
8 அக்டோபர் 2021
டப்ளின், 20 மே 2021, (BWNS) – ஐரிஷ் மொழியில் ‘உரையாடல்’ என்று பொருள்படும் கொம்ஹ்ரா, அயர்லாந்து பஹாய்களால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒலியோடை ஆகும், இது சமூக வாழ்க்கைக்கு மையமான கருப்பொருள்கள் குறித்த நண்பர்களிடையிலான கலந்துரையாடல்களை மேம்படுத்துவதற்கான ஒரு சாளரத்தை வழங்குகிறது.
“நாங்கள் பொதுவாகக் காணப்படாத ஒரு மட்டத்தில் சமுதாய சொல்லாடல்களில் ஈடுபட விரும்புகிறோம், பெரும்பாலும் செவிமடுக்கப்படாதோரிடமிருந்து சேவிமடுத்திட விரும்புகிறோம்” என்று ஐரிஷ் பஹாய் சமூக வெளிவிவகார அலுவலகத்தின் பாட்ரிசியா ரெய்ன்ஸ்ஃபோர்ட் கூறுகிறார்.

“கொள்கை குறித்த உயர் மட்ட விவாதங்களுக்கு ஓர் இடம் உள்ளது, ஆனால் இந்த ஒலியோடையில் உள்ள உரையாடல்கள் அடித்தட்டில் காணப்படும் சமூக மாற்றத்தின் ஒரு முக்கிய அங்கத்தைப் பார்க்கின்றன-செவிமடுப்போர் தங்கள் சொந்த வாழ்க்கையில் பிரதிபலிக்கப்படுவதைக் காணக்கூடிய கருத்துக்களை அது குறித்துரைக்கின்றன.”
ஓர் அத்தியாயத்தில், சமூகவியலாளர் இர்ஃப்லைத் வாட்சன் மற்றும் அவரது நண்பரும் சகாவுமான பிரெண்டன் மெக்னமாராவும் பலவகையான சமூகத்தில் அதிக ஒற்றுமைக்குப் பங்களிப்பதில் அடையாளத்தின் பங்கு பற்றி விவாதிக்கின்றனர். “பஹாய் சமயம் மனிதகுலத்தின் ஒற்றுமையைப் பற்றி கற்பிக்கிறது” என்று டாக்டர் வாட்சன் கூறுகிறார்.
“நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் போக்குகளை முறியடிக்கும் போது மக்களை ஒன்றிணைக்கும் அடையாள உணர்வை எவ்வாறு பராமரிக்க முடியும் என்பதுதான். … உலகளவில் இது நடக்கவில்லை என்றாலும், நமது சொந்த வட்டாரத்திலாவது ஒரு நல்ல சமூக உணர்வை உருவாக்கிட நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தங்களின் சொந்த உள்ளூர் சமூகத்தில் உள்ளவர்கள் உணருவார்கள். அந்த அடிமட்டத்திலிருந்து உள்ளூர், தேசிய மற்றும் இறுதியாக சர்வதேச ஒத்துழைப்பு வளரும். ”
மற்றொரு அத்தியாயத்தில், வாட்டர்ஃபோர்டு நகரத்தைச் சேர்ந்த பஹாயான ஃபிராங்க் கென்னடி, அயர்லாந்திற்கு புதிதாக வந்து குடியேறியவர்களுக்கு ஆதரவான இடத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியைப் பற்றி பேசுகிறார்.
இந்த உரையாடலில், திரு. கென்னடி, அனைத்து மதங்களுக்கும் பொதுவான மன்னிக்குந்தன்மை, அன்பு மற்றும் ஆர்வநம்பிக்கை குறித்த கொள்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு தங்கள் வேறுபாடுகளை சமாளிக்க முடிந்தது என்பதை விவரிக்கிறார்.

போட்காஸ்டின் எதிர்காலத்தைப் பற்றி பேசுகையில், திருமதி ரெய்ன்ஸ்ஃபோர்ட் இவ்வாறு கூறுகிறார்: “நமது கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள பெருந்தொற்று மற்றும் சூழ்நிலைகள் நாம் ஒவ்வொருவரும் சக்தியற்றவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் எனும் உணர்வை ஏற்படுத்தக்கூடும். தொடக்கத் வரிசையின் யோசனை, ‘ஸ்பார்க்ஸ் ஆஃப் ஹோப்’ என அழைக்கப்படுகிறது, நேர்மறையான செயல்கள் ஆர்வநம்பிக்கைக்கு உரியவை. அவை, எவ்வளவு சிறிதாக இருப்பினும் – இருள்சூழ்ந்த மற்றும் கடின நேரங்களை ஒளிரச் செய்யும் ஆற்றல் கொண்ட தீப்பொறிகள் போன்றவை. ”
இன்று வெளியிடப்பட்ட, “எல்லோரும் இங்கே ஒரு காரணத்திற்காக உள்ளனர்” எனும் தலைப்பில் சமீபத்திய அத்தியாயம் இயலாமை மற்றும் சேர்க்கை குறித்த பிரச்சினைகளை ஆராய்கிறது. இனி ஒலியோடையில் வரவிருக்கும் உரையாடல்கள், இனரீதியான தப்பெண்ணம் மற்றும் வன்முறைக்கு விடையிறுக்கும் வகையில் நீதியின் ஆக்கபூர்வ கருத்தாக்கத்தை கண்ணுறும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1510/