
8 அக்டோபர் 2021
போர்ட் மோரஸ்பி, பப்புவா நியூ கினி, 15 ஆகஸ்ட் 2021, (BWNS) – பப்புவா நியூ கினியின் (PNG) போர்ட் மோரஸ்பியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்ல வளாகத்தின் சிக்கலான எஃகு அமைப்பை நிறைவு செய்ததன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் அடையப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான எஃகு கூறுகள் தனித்தனியாக நிலைநிறுத்தப்பட்டு, குவிமாட கட்டமைப்பை முடிக்க ஒன்பது எஃகு வலைகளுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய வளர்ச்சி வருகிறது, குவிமாடத்தில் ஓக்குலஸ் (Occulus) ஆதரவு சட்டகம் உயர்த்தப்பட்டது.
1990 களில் இருந்து PNG பஹாய்களின் உரிமை மற்றும் பராமரிப்பில் இருந்துவரும் வழிபாட்டு இல்ல தளம், கோவிலின் முக்கியத்துவம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள புதுமையான அணுகுமுறைகள் பற்றி அறிய ஆர்வமுள்ள, மத்திய கட்டிடத்திற்கான சிக்கலான எஃகு அமைப்பு போன்ற அதன் கட்டுமானத்திற்காக, பார்வையாளர் குழுக்களை ஏற்கெனவே பெறத் தொடங்கியுள்ளது. .
சமீபத்திய பார்வையாளர்களுள், PNG இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ட்ஸ் உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் முக்கிய தேசிய ஒளிபரப்பு ஊடகங்களில் ஒன்றான EMTV உட்பட பல்வேறு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் உள்ளடக்கியுள்ளனர்.
PNG இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ட்ஸின் தலைவர் ஜோர்டான் தேகாப்வாசா தளத்திற்கு வருகை தந்தபோது, “இவ்வழியே செல்லும் ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த கட்டுமான திட்டத்தை பார்க்கிறோம். இது அனைவரிலும் ஆர்வ உணர்வால் நிரப்பியுள்ளது,” என்றார்.
பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ஜெசினா வோல்மர், வழிபாட்டு இல்லம் எவ்வாறு ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகிறது என்பதை விளக்குகிறார். “அதன் கதவுகள் திறக்கப்படும்போது, வயது, பாலினம், இனம், வகுப்பு அல்லது நம்பிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் வரவேற்கப்படுவார்கள். பிரார்த்தனை செய்வதற்கும், நம் படைப்பாளருடன் தொடர்புகொள்வதற்கும், சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதைப் பிரதிபலிப்பதற்கும் வழிபாட்டு இல்லம் அமைதியான மரியாதைக்குரிய இடமாக இருக்கும்.
கட்டுமானப் பணிகளில் முன்னேற்றம் news.bahai.org-யில் உள்ள படங்களின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.









மூலாதாரம்: https://news.bahai.org/story/1524/