
8 அக்டோபர் 2021

ஒட்டாவா, கெனடா, 3 ஆகஸ்ட் 2021, (BWNS) – கடந்த வாரம் நடைபெற்ற பஹாய் படிப்பாய்வுகள் சங்கத்தின் (ABS) 45’வது வருடாந்திர மாநாடு, சிந்தனை மற்றும் சொல்லாடல்களின் ஒரு பரந்ததும் பல்வேறு துறைகளுக்குப பங்களிப்பதற்கான அவர்களின் முயற்சிகளின் மீது பிரதிபலிப்பதற்கு 2,500’க்கும் மேற்பட்ட மக்களை ஒன்றுகூட்டியது.
கடந்த ஆண்டு போலவே, வழக்கமாக ஒரு பௌதீகமான அரங்கில் நடைபெறும் மாநாடு, பெருந்தொற்றின் காரணமாக இணையத்திற்கு மாற்றப்பட்டது. சங்கத்தின் நிர்வாகக் குழுவின் செயலாளர் ஜூலியா பெர்கர், அமர்வுகளில் அதிக பங்கேற்பை உறுதி செய்வதற்காக எவ்வாறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் சங்கம் மிகுந்த அக்கறை எடுத்துள்ளது என்பதை விளக்குகிறார்.
“நேரில் கூடிவருவதை இயலாமல் செய்த சில சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இந்த மாநாட்டில் சிந்தனையைத் தூண்டும் மற்றும் கலகலப்பான விவாதங்கள் இடம்பெற்றன.

“பல அமர்வுகள் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டன, முதலாவது, முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற, முன்பதிவு செய்யப்பட்ட விளக்கக்காட்சிகள், இரண்டாவது, வளமான விவாதங்களுக்கு அதிக நேரத்தை அனுமதித்த, மாநாட்டின் போது நடைபெற்ற நேரடி அமர்வுகள்,”
இந்த ஆண்டு இறுதியில் ‘அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டை நினைவுகூர்வதற்கு உலகளாவிய பஹாய் சமூகம் தயாராகி வரும் நேரத்தில் இந்த 9-நாள் மாநாடு நடந்தது. “அப்துல்-பஹாவின் அடிச்சுவடுகளில்: நமது காலத்தின் சொல்லாடல்களுக்குப் பங்களிப்பு” எனும் தலைப்பில், மாநாட்டு நிகழ்ச்சி, சமுதாய நீதியின் சாம்பியன் மற்றும் மனிதகுலத்தின் ஒருமை குறித்த கொள்கையை நிலைநிறுத்துபவர் எனும் முறையில் அவரது வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்றது.

பங்கேற்பாளர்கள் சமூகத்தின் அறிவார்ந்த மற்றும் தார்மீக வாழ்க்கைக்கு பங்களிக்கும் ‘அப்துல்-பஹா’வின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை நினைவுகூர்ந்தனர். சமகால பிரச்சனைகள் மற்றும் இக்கால பிரச்சனைகளுக்கு அவர் பஹாய் கொள்கைகளைப் பயன்படுத்திய முறை, சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் பத்திரிக்கையின் பங்கு, தப்பெண்ணங்களை சமாளிக்க மக்களுக்கு உதவுவதில் திரைப்படத்தின் சக்தி, நியாயமான மற்றும் நிலையான உணவு முறைகளை உருவாக்குவதற்கான முயற்சிகள், நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமான அறிவியல் மற்றும் மதத்தின் இரட்டை அறிவு அமைப்புகள், உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்கள் குறித்து கலந்துரையாடல்களுக்கு அறிவூட்டியது..
அமர்வுகளில் ஒன்று, நவீன சமுதாயத்தின் அறிவுசார் அஸ்திவாரங்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான மாற்றம் பற்றிய இடைநிலை ஆராய்ச்சியுடன் மையத்தின் அனுபவத்தைப் பற்றி விவாதிக்க நவீனத்துவ நிலைமாற்ற மையத்தின் (COMIT) இயக்குனர்களை ஒன்றிணைத்தது, மையத்தின் பணியானது, நவீனத்துவம் என்பது அமைதி, நீதி, லௌகீக மற்றும் ஆன்மீக வளத்தின் முன் எப்போதுமில்லாத அளவுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு வருங்கால உலக நாகரிகத்தை நோக்கிய மாற்றத்திற்கான காலம் எனும் எண்ணத்தினால் உத்வேகம் பெறுகின்றது.
மாநாடுகளின் எதிர்காலம் பற்றி பேசுகையில், டாக்டர் பெர்கர் கூறுவதாவது: “ஒவ்வோர் ஆண்டும் பங்கேற்பாளர்கள் ஆழமான பஹாய் போதனைகளை ஆராய்ந்து, அறிவின் பல்வேறு துறைகளில் முன்னோக்குகளுடன் அவற்றை உடனிணைத்து, மனிதகுலத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு அவற்றைப் பயன்படுத்திட முயலக்கூடும் எனும் முறையில், இது கற்றல் செயல்பாட்டில் ஒரு நிறுத்தற்குறியாக மாறும் என்பதே மாநாட்டின் பரிணாம வளர்ச்சிக்கான எங்கள் நம்பிக்கையாகும்.”
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டு அமர்வுகளின் பதிவுகள் ABS இணையதளத்தில் கிடைக்கும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1522/