“மனித கண்ணியம் எனும் கண்ணாடியின் வழி”: BIC, ஒற்றுமையை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்கைப் பார்க்கிறது8 அக்டோபர் 2021


BIC நியூயார்க், 27 ஆகஸ்ட் 2021, (BWNS) – ஊடக அமைப்புகள் மற்றும் பயிற்சியாளர்களின் பணி ஆக்கபூர்வமான அல்லது பிளவுபடுத்தும் விளைவுகளுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை ஆராயவும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஊடகங்கள் வகிக்கும் பங்கைப் பரிசீலிக்கவும் பஹாய் சர்வதேச சமூகத்தால் (BIC) சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர்கள் குழு ஒன்று ஒன்றுகூட்டப்பட்டது.

தொடக்க உரையில், நிகழ்வின் நடுவரான சலீம் வைலான்கோர்ட்: “நாம் வெளியிடும் தகவல்கள் நாம் வாழும் உலகத்தை வடிவமைக்கின்றன” என்றார்.

“ஊடகங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும், ஒற்றுமையை உருவாக்குவதற்கும், அறிவை உருவாக்குவதற்கும், புரிதல்களை உருவாக்குவதற்கும் பங்களிக்க முடிவதுடன், அவ்வாறு செய்வதன் மூலம், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிய முடியும்.”

BIC ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட “ஊடகம், கதை, மக்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள்” என்ற தலைப்பில் கலந்துரையாடலில் நான்கு பங்கேற்பாளர்கள். இடமிருந்து வலம்: சலீம் வைலன்கோர்ட், BIC இன் பிரதிநிதி; , மலேசியாவைச் சேர்ந்த கல்வி மற்றும் பத்திரிகையாளர், டெமில் தியான்மேய்; ந்வான்டி லோவ்ஸன், CNN முன்னாள் பத்திரிகையாளர்; மற்றும் தி அட்லாண்டிக் பத்திரிகையின் புலனாய்வு பத்திரிகையாளர், அமண்டா ரிப்லி,

நாகரீக முன்னேற்றத்தில் ஊடகங்களின் செயல்பாடு பற்றி பஹாய் எழுத்துக்களில் இருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டிய திரு. வைலான்கோர்ட்: “வேகமாக வெளிவரும் செய்தித்தாள்களின் பக்கங்கள்… பல்வேறு மக்களின் செயல்களையும் நோக்கங்களையும் பிரதிபலிக்கின்றன. … அவை செவி, பார்வை மற்றும் பேச்சு ஆகியவற்றைக் கொண்ட ஒரு கண்ணாடி. இது ஓர் அற்புதமான மற்றும் சக்திவாய்ந்த இயல்நிகழ்வு. இருப்பினும், அதன் எழுத்தாளர்கள் தீய உணர்வுகள் மற்றும் ஆசைகளின் தூண்டுதல்களிலிருந்து தூய்மைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நீதி, சமத்துவம் ஆகியவற்றுடன் திகழ வேண்டும்.

பங்கேற்பாளர்கள் இந்தக் கருத்துகளை வெவ்வேறு சமுதாய அமைப்புகளின் சூழலில் ஆய்வு செய்தனர். தி அட்லாண்டிக் இதழின் புலனாய்வு பத்திரிகையாளர் அமண்டா ரிப்லி, சவால்களை சமாளிக்க சமூகங்களின் முயற்சிகளை முன்னிலைப்படுத்தும் பத்திரிகை எவ்வாறு “மக்கள் பரஸ்பர தொடர்பு கொள்ள மற்றொரு வழியைப் பார்க்கவும் காட்சிப்படுத்தவும் மற்றும் கற்பனை செய்யவும் உதவும் என்பதை விளக்கினார்.

“நம்பிக்கை இல்லை என்று மக்கள் உணரும்போது,” அவர்கள் நம்பிக்கையிழந்தோ குறைகாண்பவர்களாகவோ ஆகலாம். … தீர்வுகளை ஆராயாமல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பத்திரிகை வடிவங்களைக் குறிப்பிட்டு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளின் சூழலில் சுற்றி நீங்கள் நல்ல இதழியலை கடைப்பிடித்தால், பிரச்சினைகள் இதழியலை விட மக்கள் அதிக ஈடுபாடு கொள்வார்கள்.”

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆஸ்திரேலியாவில் உள்ள பஹாய் வெளிவிவகார அலுவலகம் நடத்திய விவாதம் ஊடகங்கள் எவ்வாறு அதிக சமூக ஒற்றுமைக்கு பங்களிக்க முடியும் என்பதை மையமாகக் கொண்டிருந்தது.

“செய்தியில் வழங்கப்படும் தீர்வு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை,” என திருமதி ரிப்லி மேலும் கூறினார். “சமூகம் தனது சொந்த பிரச்சனையை தீர்க்க முயல்வது செயலாண்மையைக் காட்டுகிறது. மேலும், இது அனைத்து வகையான ஜனத்தொகையிலான மக்களையும் ஈடுபடுத்துகிறது. “

மலேசியாவைச் சேர்ந்த கல்வியாளரும், பத்திரிகையாளருமான டெமிலி தியான்மே, செய்திகளில், மக்கள் அக்கறையுடன் பார்க்கப்படுவதையும் சித்தரிக்கப்படுவதையும் ஆராய்ந்தார். ஊடகங்களின் பரிணாமம், மனித கௌரவத்தை ஊக்குவிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் திறனில் உள்ளது என அவர் வாதிட்டார்.

“மனித கண்ணியம் எனும் கண்ணாடி புதிய வழிகளில் ஒற்றுமையின் உருவாக்கத்தை அனுமதிக்கிறது,” என அவர் கூறினார். “ஒவ்வொரு நபரையும் கண்ணியத்திற்கும் நுண்ணறிவுக்குமான மூலாதாரமாக நாம் கருதினால் – நம்முடைய மூலாதாரங்களை மட்டுமல்ல, மற்ற பத்திரிகையாளர்களையும் நாம் எப்படி வித்தியாசமாக பார்ப்போம்?”

சமுதாய முன்னேற்றத்தில் முன்னணியாளர்கள் எனும் முறையில் பத்திரிகையாளர்களின் பங்கு மற்றும் அவர்கள் செய்திகளை வழங்கும் சமூகங்களில் அவர்கள் எந்த அளவிற்கு உட்பொதிக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் செயல்பாட்டில் உள்ளனர் என்பதும் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம். ஜோர்டானில், பஹாய் வெளியுறவு அலுவலகம் நீதியை மேம்படுத்துவதில் பத்திரிகையாளர்களின் பங்கை ஆராய்ந்து வருகிறது.

CNN முன்னாள் பத்திரிகையாளரான ந்வாண்டி லாவ்சன்: “[பத்திரிகையாளர்கள்] சமூக நடிவடிக்கையாளர்கள் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நாம் நமது சமுதாயத்தின் ஒரு பகுதியினர். உண்மையை ஆராய வேண்டிய கடமை நமக்கும் உள்ளது. “

“ஊடகம், மொழிவு, மக்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல், BIC’யால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்திற்கான உந்துதலை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றிய வளர்ந்து வரும் ஆர்வத்தின் அடிப்படையில் — குறித்ததாகும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள பஹாய் வெளிவிவகார அலுவலகங்களாலும் பேணப்படும் உரையாடலாகும் இது. அமெரிக்காவில் உள்ள பஹாய் பொது விவகார அலுவலகம், சமூகப் பிரச்சினைகளில் பிரிக்கும் முனைவுகளைத் தாண்டி ஊடகங்கள் எவ்வாறு சமூகத்திற்கு உதவ முடியும் என்பது பற்றிய விவாதங்களை ஊக்குவித்து வருகிறது. இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்யத்தில் உள்ள அலுவலகங்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மதத்தின் சக்தியை ஊடகங்கள் எவ்வாறு வெளிச்சம் போட்டுக் காட்டலாம், அதே வேளை, சமயம் எவ்வாறு அதன் மிக உயர்ந்த இலக்குகளை அடைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த உற்சாகமான உரையாடல்களை ஏற்பாடு செய்துள்ளன. ஜோர்டானில், பஹாய் வெளியுறவு அலுவலகம் நீதியை மேம்படுத்துவதில் பத்திரிகையாளர்களின் பங்கை ஆராய்ந்து வருகிறது, ஆஸ்திரேலியாவில், ஊடகங்கள் எவ்வாறு அதிக சமூக ஒற்றுமைக்கு பங்களிக்க முடியும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1528/