
8 அக்டோபர் 2021

பஹாய் உலகமையம், 30 ஏப்ரல் 2021, (BWNS) – அப்துல்-பஹா எழுதிய புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட நிருபங்களின் தொகுதி இணையம் மூலமாகவும் அச்சிலும் வெளியிடப்பட்டுள்ளது.
‘உலகின் ஒளி’ எனும் இந்த நூல் எழுபத்தாறு நிருபங்களை உள்ளடக்கியுள்ளது, ‘அப்துல்-பஹா எழுதிய ஆயிரக்கணக்கான நிருபங்களிலிருந்து இவை தேர்வு செய்யப்பட்டுள்ளன, இதில் பஹாவுல்லா வாழ்க்கையின் அம்சங்களும் அவரது சமயத்தின் நோக்கமும் விவரிக்கப்படுகின்றன. புதிய தொகுதியின் முன்னுரை, “அவருடைய மிகவும் நேசத்துக்குரிய மகனை விட, அவருடைய நெருங்கிய உடனாளியாக இருந்து, நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை, சிறைவாசம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டவர் யார்?” என புதிய தொகுதியின் முன்னுரை கூறுகிறது.
அவரது சொந்த ஈரானில் இருந்து நான்கு தசாப்தங்கள் நாடுகடந்த ஒரு சமய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு, 1892 மே 29 அன்று பஹால்லாவின் விண்ணேற்றம் பஹாய் சமூகத்தை துன்பத்தில் ஆழ்த்தியது. அதன் அவசரத் தேவையின் நேரத்தில், சமூகம் ஆறுதல் மற்றும் வழிகாட்டுதலுக்காக பஹாவுல்லாவின் நியமிக்கப்பட்ட வாரிசான ‘அப்துல்-பஹாவின்பால் திரும்பியது.
புதிய தொகுதியில் உள்ள பல நிருபங்கள் அந்த சோக காலத்திலிருந்து வந்தவை; மற்ற நிருபங்கள் பஹாய்கள் துன்புறுத்தலையும் கஷ்டங்களையும் அனுபவித்த, பிற்காலத்தில் எழுதப்பட்டவை. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட, மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சிகளில் உத்வேகத்திற்கு ஆதாரமாக, பஹாவுல்லாவின் வாழ்க்கையையும், உபத்திரவ காலங்களில் அவரது விடையிறுப்பையும் (response) பிரதிபலிக்குமாறு ‘அப்துல் பஹா பஹாய்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தத் தொகுதியின் வெளியீடு பஹாய் சமயத்தின் மையநாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு விசேஷ காலகட்டத்தில் வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பஹாய் உலகம் பஹாவுல்லாவின் பிறப்பு, பாப் பெருமானாரின் பிறப்பு ஆகியவற்றின் இருநூற்றாண்டுகளைக் குறித்தது, இப்போது, இவ்வருடம் அப்துல் பஹா மறைந்த நூறாவது ஆண்டை நினைவுகூர தயாராகின்றது
‘உலகின் ஒளி’ பஹாய் குறிப்பு நூலகத்தில் கிடைக்கிறது; புத்தகத்தை ஐக்கிய அமெரிக்க பஹாய் பதிப்பு டிரஸ்ட் (United States Bahá’í Publishing Trust) மூலம் வாங்கிக்கொள்ளலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1505/