
8 அக்டோபர் 2021

பஹாய் உலக மையம் 10 மே 2021, (BWNS) – பஹாய் உலகம் (The Baha’i World) இணைய வெளியீடு இரண்டு புதிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
“நெருக்கடி காலங்களில் மெய்நிலையைப் படித்தல்: அப்துல்-பஹாவும் பெரும் யுத்தமும் எனும் கட்டுரை அவரது காலத்தின் நெருக்கடிகளைப் பற்றிய அப்துல்-பஹாவின் பகுப்பாய்வானது, சமகால “முற்போக்கான” இயக்கங்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கருத்துகளிலிருந்து எவ்வாறு ஆழமாக வேறுபட்டுள்ளது என்பதைப் பார்க்கின்றது. யுத்தத்தின் காரணங்கள் குறித்த ‘அப்துல்-பஹாவின் எச்சரிக்கைகள், அவர் முன்வைத்த கருத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிந்தனையின் முன்மாதிரிகளில் மூழ்கியிருக்கும் சமூகங்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை ஆசிரியர் விவரிக்கிறார்.
‘அப்துல்-பஹா மறைவின் நூறாவது நினைவாண்டைக் கௌரவிக்கும் ஒரு தொடரின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட,“நெருக்கடி காலங்களில் மெய்நிலையைப் படித்தல்” சமீபத்தில் வெளியான மற்றொரு “சர்வலோக அமைதி: ‘அப்துல்-பஹாவின் நீடித்த தாக்கம்” எனும் கட்டுரையுடன் சேர்ந்துகொள்கின்றது. இந்தப் பிந்தைய கட்டுரை 1912 லேக் மொஹொங்க் நடுவர் மாநாட்டில் ‘அப்துல்-பஹாவின் பங்கேற்பு மற்றும் அடுத்தடுத்த தசாப்தங்களில் அவரது செய்தியின் நேரத் தகுந்தமை மற்றும் அவசரமும் பற்றிய சூழ்நிலைகளைப் பார்க்கிறது. அடுத்து வரும் தசாப்தங்களில் உலக அமைதியை மேம்படுத்துவதற்கான பஹாய் சமூகத்தின் முயற்சிகளையும் கட்டுரை மதிப்பாய்வு செய்கிறது.
புதிதாக வெளியிடப்பட்ட, “விவசாயத்திற்குச் சிறப்பு செலுத்துதல்: ஆப்பிரிக்காவில் கூட்டு நடவடிக்கை-ஆராய்ச்சி” ஆப்பிரிக்காவில் விவசாயத் துறையில் பஹாய் சமூகத்தின் சமுதாய நடவடிக்கை முயற்சிகள், கண்டம் முழுவதும் முன்னேற்றங்களை ஆய்வு செய்தல் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசில் பல குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளில் கவனம் செலுத்துகிறது.
பஹாய் உலக வலைத்தளம் கட்டுரைகள் மற்றும் ஆய்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறது, அவை மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்குப் பொருந்தக்கூடிய கருப்பொருள்களை ஆராய்கின்றன; உலகளாவிய பஹாய் சமூகத்தில், சிந்தனை மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துகின்றன; மேலும், அவை பஹாய் சமயத்தின் ஆற்றல்மிக்க வரலாற்றின் மீது பிரதிபலிக்கின்றன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1508/