வள்ளலார் வரலாறு, ஒரு பஹாய் கண்ணோட்டம் – 4


பிற போதனைகள் (தொடர்ச்சி)

உருவ வழிபாடு

இறைவழிபாட்டைப் பொறுத்த வரையில் ‘இராமலிங்கர் உருவவழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. அன்று அவரைச் சுற்றியிருந்தோர் எல்லோரும் உருவ வழிபாட்டு முறையில் வந்தவர்கள். இதை மனதிற் கொண்டுதானோ என்னவோ விக்கிரக ஆராதனை முறையை அனுமதித்தார். இறைவன் சகல நிலைகளைக் கடந்து இருந்தாலும் உருவ வழிபாடு செய்வதை அவர் தடை செய்யவில்லை. ஆனால் சன்மார்க்க சங்கத்தினருக்கென அமைத்த ஞானசபையில் எந்தவொரு சிலை வழிபாடும் விதிக்கப்படவில்லை. சன்மார்கிகள் சபைக்கு உள்ளே நின்று வணங்கலாம் என்றும் சன்மார்கி அல்லாதார் வெளியே நின்று மெல்லெனத் துதி மட்டுமே செய்ய முடியும் என்றார். இசை, தீபாராதனை, பிரசாதம், தேங்காய், பழம், திருநீறு முதலியவை ஞானசபை வழிபாட்டுக்கு முரண்பாடானவை என்றார்.

சன்மார்க்கசங்க கோவில் நிறுவியது

தைப்பூசம் : வடலூர் வள்ளலார் கோவிலில் ஜோதி தரிசன விழா கோலாகலம் - பக்தர்கள்  குவிந்தனர் | Thaipoosam : Devotees witness Vadalur Jothi darisanam - Tamil  Oneindia
வடலூர் ஞானசபை

சன்மார்க்க சங்கத்தை நிறுவிய இராமலிங்கர் சங்கத்துக்கான கொள்கைகளை விவரித்ததோடு, சங்கத்துக்கென பிரத்தியேகமான கோவில் ஒன்றையும் நிறுவினார். இராமலிங்கர் வாழ்ந்த வடலூரிலேயே இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. இதில் சிலை வழிபாடு இல்லாமையே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இக்கோவிலை ‘ஞானசபை’ என வித்தியாசமாக இராமலிங்கர் குறிப்பிடுகிறார். அக்காலத்தின் வெள்ளையர் அரசாங்க குறிப்பேடுகளில் இக்கோவிலைப்பற்றிப் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.– ‘1872’இல் நன்கொடை வசூல் மூலம் பார்வதிபுரத்திலுள்ள வடலூரில் விநோதமான எட்டுக்கோன (domed roof) வடிவிலான கோவில் ஒன்று அவரால் (இராமலிங்கரால்) கட்டப்பெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவில் அங்கிருந்து தெரிவதனால் அவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது சாதாரண கோவிலன்று. வழிபாட்டு முறைகள் அதில் மிகவும் வேறுபட்டவை,’ எட்டு பக்கங்கள் கொண்ட இக்கோவிலை நிர்மாணித்ததின் முக்கிய நோக்கம் மக்கள் உண்மையான இறை வழிபாடு செய்யவும், உலக வாழ்க்கை பிணிகளில் இருந்து விடுபடவும், மரணமிலாப் பெருவாழ்வு வாழவும், பேரின்பமான ஆன்ம வாழ்வு வாழவும் எனக் கூறுகிறார் வள்ளலார். கோவில் பற்றிய விளம்பரங்களில் இறைவன் இப்பூமிக்கு எழுந்தருளப்போகிறார் எனவும் அருட்பெருஞ்சோதியான அவரே இக்கோவிலில் வணங்கப்படவேண்டும் எனவும் இராமலிங்கர் வலியுறுத்துகிறார். இறைவன் அருட்- பெருஞ்சோதியாக இப்பூமிக்கு வரவிருக்கின்றார் எனக் கூறிய வள்ளலார் அவ்வருகை எவ்விதம்  நடக்கும் எனத் தெளிவாக எங்கும் குறிப்பட்டதாகத் தெரியவில்லை. சில நேரங்களில் இறைவன் ஞானசபையில் வீற்றிருப்பார் எனவும் மற்ற நேரங்களில் கீழ்கண்டது போலும் விளக்குகிறார்.- ‘சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதற்கு மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும் ஜாதி பேதங்களும் ஆசார பேதங்களும் போய், சுத்த சன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது (உயுகூ) மாதத்திற்கு மேல், இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுளர் தேவர் அடியர் யோகி ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் எல்லாத் தேவர்களும் எல்லாக் கடவுளரும் எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்ளைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித் தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்து தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்’. எனவும் ‘நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த நிருத்தமிடுந் தனித் தலைவ ரொருத்தரவர் தாமே வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே’ என்றும் பாடுகிறார். இந்த வருகையை ஈரேழுபதிநான்கு உலகவாசிகளும் கண்டு வியந்து என்னே இது என்னே இது என்று மயங்குவர் என்றும் மற்றுமொரு இடத்தில் கூறுகிறார். மற்றுமொரு அறிவிப்பில் – “ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும் பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர் என்றும், அதுகாலையில் நாமும் ஆன்மலாபத் தைப் பெற்றுக்- கொள்ளுவோம்….” என அறிவிக்கின்றார். சுருங்கக் கூறவேண்டுமாளால் இறைவன் ஏதோவொரு வகையில், ஆளால் இதுவரை நடைபெறாத வகையில், பூமிக்கு வருகையளிக்க இருக்கின்றார் என்றே அந்நேரம் இராமலிங்கர் தம்மைச்சுற்றியுள்ளவர்களிடம் போதித்துள்ளார். தம்மைச் சூழ்துள்ளவர்களில் சிலர் மட்டுமே அவர் போதனைகளை கடைபிடிப்பது கண்டு மனமுடைந்த இராமலிங்கர்.-“இவ்வகில உலக சகோதரத்துவ சங்கத்தின் உறுப்பினராவதற்கு நீங்கள் அருகரல்லர். உலக சகோதரத்துவத்தின் உண்மையான உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வடக்கே வெகு தொலைவில் இருக்கிறார்கள். எனக்கு செவிசாய்க்கவில்லை. நான் உபபேசிப்பதை நீங்கள் பின்பற்றவில்லை. நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் போலும், ரஷ்யாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இன்னும் வெளி நாடுகளிலிருந்தும் வந்து இதே அகில உலக சகோதரத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை, அப்போதுதான் நான் உங்களுக்கு வீனில் இப்போது சொல்லிவரும் பேருண்மைகளை உணர்ந்து பாராட்டுவீர்கள். வடக்கே வெகுதொலைவில் வாழும் அச் சகோதரர்கள் இந்தியாவுக்கு வந்து வியக்கத்தக்க பணிகளால் நம்நாட்டிற்கு அளவிடற்கரிய நன்மைகளைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள்’. இந்த வடக்கிலிருந்து வரும் சகோதரர்கள் நாங்கள்தான் என குறிப்பிட்ட சில சங்கத்தினர் கூறிக்கொள்கின்றனர். ஆனால் இவர்கள் இந்தியாவில் செய்த வியக்கத் தக்க பணிகள் என்ன என்று விளங்கவில்லை. புது டில்லியில் எழுந்திருக்கும் தாமரைக் கோவில் போன்ற வியக்கத்தக்க பணியை யார் செய்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.  

இணை நிலையங்கள் (சத்திய தருமச்சாலை) 

அனுதினமும் மதிய உணவு தர்மசாலையில் பரிமாறப்படுகின்றது

ஜீவகாருண்யமெனும் சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கைக்கு சின்னமாக தருமச்சாலை ஒன்றை நிறுவினார். அப்போது அங்கு நிலவிய முக்கிய நோயாகிய ‘பசி’ என்ற நோய் தீர, முடிந்ததைச் செய்ய நிறுவப்பட்டதே இந்த சாலை. ‘கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சிவதேகங்ளென்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே சீவகாருணியம்’ எனக் கூறுகிறார் வள்ளலார். பாட்டொன்றில் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்” எனக் கூறுகிறார். இத்தருமச்சாலையில் ஜாதி பேதமின்றி பசியென்று வருவோருக்கு பசிபோக்க வேண்டும் எனவும் விதித்தார்.

ன்மார்க்க போதினி (பாடசாலை)

தருமச்சாலை நிறுவிய அதே ஆண்டிலேயே (1867) அவர் சன்மார்க்க போதினி என்னும் பாடசாலை ஒன்றையும் நிறுவினார். இப்பாடசாலையில் சிறியவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டது. இங்கு தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.

சன்மார்க்க சங்க பத்திரிகை

சன்மார்க்க கொள்கை பிரச்சாரத்துக்கான   கருவியாக பத்திரிகை ஒன்று வள்ளலாரால் தொடங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி பிற விபரங்கள் இல்லை.

திருவருட்பா

வள்ளலார் அளித்த பாடல்களும் போதனைகளும் தொகுக்கப்பட்டு திருவருட்பா எனப் பெயரிடப்பட்டது. அவருடைய சீடர்கள் அவற்றை அச்சிடுவதற்காக இராமலிங்கரிடம் அனுமதி கேட்டனர். ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக்கொள்ளாத இராமலிங்கர் பிறகு தாம் பாடிய பாடல்களைத் தவிர்த்துவிட்டு அருட்பெருஞ்சோதியர் அருளால் தாம் பாடிய பாடல்களை மட்டும் அச்சிட அனுமதி தந்தார். தம் பாடல்கள் அச்சிடப்படுவது அவ்வளவு அவசியமில்லை என்று கூறிவிட்டார். திருவருட்பா முகப்பில் வள்ளலாரை இராமலிங்கசாமி எனப்பெயரிட அவர் சீடர்கள் அனுமதி கோரினர். அதற்கு இராமலிங்கர் இராமலிங்கசாமி யென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை ? ஆரவாரத் திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும். ஜீவகாருண்யமும் சிவானுபவமும் அன்றி மற்றவைகளை மனத்தின்கண் மதியாயிருத்தல் வேண்டும்.’

(தொடரும்)

“எங்கள் நாட்டில் ஒரு குறிப்பிடத்தகும் அனுபவம்”: ஐக்கிய அரபு நாடுளின் சமய தலைவர்கள் சகவாழ்வைப் பேணுகின்றனர், ஓர் ஒன்றுபட்ட தொலைநோக்கை நிர்மாணிக்கின்றனர்



8 அக்டோபர் 2021


அபு தாபி, ஐக்கிய அரபு நாடுகள், 22 ஜூலை 2021, (BWNS) — ஐக்கிய அரபு நாடுகள் (UAE) பஹாய்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தனித்தன்மையான கருத்தரங்கு நாட்டின் மத தலைவர்கள் பரஸ்பர மரியாதையை நிர்மாணிப்பதற்கும் அப்பால் சென்று, சகவாழ்வு, பொது அக்கறை சார்ந்த கேள்விகள் மீதான ஒன்றுபட்ட தொலைக்கு ஆகியவற்றைப் பேணுகின்றனர்.

ஐக்கிய அரபு நாடுகளின் பல்வேறு மத சமூகங்களின் பிரதிநிதிகள், இந்தத் தொற்றுநோயின் ஆரம்பத்தில் தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு தளமாக இந்த மன்றம் நிறுவப்பட்டது, ஆனால் அது விரைவாக, மதத் தலைவர்கள் சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உறுதியான வகையில் பங்களிப்பதில் மதத்தின் பங்கை ஆராய்வதற்கான வழிமுறையாக உருவாகியுள்ளது .

“பங்கேற்பாளர்கள் தங்கள் சமய சமூகங்களில் சிந்தனா ஒற்றுமையை வளர்ப்பதற்கும், நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் கூட்டு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் எவ்வாறு மேலும் கலந்துரையாடல்களைத் தூண்டுவது என்பது பற்றிய ஒன்றிணைந்த கலந்தாலோசனை” இந்த கூட்டங்களை குறிப்பிடத்தக்கவையாக ஆக்கியுள்ளது என அந்நாட்டு பஹாய்களின் பிரதிநிதி ரோயா ஸாபெட் கூறுகிறார் .

அவர் தொடர்ந்து கூறுவதாவது: “சமூக தன்மைமாற்றம் தொடர்பான ஆழமான கருத்தாக்கங்கள் மற்றும் கருப்பொருள்களைப் பற்றி நாங்கள் ஆராய்ந்து, விரிவான குழுக்களிடையே மதம் எவ்வாறு செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் என்பதைப் பற்றி ஆழமாக சிந்திக்கின்றோம்.”

பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவத்தின் பஹாய் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு சமீபத்திய கூட்டத்தில், ஒரு பங்கேற்பாளர் கூறியதாவது: “மதத் தலைவர்கள் எனும் முறையில் நாம் அனைவரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தைப் பற்றிய உண்மையான புரிந்துணர்வு கலாச்சாரத்தை வடிவமைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளோம். ”

கலந்துரையாடலுக்காகத் தயாரிக்கப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவம் என்பது பொது நன்மைக்காக சாதிக்கப்பட வேண்டிய ஒரு சூழல் மட்டுமின்றி, அது மனித மெய்நிலையின் ஓர் அம்சமாகும், என்பதை ஐக்கிய அரபு நாடுகளின் பஹாய்கள் எடுத்துரைத்தனர்.

அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது: “அர்த்தம் தேடுதல், நோக்கம், சமூகம், அன்பு செலுத்துவதற்கான திறனாற்றல், உருவாக்குதல், பற்றுறுதியுடன் இருத்தல் ஆகியவற்றிற்குப் பாலினம் கிடையாது. இத்தகைய நம்பிக்கை மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒழுங்கமைப்பதில் ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. மனிதர்களை மனிதர்களாக்குவது–அவர்களின் உள்ளார்ந்த கண்ணியம் மற்றும் மேன்மையே–ஆணோ பெண்ணோ அல்ல. ”

இதுவும் கடந்த வருடத்தில் ஆராயப்பட்ட பிற கருப்பொருள்களும் ஐ.அ.நாடுகளின் சமுதாயத்தில் சகவாழ்வு பற்றிய ஒரு விரிவான உரையாடலின் ஒரு பகுதியாகும். இது, இந்தச் சொல்லாடல், சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு நாடுகளில் மட்டுமன்றி, முழு அரபு மண்டலத்திலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

In-person gathering held according to safety measures required by the government. Representatives of the Bahá’í community of the United Arab Emirates meet with leaders of other religious communities in an interfaith gathering hosted by the Hindu community in November 2020.
அரசாங்கம் விதித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி நிகழ்ந்த நேரடி ஒன்றுகூடல். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகள் பிற மத சமூகங்களின் தலைவர்களை நவம்பர் 2020’இல் இந்து சமூகம் நடத்திய ஒரு சமய நல்லிணக்க கூட்டத்தில் சந்திக்கின்றனர்.

“இந்தக் குழு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றிணைத்து மதிப்புமிக்க விவாதங்களைத் தொடங்குவதன் மூலம் சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மைக்கான மட்டத்தை உயர்த்தியுள்ளது” என நாட்டின் பௌத்த சமூகத்தின் பிரதிநிதி ஆஷிஸ் பரூவா கூறுகிறார். கூட்டங்களின் ஒருங்கிணைந்த உணர்வைப் பற்றி திரு பரூவா தொடர்கிறார்: “இது உண்மையிலேயே அரிதானது … அதுவும் நம் வாழ்நாளில்.”

பங்கேற்பாளர்களிடையே வளர்க்கப்பட்ட நட்பின் வலுவான பிணைப்புகளை பஹாய் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸபேட் விவரிக்கிறார்: “இந்தக் கூட்டங்களின் மூலம் நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம், சமூகத்தில் அதிக சகவாழ்வை வளர்ப்பது மற்றும் ஊக்குவிப்பது எப்படி என்பதிலும் சமூகத்தின் பொதுநலனை ஊக்குவிப்பதிலும் உண்மையான கவனம் செலுத்தி மணிக்கணக்கில் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். வெவ்வேறு மதங்களின் தலைவர்களிடையே இந்த வகையான உரையாடல் நம் நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அனுபவமாகும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1520/