அசாதாரன ஒருமைப்பாடு: #StopHatePropaganda ஈரான் பஹாய்களுக்கான ஆதரவு 88 மில்லியனை எட்டியது8 அக்டோபர் 2021


BIC நியூயார்க், 21 ஆகஸ்ட் 2021, (BWNS) – இரான் நாட்டின் பஹாய்களுக்கு எதிரான 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்க ஆதரவில் தொடுக்கப்பட்டு வந்த வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்துமாறு ஈரான் அரசாங்கத்தைக் கோரும் #StopHatePropaganda பரப்பியக்கம், அரசாங்க அதிகாரிகள், சிந்தனையாளர்கள், பொது சமூக அமைப்புகள், ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், கலைஞர்கள், பிரபலமான ஈரானியர்கள் மற்றும் பலரின் உலகளாவிய கூட்டணியின் முன்னோடியில்லாத ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த #StopHatePropaganda பரப்பியக்கம் உலகம் முழுவதும் பரவி, சுமார் 88 மில்லியனுக்கும் அதிகமான மக்களை சென்றடைந்தது.

இரான் நாட்டு பஹாய்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்துமாறு கோரும் உலகளாவிய கூக்குரலில் சேர்ந்துகொள்ளும் மக்களுக்கு அழைப்புவிடுக்கும் BIC வீடியோ

பஹாய் சர்வதேச சமூகம் (BIC) ஈரான் நாட்டு பஹாய்களுக்கு ஆதரவாக அவர்களின் துன்புறுத்தலை ஒரு முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்ட 42,000 இணையத்தள இடுகைகளை கண்காணித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் BIC’இன் முதன்மை பிரதிநிதி பானி டுகால் கூறுகையில், “இந்தப் பிரச்சாரமானது ஆதரவின் திருப்புமுனையான நிலைகளை எட்டுவதைப் பார்த்து நாங்கள் மிகவும் நெகிழ்வடைந்தோம். “ஈரான் நாட்டில் உள்ள பஹாய்கள், ஈரானிய அரசாங்கத்தால் அதன் சொந்த நோக்கங்களுக்காக பழிவாங்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வரும் ஓர் அப்பாவி சமூகம் என்பதை அனைத்துலக சமூகம் நீண்ட காலமாகவே கண்டுணர்ந்து வந்துள்ளது. உலகம் இன்று இந்த அநீதிக்கு எதிராக எழுந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பியக்கத்தை வழிநடத்தியோரில் ஐக்கிய அமெரிக்காவின் பிரபல நடிகர்களும் நகைச்சுவை நடிகர்களுமான ரெய்ன் வில்சன், ஜஸ்டின் பால்டோனி, மாஸ் ஜோப்ரானி, பென் பேட்லி மற்றும் மேக்ஸ் அமினி, இங்கிலாந்து நாட்டின் கால்பந்து ஜாம்பவான் கேரி லின்கருடன் நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்களான ஒமிட் ஜலிலி, டேவிட் படியெல், ரொப் பிரைடன், டேவிட் வால்லியம்ஸ், ஷாப்பி கோர்ஸான்டி, மற்றும் ஜேனி கொட்லி, முன்னாள் ஆஸ்த்திரேலிய கால்பந்து வீரரான கிரேய்க் ஃபோஸ்டர், ஆஸ்த்திரேலிய ஹிப் ஹொப் கலைஞர் மாயா ஜூப்பிட்டர், மற்றும் ஆஸ்த்திரேலிய பாராளுமண்ற உறுப்பினர்களான செனட்டர் ஜெனட் ரைஸ்,, MP கெவின் அன்ட்ரூஸ், மேயர் டப்போ ஸ்டீபன் லாரன்ஸ், ஐக்கிய அரசின்   இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெஸ் பிலிப்ஸ் மற்றும் அலிஸ்டர் கார்மைக்கேல், கனேடிய MP’க்களான ஜூடி ஸ்கிரோ, கெர்ரி டையோட்டே, மற்றும் கெத்தே வாகன்தால், மற்றும் பல நாடுகளில் உள்ள பொது சமூகத் தலைவர்களும் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் இந்தப் பரப்பியக்கத்தை வழிநடத்தியோரில் அடங்குவர்.

நியூஸ்வீக் சஞ்சிகையில் எழுதிய, முன்னாள் கனேடிய நீதி அமைச்சரும் அட்டர்னி ஜெனரலுமான இர்வின் கோட்லர், மதம் மற்றும் சமய சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர், அகமது ஷாஹீத் மற்றும் ரவுல் வாலன்பெர்க் மையத்தில் கொள்கை மற்றும் திட்ட இயக்குனர், பிராண்டன் சில்வர், “நிறவெறி போன்ற முறைமைகள் அநியாயமான சிறைப்படுத்தல்கள் மற்றும் ஈரான் [பஹாய்களின்] சொத்துப் பறிமுதல் … சமுதாயத்தின் விளிம்புகளில் கிழிசலை ஏற்படுத்துவதுடன், நெருக்கடி மற்றும் மோதலுக்கான ஊக்கியாக உள்ளது, மற்றும் வெகுஜன கொடூரத்தை நோக்கிய ஓர் இயல்பான இயக்கமாகவும் இருக்கின்றது.”

ஐக்கிய அமெரிக்க செனட்டர் பென் கார்டின், “ஈரான் பஹாய் சமூகத்திற்கு எதிராக அரசு நடத்தும் ஊடக தளங்களில் சமீபத்தில் வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்து வருவது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்,” “ஈரானிய அரசு சார்ந்த அதன் பஹாய் சிறுபான்மையினரின் துன்புறுத்தலைக் கண்டித்து ஒரு செனட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானுடனான உறவுகளின் தூதுக்குழுவின் தலைவராக பணியாற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கோர்னீலியா எர்ன்ஸ்ட், ஈரானில் உள்ள பஹாய்கள் “வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் ஒடுக்கப்பட்டு தொட்டிலிலிருந்து கல்லறை வரை துன்புறுத்தப்படுகிறார்கள்” என கூறினார்.

ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியான இந்தியாவின் கர்னல் டாக்டர் திவாகரன் பத்ம குமார் பிள்ளை, தமது நாட்டில் “பஹாய் உலகின் மிகப்பெரிய ஜனத்தொகை” உள்ளது எனவும், பஹாய் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் தவறான பிரச்சாரத்தைக் கைவிடுமாறு அவர் “[ஈரானிய அதிகாரிகள் மற்றும் ஈரானிய மக்களை” வலியுறுத்தினார்.. “

பிரேசிலிய நாடாளுமன்ற உறுப்பினர் எரிகா கோகே, ட்விட்டரில் ஈரான் அரசாங்கம் மனித உரிமைகளுக்கு “உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என கூறினார். “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் வாய்சொற்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன; பஹாய்களுக்கு, பழைய சரித்திரம் மீண்டும் திரும்பிட நாம் அனுமதிக்க முடியாது.”

ஈரானுக்குள்ளும், ஈரானிய புலம்பெயர் நாடுகளிலும் உள்ள பஹாய்களின் உரிமைகளுக்கான ஆதரவு பெருகி வருவது பரப்பியக்கத்தின் தனித்துவமான அம்சமாகும். ஆர்வலர்களும் ஊடகப் பிரமுகர்களும் — தற்போது ஈரானில் வெளிப்படையாகக் காணப்படுகின்ற ஒரு மனித உரிமைப் பணியாளர், நர்கிஸ் முகமதி உட்பட — பாரசீக மொழி பேசுவோர் மத்தியில் பிரச்சாரத்தை இணையத்தில் பரப்புவதற்கு உதவினர்.

புலம்பெயர்ந்த ஈரானியரிடையே உள்ள மற்ற ஆதரவாளர்களில் மாசிஹ் அலினேஜாட், லடான் போரூமண்ட் மற்றும் ஆசாடே போர்ஸாண்ட், நடிகர் மஹ்னாஸ் அஃப்ஷார், ஒளிபரப்பாளர் சினா வலியோல்லா, அப்பாஸ் மிலானி மற்றும் அம்மார் மாலேக்கி உள்ளிட்ட கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் குல்னாஸ் எஸ்பான்டியாரி ஆகியோர் அடங்குவர்.

ஸ்டான்ஃபோர்ட் வரலாற்றாசிரியரான பேராசிரியர் அப்பாஸ் மிலானி, ஈரான் நாட்டில் பஹாய்கள் அனுபவித்த சரித்திர ரீதியில் பிரபலமான அநியாயங்கள் மற்றும் வன்முறை தொடர்பான “பயங்கரமான நிசப்த சுவரின்” வீழ்ச்சிக்கு இப்பரப்பியக்கம் பங்களித்துள்ளது எனும் பொருண்மையை வரவேற்றார்.

இரான் நாட்டு பஹாய்களின் துன்புறுத்தல்கள் இரான் நாட்டிலுள்ள பஹாய் துன்புறுத்தல் காப்பகங்கள் எனும் இணையதளத்தில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) சமீபத்தில் ஈரானில் பஹாய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் அளவு, மற்றும் அதன் அதிநவீன வளர்ச்சியைத் தொடர்ந்து “#StopHatePropaganda” பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1526/