
8 அக்டோபர் 2021
கின்ஷாசா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, 29 ஜூலை 2021, (BWNS) – காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பஹாய் வழிபாட்டு இல்லத்தின் அஸ்திவாரங்கள் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு, மத்திய கட்டிடத்தின் கீழ் பகுதியை உருவாக்கும் கண்ணைக் கவரும் கட்டமைப்புக் கூறுகள் தென்பட ஆரம்பிக்கின்றன.
சமுதாயத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட அதிக நடவடிக்கைகளுடன் கோவில் கட்டுமானத்தில் மேற்கொள்ளப்படும் விரைவான முன்னேற்றம் ஒன்றாக மேம்பாடு காண்கிறது.
“வழிபாட்டு இல்லம் நம் கண்ணெதிரே தோன்றுகிறது” என்று நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் லாவோசியர் முடோம்போ சியோங்கோ கூறுகிறார்.
அவர் தொடர்ந்து கூறுவதாவது: “அதே சமயம், கோவில் எதைக் குறிக்கிறது என்பதன் மூலம் தூண்டப்பட்ட நடவடிக்கைகளின் தீவிரத்தை நாங்கள் காண்கிறோம். வழிபாட்டுக் கூட்டங்கள், கல்வி முயற்சிகள் மற்றும் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் ஆறுகள் மற்றும் நீர் ஆதாரங்களை சுத்தம் செய்தல் போன்ற அனைத்து முயற்சிகள் முதல் உணவு பாதுகாப்பு மற்றும் வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் சக்தியளிப்பு ஆகிய துறைகளில் முறையான நடவடிக்கைகள் வரை அனைத்தும் அதிகரித்து வருகின்றன. ”
கின்ஷாசாவின் புறநகரில் அமைந்துள்ள தேசிய வழிபாட்டு இல்லம் பற்றிய உரையாடல்கள் மூலம் பேணப்படும் கடவுள் வழிபாட்டுக்கும் மனிதகுலத்துக்கான சேவைக்கும் இடையிலான உறவின் ஒரு மதிப்புணர்வானது, அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான காரணமென திரு சியோங்கோ கூறுகிறார்.
லுபும்பாஷியின் பஹாய் சமூகத்தைச் சேர்ந்த அனிஸ் என்னும் இளைஞர், சேவைக்கும் வழிபாட்டுக்கும் இடையிலான உறவைப் பற்றிய பிரதிபலிப்புடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அது இன்னும் கட்டுமானத்தில் இருந்தபோதிலும், மக்கள் வழிபாட்டுக்காக கோவிலுக்குச் செல்லும்போது, அவர்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்கள் பற்றி அவர்கள் அதிக தெளிவுடன் செல்கிறார்கள், ஏனெனின், பிரார்த்தனை மற்றும் தியானத்தில் மூழ்குவது ஆன்மீக உணர்வை உருவாக்குகிறது. அந்தத் தருணங்களில், வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை நாம் காண்கிறோம் — சமுதாய நன்மைக்கான ஆதாரமாக மாறி, சக குடிமக்களுக்கு உதவியாக இருப்பது.”
வளர்ந்து வரும் வழிபாட்டு இல்லத்தின் விளைவுகள் அந்த இடத்தைப் பார்வையிட முடிந்த அப்பகுதியின் குடியிருப்பாளர்களால் மட்டுமல்ல, மேலும் தொலைவில் உள்ள மக்களாலும் உணரப்பட்டுள்ளன.
தேசிய ஆன்மீக சபை, பஹாய் திருவாக்குகளில் ஒரு மாஷ்ரிகுல்-அஸ்கார் அல்லது “கடவுள் புகழப்படும் மூலஸ்தானம்” என குறிப்பிடப்படும் வழிபாட்டு இல்லம் பற்றி பல கலந்துரையாடல்களை காங்கோ முழுவதும், அரசாங்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கத் தூண்டி வருகிறது, என திரு. ஷியோங்கோ விளக்குகிறார்.
தெற்கு கிவுவின் பராக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய இரண்டாவது தலைமை ம்’முவா லுவேயா ஔலால்வா, பஹாய் கோயில்கள், கிராம பெரியவர்களிடையே பிரார்த்தனை மற்றும் சமூக விஷயங்களில் கலந்துரையாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடமாக, லுபுங்காவின் நினைவுகளை எவ்வாறு நினைவில் கொள்கின்றன என்பதை விவரித்தார்.
“நவீன வாழ்க்கையிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்ட லுபுங்கா, கிராம பெரியவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கும் சமூக விஷயங்களுக்கு உதவும்போது வழிகாட்டல்களைக் கோருவதற்கும் இடமளிக்கிறது. இன்று, நாங்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டி, அவர்களின் படைப்பாளருடன் இணைக்கக்கூடிய ஒரு மையமான மாஷ்ரிகுல்-அஸ்கார் பற்றி கற்று வருகிறோம்.”
கட்டுமானப் பணியின் முன்னேற்றம் கீழ்க்காணும் படங்களின் வழி சித்தரிக்கப்படுகின்றது.










மூலாதாரம்: https://news.bahai.org/story/1521/