வள்ளலார் வரலாறு, ஒரு பஹாய் கண்ணோட்டம் – 6


நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே
நிருத்த மிடும்தனித்தலைவ ரொருத்தரவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே

வள்ளலாரின் வாழ்வை ஆராயுமிடத்து, அவரைப் பலர் பலவித கோணங்களில் வர்ணித்துள்ளனர், முக்கியமாக ஒரு சீர்திருத்தவாதியாக அவரைப் பறைசாற்றுகின்றனர். ஆனால், அவரது போதனைகளை நாம் ஆராய்வோமானால், சமுதாயத்தைச் சீர்த்திருத்துவது மட்டும் அவரது நோக்கமல்ல என்பது தெளிவுபடும். அவர் ஒரு முன்னறிவிப்பாளராக, பூமியில் கடவுளின் ஆட்சி நடைபெறப் போவதை அறிவிக்க வந்தவராகவே காணப்படுவார். அக்காலத்தில் இவரைப் போன்றே வேறு பலரும் தோன்றினர். உதாரணத்திற்கு வில்லியம் மில்லர் (1782 – 1849) என்பவரைக் கூறுலாம். இவர் ஐக்கிய அமெரிக்காவின் மாஸாச்சுஸெட்ஸ், பிட்ஸ்ஃபீல்டில் பிறந்தவர். ஏயேசு நாதர் கடவுளின் இராஜ்யத்தை உலகில் ஸ்தாபிப்பதற்காக கி.மு 1844’இல் தோன்றவிருக்கின்றார் என அறிவித்து, மில்லரிஸம் எனும் இயக்கத்தையும் ஆரம்பித்தார். அடுத்து பாஹ்ரேய்னில் பிறந்த ஷெய்க் அஹமது (1753 – 1826) என்பவரைக் குறிப்பிடலாம். இவரது சீடராக, இவர் வழியில் தோன்றிய ஸையிட் காஸிம் (1793 – 1843) என்பார் இருந்தார். ஷேய்க்கி இயத்தை ஆரம்பித்த இவர்கள் இருவரும் இஸ்லாத்தில் வாக்களிக்கப்பட்ட மறைத்திருக்கும் 12’வது இமாம் அல்லது இமாம் மஹதி விரைவில், குறிப்பாக ஹிஜ்ரி 1260’இல் அல்லது கி.மு. 1844’இல் தோற்றவிருக்கின்றார் என போதித்தனர். இதே போன்று வேறு பலரும் ஆன்மீக உத்வேகம் பெற்றவர்களாக, 17’ஆம் மற்றும் 18’ஆம் நூற்றாண்டுகளில் தோன்றினர். உதாரணத்திற்கு இராமகிருஷ்ன பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோரையும் குறிப்பிடலாம்.

பின்வரும் அவரது பாடலை முதலில் பார்ப்போம்:

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே யபிமானித் தலைகின்ற வுலகீர்
அலைந்தலைந்து வீணேநீ ரழிதலழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே
நிருத்த மிடும்தனித்தலைவ ரொருத்தரவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே

முதலில், மேற்கண்ட பாடலிலிருந்து இராமலிங்கர், ஒரு மாபெரும் நிகழ்விற்கு மக்களைக் கூவியழைக்கின்றார் என்பது வெள்ளிடை. சன்மார்க்க நிலையில் உலகில் நீதியை நிலைநாட்டுவதற்காகக் கடவுள் தாமே அவதரிக்கப்போகும் தருணம் இதுவென இராமலிங்கர் கூவி அழைக்கின்றார். இதை அவர் உரைத்தது (1823 – 1874) வருடங்களுக்கிடையில்.

‘நிருத்தமிடும் தனித்தலைவர்’ — ஹிந்து சமய மும்மூர்த்திகளுள் சிவபெருமான் எனக் குறிப்பிடப்படுவது உண்மையில் ருத்திரன் எனப்படும் வேறொரு மூர்த்தமாகும். இராமலிங்கர் கடவுளை முழுமுதற் பொருளாகிய சிவம் என குறிப்பிடுகின்றார். இந்துக்களின் நடராஜர் கோவில்களில் இறைவன் நிருத்தமிடும் கோணத்தில் சித்தரிக்கப்படுவதை நாம் காணலாம். இங்கு நிருத்தமிடும் தனித்தலைவர் சிவமான கடவுளே என்பது தெளிவு.

நிருத்தமிடுவது – இதன் பொருள் யாது? இது ஆங்கிலத்தில் ‘Cosmic Dance’, அல்லது ‘பிரபஞ்ச நடனம்’  எனக் குறிப்பிடப்படுகின்றது. உலகில் கடவுளின் திருவெளிப்பாடு (Divine Revelation) நிகழும் தருணங்களே, கடவுளின் பிரபஞ்ச நடனம் நிகழும் தருணங்கள் எனக் கூறலாம். அவ்வேளைகளில் உலகில் பலவிதமான மாற்றங்களும் மேம்பாடுகளும் நிகழ்கின்றன.

‘தாமே’ – சாதாரணமாக ஒரு சமயம் உலகில் தோன்றும் போது அச்சமயங்களைத் தோற்றுவிப்போர், கடவுளின் நண்பராக (ஆபிரஹாம்), கடவுளின் ஆவியாக (இயேசு), உலகில் தோன்றி ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்துச் சென்றனர். ஆனால் இன்றோ கடவுள் தாமே இவ்வுலகில் தோன்றிவிருக்கின்றார் என வள்ளலார் கூறுகின்றார். கடவுள் தாமே உலகில் தோன்றுதல் சாத்தியமாகாது. அதாவது, ஒவ்வொரு இறைத்தூதரும் கடவுளின் சில அம்சங்களின் அடிப்படையில் உலகில் தோன்றுகின்றனர். ஆனால், இன்றோ கடவுளின் அவதாரமாகிய பஹாவுல்லா, அல்லது இறைவனின் ஜோதி, கடவுளின் பண்புகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தம்முள் தாங்கி வந்துள்ளார். இதைத்தான் கடவுள் தாமே உலகில் தோன்றவிருக்கின்றார் எனக் கூறப்பட்டுள்ளது. இங்கு ‘வீதி’ என்பது மனிதர் வாழும் உலகைக் குறிப்பதாகும்.  

அருட்சோதி விளையாடல் – இறைவன் சாதாரனமாகவின்றி இம்முறை அவர் அருட்ஜோதியாக பூமியில் தோன்றவிருக்கின்றார் என்பது இதன் பொருளாகும். இராமலிங்கரின் ஒரு முக்கிய மந்திரம், ‘அருட்பெருஞ்சோதி’ என்னும் பதமாகும். இதனை ஆங்கிலத்தில் ‘Supreme Grace Glory’ எனக் கூறலாம். இக்கால கடவுளின் அவதாரமான பஹாவுல்லாவின் திருநாமம், ஆங்கிலத்தில் ‘Glory of God’ என வரும்.

ஆக, இராமலிங்கரின் முக்கிய நோக்கமே, இறைவனின் அவதாரத்தை முன்னறிப்பதுவே ஆகும்.

சுத்த சன்மார்க்கம் எனும் ஒரு முறையை வள்ளலார் நிர்மானித்தார். இதன் பொருள், பரிசுத்த சத்திய மார்க்கம் என்பதாகும். கடவுளை அடைவதற்கு இதுவே சரியான வழியாகும். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதைக் கடவுளின் திருவெளிப்பாடு அல்லது அவரது சமயம் எனக் கூறலாம்.

கடவுளின் இந்த வருகைக்காக அவர் சத்திய ஞானசபையான ஒரு எட்டு வடிவ கோவிலை நிர்மாணித்தார். அக்கோவிலில் ஓர் ஆயிரம் வருடங்களுக்கு கடவுள் வீற்றிருந்து, அருள்பாலிப்பார் என்றார். கடவுளை ஜோதியாகக் கண்ட இராமலிங்கர் தாம் நிர்மாணித்த கோவிலில் ஜோதி வழிபாடென ஒரு முறையை ஸ்தாபித்தார். அதில் கடவுளை ஜோதியாக வழிபடுமாறு தமது சீடர்களுக்குப் போதித்தார்.

தம்மைச் சுற்றியுள்ளோர் தமது போதனைகளைக் கடைப்பிடிக்கத் தவறியது கண்டு மனம் வெறுத்த வள்ளலார், தாம் கட்டிய கோவிலின் கதவுளைப் பூட்டி, திறவுகோலைத் தம்முடனேயே வைத்துக்கொண்டார். தம்மைச் சுற்றியுள்ளோரைப் பார்த்து, அவர்கள் சங்கத்திற்கு அருகதையற்றவர்கள் எனக் கூறி விரைவில் மேற்கு மற்றும் வடக்கிலுள்ள சில நாடுகளிலிருந்து வரும் அன்பர்கள் பலர் இதே போதனைகளை அவர்களுக்கு வழங்குவர் எனவும் அப்போதுதான் தாம் என்ன சொல்லவும் செய்திடவும் விரும்பினார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றார். தியோசோஃபிக்கல் சொசையட்டியைச் (Theosophical Society) சேர்ந்தோர் இந்த தீர்க்கதரிசன கூற்றுக்குறியோர் தாங்களே எனக் கோரியுள்ளனர். ஆனால், இன்று உலகளவிய நிலையில் உலக ஒற்றுமைக்காக, மனிதகுல ஒருமைக்காகப் பாடுபட்டுவரும் பஹாய் சமூகத்தினர், இவ்வித கோரிக்கை எதையும் வைக்காவிடினும், அவர்கள் ஆற்றி வரும் சேவைகளே அவர்கள் இந்த தீர்க்கதரிசனத்திற்கு உரியோர் என்பதை நிரூபிக்கின்றது.

பஹாய் சமயம் கி.மு. 1844’இல் சையிட் அலி முகம்மத் அல்லது பாப் பெருமானார் (வாசல்) என்பவரால் பாரசீக நாட்டில் ஆரம்பம் கண்டது. இவர், தாம் தமக்குப் பின் வரவிருக்கும் ஒரு மாபெரும் அவதாரத்திற்கான முன்னோடியே எனக் கூறினார். பின்னர் கி.மு. 1863’இல் பஹாவுல்லா அல்லது ‘கடவுளின் ஜோதி’ என்னும் திருநாமம் கொண்ட மிர்ஸா ஹுஸெய்ன் அலி, பாக்தாத்திற்கு அருகிலுள்ள டைகிரிஸ் நதிக்கரையிலுள்ள ரித்வான் எனும் பெயர் கொண்ட தோட்டத்தில், பாப் பெருமானார் முன்னறிவித்த அந்தக் கடவுளின் அவதாரம் தாமே என 1863’இல் அறிவித்தார். இன்று பல மில்லியன் கணக்கிலான அவரது நம்பிக்கையாளர்கள் கடவுளின் இராஜ்யத்தை, மனுக்குல ஒருமையை, உலக அமைதியை ஸ்தாபிப்பதற்காக தியாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். (bahai.org)

முற்றும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: