதத்தில் கர்ணனின் கதை அனைவரும் அறிந்ததே. கர்ணன் வேறு யாருமல்ல. அவன் ஒவ்வொரு மனிதனையும் பிதிநிதிக்கின்றான். கொடுப்பதற்கென்றே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதன் எடுத்துக்காட்டாக கர்ணன் எனும் ஒரு பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இதிகாசங்கள் மனிதர்களுக்கு இதுபோன்ற பாடங்கள் புகட்டுவதற்காகவே எழுதப்பட்டுள்ளன.

செல்வம் என்னும் ஒரு கருப்பொருளை எடுத்துக்கொள்வோம். குழந்தை செல்வம், பொருட் செல்வம், என செல்வங்களுள் பல உள்ளன. செல்வம் என்பது பொருட்செல்வம் மட்டுமல்ல. நமது ஆன்மீகப் பண்புகள், நமது அறிவு, மானிடத்திற்கான நமது சேவை ஆகியவை நமது உண்மையான செல்வங்களுள் சிலவாகும். இவையாவும் நாம் பத்திரமாக வைத்துக்கொள்வதற்காக வழங்கப்பட்டவையல்ல. அவை பிறருக்கு பயன்படும்போதே அவை நமக்கு வழங்கப்பட்டுள்ளதன் உண்மையான நோக்கம் நிறைவேறுகின்றது.

அடுத்து, கடவுளை அறிந்து வழிபடுவதற்காகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என பஹாய் திருவாக்குகள் கூறுகின்றன. இங்கு கடவுளை வழிபடுவது என்றால் என்ன? யாவற்றையும் படைத்த கடவுளிடம் நாம் எவ்வகையில் வழிபடவோ அன்பு செலுத்தவோ இயலும். நம்மைப் படைத்த கடவுள் நம்மிடம் எதை எதிர்ப்பார்க்கின்றார்? வெறும் பூஜை புனஸ்காரங்கள் செய்தல் மட்டும் போதுமா? யாவற்றையும் படைத்தவர் அவரே. எல்லாம் படைத்த அவருக்கு நாம் செய்யக்கூடியது என்ன?

அவர் எதிர்ப்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான், நாம் அவரிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பது.

யான் உன் படைப்பினை விரும்பினேன்; ஆகவே உன்னைப் படைத்தேன். ஆகையால் நீ என்னை நேசிப்பாயாக; அதனால் யான் உனக்குப் பெயரையும் சூட்டி, உனது ஆன்மாவையும் உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்.”

“என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.”

“நினைவுக்கெட்டாத எனது நிலையிலும், எனது சாராம்சம் எனும் புராதன நித்தியத்திலும் மறைந்திருக்கும் யான், உன்பால் எனக்குள்ள அன்பினை உணர்ந்தேன், ஆகவே உன்னைப் படைத்தேன்; எனது உருவத்தை உன்னில் செதுக்கியுள்ளேன்; எனது அழகையும் உனக்கு வெளிப்படுத்தினேன்.”

“உனது உள்ளமெனும் கோவிலில் அன்பெனும் ரோஜாவைத் தவிர வேறெதனையும் பயிரிடாதே..”

என பஹாவுல்லாவின் மறைமொழிகள் கூறுகின்றன.

ஆக, இங்கு அன்புக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கடவுளுக்கு நாம் எவ்வாறு அன்பு செலுத்த முடியும் என்பது பற்றி நாம் சிந்திப்போமானால் ஒன்று ஞாபகத்திற்கு வரும். கடவுளுக்கு நாம் பொருள் எதனையும் நேரடியாக கொடுக்க முடியாது. அவர் நம்மிடம் வேண்டுவதெல்லாம் நமது அன்பையே. ஆனால் இந்த அன்பை எப்படி வெளிக்காட்டுவது?

இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு:

கடவுள் மனிதனை எதற்காகப் படைத்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மனிதருக்கு உதவுவதன் மூலம், நமது செல்வம், அறிவு, நேரம் போன்றவற்றை மனித இனத்தின் மேம்பாட்டிற்காக நாம் அர்ப்பணிக்கும் போது, நாம் கடவுளிடம் நமது அன்பைத் தெரியப்படுத்துகிறோம். மானிடத்திற்கு சேவையாற்றுதல் மூலம், கடவுளிடம் நாம் உண்மையான அன்பு செலுத்துகின்றோம்.

சேவையைப் பற்றி பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி பின்வருமாறு கூறுகின்றார்:

“சேவையே தெய்வீக உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தமாகும். ஒரு மனிதன் சேவையில் ஈடுபடும் போது, அவன் பரிசுத்த ஆவியின் ஆசிகளைப் பெறுகின்றான். ஆனால், அவன் செயல்படாதபோது, பரிசுத்த ஆவிக்கு அவனுள் ஒரு வைப்பிடத்தைக் காண முடியாமல் போகின்றது. அதன் காரணமாக, அவன் அதன் குணப்படுத்தலையும் உயிர்ப்பூட்டும் கதிர்களையும் இழந்துவிடுகின்றான்.

அப்துல்-பஹா நினைவாலயம்: பிரதான கட்டிடத்தின் முதல் தம்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன



8 அக்டோபர் 2021


பஹாய் உலக மையம், 13 மே 2021, (BWNS) – அப்துல் ‑ பஹா நினைவாலயத்தின் பிரதான கட்டிடத்தின் முதல் இரண்டு தம்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் இப்போது மத்திய பொது சதுக்கத்திலிருந்து 11 மீட்டர் உயரம் கொண்டுள்ளன.

இறுதியில் எட்டு தம்பங்கள் கட்டப்பட்டு, பிரதான கட்டிடத்தின் சுவர்களின் ஒரு பகுதியை உருவாக்கி, மத்திய சதுக்கத்தைப் பரப்பும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டிக்கு ஆதரவளிக்கும்.

பிரதான கட்டிடத்தின் மேற்கில், மத்திய சதுக்கத்தைச் சுற்றியுள்ள மடிப்புச் சுவர்களின் முதல் மூன்று பகுதிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் பத்து ஒத்தவிதமான பகுதிகள் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு வருகின்றன.

News.bahai.org’இல் உள்ள படங்களின் தொகுப்பு, நெடுவரிசைகள் மற்றும் சதுக்க சுவர்களில் பணியின் முன்னேற்றத்தையும், தளத்தின் வேறு சில முன்னேற்றங்களையும் காட்டுகிறது. அங்கு வழங்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தின் முழு காட்சிகளையும் இங்கு காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட முதல் தம்பம் வலப்புற படத்தில் காணப்படுகின்றது. இடதுபுறத்தில் கடந்த வாரம் பூர்த்தி செய்யப்பட்ட இரண்டாவது தம்பத்தில் பணிகள் நடைபெறுகின்றன.
மஞ்சள் நிறத்தில் காணப்படும் எஃகு கட்டமைப்பு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் காரை ஊற்றப்பட்டு இறுகிட விடப்படுகிறது. இறுதியில் அந்த எஃகிலான உருவமைப்பு அச்சுகள் கழற்றப்பட்டு அடுத்த பகுதிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மடிப்பான சுவர்கள் – இவை பின்னர் கற்களால் அனிவிக்கப்படும்
வடக்கு மற்றும் தெற்கு சதுக்கங்களை சூழும் நான்கு வாசல் சுவர்கள் பூர்த்தியாகியுள்ளன.
பல்வேறு வடிவிலான தொட்டிகள் வடக்கு சதுக்கத்தை அலங்கரிக்கவிருக்கும் தோட்டங்களுக்காகக் கட்டப்படுகின்றன.
வடக்கு சதுக்கத்தின் தற்போதைய மேம்பாடு இடப்புறம் காணப்படும் வடிவமைப்பிற்கு வலப்புறத்தில் காணப்படுகிறது

மூலாதாரம்: https://news.bahai.org/story/1509/

‘பஹாய் உலகம்’ தொகுப்பிலுள்ள புதிய கட்டுரைகள் மேற்கில் ‘அப்துல்-பஹாவினுடைய செய்தியின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன; ஆப்பிரிக்காவில் விவசாய சாதனைகளை ஆய்வு செய்கின்றன.



8 அக்டோபர் 2021


பஹாய் உலக மையம் 10 மே 2021, (BWNS) – பஹாய் உலகம் (The Baha’i World) இணைய வெளியீடு இரண்டு புதிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

“நெருக்கடி காலங்களில் மெய்நிலையைப் படித்தல்: அப்துல்-பஹாவும் பெரும் யுத்தமும் எனும் கட்டுரை அவரது காலத்தின் நெருக்கடிகளைப் பற்றிய அப்துல்-பஹாவின் பகுப்பாய்வானது, சமகால “முற்போக்கான” இயக்கங்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கருத்துகளிலிருந்து எவ்வாறு ஆழமாக வேறுபட்டுள்ளது என்பதைப் பார்க்கின்றது. யுத்தத்தின் காரணங்கள் குறித்த ‘அப்துல்-பஹாவின் எச்சரிக்கைகள், அவர் முன்வைத்த கருத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிந்தனையின் முன்மாதிரிகளில் மூழ்கியிருக்கும் சமூகங்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை ஆசிரியர் விவரிக்கிறார்.

‘அப்துல்-பஹா மறைவின் நூறாவது நினைவாண்டைக் கௌரவிக்கும் ஒரு தொடரின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட,“நெருக்கடி காலங்களில் மெய்நிலையைப் படித்தல்” சமீபத்தில் வெளியான மற்றொரு “சர்வலோக அமைதி: ‘அப்துல்-பஹாவின் நீடித்த தாக்கம்” எனும் கட்டுரையுடன் சேர்ந்துகொள்கின்றது. இந்தப் பிந்தைய கட்டுரை 1912 லேக் மொஹொங்க் நடுவர் மாநாட்டில் ‘அப்துல்-பஹாவின் பங்கேற்பு மற்றும் அடுத்தடுத்த தசாப்தங்களில் அவரது செய்தியின் நேரத் தகுந்தமை மற்றும் அவசரமும் பற்றிய சூழ்நிலைகளைப் பார்க்கிறது. அடுத்து வரும் தசாப்தங்களில் உலக அமைதியை மேம்படுத்துவதற்கான பஹாய் சமூகத்தின் முயற்சிகளையும் கட்டுரை மதிப்பாய்வு செய்கிறது.

புதிதாக வெளியிடப்பட்ட, “விவசாயத்திற்குச் சிறப்பு செலுத்துதல்: ஆப்பிரிக்காவில் கூட்டு நடவடிக்கை-ஆராய்ச்சி” ஆப்பிரிக்காவில் விவசாயத் துறையில் பஹாய் சமூகத்தின் சமுதாய நடவடிக்கை முயற்சிகள், கண்டம் முழுவதும் முன்னேற்றங்களை ஆய்வு செய்தல் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசில் பல குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளில் கவனம் செலுத்துகிறது.

பஹாய் உலக வலைத்தளம் கட்டுரைகள் மற்றும் ஆய்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறது, அவை மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்குப் பொருந்தக்கூடிய கருப்பொருள்களை ஆராய்கின்றன; உலகளாவிய பஹாய் சமூகத்தில், சிந்தனை மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துகின்றன; மேலும், அவை பஹாய் சமயத்தின் ஆற்றல்மிக்க வரலாற்றின் மீது பிரதிபலிக்கின்றன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1508/

குரோவேஷியாவின் முதல் பஹாய் தேசிய ஆன்மீக சபை ஒரு குறிப்பிடத்தக்க தேர்தல் மூலம் நிறுவப்பட்டது



8 அக்டோபர் 2021


கடந்த சனிக்கிழமையன்று ஜாக்ரெப்பில் நடைபெற்ற அதன் முதல் தேசிய பேராளர் மாநாட்டில், குரோவேஷியாவின் பஹாய் சமூகம் நாட்டின் தேசிய சபையைத் தேர்ந்தெடுத்தது.

ஜாக்ரெப், குரோவேஷியா, 1 மே 2021, (BWNS) – நாட்டின் முதல் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் தேர்தலுடன் குரோவேஷியாவின் பஹாய்கள் ஒரு வரலாறு சார்ந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

ஜாக்ரெப்பில் நடைபெற்ற மாநாட்டில் கூடியிருந்த பத்தொன்பது பிரதிநிதிகள், அரசாங்கத்தால் வைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரம், கடந்த சனிக்கிழமையன்று தங்கள் வாக்குகளை ஆன்மீக மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் செலுத்தினர். நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை மற்றும் உத்வேகமூட்டும் இசைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இணைய நிகழ்ச்சிகள் மூலம் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தேசிய ஆன்மீக சபையின் உருவாக்கம் 1928 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட முன்னேற்றங்களின் உச்சக்கட்டமாகும், ஒரு குறிப்பிடத்தக்க ஆரம்பகால பஹாய் ஆன மார்த்தா ரூட், முன்னாள் யூகோஸ்லாவியாவில் உள்ள மக்களுக்கு பஹாய் போதனைகளை அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் ஒரு தனி நபர் மட்டுமே இருந்தாலும், குரோவேஷியாவில் உள்ள பஹாய்கள் பஹாவுல்லாவின் ஒற்றுமை மற்றும் சமாதானம் குறித்த செய்தியை அடுத்தடுத்த தசாப்தங்களில், பெரும் கட்டுப்பாடுகள் மற்றும் யுத்தகாலங்களிலும், 1992 வரை ஊக்குவித்தனர். 1992’இல் ஜாக்ரெப்பில் முதல் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. பிற உள்ளூர் சபைகள் இறுதியில் நாட்டின் பிற இடங்களில் உருவாக்கப்பட்டன.

நாட்டின் வரலாற்றில் கொந்தளிப்பான காலங்கள் உட்பட பல ஆண்டுகளில், குரோவேஷிய பஹாய்கள் தங்கள் தோழர்களிடையே அன்பையும் நல்லிணக்கத்தையும் வளர்த்து, சமூகத்திற்கு சேவை செய்வதற்கான திறனை அதிகரிக்க முற்படும் சமூகத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றனர்.

அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினரான ஆண்ட்ரேஜ் டொனோவால் உலக நீதிமன்றத்தைப் பிரதிநிதித்தார். திரு. டொனோவல் மாநாட்டில் உரையாற்றி, நீதி மன்றத்தின் செய்தியைப் படித்தார். அதில், “அவர்களின் வரலாறு முழுவதும் மிகுந்த மனக்கனிவு, தைரியம் மற்றும் வைராக்கியம் மிக்க குரோவேஷிய மக்களின் குணாதிசயங்களை இந்த முயற்சிகள் பிரதிபலிக்கின்றன” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது,

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய ஆன்மீக சபை உறுப்பினர்களில் ஒருவரான மஜா ப்ரெஸல், இந்த தனித்துவமான தருணத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார், “தேசிய சபையின் நிறுவல் ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது, இந்நேரம் தேவைப்படும், நம் சமுதாயத்திற்கான அதிக சமுதாய ஒற்றுமை, ​கூட்டுறவு மற்றும் அன்பு, ஒருவரின் சமுதாயத்திற்குத் தன்னலமற்ற சேவை ஆகியன மேன்மேலும் தெளிவாகி வருகிறது. இந்தப் பண்புகள்தான் எதிர்கால நெருக்கடிகளை எதிர்கொள்ள நமது சமூகத்தில் மீட்சித்திறனை உருவாக்குவதுடன், அவை ஒரு தேசிய ஆன்மீக சபை சமுதாயத்தில் ஊக்குவிக்க முயலும் குணங்களாகும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1506/

அப்துல் பஹா திருவாக்குகளின் புதிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது



8 அக்டோபர் 2021


அப்துல்-பஹா எழுதிய புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட நிருபங்களின் தொகுதி இணையம் மூலமாகவும் அச்சிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பஹாய் உலகமையம், 30 ஏப்ரல் 2021, (BWNS) – அப்துல்-பஹா எழுதிய புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட நிருபங்களின் தொகுதி இணையம் மூலமாகவும் அச்சிலும் வெளியிடப்பட்டுள்ளது.

‘உலகின் ஒளி’ எனும் இந்த நூல் எழுபத்தாறு நிருபங்களை உள்ளடக்கியுள்ளது, ‘அப்துல்-பஹா எழுதிய ஆயிரக்கணக்கான நிருபங்களிலிருந்து இவை தேர்வு செய்யப்பட்டுள்ளன, இதில் பஹாவுல்லா வாழ்க்கையின் அம்சங்களும் அவரது சமயத்தின் நோக்கமும் விவரிக்கப்படுகின்றன. புதிய தொகுதியின் முன்னுரை, “அவருடைய மிகவும் நேசத்துக்குரிய மகனை விட, அவருடைய நெருங்கிய உடனாளியாக இருந்து, நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை, சிறைவாசம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டவர் யார்?” என புதிய தொகுதியின் முன்னுரை கூறுகிறது.

அவரது சொந்த ஈரானில் இருந்து நான்கு தசாப்தங்கள் நாடுகடந்த ஒரு சமய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு, 1892 மே 29 அன்று பஹால்லாவின் விண்ணேற்றம் பஹாய் சமூகத்தை துன்பத்தில் ஆழ்த்தியது. அதன் அவசரத் தேவையின் நேரத்தில், சமூகம் ஆறுதல் மற்றும் வழிகாட்டுதலுக்காக பஹாவுல்லாவின் நியமிக்கப்பட்ட வாரிசான ‘அப்துல்-பஹாவின்பால் திரும்பியது.

புதிய தொகுதியில் உள்ள பல நிருபங்கள் அந்த சோக காலத்திலிருந்து வந்தவை; மற்ற நிருபங்கள் பஹாய்கள் துன்புறுத்தலையும் கஷ்டங்களையும் அனுபவித்த, பிற்காலத்தில் எழுதப்பட்டவை. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட, மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சிகளில் உத்வேகத்திற்கு ஆதாரமாக, பஹாவுல்லாவின் வாழ்க்கையையும், உபத்திரவ காலங்களில் அவரது விடையிறுப்பையும் (response) பிரதிபலிக்குமாறு ‘அப்துல் பஹா பஹாய்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தத் தொகுதியின் வெளியீடு பஹாய் சமயத்தின் மையநாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு விசேஷ காலகட்டத்தில் வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பஹாய் உலகம் பஹாவுல்லாவின் பிறப்பு, பாப் பெருமானாரின் பிறப்பு ஆகியவற்றின் இருநூற்றாண்டுகளைக் குறித்தது, இப்போது, இவ்வருடம் அப்துல் பஹா மறைந்த நூறாவது ஆண்டை நினைவுகூர தயாராகின்றது

‘உலகின் ஒளி’ பஹாய் குறிப்பு நூலகத்தில் கிடைக்கிறது; புத்தகத்தை ஐக்கிய அமெரிக்க பஹாய் பதிப்பு டிரஸ்ட் (United States Bahá’í Publishing Trust) மூலம் வாங்கிக்கொள்ளலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1505/