பஹாய்கள் இன்று சமூக நிர்மாணிப்புப் பணிகளிலும் உலகில் நீதியை ஸ்தாபிப்பதிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் தங்களின் வாக்களிப்பு உரிமைகளைப் பயன்படுத்துவதில்லை எனப் பொருள்படாது. அவர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவது, தங்கள் சமயத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் வழிகளில் வாதிடுவது ஆகியவற்றின் மூலம் ஜனநாயகத்தை ஆதரிக்கவே செய்கின்றனர். கல்வி, இன நீதி, மனித உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் சுகாதாரம் மற்றும் நலன் போன்ற முக்கிய விஷயங்களில் நடவடிக்கை எடுக்க தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்.

அவர்கள் பஹாவுல்லாவின் தெய்வீகத் திட்டத்தின் முழு காட்சியையும் மனதில் கொண்டு தங்கள் காரியங்களில் ஈடுபடுகின்றனர். மனிதகுல ஒருமை எனும் அடிப்படைக் கொள்கையை மையமாகக் கொண்டு, மனிதகுலத்தை அதன் இளமைப் பருவத்திலிருந்து முதிர்ச்சிக்குத் தன்மைமாற்றுவதற்கான நம்பிக்கைக்குரிய புதிய வழிகளை அவரது திருவெளிப்பாடு வழங்குகிறது.
ஆதலால், மனுக்குல ஒருமையை மனதில் கொண்டு அதற்கு எதிரானவற்றைத் தூண்டுகின்ற கட்சி சார்புடைய அரசியலில் அவர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்கின்றனர், அதாவது அரசியல் கட்சிகளில் உறுப்பினராவது. உலகளாவிய பஹாய் சமூகம் “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் அதன் பிரஜைகள்” என்னும் பஹாவுல்லாவின் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
பஹாவுல்லாவின் மகனார், அப்துல்-பஹா, “…நாங்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல,” எனக்கூறுகின்றார்.
உலகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான தீமைகள் அடிப்படையில் ஆன்மீக இயல்புடையவை, எனவே மூல காரணத்தை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளும் ஆன்மீகமானவையாக இருக்க வேண்டும். பஹாய் திருவாக்குகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன: “…லௌகீக உலகின் செயல்பாடானது அதன் ஆன்மீக நிலைமைகளின் பிரதிபலிப்பாகும். ஆன்மீக நிலைமைகள் மாறும் வரை, லௌகீக விவகாரங்களில் சிறந்த, நீடித்த மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.”
மிக அடிப்படையான பஹாய் போதனையை நாம் கருத்தில் கொள்வோம் – மனித குடும்பம் ஒன்று மட்டுமே உள்ளது. நாம் இதை உண்மையாக நம்பி, பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் அவர் நமது குடும்பத்தின் உறுப்பினரே என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். வறுமை, பசி, இனவெறி மற்றும் மனித உரிமை இல்லாமை போன்ற சமூகக் கோளாறுகளை இந்த நம்பிக்கை மாற்றக்கூடியது அல்லவா? நாம் மட்டும் நிறைய சாப்பிடும் போது நமது குடும்பத்தில் உள்ள ஒருவர் பசியுடன் இருந்திட அனுமதிக்க மாட்டோம். ஒவ்வொரு உயிரும் உன்னதமானது மற்றும் கண்ணியமானது என மதிப்போம்.
நாம் வாழும் இந்த கொந்தளிப்பான நேரமானது, இறுதியில் பெரும் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழிவகுத்திடும் என பஹாய்கள் முழுமையாக நம்புகிறார்கள் – வளர்ச்சியுறும் குழப்பங்கள் ஒரு கரிம செயல்முறையின் இயற்கையான கட்டமாக, மனிதகுலத்தை ஒன்றிணைத்திட வழிவகுக்கக்கூடியவை. பஹாவுல்லா, நோய்களைக் கண்டறிந்து அவற்றைக் குணப்படுத்தவல்ல ஒரு தெய்வீக மருத்துவராகப் பார்க்கப்பட வேண்டும்; அதே சமயம், அரசியலில், பெரும்பாலும் ஒற்றுமையற்ற வழிகளில், எதிர்மறையான வழிகளில் பல்வேறு பிரச்சனைகளும் பக்க விளைவுகளும் கையாளப்படுவதைக் நாம் அடிக்கடி காண்கின்றோம்.
தங்கள் சமூகங்கள் மற்றும் நாடுகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டாலும், மனிதகுலத்திற்குச் சேவை செய்ய விரும்பினாலும், பஹாய்கள் கட்சி சாராத வழிகளில் பங்கேற்று சச்சரவுகளுக்கு மேற்பட்டவர்களாக இருந்திட முயல்கிறார்கள். இது இந்த எதிர்முணைகளால் பீடிக்கப்பட்டுள்ள காலங்களில் ஒரு பெரிய சவாலாகும். கீழே உள்ள மேற்கோள்கள் பஹாய் கொள்கைகள் குறித்து அதிக விளக்கத்தை வெளிப்படுத்துகின்றன:
“பஹாய்கள் ஏன் அரசியலில் ஈடுபடுவதில்லை?”
பஹாய்கள் இன்று சமூக நிர்மாணிப்புப் பணிகளிலும் உலகில் நீதியை ஸ்தாபிப்பதிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் தங்களின் வாக்களிப்பு உரிமைகளைப் பயன்படுத்துவதில்லை எனப் பொருள்படாது. அவர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவது, தங்கள் சமயத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் வழிகளில் வாதிடுவது ஆகியவற்றின் மூலம் ஜனநாயகத்தை ஆதரிக்கவே செய்கின்றனர். கல்வி, இன நீதி, மனித உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் சுகாதாரம் மற்றும் நலன் போன்ற முக்கிய விஷயங்களில் நடவடிக்கை எடுக்க தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்.
அவர்கள் பஹாவுல்லாவின் தெய்வீகத் திட்டத்தின் முழு காட்சியையும் மனதில் கொண்டு தங்கள் காரியங்களில் ஈடுபடுகின்றனர். மனிதகுல ஒருமை எனும் அடிப்படைக் கொள்கையை மையமாகக் கொண்டு, மனிதகுலத்தை அதன் இளமைப் பருவத்திலிருந்து முதிர்ச்சிக்குத் தன்மைமாற்றுவதற்கான நம்பிக்கைக்குரிய புதிய வழிகளை அவரது திருவெளிப்பாடு வழங்குகிறது.
ஆதலால், மனுக்குல ஒருமையை மனதில் கொண்டு அதற்கு எதிரானவற்றைத் தூண்டுகின்ற கட்சி சார்புடைய அரசியலில் அவர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்கின்றனர், அதாவது அரசியல் கட்சிகளில் உறுப்பினராவது. உலகளாவிய பஹாய் சமூகம் “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் அதன் பிரஜைகள்” என்னும் பஹாவுல்லாவின் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
பஹாவுல்லாவின் மகனார், அப்துல்-பஹா, ““எங்கள் கட்சி கடவுளின் கட்சி; நாங்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல,” எனக்கூறுகின்றார்.
உலகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான தீமைகள் அடிப்படையில் ஆன்மீக இயல்புடையவை, எனவே மூல காரணத்தை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளும் ஆன்மீகமானவையாக இருக்க வேண்டும். பஹாய் திருவாக்குகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன: “…லௌகீக உலகின் செயல்பாடானது அதன் ஆன்மீக நிலைமைகளின் பிரதிபலிப்பாகும். ஆன்மீக நிலைமைகள் மாறும் வரை, லௌகீக விவகாரங்களில் சிறந்த, நீடித்த மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.”
மிக அடிப்படையான பஹாய் போதனையை நாம் கருத்தில் கொள்வோம் – ஒரு மனித குடும்பம் ஒன்று மட்டுமே உள்ளது. நாம் இதை உண்மையாக நம்பி, பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் அவர் நமது குடும்பத்தின் உறுப்பினரே என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். வறுமை, பசி, இனவெறி மற்றும் மனித உரிமை இல்லாமை போன்ற சமூகக் கோளாறுகளை இந்த நம்பிக்கை மாற்றக்கூடியது அல்லவா? நாம் மட்டும் நிறைய சாப்பிடும் போது நமது குடும்பத்தில் உள்ள ஒருவர் பசியுடன் இருந்திட அனுமதிக்க மாட்டோம். ஒவ்வொரு உயிரும் உன்னதமானது மற்றும் கண்ணியமானது என மதிப்போம்.
நாம் வாழும் இந்த கொந்தளிப்பான நேரமானது, இறுதியில் பெரும் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழிவகுத்திடும் என பஹாய்கள் முழுமையாக நம்புகிறார்கள் – வளர்ச்சியுறும் குழப்பங்கள் ஒரு கரிம செயல்முறையின் இயற்கையான கட்டமாக, மனிதகுலத்தை ஒன்றிணைத்திட வழிவகுக்கக்கூடியவை. பஹாவுல்லா நோய்களைக் கண்டறிந்து அவற்றைக் குணப்படுத்தவல்ல ஒரு தெய்வீக மருத்துவராக பார்க்கப்பட வேண்டும்; அதே சமயம், அரசியலில், பெரும்பாலும் ஒற்றுமையற்ற வழிகளில், எதிர்மறையான வழிகளில் பல்வேறு பிரச்சனைகளும் பக்க விளைவுகளும் கையாளப்படுவதைக் நாம் அடிக்கடி காண்கின்றோம்.
தங்கள் சமூகங்கள் மற்றும் நாடுகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டாலும், மனிதகுலத்திற்கு சேவை செய்ய விரும்பினாலும், பஹாய்கள் கட்சி சாராத வழிகளில் பங்கேற்று சச்சரவுகளுக்கு மேற்பட்டவர்களாக இருந்திட முயல்கிறார்கள். இது இந்த எதிர்முணைப்படுத்தப்பட்ட காலங்களில் ஒரு பெரிய சவாலாகும். கீழே உள்ள மேற்கோள்கள் பஹாய் கொள்கைகள் குறித்து அதிக விளக்கத்தை வெளிப்படுத்துகின்றன:
“சமயமானது, எந்த தேசத்தின் உண்மையான நலன்களுக்கும் எதிரானது அல்ல, எந்தக் கட்சி அல்லது பிரிவினருக்கும் எதிரானது அல்ல. அது அனைத்து சர்ச்சைகளிலிருந்தும் விலகி நிற்பதுடன் அவை அனைத்திற்கும் மேம்பட்டு இருக்கின்றது. “
“பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள சமயத்தை, அரசியல் அரங்கின் புயல்கள், பிளவுகள், சர்ச்சைகள் ஆகியவற்றுக்கும் மேலாக கடவுள் உயர்த்தியுள்ளார் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களின் சமயமானது, அடிப்படையில் அரசியல் சார்பற்றது, பண்பில் தேசிய உணர்வுகளுக்கும் மேம்பட்டது, தீவிரமாக கட்சி சார்பற்றது, மற்றும் தேசீய இலட்சியங்கள், குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களிலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது. அத்தகைய சமயத்திற்கு வர்க்கம் அல்லது கட்சி பிரிவினை கிடையாது.
அவர்கள் வசிக்கும் இடங்களின் கொள்கைகள் மற்றும் விவகாரங்களைப் பற்றி அலட்சியமாக இருப்பதற்குப் பதிலாக, பஹாய்கள் தங்கள் அரசாங்கத்தின் மற்றும் மக்களின் நலன்களை மேம்படுத்துதல் எனும் “புனிதக் கடமையை” உணர்ந்தே இருக்கின்றனர். பஹாய்கள் “சுயநலமற்ற, தன்னலமற்ற மற்றும் நேரடியானதும் தேசபக்திமிக்கதுமான பாணியில், ஒருவர் சேர்ந்த நாட்டின் மிக உயர்ந்த நலன்களுக்கு சேவை செய்ய அழைக்கப்படுகிறார்கள். இதை சமயத்தின் போதனைகளுடன் தொடர்புள்ள நேரிமை மற்றும் வாய்மையின் செந்தரங்களிலிருந்து சிறிதும் விலகாத முறையில் மேற்கொள்கின்றனர்.
நாம் அனைவரும் பாகுபாடு மற்றும் கருத்தியல் பிளவுகளைத் தாண்டி நமது ஆன்மீக விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் மூலம் வாழ்வதற்கான வழிகளைக் கருத்தில் கொள்வோமாக.
(https://cumberlink.com/lifestyles/faith-and-values/faith-in-focus-bahai-non-involvement-in-partisan-politics/article_ad9a9f60-fafc-57ff-8be7-302befbef8cd.html) எனும் இணையப்பக்கத்தின் தழுவல்