
8 அக்டோபர் 2021

அபு தாபி, ஐக்கிய அரபு நாடுகள், 22 ஜூலை 2021, (BWNS) — ஐக்கிய அரபு நாடுகள் (UAE) பஹாய்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தனித்தன்மையான கருத்தரங்கு நாட்டின் மத தலைவர்கள் பரஸ்பர மரியாதையை நிர்மாணிப்பதற்கும் அப்பால் சென்று, சகவாழ்வு, பொது அக்கறை சார்ந்த கேள்விகள் மீதான ஒன்றுபட்ட தொலைக்கு ஆகியவற்றைப் பேணுகின்றனர்.
ஐக்கிய அரபு நாடுகளின் பல்வேறு மத சமூகங்களின் பிரதிநிதிகள், இந்தத் தொற்றுநோயின் ஆரம்பத்தில் தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு தளமாக இந்த மன்றம் நிறுவப்பட்டது, ஆனால் அது விரைவாக, மதத் தலைவர்கள் சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உறுதியான வகையில் பங்களிப்பதில் மதத்தின் பங்கை ஆராய்வதற்கான வழிமுறையாக உருவாகியுள்ளது .
“பங்கேற்பாளர்கள் தங்கள் சமய சமூகங்களில் சிந்தனா ஒற்றுமையை வளர்ப்பதற்கும், நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் கூட்டு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் எவ்வாறு மேலும் கலந்துரையாடல்களைத் தூண்டுவது என்பது பற்றிய ஒன்றிணைந்த கலந்தாலோசனை” இந்த கூட்டங்களை குறிப்பிடத்தக்கவையாக ஆக்கியுள்ளது என அந்நாட்டு பஹாய்களின் பிரதிநிதி ரோயா ஸாபெட் கூறுகிறார் .

அவர் தொடர்ந்து கூறுவதாவது: “சமூக தன்மைமாற்றம் தொடர்பான ஆழமான கருத்தாக்கங்கள் மற்றும் கருப்பொருள்களைப் பற்றி நாங்கள் ஆராய்ந்து, விரிவான குழுக்களிடையே மதம் எவ்வாறு செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் என்பதைப் பற்றி ஆழமாக சிந்திக்கின்றோம்.”
பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவத்தின் பஹாய் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு சமீபத்திய கூட்டத்தில், ஒரு பங்கேற்பாளர் கூறியதாவது: “மதத் தலைவர்கள் எனும் முறையில் நாம் அனைவரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தைப் பற்றிய உண்மையான புரிந்துணர்வு கலாச்சாரத்தை வடிவமைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளோம். ”
கலந்துரையாடலுக்காகத் தயாரிக்கப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவம் என்பது பொது நன்மைக்காக சாதிக்கப்பட வேண்டிய ஒரு சூழல் மட்டுமின்றி, அது மனித மெய்நிலையின் ஓர் அம்சமாகும், என்பதை ஐக்கிய அரபு நாடுகளின் பஹாய்கள் எடுத்துரைத்தனர்.

அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது: “அர்த்தம் தேடுதல், நோக்கம், சமூகம், அன்பு செலுத்துவதற்கான திறனாற்றல், உருவாக்குதல், பற்றுறுதியுடன் இருத்தல் ஆகியவற்றிற்குப் பாலினம் கிடையாது. இத்தகைய நம்பிக்கை மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒழுங்கமைப்பதில் ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. மனிதர்களை மனிதர்களாக்குவது–அவர்களின் உள்ளார்ந்த கண்ணியம் மற்றும் மேன்மையே–ஆணோ பெண்ணோ அல்ல. ”
இதுவும் கடந்த வருடத்தில் ஆராயப்பட்ட பிற கருப்பொருள்களும் ஐ.அ.நாடுகளின் சமுதாயத்தில் சகவாழ்வு பற்றிய ஒரு விரிவான உரையாடலின் ஒரு பகுதியாகும். இது, இந்தச் சொல்லாடல், சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு நாடுகளில் மட்டுமன்றி, முழு அரபு மண்டலத்திலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

“இந்தக் குழு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றிணைத்து மதிப்புமிக்க விவாதங்களைத் தொடங்குவதன் மூலம் சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மைக்கான மட்டத்தை உயர்த்தியுள்ளது” என நாட்டின் பௌத்த சமூகத்தின் பிரதிநிதி ஆஷிஸ் பரூவா கூறுகிறார். கூட்டங்களின் ஒருங்கிணைந்த உணர்வைப் பற்றி திரு பரூவா தொடர்கிறார்: “இது உண்மையிலேயே அரிதானது … அதுவும் நம் வாழ்நாளில்.”
பங்கேற்பாளர்களிடையே வளர்க்கப்பட்ட நட்பின் வலுவான பிணைப்புகளை பஹாய் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸபேட் விவரிக்கிறார்: “இந்தக் கூட்டங்களின் மூலம் நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம், சமூகத்தில் அதிக சகவாழ்வை வளர்ப்பது மற்றும் ஊக்குவிப்பது எப்படி என்பதிலும் சமூகத்தின் பொதுநலனை ஊக்குவிப்பதிலும் உண்மையான கவனம் செலுத்தி மணிக்கணக்கில் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். வெவ்வேறு மதங்களின் தலைவர்களிடையே இந்த வகையான உரையாடல் நம் நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அனுபவமாகும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1520/