BIC பிரஸ்ஸல்ஸ்: ஒற்றுமை, சொந்தம் ஆகியவற்றைப் பேணுதல்8 அக்டோபர் 2021


BIC பிரஸ்ஸல்ஸ் நகராட்சித் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே நகர்ப்புற வளர்ச்சியின் பங்கு குறித்து மிகவும் மாறுபட்ட அண்டைப்புறங்களில் கலந்துரையாடல் தொடர் ஊக்குவிக்கப்படுகிறது.

BIC பிரஸ்ஸல்ஸ், 18 ஆகஸ்ட் 2021, (BWNS) – பெருந்தொற்றின் போது, ​​உலகெங்கிலும் உள்ள மக்கள் அண்டையர்களிடையே இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்துதல் அந்நியரை ஓரு நோடியில் நண்பர்களாக மாற்றுவதைக் கண்டனர்.

உதவி கரம் கொடுப்பதன் மூலமும், ஒருவர் மற்றவருடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், மக்கள் தங்களை விட பெரிய ஒன்றுடன் இணைக்கும் தருணங்களை அனுபவித்துள்ளனர். தங்கள் அனுபவம் ஒரு தனித்த அனுபவம் அல்ல என்பதை ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்தியதால், தங்கள் அண்டைப்புறங்களுக்கும் நாட்டுக்கும் மற்றுமின்றி மனித குடும்பத்திற்கும் தாங்கள் சொந்தமெனும் உணர்வைப் பலர் உணர்ந்தனர்.

பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் இந்த அவதானிப்புகள் மற்றும் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட நுண்ணறிவுகள் BIC நடத்தும் “சந்திப்பு மற்றும் சொந்த சுற்றுப்புறங்களை உருவாக்குதல்,” எனும் தலைப்பிலான கலந்துரையாடலுக்கான அடிப்படையை உருவாக்கியது

பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி கூறுகிறார்: “உலகம் முழுவதும் அதிகரித்துவரும் சுற்றுப்புறங்களில், சமூக சேவைக்கான திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பஹாய் கல்வி செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளோர், அவர்கள் ஒன்றிணையக்கூடிய மற்றும் பொது நோக்கம் கொண்ட திட்டங்களைத் தொடங்க ஒற்றுமைக்கான தளங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

அவர் தொடர்கிறார்: “இந்த அனுபவங்கள் மக்கள் தேவைகளைப் பற்றி விவாதிக்க மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கான — இளைஞர் கல்வி, சுற்றுச்சூழலின் தரம், அல்லது ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற சமூகங்கள் நல்வாழ்வின் சில அம்சங்களில் கவனம் செலுத்தும் — நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக தளங்கள் உருவாக்கப்படும் போது ஒற்றுமையும் சொந்தமும் வளரும் என்பதை காட்டுகிறது.”

பஹாய் சர்வதேச சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் சமீபத்திய கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகர்ப்புற திட்டமிடுவோர், கல்வியாளர் மற்றும் சமூக நடவடிக்கையாளர்கள் மிகவும் மாறுபட்ட அண்டைப்புறங்களில் சமூக தன்மைமாற்றத்தை ஏற்படுத்துவதில் நகர்ப்புற வளர்ச்சியின் பங்கை ஆராய்ந்தனர்.

இத் தொடர் வரிசைக்கான தொடக்க நிகழ்வு ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் அலையன்ஸ் 4 ஐரோப்பா ஆகியவற்றின் இனவெறி எதிர்பு மற்றும் பன்முகத்தன்மை இடைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி 100 பங்கேற்பாளர்களுக்கும் மேல் ஈர்த்தது. இக்கூட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகர்ப்புறத் திட்டமிடுவோர், கல்வியாளர்கள் மற்றும் சமூக நடவடிக்கையாளர்கள் அடங்குவர்.

துவக்க நிகழ்வில், டப்ளினின் அப்போதைய மேயர் ஹேசல் சூ, நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் சார்ந்த சிக்கல்களை எடுத்துரைத்தார். இவற்றில் அண்டை நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அவற்றில் உள்ள மக்களின் வெவ்வேறு புலனுணர்வுகள் ஆகியவற்றை பெருந்தொற்று இன்னும் தீவிரமடைய செய்துள்ளது.

“இது டப்ளினுக்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல,” என்று அவர் கூறினார், “நான் மற்ற நகரங்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தேன்; அவற்றில் நீங்கள் காண்பது என்னவென்றால், வசதியான சுற்றுப்புறங்கள் அதிக வளம் பெறுகின்றன; வறியநிலையில் உள்ள இடங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளன. “அவர்கள் அதை எங்கே கவனிகப் போகிறார்கள், அல்லது அவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை” என மக்கள் நினைக்கும் இடங்களுக்கு வசதிகள் சென்றடைவதில்லை.

அண்டைப்புறங்களில், உள்ளடங்கிய பொது இடங்களை உருவாக்குவதில் நகர்ப்புற வடிவமைப்பின் பங்கு இவ்வொன்றுகூடல்களில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் (OECD) ஜூலியட் ஜெஸ்டின் கூறினார்: “ஒன்றிணைத்தல் கொள்கை ஆரம்பக் கட்டங்களிலிருந்தே [ஓர் அண்டைப்புறத்தின்] கட்டமைப்பில் பின்னிப் பிணைக்கப்பட வேண்டும். … மிகக் குறைந்த பொதுவான வகுப்பிற்காக வடிவமைப்பதற்குப் பதிலாக, மிகவும் விளைவுத்திறமுள்ள இடங்கள் உண்மையில் அதைப் பயன்படுத்துபவர்களின் உள்ளீடுகளை மேம்படுத்துகின்றன.

மற்றொரு பங்கேற்பாளரான, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பஹாயும் நகர்ப்புற புவியியல் ஆராய்ச்சியாளரான தாலியா மெலிக், தங்கள் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி ஆலோசிக்கக்கூடிய ஓர் அண்டைப்புறத்தின் அனைத்து மக்களுக்குமான சமூகத் தளங்களின் பற்றாக்குறை மக்களின் நீதி உணர்வு மற்றும் கூட்டுப் பொறுப்புக்கு ஏற்ப செயல்படுவதைத் தடுக்கலாம் என முன்மொழிந்தார்.

திருமதி மெலிக் விளக்குகையில், “ஓர் அண்டைப்புறத்திலுள்ள பிரிவினையின் பெரும் அநீதிகளில் ஒன்று, சொந்தக் குடியிருப்புப் பிளாக்கில் இருக்கும் சமத்துவமின்மை மற்றும் அடுத்த குடியிருப்பில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலைமைகள் பற்றி கூட பலருக்கு தெரியாமல் இருக்கின்றது. ஏனெனில், பல்வேறு சமூகங்கள் ஒன்றுசேரக்கூடிய சமூகத் தளங்கள் குறைவாகவே உள்ளன. “இறுதியில், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது ஒரு முடிவு அல்ல … மாறாக, அது வெவ்வேறு தனிநபர்கள் தாங்கிவரும் திறன்களையும் வளத்தையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு சமூகத்தின் தன்மைமாற்றத்திற்கு உழைப்பதற்கான ஒரு வழிமுறையாகும்.”