
12 ஜூலை 2021

காலேஜ் பார்க், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, (BWNS) – ஒவ்வொரு கல்வியாண்டிலும், மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கை (chair) ஒரு தனித்துவமான பாடத்திட்டத்தை வழங்குகிறது, இது, சமூகவியலான சவால்களுக்கான மூல காரணங்களை, அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் நீக்குதல், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம், மற்றும் கலந்தாலோசனை போன்ற ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் அடையாளம் காண மாணவர்களுக்கு உதவுகிறது. “கல்லூரி முழுவதும் நான் 35 பாடங்கள் எடுத்தேன், ஆனால், இது ஒன்று மட்டும்தான் நான் உலகை எப்படிப் கண்ணுறுகிறேன் என்பதற்கான அடிப்படைகளை மாற்றியது” என்று வகுப்பின் முன்னாள் மாணவர் எமிலி கோரே கூறுகிறார்.

“நான் பிறந்து வளர்ந்த மேரிலாந்தின் ஹோவர்ட் மாவட்டத்திற்கு வெளியே உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை இங்கேதான் கற்றுக்கொண்டேன். சமத்துவமின்மையானது நம் அமைப்புகள், எண்ணங்கள் மற்றும் சூழல்களில் எவ்வளவு நிசப்தமாகப் பதிந்துள்ளது என்பதைக் நான் கற்றுக்கொண்டேன். பச்சாத்தாபப்படும் ஆற்றல் என்னிடமும் மற்றவர்களிடமும் ஏற்பட்டுள்ளதை நான் கண்டேன்.
“என் சக மனிதர்களுக்கு உதவுவதில் எனது சிறிய பங்கைச் செய்வதற்கான கருவிகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன,” என்று திருமதி. கோரே கூறுவதுடன் சந்தை துறையில் தனது தொழில் “மக்களையும் இவ்வுலகையும் இலாபங்களுக்கு மேற்பட்டவை என ஊக்குவிக்கும் குரல்களை” பெருக்குவதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்க்கிறார்,
(பஹாய்) இருக்கையின் தலைவர் ஹோடா மஹ்மூதி, பாடத்திட்டத்திற்கான உந்துதல் பற்றி பேசுகிறார்: “பஹாய் திருவாக்குகள் ஒரு நியாயமான மற்றும் அமைதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய தடைகளில் தப்பெண்ணமும் அடங்கும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. எல்லா வகையான தப்பெண்ணங்களையும் சமாளிக்க உணர்வுபூர்வமாக உழைக்க இளைஞர்களின் ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்கப்படாவிட்டால், சமூக ஒழுங்கின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க தன்மைமாற்றத்தை ஏற்படுத்துவது கடினம். ”
“பஹாய் சமூகம் இதுவரை இதைத்தான் செய்திட முயன்று வந்துள்ளது; இந்த வகுப்பிற்கும் அதே நோக்கம் உள்ளது.”
மற்றொரு முன்னாள் மாணவர், அஷ்லி டெய்லர், பங்கேற்பாளர்கள் தங்களது சொந்த சமூக மெய்நிலைக்கு தார்மீகக் கொள்கைகளைப் பயன்படுத்துவதைப் புரிந்துகொள்ள இந்த பாடநெறி எவ்வாறு உதவுகிறது என்பதை அவதானிக்கின்றார். “வகுப்பு, சமாதானம் போன்ற ஒரு பெரிய கருத்தியலான யோசனையைக் கண்ணுற்று, நம்மிடையிலும், நம் சமூகத்திலும், நமது சமுதாயத்திலும் எவ்வாறு சமாதானத்தை உருவாக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க ஆணித்தரமான வழிகளை உருவாக்குகிறது.”
அவர் தொடர்கிறார்: “நாங்கள் இப்போது கடந்து வரும் காலங்களில், வகுப்பில் நாங்கள் நடத்திய மிகவும் கடினமான மற்றும் மிகவும் அணுக்கமான விவாதங்களை அவர்கள் தங்களின் நண்பர்களுடன் குடும்பங்களுடனும் எவ்வாறு இனவெறி பற்றிய ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தொடங்குகிறார்கள் என்பதை நான் மாணவர்களிடமிருந்து செவிமடுத்துக்கொண்டிருக்கிறேன்.”
“தப்பெண்ணம் பற்றிய பிரச்சினை” என்ற தலைப்பிடப்பட்ட பாடம், அமைதி குறித்த சொற்பொழிவின் தலைவரின் ஆய்வுக்கு மையமான ஐந்து கருப்பொருள்கள் பற்றிய ஆழமான கலந்துரையாடலைத் தூண்டுகிறது: கட்டமைப்பான இனவாதம் மற்றும் தப்பெண்ணத்தின் மூல காரணங்கள், மனித இயல்பு, பெண்களுக்கு சக்தியூட்டல் மற்றும் அமைதி, உலகளாவிய ஆளுகை மற்றும் தலைமைத்துவம் , மற்றும் சுற்றுச்சூழலை உலகமயமாக்கலில் உண்டாகும் சவால்களை சமாளித்தல்.
பயிற்சிப்பாடம் இந்த கருப்பொருள்கள் பற்றிய அறிவார்ந்த ஆராய்ச்சியையும் உள்ளடக்கியதுடன் சமூகப் பிரச்சினைகளின் தன்மையை ஆழமாகப் புரிந்துகொள்ள முயலும்போது வாராந்திரமான பிரதிபலிப்புகளை எழுதுமாறு மாணவர்களைக் கோருகிறது.
ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் மாணவர்கள் மனிதகுலத்தின் ஒற்றுமை குறித்த உயர்த்தப்பட்ட விழிப்புணர்வைப் பெறுவார்கள் என டாக்டர் மஹ்மூதி விளக்குகிறார். “மக்கள் பெரும்பாலும் ஒரு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள், வெவ்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கும் அவை எவ்வாறு அமைதியுடன் தொடர்புபடுகின்றன என்பதற்கும் இடையிலான உறவைக் காண்பதில்லை.
“இந்த தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், தார்மீகக் கொள்கைகளின் வெளிச்சத்தில் சமூகப் பிரச்சினைகளின் காரணங்களைப் பற்றி சிந்திப்பதன் மூலமும், மாணவர்கள் சமூகத்தின் ஒரு பிரிவின் நல்வாழ்வுக்காக மட்டுமல்லாமல் அனைவருக்குமான அதிக அக்கறையுடன் பாடத்திட்டத்திலிருந்து பயன் பெறுகிறார்கள்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1518/