ஓர் ஒன்றுபட்ட அமெரிக்காவை நோக்கிய பாதை16 June 20218 அக்டோபர் 2021


வாஷிங்டன், டி.சி, 16 ஜூன் 2021, (BWNS) – நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மே மாதத்தில், ஐக்கிய அமெரிக்காவில் முதல் இன நட்பு மாநாடு வாஷிங்டன் டி.சி.’யில் அமெரிக்க பஹாய் சமூகத்தால் நடத்தப்பட்டது, இது நாட்டில் இன ஒற்றுமையை நோக்கிய பாதையில் ஒரு வரையறுக்கும் தருணமாக இருந்தது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியின் விளக்கம் பின்வருமாறு இருந்தது: “அரை நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. தப்பெண்ணத்தை வெல்லும் பொருட்டு இப்போது மற்றொரு பெரிய முயற்சி தேவை. தற்போதைய தவறுகளை திருத்துவதற்கு எந்த இராணுவமும் தேவையில்லை, ஏனெனில் நமது குடிமக்களின் இதயங்களே நடவடிக்கைக்கான தளங்களாகும்.”

அந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், அமெரிக்க பஹாய் பொது விவகார அலுவலகம் கல்வியாளர்கள், பொது சமூகத் தலைவர்கள் மற்றும் பிற சமூக நடிகர்களை, ஒன்றாக மேம்பாடு காண்பது: ஒரு நியாயமான, உள்ளடக்கிய மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை நோக்கிய ஒரு பாதையை உருவாக்குதல் என தலைப்பிடப்பட்ட ஒரு மூன்று நாள் இணைய கருத்தரங்கிற்கு ஒன்றுகூட்டியது.

ஐக்கிய அமெரி்கக பஹாய் பொது விவகார அலுவலகம் நடத்திய மூன்று நாள் இணையதள கருத்தரங்கின் குழு உறுப்பினர்கள், ஒன்றாக முன்னேறுதல்: ஒரு நியாயமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை நோக்கிய ஒரு பாதையை உருவாக்குதல்

“இன்று இங்கு கூடியிருந்த நாங்கள், சமுதாயத்தின் கட்டமைப்பில் ஓர் ஆழ்ந்த உயிர்ம மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்” என அவ்வொன்றுகூடல் அலுவலகத்தின் பி.ஜே. ஆண்ட்ரூஸ் கூறினார்.

“நாட்டில் நீதியை உருவாக்கத் தேவையான மாற்றம் சமூக மற்றும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, அது தார்மீகமும் ஆன்மீகமும் சார்ந்ததாகும்” என அவர் தொடர்ந்தார்.

பஹாய் உலக செய்தி சேவை போட்காஸ்ட் சமீபத்திய குறுந்தொடர் கருத்தரங்கின் சிறப்பம்சங்களை வழங்குகிறது. இதில், குழு உறுப்பினர்கள் பகிரப்பட்ட அடையாள உணர்வை வளர்ப்பதில் மொழியின் பங்கு, உண்மைக்கும் நீதிக்கும் இடையிலான உறவு, சமூக நீதியை நோக்கிய முயல்வுகளில், ஒழுங்குமுறை சார்ந்த மாற்றங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளிட்ட தலைப்புகளைப் பற்றி விவாதித்தனர்.

சிம்போசியத்தில் நடந்த விவாதங்கள், நாடு முழுவதும் உள்ள சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு பின்னணியிலான மக்களிடையே ஒத்துழைப்பு மற்றும் வலுவான நட்பின் பிணைப்பை வளர்ப்பதில் ஐக்கிய அமெரிக்க பஹாய் சமூகத்தின் அனுபவங்களைப் பார்த்தன. இந்த முயற்சிகளில் சில இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் உரையாடல்கள் முழுவதும் மனிதகுலத்தின் இன்றியமையாத ஒற்றுமையின் ஆன்மீகக் கொள்கை இழையோடியது. பஹாய் போதனைகளிலிருந்து, பஹாய் பொது விவகார அலுவலகத்தின் மே லாம்பிள் கூறியதாவது: “நமது சமூகத்திலிருந்து அனைத்து வகையான இனவெறிகளையும் ஒழிக்க முற்படும் எந்தவொரு இயக்கமும் சாராம்சத்தில் அனைத்து மனிதர்களும் சமம் எனும் கருத்தின் அடிப்படையில் கணிக்கப்பட வேண்டும். , அவர்கள் கண்ணியத்திற்கு தகுதியானவர்கள், அவர்கள் தனித்துவமான திறன்களையும் திறமைகளையும் கொண்டிருக்கிறார்கள். மேலும், அவர்கள் பாதுகாப்பு, காப்பீடு ஆகியவற்றுக்கு உரியவர்கள்.

“நமது ஒற்றுமை மற்றும் பரஸ்பர தொடர்புமையைப் புரிந்து கொள்ளாத நிலையில் நம் வாழ்க்கையில் தேவையான மற்றும் மதிப்புமிக்க பலக்கியதன்மை. அழகு ஆகியவற்றை சேர்ப்பதற்கு மாறாக, நமது வேறுபாடுகளே மிகப் பெரிதாகத் தோன்றுகின்றன.”

இந்தக் கருத்தரங்கு, இன ஒற்றுமை குறித்த சொற்பொழிவுக்கு அமெரிக்காவில் உள்ள பஹாய் பொது விவகார அலுவலகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் ஒரு பகுதியாகும். கருத்தரங்கு விவாதங்களின் பதிவுகளை இங்கே காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1514/