பேரழிவுமிக்க சூறாவளிக்கு இடையில் தீமோர் லெஸ்ட்டே’யின் முதல் தேசிய ஆன்மீக சபை தேர்ந்தெடுக்கப்பட்டது



8 அக்டோபர் 2021


பஹாய் தேசிய ஆன்மீக சபையை நிர்மாணிப்பது பஹாய் சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகளில் ஒரு புதிய உத்வேகத்தை உண்டாக்கியுள்ளது.

திமோர்-லெஸ்டே பஹாய்களின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஆன்மீக சபையின் ஒன்பது உறுப்பினர்கள் தங்கள் முதல் சந்திப்புக்காக இணையத்தில் ஒன்றுகூடுகிறார்கள்.

டிலி, திமோர்-லெஸ்டே, 7 மே 2021, (BWNS) – கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளத்திற்கு விடையிறுக்கும் அயராத முயற்சிகளுக்கு மத்தியில், திமோர்-லெஸ்டே பஹாய்களின் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஆன்மீக சபை உறுப்பினர் ஒருவர், கடைசியாக நடந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல்களைக் குறிப்பிட்டு, நெருக்கடியும் வெற்றிகளும் கைகோர்த்துச் செல்கின்றன எனக் கூறுகிறார்.

நடைமுறையில் உள்ள நிலைமைகளின் அடிப்படையில், பிரதிநிதிகள் தொலைதூர முறையில் வாக்களித்தனர். “திமோர்-லெஸ்டேயில் ஒரு தேசிய ஆன்மீக சபை இருப்பதற்கு நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம்” என்று சபை உறுப்பினரான கிரேசியானா டா கோஸ்டா ஹெர்குலானோ போவிடா கூறுகிறார்.

திமோர்-லெஸ்டே பஹாய்களுக்கான ஒரு செய்தியில், உலக நீதிமன்றம்: “தேசிய சபையை ஸ்தாபிப்பது உங்கள் சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீக நல்வாழ்வுக்கு அதிகரிக்கும் செயல்திறனுடன் பங்களித்திட உதவும்…” எனக் கூறியுள்ளது.

​நாட்டின் பஹாய்கள், ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகலில் இருந்து மூன்று பஹாய்கள் 1954 ஆம் ஆண்டு டிலிக்கு வந்ததிலிருந்து தங்கள் சமூகத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1958’இல், முதல் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை டிலியில் ஸ்தாபிக்கப்பட்டது. பிற நாடுகளிலிருந்து சில பஹாய்கள் 70’களின் நடுப்பகுதி வரை தொடர்ந்து அங்கு வந்தாலும், பஹாய் சமூகம் 1999’யில்தான் மீண்டும் தோன்றியது, சமூகத்தை உருவாக்கும் முயற்சிகள் 2011’இல் வேகத்தில் அதிகரித்தன.

செரோஜா சூறாவளியால் நாடு தாக்கப்பட்டபோது, ​​கடந்த மாதம் தேசிய சபைத் தேர்தலை திமோர் பஹாய்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏப்ரல் 4’ஆம் தேதி கடுமையான வெள்ளப்பெருக்குத் தொடங்கியது, நிலச்சரிவுகளாலும் கொசுக்களால் பரவும் நோய்களாலும் நாடு முழுவதும் கடுமையான உயிர் இழப்பு ஏற்பட்டது.

“ஒரு பேரழிவின் அகத்திலிருந்து இந்த ஸ்தாபனம் உருவாகிறது” என தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான வாகீதே ஹொசைனி கூறுகிறார். “இவை பல வாரங்களான சோதனைமிக்க காலமாகும், ஆனால், எல்லோரும்,குறிப்பாக இளைஞர்கள், தங்களால் இயன்றதைச் செய்திட முயல்கிறார்கள்,”

முயற்சிகளை ஒருங்கிணைக்க டிலியின் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையால் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை உருவாக்கியது விடையிறுத்தல்களின் முக்கிய அம்சமாகும். 13 கிராமங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் 7,000’க்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவக்கூடிய உணவு, கொசு வலைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்திட பணிக்குழு வசதி செய்துள்ளது. சாலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடைய உதவும் வகையில் ஒரு படகு கட்டப்படவும் பணிக்குழு ஏற்பாடு செய்தது.

“பஹாய் ஸ்தாபனங்களும் உள்ளூர் அதிகாரிகளும் அடித்தட்டில் உள்ளவர்களுடன் தோளுடன் தோள் கொடுத்து பணியாற்றியுள்ளனர்” என தேசிய சபையின் மற்றொரு உறுப்பினரான மேடலினா மரியா பாரோஸ் கூறுகிறார். “வெள்ளத்தில் எல்லாவற்றையும் இழந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்ணின் வீட்டிற்குச் செல்ல எனது கிராமத்தின் xefe’யுடன் (தலைவர்) சென்றேன். பெண்ணின் நிலைமையால் ஆழ்ந்த மனக்குழப்பத்திற்கு ஆளான xefe, அவரை ஒரு போர்வையில் போர்த்திவிட்டு, நாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களைக் கொண்டு அவருக்கு உணவு சமைத்தார்.”

டிலியின் கடும் பாதிப்புக்குள்ளான மாசின்-லிடூன் பகுதியில் உள்ள பஹாய்’ஆன ஆல்பர்ட்டோ டொஸ் ரெய்ஸ் மென்டோன்கா: “எங்கள் அண்டைப்புறத்தில் பஹாய் நடவடிக்கைகள் ஆறு மாதங்களுக்கு முன்புதான் தொடங்கின, அந்தக் குறுகிய காலத்தில் நாங்கள் எவ்வாறு ஒன்றாக சேவை செய்வது என்பது பற்றி அதிகம் கற்றுக்கொண்டோம்.

“ஒவ்வொரு நாளும் நாங்கள் செயல்படுகிறோம், பிரதிபலிக்கிறோம், பின்னர் அடுத்த நாளுக்குத் திட்டமிடுகிறோம். வெள்ளம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு மேலும் அதிக உதவிகள் வந்தன, மக்களுக்கு அரிசி, எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் கிடைத்தன. ஆரோக்கியமாக இருப்பதற்கு நமக்கு இப்போது புரதமும் காய்கறிகளும் தேவை என நாங்கள் கூறி, நாங்கள் விநியோகிப்பதற்கு எங்களுக்கு முங் பீன்ஸ் மற்றும் பிற காய்கறிகளை வழங்கக்கூடிய நிறுவனங்களை நாங்கள் அணுகினோம்.”

இந்த முயற்சிகள் முழுவதும் மக்களைத் தக்கவைத்துள்ள பக்தி உணர்வைப் பற்றி மாசின்-லிடூனில் வசிக்கும் தேசிய சபை உறுப்பினர் மார்கோஸ் டா கோஸ்டா டயஸ் இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் ஒவ்வொரு காலையிலும் அதிகாலையிலும் பிரார்த்திக்கிறோம், ஒற்றுமை, நிம்மதி ஆகியவற்றை உணர்கிறோம், பிரார்த்தனை மனப்பான்மையுடன் ஒன்றுகூடுகிறோம். அது நிவாரணம் மற்றும் மீட்புப்பணிக்கான தினசரி நடவடிக்கைகள் முழுவதும் நீடித்திருக்கும்.”

கடந்து சென்ற மாதத்தைப் பற்றி திருமதி ஹெர்குலானோ போவிடா இ்வ்வாறு கூறுகிறார்: “இந்த நெருக்கடிக்கான எங்கள் விடையிறுப்பில், அப்துல்-பஹாவின் உதாரணத்தைக் காண்கிறோம்–அவர் சென்ற இடங்களிலெல்லாம், சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவிட அவர் எப்போதும் வழிகளைக் கண்டுபிடித்தார். அதே சேவை உணர்வை தேசிய ஆன்மீக சபையும் இப்போது உணர்கிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1507/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: