புதிய கெனேடிய பாராளுமன்ற மாநாடு சமுதாயத்தில் மதத்தின் பங்கை ஆராய்கிறது



29 ஜூன் 2021


ஒட்டாவா, கனடா, 29 ஜூன் 2021, (BWNS) – ஆளுகைக்கு சமயத்தின் பங்கு பற்றிய ஒரு அரிய உரையாடலில், கெனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் மத சமூகங்களின் பிரதிநிதிகள் சமீபத்தில் அனைத்து கட்சி நாடாளுமன்ற இடைக்கால மாநாட்டின் தொடக்கக் கூட்டத்தை நடத்தினர் – இது, நாடு எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய ஆய்வில் சமய கொள்கைகளும் நுண்ணறிவுகளும் எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பதை ஆராய்வதற்கான ஒரு புதிய தளமாகும்.

“நாம் யார், எவற்றிற்கு மதிப்பளிக்கிறோம் என்பதை மதம் வரையறுக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு மற்றும், மாற்றத்திற்காக நாம் அறிவூட்டும் ஒரு வாகனமாக இருக்கும் ஜனநாயகமானது பெரும்பாலும் இந்த விழுமியங்களால் வழிநடத்தப்படுகிறது” என கெனேடிய செனட் சபையின் உறுப்பினரான மொபினா ஜாஃபர் கூறினார்.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து-கட்சி கோக்கஸ் (மாநாடு) கெனடாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றும் நியமிக்கப்பட்ட செனட் மற்றும் கெனேடிய சமய நல்லிணக்க உரையாடலின் (சிஐசி) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கெனடாவின் பஹாய் சமூகமும் உறுப்பினராக உள்ளது.

“தொற்றுநோய் அரசாங்கத்திற்கும் மத சமூகங்களுக்கும் இடையில் புதிய வகையான உரையாடல்களை உருவாக்கியுள்ளது” என்று கெனேடிய பஹாய் பொது விவகார அலுவலகத்தின் ஜெஃப்ரி கேமரூன் கூறினார். “இது அவர்களின் சமூகத்திற்குச் சேவை செய்ய மக்களை ஊக்குவிப்பதில் மதம் தொடர்ந்து வகிக்கும் முக்கிய பங்கைத் தலைவர்களுக்கு மேலும் உணர்த்தியுள்ளது.”

முன்னாள் எம்.பி.யும் அமைச்சரவை அமைச்சருமான ஸ்டாக்வெல் டே, குறிப்பாக நெருக்கடிமிக்க காலங்களில், ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதற்கான மதத்தின் சக்தி குறித்து பேசினார். “நமது சமுதாயத்தில் மதம் குறித்த எண்ணமானது, அது ஒரு தலைவரின் மீது கட்டுப்பாடு கொண்டுள்ளது என்பதையும், தன்னை விட அல்லது தாம் தொடர்புகொண்டுள்ள குழுவைவிட ஒரு மகா சக்தி உள்ளது என்னும் சாத்தியத்தினாலும் அவருள் ஒருவித பணிவு இருக்க வேண்டும்

கடந்த டிசம்பரில், கனடா முழுவதிலும் உள்ள பஹாய் தேசிய ஆன்மீக சபை மற்றும் உள்ளூர் ஆன்மீக சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பலதரப்பட்ட மதத் தலைவர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்து, தொற்றுநோய்களின் பின்னணியில் மத சமூகங்களின் பங்களிப்பு குறித்து பேசினர்.

தொடர்ந்து அவர்: “தனிநபர்களுக்கு மத உணர்வு இருந்தால், நம்மைவிட மகத்தான ஒன்று இருக்கின்றது எனும் போது – அது ஓர் ஆறுதலளிக்கும் உணர்வை எற்படுத்துகிறது.

“எனவே இது ஓர் அரசியல் அமைப்பினுள் மில்லியன் கணக்கான குடிமக்கள் மீதான பரவலை நாங்கள் கற்பனை செய்கிறோம், அவர்களில் கணிசமான பகுதியினர் உண்மையில் அங்கே கடவுளின் சக்தி இருப்பதாக நம்புகிறார்கள், [அவர்கள்] பெரும் மரியாதை உணர்வுடன் வாழ்வதுடன், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுகின்றனர் என நாம் நம்புகின்றோம்.”

தனிநபர் உத்வேகத்திற்கும் அப்பால், கோட்பாடு வகுக்கும் செயல்முறைக்கு மதம் முக்கிய பங்களிப்புகளை வழங்க முடியும் என பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கார்னெட் ஜெனுயிஸ் கூறுகையில், “மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கருத்துக்கள் உள்ளன: ஒன்று அன்பு, மற்றொன்று உண்மை. அந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றாகச் கைகோர்த்துச் செல்ல வேண்டும். உங்களிடம் அன்பு இருந்து, ஆனால் உண்மை உணர்வு இல்லையெனில்,… உண்மையில் என்ன நடக்கிறது அல்லது ஒருவரின் உண்மையான தேவைகள் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர். உங்களுக்கு சத்தியத்தைப் பின்தொடரும் ஓர் உணர்வு இருந்து, ஆனால் செயல்பாட்டில் எந்த அன்பும் இல்லையெனில், அதுவும் தெளிவாகவே ஒரு குறைபாடாகும்… அன்பு என்பது கடுமையான அநீதியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகும். ”

அனைத்து தரப்பு இடைக்கால கோக்கஸ் மாநாட்டின் எதிர்காலம் குறித்து செய்தி சேவையுடன் பேசிய பஹாய் பொது விவகார அலுவலகத்தின் டாக்டர் கேமரூன் இவ்வாறு கூறுகிறார்: “கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமய சமூகங்களிடையே புதிய உறவுகளை வளர்ப்பது மற்றும் உரையாடல்களை உருவாக்குவதுடன், ஒவ்வொரு சிக்கலையும் ஒர் இரும (பைனரி) தேர்வாக வடிவமைப்பதை விட, பயனுள்ள ஆராய்வின் மூலம் மக்கள் தங்கள் சிந்தனையில் கூட்டாக முன்னேற முடியும். “”மனிதகுலத்தின் இன்றியமையாத ஒற்றுமையின் பஹாய் கொள்கை சமுதாயத்தில் மதத்தின் பங்கு பற்றிய சொற்பொழிவுக்கு அலுவலகத்தின் பங்களிப்புகளுக்கு அடிப்படையானது,” என்று அவர் தொடர்ந்து கூறினார். இந்த கோக்கஸ், அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும், அந்தக் கொள்கையின் வெளிப்பாடு மற்றும் அதிக சமூக ஒற்றுமைக்கான ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1516/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: