கோவிலின் வருகை பசிபிக் மையத்தில் ஒரு புதிய விடியலைக் குறிக்கின்றது22 ஜூன் 2021


அதன் கட்டுமானத்திற்கான முக்கிய அம்சங்கள் தொலைதூர தீவான தன்னாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் வானுவாத்துவில் உள்ள உள்ளூர் பஹாய் கோயிலின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன,

லெனகெல், வானுவாத்து, 22 ஜூன் 2021, (BWNS) – வனுவாத்துவின் தலைநகரான போர்ட் வில்லாவிலிருந்து சில நாட்களுக்கு முன்பு தொலைதூரத் தீவான தன்னாவிற்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சரக்கானது படகில் பயணம் செய்தது. அது தீவை அடைந்த நேரத்தில், 250’க்கும் மேற்பட்ட மக்கள் அது சுமந்து வந்த சரக்குகளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தனர்: உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் முக்கிய அம்சங்கள் லெனகெல் நகரில் கட்டப்பட உள்ளன.

படகு வந்தபின், அருகிலுள்ள நகரத்தின் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினர் ஜோசப் துவாக்கா, “இந்த தருணத்திற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம். “ஒரு நாள், தன்னா மக்கள் ஒரே இல்லத்தி ஒன்றாகப் பிரார்த்திப்பார்கள் எனும் ஒரு பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. அந்த நாள் இப்போது வந்துவிட்டது.”

அரசாங்கத்திற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி தனிநபர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேல் இடது: தன்னாவின் குடியிருப்பாளர்கள் தீவின் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் அம்சங்களின் வருகையைக் குறிக்கும் ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மேல் வலது: படகுக் குழுவினர் தன்னாவுக்கு வந்தபின் இறங்கத் தயாராகிறார்கள். கீழே: குழுவினர் இறக்குவதற்கு அலை மாற்றத்திற்காக காத்திருக்கும்போது, குடியிருப்பாளர்கள் அவர்களை கரைக்கு வரவேற்று, கழுத்தில் மலர் பரிசுகளை பாராட்டுதலின் வழக்கமான அடையாளமாக வைக்கின்றனர்.

வானுவாத்துவின் பஹாய் தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான நலாவ் மனகெல் கூறுகின்றார்: “தன்னா மக்களின் பல பாரம்பரிய பாடல்களும் கதைகளும் ஒரு புதிய வாழ்க்கை முறையைப் பற்றி பேசுகின்றன, எல்லா பகைவும் இல்லாமல் போகும், அமைதியும் நல்லிணக்கமும் வரும் . எங்கள் சமூகத்தில் ஒரு பஹாய் கோயில் தோன்றுவது இந்தத் தீவில் ஆன்மீக ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் நடைபெற்று வரும் ஒரு பெரிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ”

வழிபாட்டு சபையின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் பேசிய கோயிலின் இயக்குனர் டிஸ்லைன் லபூம் பின்வருமாறு கூறினார்: “கோயிலை ஆன்மீக அடைக்கலமாக நாங்கள் பார்க்கிறோம்; அங்கு நாங்கள் ஒன்றுகூடி பிரார்த்திப்போம்; மகிழ்ச்சி அல்லது நெருக்கடியான காலங்களில் எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான உத்வேகத்தை அதிலிருந்து பெற்றிடுவோம்,”

கோயிலின் மைய மண்டபம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மர சுவர்கள் மற்றும் வானுவாத்துவின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு மாதிரியாக ஒரு கூரை மறைக்கப்பட்ட எஃகு கட்டமைப்பால் ஆதரிக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பின் பல்வேறு பகுதிகள் வானுவாத்து மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, தன்னாவிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, தலைநகரான போர்ட் விலாவில் அவை தயாரிக்கப்பட்டன.

வழிபாட்டு சபைக்கு நவம்பரு 2019’இல் அடிக்கல் நாட்டியதிலிருந்து, பலரும் கோவில் தளத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்து திட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு உதவி வழங்குகிறார்கள்.

சுற்றியுள்ள துணை கட்டமைப்புகளில் ஒன்றிற்கான உறைப்பூச்சு செய்ய சிலர் மூங்கில் நெசவு செய்கிறார்கள். சிலர் பசிபிக் பெருங்கடலைக் காணும் ஒரு படித்தள சரிவில் பெரிய சமூகக் கூட்டங்களுக்கு ஒரு ஆம்ஃபிதியேட்டரைத் தயாரிக்கிறார்கள். சிலர், மேலும், அந்தப் பகுதியின் பசுமையான தாவரங்களுடன் தளம் அதிகமாக வளரவிடாமல் தடுப்பதன் மூலம் மைதானத்தின் பராமரிப்பிற்கு உதவுகிறார்கள்.

“இளைஞர்கள், தாய்மார்கள், தந்தைகள், முதல்வர்கள், எல்லோரும், தங்கள் கருவிகளுடன் வந்து உதவுகிறார்கள்” எனத் திரு. மனகெல் கூறினார்.”. அதையெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் என்பதை அவர்களின் முகங்களில் காணலாம். வருங்கால சந்ததியினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காரியத்திற்கு அவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ”

மத்திய மாளிகைக்கான பொருள் தன்னாவுக்கு வந்ததிலிருந்து, முக்கிய எஃகு அமைப்பு லெனகெல் நகரில் உள்ள கோயில் தளத்தில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் உச்சியில், வழிபாட்டு மன்றத்தில் ஒளியை அனுமதிக்கும் ஒரு கண்ணாடி ஓக்குலஸ் (occulus) அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக மைய நெடுவரிசையைப் பயன்படுத்தி நிலைப்படுத்தப்பட்டுள்ள முதல் பகுதியாகும். இந்த எரிமலை தீவின் நிலப்பரப்பைக் குறிக்கும் ஆழமான பள்ளத்தாக்குகள் வடிவிலான கூரையின் ஒன்பது இறக்கைகள் பின்னர் அதைச் சுற்றி ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டன.

எரிமலைத் தீவின் நிலப்பரப்பைக் குறிக்கும் ஆழமான பள்ளத்தாக்குகளின் வடிவிலான கூரையின் ஒன்பது இறக்கைகள், ஓக்குலஸைச் சுற்றி ஒவ்வொன்றாக பொருத்தப்பட்டன.

எதிர்காலத்தைப் பற்றி பிரதிபலிக்கும் திரு. மனக்கெல் கூறுவதாவது, “பசிபிக் பெருங்கடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தற்போது உலகில் சில பஹாய் கோயில்கள் மட்டுமே உள்ளன, அவற்றில் பல எழுப்பப்பட்டு அல்லது பசிபிக் கரையில் கட்டப்பட்டும் வருகின்றன. ஒரு நாள் அனைத்து பெருங்கடல்களிலும் கண்டங்களிலும் உள்ள பல கிராமங்களும் நகரங்களும் கோவில் எழுவதைக் கண்டபோது நாங்கள் அனுபவித்த அதே மகிழ்ச்சியை அவர்களும் உணருவார்கள் என நம்புகிறோம் — கடலின் நடுப்பகுதியில் இருந்து நம்பிக்கையின் ஓர் ஒளி பிரகாசிப்பதைப் போன்று.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1515/