
8 அக்டோபர் 2021
ஜாக்ரெப், குரோவேஷியா, 1 மே 2021, (BWNS) – நாட்டின் முதல் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் தேர்தலுடன் குரோவேஷியாவின் பஹாய்கள் ஒரு வரலாறு சார்ந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
ஜாக்ரெப்பில் நடைபெற்ற மாநாட்டில் கூடியிருந்த பத்தொன்பது பிரதிநிதிகள், அரசாங்கத்தால் வைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரம், கடந்த சனிக்கிழமையன்று தங்கள் வாக்குகளை ஆன்மீக மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் செலுத்தினர். நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை மற்றும் உத்வேகமூட்டும் இசைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இணைய நிகழ்ச்சிகள் மூலம் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தேசிய ஆன்மீக சபையின் உருவாக்கம் 1928 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட முன்னேற்றங்களின் உச்சக்கட்டமாகும், ஒரு குறிப்பிடத்தக்க ஆரம்பகால பஹாய் ஆன மார்த்தா ரூட், முன்னாள் யூகோஸ்லாவியாவில் உள்ள மக்களுக்கு பஹாய் போதனைகளை அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் ஒரு தனி நபர் மட்டுமே இருந்தாலும், குரோவேஷியாவில் உள்ள பஹாய்கள் பஹாவுல்லாவின் ஒற்றுமை மற்றும் சமாதானம் குறித்த செய்தியை அடுத்தடுத்த தசாப்தங்களில், பெரும் கட்டுப்பாடுகள் மற்றும் யுத்தகாலங்களிலும், 1992 வரை ஊக்குவித்தனர். 1992’இல் ஜாக்ரெப்பில் முதல் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. பிற உள்ளூர் சபைகள் இறுதியில் நாட்டின் பிற இடங்களில் உருவாக்கப்பட்டன.
நாட்டின் வரலாற்றில் கொந்தளிப்பான காலங்கள் உட்பட பல ஆண்டுகளில், குரோவேஷிய பஹாய்கள் தங்கள் தோழர்களிடையே அன்பையும் நல்லிணக்கத்தையும் வளர்த்து, சமூகத்திற்கு சேவை செய்வதற்கான திறனை அதிகரிக்க முற்படும் சமூகத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றனர்.

அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினரான ஆண்ட்ரேஜ் டொனோவால் உலக நீதிமன்றத்தைப் பிரதிநிதித்தார். திரு. டொனோவல் மாநாட்டில் உரையாற்றி, நீதி மன்றத்தின் செய்தியைப் படித்தார். அதில், “அவர்களின் வரலாறு முழுவதும் மிகுந்த மனக்கனிவு, தைரியம் மற்றும் வைராக்கியம் மிக்க குரோவேஷிய மக்களின் குணாதிசயங்களை இந்த முயற்சிகள் பிரதிபலிக்கின்றன” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது,
புதிதாக அமைக்கப்பட்ட தேசிய ஆன்மீக சபை உறுப்பினர்களில் ஒருவரான மஜா ப்ரெஸல், இந்த தனித்துவமான தருணத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார், “தேசிய சபையின் நிறுவல் ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது, இந்நேரம் தேவைப்படும், நம் சமுதாயத்திற்கான அதிக சமுதாய ஒற்றுமை, கூட்டுறவு மற்றும் அன்பு, ஒருவரின் சமுதாயத்திற்குத் தன்னலமற்ற சேவை ஆகியன மேன்மேலும் தெளிவாகி வருகிறது. இந்தப் பண்புகள்தான் எதிர்கால நெருக்கடிகளை எதிர்கொள்ள நமது சமூகத்தில் மீட்சித்திறனை உருவாக்குவதுடன், அவை ஒரு தேசிய ஆன்மீக சபை சமுதாயத்தில் ஊக்குவிக்க முயலும் குணங்களாகும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1506/